மக்களின் எதிர்பார்ப்பு ஓஸியில் கிடைத்தால் எல்லாம் ....

மணக்கால் அய்யம்பேட்டை | 1:43 PM | Best Blogger Tips



மோடி அவர்கள் பேசியதின் மொழி பெயர்ப்பு.

ஒரு கோடி share செய்யவேண்டிய செய்திகள் இந்த பதிவில் உள்ளது. தயவு செய்து அனைவரும் பகிருங்கள். 8 கோடி தமிழர்களையும் சென்றடைய வேண்டிய பதிவு. 3 மணி நேரம் முயற்சித்து மொழி பெயர்த்து பதிவிட்டுள்ளேன்.

பெட்ரோல் மற்றும் டீசல் குறைந்த பட்சம் 10 - 15 ரூபாய் விலை குறைவாக இருந்திருக்கலாம், குறைக்கப்பட வேண்டியது தான் - ஆனால், என்ன செய்வது?

ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களுக்கு One Rank One Pension (OROP) திட்டத்தில் 42,740 கோடி கொடுத்திருக்க முடியாமல் போயிருக்கும்.

இந்திய ராணுவத்துக்கு கடந்த ஏழு ஆண்டுகளில் 6.5 லட்சம் கோடி அளவுக்கு இராணுவ தளவாடங்கள் கிடைக்காமல் போயிருக்கும்.

ரஃபேல், அப்பாச்சி, S - 400, தேஜஸ், MK-1A போன்ற ஒப்பந்தங்கள் இல்லாமல் போயிருக்கும்.

இராணுவ வீரர்களுக்கு குண்டு துளைக்காத ஆடைகள், கவசங்கள் இல்லாமல் போயிருக்கும்.

பாரத இராணுவம் உலகின் 4வது வலிமை மிக்க படை என்ற நிலையை அடையாமல் இருந்திருக்கும்.

நாட்டின் எல்லைகளில் பாதுகாப்பு உட்கட்டமைப்பை உறுதி செய்யும் சாலைகள், பாலங்கள், சுரங்கங்கள் இல்லாமல் போயிருக்கும். நமது வீரர்கள் எல்லையை விரைவில் சென்றடைய முடியாமல் போயிருக்கும்.



மாநிலங்களுக்கான வருவாய் பகிர்வு 36.86% லிருந்து 44.64% ஆக மாற்றப்படாமல் இருந்திருக்கும்.

நாளொன்றுக்கு 28 கி.மீ வீதம் 55830 கி.மீ தேசிய நெடுஞ்சாலைகள் போடப்படாமல் இருந்திருக்கும்.

3360 கி.மீ நீள ப்ரத்யேக சரக்கு பாதை போன்ற E-DFC Eastern dedicated freight Corridor, W-DFC Western dedicated fright Corridor திட்டங்கள் துவக்கப்படாமல் இருந்திருக்கும்.

நாடு முழுவதும் 7 டி க்கள், 7 ஐஐஎம் கள், 14 ஐஐஐடிக்கள் , 16 எய்ம்ஸ் மருத்துவமனைகள் ஆகியவை துவக்கப்படாமல் இருந்திருக்கும்.

83 மருத்துவக் கல்லூரிகள், மேலும் 118 மருத்துவக் கல்லூரிகளுக்கான ஆயத்த பணிகள் நடைபெறாமல் இருந்திருக்கும்.

பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்த, கைவிடப்பட்ட போகி பீல் பாலம், தோலா சாதியா பாலம், அடல் சுரங்கப்பாதை, செனானி நாஸ்ரி சுரங்கப்பாதை போன்ற கட்டமைப்புகள் முடிக்கப்படாமலே இருந்திருக்கும்.

சார் தாம் சாலைத் திட்டம், சார் தாம் இரயில்வே திட்டம் துவக்கப்படாமலே இருந்திருக்கும்.

பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த ஜோஜி-லா சுரங்கப்பாதை, Z-Morh சுரங்கப்பாதை, துப்ரி - பூல்பாரி பாலம், சேலா பாஸ் சுரங்கப்பாதை போன்ற திட்டங்கள் துவக்கப்படாமலே இருந்திருக்கும்.

27 நகரங்களில் 1376 கி.மீ நீள மெட்ரோ ரயில் திட்டங்கள், 373 கி.மீ நீள RRTS திட்டம் ஆரம்பிக்கப்படாமலே இருந்திருக்கும்.

மேலும் புல்லட் ரயில், கடல் விமானம், வந்தே பாரத், நீர் வழிப் போக்குவரத்து, நீர் வழி சரக்கு போக்குவரத்து போன்றவை கனவுத் திட்டங்களாகவே இருந்திருக்கும்.

ஜம்மு காஷ்மீர், லடாக், வடகிழக்கு மாநிலங்கள், அந்தமான் நிக்கோபார் ஆகிய கட்டமைப்பில் பின்தங்கிய பகுதிகள் கட்டமைப்பு முன்னேற்ற திட்டங்கள் தீட்டப்பட்டு முன்னேற மேலும் பல காலம் பிடித்திருக்கும்.

சாகர்மாலா, பாரத்மாலா, நகர்ப்புற குழாய் வழி எரிவாயு திட்டங்கள், உதான் எனும் சாமானியனுக்கான விமானப் பயணத் திட்டம் துவக்கப் படாமலே போயிருக்கும்.

