சமஸ்கிருதம் உற்பத்தி மொழி அல்ல

மணக்கால் அய்யம்பேட்டை | 3:02 PM | Best Blogger Tips

 


டுவிட்டரும் 'கூ'வும்!

இது ஒரு தொழில்நுட்பக் கட்டுரை!

------------------------------------------------------

நியூட்டன் அறிவியல் மன்றம்

--------------------------------------------------------

கூ என்னும் பேறு (App) 11 இந்திய மொழிகளிலும்

ஆங்கிலத்திலும் செயல்படுகிறது.

தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் மராத்தி

குஜராத்தி வங்கம் அசாமியம் பஞ்சாபி, இந்தி,

ஒரியா மற்றும் ஆங்கிலம் ஆக 12 மொழிகளில்

கூ செயல்படுகிறது.

டுவிட்டர் 34 மொழிகளில் செயல்படுகிறது. ஆனால்

டுவிட்டர் செயல்படும் அந்த 34 மொழிகளால் நமக்கு எந்தப் பயனும் கிடையாது.

1) செக் மொழி 2) டேனிஷ் மொழி 3) போர்த்துக்கீசிய மொழி 4) ஜெர்மன் மொழி ) ஸ்பானிய மொழி என்று இவ்வாறாக 34 மொழிகள். இந்த 34 மொழிகளில் இந்தி கூட இல்லை. சமஸ்கிருதம் இல்லை; தமிழ் இல்லை. எனவே நமக்கு எந்தப் பிரயோஜனமும் இல்லை.

டுவிட்டரும் சரி, கூவும் சரி குறுஞ்செய்திக்கான அமைப்புகள். எனவே பயனாளர் போடுகிற ஒரு பதிவில் 140 எழுத்துக்கள் வரை மட்டுமே இருக்கலாம். இங்கு எழுத்துக்கள் என்பது கமா. full stop போன்ற நிறுத்தற் குறிகளையும் உள்ளடக்கியது.

துல்லியமாகச் சொல்ல வேண்டுமெனில், 140 characters என்று சொல்ல வேண்டும். தமிழில் 140 எழுத்துருக்கள் என்று சொல்ல வேண்டும். நமது குட்டி முதலாளியக் கபோதி எழுத்துரு என்பதைச் சுலபத்தில் ஒத்துக் கொள்ள மாட்டான்.

தமிழக அரசின் மொழிபெயர்ப்பாளர் 140 characters

என்பதை 140 குணச்சித்திர வேடங்கள் என்று

மொழிபெயர்ப்பான். பின் அந்தத் தற்குறியைக்

கொன்று விட்டு நான் ஜெயிலுக்குப் போக

வேண்டும். இந்தத் தொல்லையெல்லாம் வேண்டாம் என்றால், பேசாமல் கேரக்டர் என்று அந்த ஆங்கிலச் சொல்லை அப்படியே எழுதி விட வேண்டும்.


ஆரம்ப காலத்தில் 140 கேரக்டர் என்று இருந்த வரம்பு

பின்னாளில் 2017ல் 280 என்று மாறியது. அதாவது டுவிட்டரின் குறுஞ்செய்தி வரம்பு 280 கேரக்டர் ஆகும்.

இதற்கு மாறாக, இந்தியாவின் கூ 400 கேரக்டர் என்ற

வரம்பைக் கொண்டுள்ளது.

சீனா வடகொரியா ஈரான் ஆகிய நாடுகளில் டுவிட்டர்

முற்றிலுமாகத் தடை செய்யப்பட்டுள்ளது.

ஆக மொத்தத்தில்,

1) டுவிட்டர் = 280 கேரக்டர்; கூ = 400 கேரக்டர்.

2) டுவிட்டர் = இதன் மொழிகளால் நமக்குப்

பயனில்லை; கூ - 11 இந்திய மொழிகள்.

3) உங்கள் குரலை நேரடியாக கூ Appல் பதிவு

செய்யலாம்.

ஆகவே கூவில் சேருங்கள். நான் சேர்ந்து விட்டேன்.

கூவில் உள்ள 12 மொழிகளில் சமஸ்கிருதம் இல்லை.

ஏன்? சமஸ்கிருதம் உற்பத்தி மொழி அல்ல.

**********************************************************

நன்றி இணையம்