வேண்டிப் பெறுவதற்கு ஒன்றும் இல்லை
மாறாக நன்றி கூற ஆயிரம்
இருக்கிறது
நன்றி கூற மறந்து
விட்டு
வேண்டதலை
மட்டுமே
முகாமியான
வேலையாக
கொண்டிருக்கிறோம்
முதலில்
இருப்பதை
என்னவென்று
பார்த்தோமா......???
ரசித்தோமோ......???
அனுபவித்தோமோ........???
நமக்கு
என்ன
வழங்கப்பட்டு
இருக்கிறது
என்பதை
திரும்பிப்
பார்க்கக்
கூட
நேரமில்லை
நமக்கு
ஆனால்
உலகம் முழுதும்
உள்ள
கோவில்களில்
என்னென்ன
பரிகாரம்
செய்தால்
எனென்ன
பலன்கள்
கிடைக்கும்
என்பதில்
மட்டும்
கவனமாக
கேட்டு
அதன் வழி செயல்படுகிறோம்
முதலில்
பரிகாரம்
எதற்கு....???
யார் பரிகாரம்
செய்வார்கள்.......???
தவறு செய்தவர்கள்
தான்
பரிகாரம்
செய்ய
வேண்டும்......???
அப்படி
என்ன
தவறு
செய்கிறோம்
என்று
சிந்தித்து
பார்த்தால்
கொடுத்திருப்பதைக்
கொண்டு
வாழாமல்
இன்னும்
வேண்டும்
இன்னும்
வேண்டும்
என்று
ஓயாமல்
இறைவனிடம்
கேட்பது
தான்
மிகப்பெரிய
குற்றம்
இதற்கு
எந்த
பரிகாரமும்
கிடையாது
எல்லா வேண்டுதல்களும்,
பிரத்தனைகளும்
முரண்பாட்டில்தான்
இருக்கிறது
நான் மகிழ்ச்சியாக
இருக்க
வேண்டுமென்ற
வேண்டுதலிலேயே
மகிழ்ச்சியற்ற
நிலையில்
நாம்
இருப்பதைக்
காணலாம்
எந்த அளவு உங்கள்
வேண்டுதல்
வழுவாக
உள்ளதோ
அதே அளவு எதிர்மறை
எண்ணகளும்
வழுவாக
இருக்கும்
ஒவ்வொரு
எண்ணங்களுக்கும்,
எதிரிடையான
எண்ணம்
உருவாகும்
ஆடையில்
அழுக்கு
பட்டுவிடப்
போகிறது
என்ற
எண்ணம்
அழுக்கின்
மீது
மட்டுமே
கவனத்தை
நிலை
நிறுத்தும்
ஆகையால்
'இது
வேண்டும்,
அது
வேண்டும்'
என்று
இடைவிடாத
வேண்டுதலின்று
நாம்
விடபட
வேண்டும்
இல்லையெனில்
மனதின்
இரண்டுபட்ட
நிலைக்கு
ஓய்வேயில்லை
இருண்டுபட்ட
மனம்
இருக்கும்
வரை
இருண்ட
வாழ்வில்
இருந்து
மீட்பு
இல்லை
ஒன்றுபட்ட
மனமே
மனமற்ற
நிலைக்கு
இட்டுச்செல்லும்
மனமற்ற
நிலையே
ஆன்மாவில்
உரைந்திருக்கும்
ஆனந்தத்தை
அனுபவிக்க
முடியும்
ஆக
ஆனந்தத்தை
அனுபவிக்க
வேண்டுமானால்
வேண்டுதலை
விட்டொழித்து
வழங்கப்பட்டிருப்பதற்கு
நன்றி
கூறி
வாழ்வோம்
ஆனந்த
வாழ்வில்
இதுவே ஆன்மீக
வாழ்வு
ஆனந்த வாழ்வு
ஆனந்த
ஆத்மீகத்தில்
: உள் முக பயணம்
நன்றி இணையம்