பெண்களே
PHD பண்றீங்களோ
இல்லையோ
பட்டப்படிப்பு
படிக்கிறீங்களோ
இல்லையோ
இத
படிங்க
முதல்ல
வாழ்க்கை
வாழவே...வாழ்ந்துவிடுங்கள்...
எங்கள்
தோழி...
50 வயதைக்
கடந்தவள்..
அவள் பிறந்த
நாளுக்கு
சரியாக
8 நாட்கள் கழித்து
வாட்சப்
குழுமத்தில்
அவளின்
மரண
செய்தி...
பேரதிர்ச்சி
எங்களுக்கு..
அவளது கணவன் ஊர் ஊராக பயணம் செய்யும்
தொழிலில்
இருப்பவன்..
அதனால்
வீட்டின்
அத்தனை
பொறுப்புக்களையும்
அவள்தான்
பார்த்துக்
கொண்டாள்..பிள்ளைகளின்
படிப்பிலிருந்து,
வீட்டிற்கு
சாமான்கள்
வாங்கி
வருவதிலிருந்து,
அவளின்
வயதான
மாமியார்
மாமனாரைப்
பார்த்துக்
கொள்வதிலிருந்து,
வீட்டிற்கு
வரும்
விருந்தாளிகளை
சமாளிக்கும்
வரை
அத்தனையையும்,
அத்தனையையும்
அவள்தான்
ஒருத்தியாக
பார்த்துக்
கொண்டாள்...
எப்போதாவது
பேசும்
சந்தர்ப்பம்
அமைகையில்
சொல்வாள்
,"என் குடும்பத்திற்கு
அவசியம்
நான்
தேவை,
எனது
நேரம்
தேவை,
என்
கணவருக்கு
தேநீர்
கூட
தயாரிக்கத்
தெரியாது,
நான்
இல்லை
என்றால்
அவர்கள்
தடுமாறிப்
போவார்கள்...
ஆனால் இவ்வளவு
செய்தும்
எனக்கு
எந்தப்
பாராட்டும்,
எந்த
அங்கீகாரமும்
கிடைப்பதில்லை"
என்று..
அதில் தொனித்த
வேதனையை
எங்களால்
இனம்
காண
முடிந்தது..
அவள் இறந்து
1 மாதமாயிற்று...
பாவம் அவள் கணவர்...
இப்போது
எப்படி
சமாளிக்கிறாரோ??
பயணம்
செய்யும்
பணியில்
இருந்து
கொண்டு
பிள்ளைகளை,
தன்
வயதான
தாய்
தந்தையரை
எப்படி
கவனிக்கிறாரோ
என
வருத்தம்
தோன்ற,
எதாவது
உதவி
செய்ய
முடிந்தால்
செய்யலாம்
என
அவரை
அலைபேசியில்
அழைத்தேன்..
பதிலில்லை.
அரை
மணி
கழித்து
அவரே
அழைத்து,
தான்
நண்பர்களுடன்
டென்னிஸ்
விளையாடிக்
கொண்டிருந்ததாகவும்,
அப்படியே
அவர்களுடன்
பேசிக்
கொண்டிருந்ததாகவும்
, அதனால்தான் உடன் அழைப்பை
ஏற்க
வில்லை
என
மன்னிப்பு
கோரினார்..
எப்படி
இருக்கிறீர்கள்
என்றேன்..
பயணம் செய்யும்
பொறுப்பிலிருந்து
மாற்றல்
வாங்கிக்
கொண்டு
ஊரிலிருந்தே
வேலை
செய்யும்
பொறுப்பிற்கு
மாற்றிக்
கொண்டிருக்கிறாராம்..
வீட்டில்
எல்லோரும்
எப்படி
இருக்கிறார்கள்
எனக்
கேட்டேன்.
சமையல்
செய்வதற்காக
ஒருவரை
நியமித்து
அவரே
கடையிலிருந்து
பொருட்களை
வாங்கி
வருமாறும்
பணித்திருக்கிறாராம்..தன்
தாய்
தந்தையரை
பார்த்துக்
கொள்ள
செவிலியர்களை
நியமித்திருக்கிறாராம்..
பிள்ளைகள்
எப்படி
இருக்கிறார்கள்
எனக்
கேட்டேன்..
"பிள்ளைகள்
நலம்..நான்
பார்த்துக்
கொள்கிறேன்.
கொஞ்சம்
கொஞ்சமாக
எல்லோரும்
சுமூக
நிலைமைக்கு
திரும்பி
கொண்டிருக்கிறோம்.."
என்றார்..