உஜ்வாலா திட்டத்தில் 8 கோடி ஏழைத் தாய்மார்கள் இலவச எரிவாயு கிடைக்கப் பெற்றிருக்க முடியாது. நாடு முழுவதும் எரிவாயு பயன்படுத்துவோர் சதவிகிதம் 98.8% என்ற சாதனை அளவை எட்டியிருக்காது.

செளபாக்யா திட்டப் பயனாளிகளான 2.62 கோடி ஏழை இந்தியர்கள் மின் இணைப்பு பெற்றிருக்க வாய்ப்பில்லாமல் போயிருக்கும்.

பிரதம மந்திரி வீடுறுதி திட்டத்தில் ஏழை பயனாளிகளுக்கான 1.68 கோடி வீடுகள் கட்டப்படாமல் இருந்திருக்கும்.

நாடு முழுவதும் ஸ்வச் பாரத் திட்டத்தின் கீழ் 11.35 கோடி சுகாதார கழிப்பறைகள் கட்டியிருக்க முடியாது.

நாடு முழுவதும் 11 கோடி ஏழை விவசாயிகள் வருடத்திற்கு ரூ.6000 வீதம் கிசான் சம்மான் நிதியின் கீழ் பயனடைந்திருக்க மாட்டார்கள்.

50 கோடி சாமானிய இந்தியர்கள் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் 5 லட்சம் மதிப்புள்ள காப்பீட்டுத் திட்டத்தில் பயனாளிகளாக மாறியிருக்க மாட்டார்கள். இலவச மருத்துவ சிகிச்சை பெற வாய்ப்பு ஏற்பட்டிருக்காது.

கடந்த 6.5 ஆண்டுகளில் 51.51 GW அளவிற்கான புதுப்பிக்கப்பட்ட எரிசக்தி திட்டங்கள் துவக்கப்பட்டிருக்குமா என்பது கேள்விக்குறியே. 2022ம் ஆண்டிற்குள் 175 GW என்ற இலக்கை நோக்கிய பயணம் துவங்காமலே போயிருக்கும்.

பொருளாதார சீர்திருத்தங்கள், பண மதிப்பிழப்பு, GST, ஆதார் இணைப்பு, பினாமி சொத்து எடுப்பு சட்டம், திவால், ஏல மறுசீரமைப்பு சட்டம் போன்றவை இயற்றப்படாமல் இருந்திருக்கும்.

கோதுமை, நெல், கரும்பு, பருப்பு வகைகளுக்கான குறைந்தபட்ச ஆதார விலை ஆதாயம் 2013 - 14 ஆண்டின் 98038 கோடியில் இருந்து, 2020-21ல் 2,58,342 கோடியாக மாறியிருக்காது.

77595 கோடி மதிப்பீட்டில் கிருஷி சிஞ்சய் யோஜனா (PMKSY) துவங்கப்பட்டிருக்காது. 2013 - 14ல் 33000 கோடியாக இருந்த மகாத்மா காந்தி கிராமப்புற வேலை உறுதித் திட்டம் MNREGA, 2021-22ல் பட்ஜெட் ஒதுக்கீடு 73000 கோடியாக இருந்திருக்காது.

நாடு முழுவதும் கடந்த ஆறு ஆண்டுகளில் மட்டும் 27.71 கோடி சிறு, குறு, நடுத்தர வணிகர்கள், வியாபாரிகள், தொழில் முனைவோர் முத்ரா கடன் திட்டத்தின் கீழ் 13.99 லட்சம் கோடிகள் கடன் பெற்று பயனடைந்திருக்க மாட்டார்கள்.

நாடு முழுவதும் 75829 கோடிகளில் சிறு நகர கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டமான அம்ருத் திட்டம் செயல்படுத்தப் பட்டிருக்காது.

24000 கோடி மதிப்பீட்டிலான நமாமி கங்கே எனப்படும் கங்கை தூய்மைப் படுத்தும் திட்டம், மேலும் 1,66,000 கோடி மதிப்பிலான ஸ்மார்ட் சிட்டி போன்ற பெரும் திட்டங்கள், செயல் படுத்தப்பட்டிருக்காது.

மேலும், விமான நிலையம் போன்ற எழில்மிகு பேருந்து முனையங்கள், ரயில் நிலையங்கள் அழகுறச் செய்யப்பட்டிருக்காது

6 வழிச் சாலைகள், சர்வதேச தரம் வாய்ந்த 14 வழிச் சாலைகள், தேசிய நெடுஞ் சாலைகள், விரைவுச் சாலைகள் ஏற்படுத்தப் பட்டிருக்காது.

உள்நாட்டிலேயே 6.5 மில்லியன் மெட்ரிக் டன் கச்சா எண்ணெய் கையிருப்பு வைக்கும் அளவிற்கான சேமிப்பு வச்திகள், 64 நாட்கள் தேவைக்கான சேமிப்பை 85 நாட்கள் என உயர்த்தி பாதுகாப்பான சேமிப்பு கிடங்குகள் கட்டமைக்கப் பட்டிருக்காது.

இதெல்லாம் இல்லாவிட்டால் என்ன, எங்களுக்கு பெட்ரோல் டீசல் விலை 10 - 15 ரூ குறைவாக கிடைக்கச் செய்யாத மத்திய அரசை வாய்க்கு வந்த படி திட்டும் சராசரி இந்தியனாய் நான் மாறுவேன் என கனவிலும் எண்ணி விடாதீர்கள்.

 

 




நன்றி இணையம்