*மோடியும் பா.ஜ.க.வும்*

மணக்கால் அய்யம்பேட்டை | 1:46 PM | Best Blogger Tips

 


*சிந்தனை துளிகள்*

*மோடியும் பா...வும்*

*இந்த முடிவுகள் எல்லாம் ஏதோ ஒரு 'எமோஷனலான' கணத்தில் - தன் எழுச்சியாக (SPONTANEOUS) எடுக்கப்பட்ட முடிவுகளாகவா இருந்திருக்கும் என கர்பனைகள்*

*அதிரடியாக 12 மந்திரிகள் அவர்களாகவே ராஜிநாமா* செய்யவைத்து விடுவிப்பு!

*பதிலுக்கு 43 புதிய அமைச்சர்கள்* உள்ளே வருதல்!

அப்படிப் புதிய அமைச்சர்கள் நியமனத்தில் - பிரதேசவாரியாக, சமூகத்தின் வெவ்வேறு இனப் பகுதிகள் வாரியாக, மற்றும் கட்சிக்கு அவர்களின் பங்களிப்பு, வயது, அனுபவம்...

இப்படிப் பல்வேறு FACTOR களைக் கணக்கிட்டு SOCIAL ENGINEERING உட்பட, எதிர்காலத்தில் வரவிருக்கும் தேர்தல்கள் உட்படப் பல அம்சங்களைக் கணக்கில் கொண்டு, BALANCE செய்து...

ஒரு முடிவு எடுக்கப்படுகிறது என்றால் அது ஏதோ ஒரு தனி மனிதரின் சொந்த மூளையில் உதித்த திட்டமல்ல!

*யார் யார் ராஜினாமா செய்கிறார்கள் என்பது கூடப் படிப்படியாக அறிவிக்கப்பட்டு*...

*வியப்புக்குரிய பதவி விலகல்கள் (SURPRISE RESIGNATIONS) போன்ற தோற்றம் உருவாக்கப்பட்டு*.....

விஷயம் தெரியாத 'முன் களங்களுக்கு' வேண்டுமானால் அவை 'பரபரப்புக்கு' உரியதாக இருக்கலாம் - ஆனால் ஒவ்வொன்றும் துல்லியமாகத் திட்டமிட்ட நகர்வுகள்!

*ராஜிநாமா செய்த எவரும் புலம்பவில்லை*

ஊடக வியாதிகளே பல்வேறு ஊகங்களை வெளிப்படுத்தினர்!

இவர் சரியாகச் செயல்படவில்லை அதனால்..."- என்று ஆளாளுக்கு ஒவ்வொருவரைக் கை காட்டின ஊடகங்கள்!



ஆனால் ராஜிநாமா செய்த அனைவரும் - ஏதோ தங்களை ஒரு புள்ளியில் இருந்து விடுவித்து வேறு ஏதோ வகையில் கட்சி பயன்படுத்தும் - அது முழுக்க கட்சித் தலைமையின் முடிவு - எவரை எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்பது இயக்கத்துக்குத் தெரியும் என்ற புரிதலுடன் மௌனமாக வெளியேறினர்!

இன்று

*மோடி தெளிவாகக் கூறிவிட்டார்*

*EXITS ARE NOT RELATED TO MERIT*

*வெளியேற்றம் என்பது அவரது திறமையைப் பற்றிய விமர்சனமாகாது*

என்று தெளிவுபடுத்தி விட்டார்!

மேலும்.......

புதிய அமைச்சர்கள் - பழையவர்களிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டும் என்றும் கூறிவிட்டார்

இவ்வளவு திட்டமிட்ட காய் நகர்த்தல் ஒரு தனிமனித மூளையின் சொந்த விருப்பமாக இருக்க முடியாது!

அதுவும் அதிரடியாக தமிழகத்தில் இருந்து L.முருகன் அவர்கள் மத்திய அமைச்சரவைக்கு ஏற்றம்!

அடுத்த அதிரடியாக அவர் அமைச்சரானதால் காலியாகிய மாநிலத் தலைவர் பொறுப்புக்கு திரு.K.அண்ணாமலை IPS நியமனம்!