சிறிது
நேரம்
பேசிவிட்டு,
முடித்தேன்
...
என் கண்கள்
குளமாகியது.
என்
தோழி
நினைவிற்கு
வந்தாள்.
பள்ளி
தோழிகள்
சந்திப்பிற்கு
அவள்
வரவில்லை,
காரணம்
அவள்
மாமியாருக்கு
உடல்
நிலை
சரியில்லை.
அவளின்
அண்ணன்
மகள்
திருமணத்திற்கு
அவளால்
போக
முடியவில்லை
, காரணம் அவள் வீட்டில்
ரிப்பேர்
நடந்து
கொண்டிருந்தது,
எங்கள்
தோழியின்
மகள்
திருமணத்திற்கு
வரவில்லை, காரணம்
அவள்
பிள்ளைகளுக்கு
தேர்வு..நாங்கள்
அனைவரும்
இணைந்து
சென்ற
திரைப்படத்திற்கு
அவள்
வரவில்லை,
காரணம்
இரவு
உணவு
சமைக்க
வேண்டும்..
இப்படி
எத்தனை
இனிமையான
தருணங்களை
அவள்
இழந்திருக்கிறாள்..
அவளுக்காக
அவள்
வாழவே
இல்லை..
மற்றவர்களுக்காக
மட்டுமே
வாழ்ந்திருக்கிறாள்..இறுதி
வரை
அவள்
எதிர்நோக்கிய
பாராட்டும்
அங்கீகாரமும்
இத்தனை
செய்தும்
கூட
அவளுக்கு
கிடைக்கவே
இல்லை..
இப்போது
அவளிடம்
சொல்ல
துடிக்கிறேன்,
இந்த உலகத்தில்
யாரும்
இன்றியமையாதவர்கள்
அல்ல,
யாரை
இழந்தாலும்
அவரைச்
சார்ந்திருப்போர்
சிறிது
நாட்களில்
அவரின்றி
வாழ
பழகி
விடுவார்கள்..
தன்னைப்
பார்த்துக்
கொள்வதுதான்
அவளது
முதல்
கடமை
என
மற்றவர்கள்
நினைப்பதும்,
அவளும்
அவர்களுக்கு
முதல்
உரிமை
கொடுத்து
விட்டு
இரண்டாவதாக
தன்னைப்
பார்த்துக்
கொள்வதும்,
நான்
இல்லை
என்றால்
என்
வீடு
தடுமாறி
விடும்
என்றெல்லாம்
நினைப்பது
நம்
மனதின்
அறியாமை...அப்படி
நினைத்து
ஒரு
நாள்
கூட
அவள்
அவளுக்காக
வாழவில்லை..
ஆனால் இதையெல்லாம்
சொல்வதற்கு
அவள்
இப்போது
உயிருடன்
இல்லை...
தோழிகளே...
எத்தனை
பொறுப்புகள்
இருந்தாலும்,
எத்தனை
பணிகள்
இருந்தாலும்
உங்களுக்கென்று
ஒரு
நேரத்தை
உருவாக்கிக்
கொள்ளுங்கள்..
அது உங்கள்
நேரம்..
உங்களுக்கு
பிடித்ததைச்
செய்யுங்கள்...ஆடுங்கள்,
பாடுங்கள்,
என்னவெல்லாம்
பிடிக்குமோ
அத்தனையும்
செய்யுங்கள்
பள்ளி கல்லூரி
தோழிகளிடம்
பேசுங்கள்,பகிருங்கள்,
சிரியுங்கள்..வாழ்க்கையை
அனுபவியுங்கள்..
இது உங்கள்
வாழ்க்கை..
உங்களுக்கான
வாழ்க்கையை
வாழுங்கள்..
உங்களுக்கான
இன்பத்தை
மற்றவர்களுக்காக
தொலைத்து
விடாதீர்கள்..
நீங்கள்
மகிழ்வாய்
இருந்தால்
மட்டுமே,
மற்றவர்களை
மகிழ்விக்க
முடியும்..
இறுதியாக
ஒரே
ஒரு
வார்த்தை..
வாழ்க்கை
ஒரே
ஒரு
முறைதான்...
அனுபவித்து
வாழுங்கள்.
வாழ்க்கை
அழகானது..
(தோழிகள்
வாட்சப்
குழுமத்தில்
வந்த
ஒர்
ஆங்கில
பதிவு
இது...
அதை
தமிழ்ப்
படுத்தி
தந்திருக்கிறேன்,
மனதை
மிகவும்
தொட்டதால்)
நன்றி இணையம்