*ஊடக ஜாம்பவான் என்று பீற்றிக் கொள்ளும் எந்தத் தமிழ்நாட்டுப் புரட்சி அக்கினிக் குஞ்சுக்கும் சிறு துளி அளவும் விஷயம் கசியவில்லை!*

இந்திய அளவில் ஊடகங்களில் விரவிக் கிடக்கும் எந்த அர்பன் நக்சல் தகவல் பொறுக்கிகளுக்கும் (NEWS GATHERERS) சிறு துளியளவும் விஷயம் கசியவில்லை!

அவ்வளவு ஏன்?

பாஜக மீது மிகுந்த மரியாதை கொண்ட பல்வேறு துணை - இணை அமைப்புகளின் தலைவர்களுமே வியந்துதான் போனார்கள்!

*இதுவே காங்கிரஸ் தலைமையிலான UPS அமைச்சரவை 2004 ல்* முதல் முறை பதவி ஏற்றபோது நடந்த கூத்துக்கள் எத்தனை?

கேட்ட இலாகாக்கள் கிடைக்கவில்லை என்று டெல்லியில் விமானம் ஏறி - திமுகவினர் தமிழகம் வரவில்லையா?

*2009 ல் டெல்லியில்* தனது தள்ளாத வயதிலும் - உடல் நிலையையும் பொருட்படுத்தாமல் -

*கலைஞர் சக்கரநாற்காலியில் அமர்ந்து*.......

*குடும்ப உறுப்பினர்களுக்குப் பதவி கேட்டு சுற்றி வரவில்லையா?*

*பதவிக்கும்* கூடவே இலாகாவுக்கும் எத்தனை பேரம்* எத்தனை இழுபறி!*

*இடையில் எப்படி புரோக்கர்கள் செயல்பட்டார்கள்* என்பதற்கு ஆதாரமாகப் பின்னாளில் வெளியான நீரா ராடியா உரையாடல்கள்!

ஆனால்

*12 மந்திரிகள் வெளியே போய் 43 மந்திரிகள் உள்ளே வந்து*...


அதிலும் திராவிட இயக்கத்தின் பிரிவினை வாத நச்சுக் கருத்துக்களால் சீரழிக்கப்பட்ட ஒரு அரசியல் களத்துக்கு...

*எவரும் எதிர்பாராத ஒரு அதிரடி வரவு!*

இவை அத்தனையும் துளி சத்தமில்லாமல் முடிகிறது என்றால்....

இவை எங்கெங்கே விவாதிக்கப்பட்டு இருக்கும்?

எத்தனை வாரங்களுக்கு அல்லது மாதங்களுக்கு முன்பு இவற்றுக்கான விவாதங்கள் - ஆலோசனைகள் தொடங்கி இருக்கும்?

துளியாவது விவரம் கசிந்ததா?

அப்படி விவாதமும் - ஆலோசனையும் செய்த மூளைகள் எவை?

*அவற்றின் "கேந்திரம்" எங்கே உள்ளது?*

*அதன் பின்னணி பலம் என்ன?*

*அந்த மூளைகள் ஒரு பரந்த வெகுஜன அரசியல் இயக்கமான பாஜக என்ற கட்சியை எப்படி வழி நடத்துகின்றன?*


இந்தப் புரிதல் எதுவும் இல்லாத மண்ணாந்தைகள்தான் - "ஆகா! நயினார் நாகேந்திரனுக்கு அண்ணாமலை நியமனத்தால் ஏமாற்றமா?" -

"வானதி ஸ்ரீநிவாசனுக்கு வருத்தமா?"

"மூத்த தலைவர்கள் ஒதுக்கப் படுகிறார்களா?"- என்று...

மைக்கைக் கையில் பிடித்தபடி - கத்துகின்ற கத்தில் அண்டர்வேர் நனைந்து போகிற மாதிரி - கூப்பாடு போடுகின்றன!

ஆனால்

*கேந்திரமான அமைப்பும் அதன் துல்லியமான திட்டமிட்ட முன்னெடுப்புகளும்*............

*அப்படி அமைப்பு எடுக்கும் முடிவுக்குத் தன்னை முழுமையாக ஆட்படுத்திக் கொண்டு அடுத்த வேலையைச் செய்யத் தயார் படுத்திக் கொள்ளும் பக்குவமும்*..........

*சங்கத்தின் வார்ப்பு என்பது* .......

*தறுதலை 'தத்தி' 'போலி' ஊடக அரைவேக்காடுகளுக்குத் புரியாது!*

 


நன்றி இணையம்