ஏன் இந்துமதம் பற்றி

மணக்கால் அய்யம்பேட்டை | PM 2:55 | Best Blogger Tips

 


தமிழகத்தில்

ஏன் இந்துமதம் பற்றி

இந்து பாரம்பரியம் பற்றி

எழுதும் எழுத்தாளர்கள்

குறைவு அல்லது இல்லை

என

ஒரு சிலர் கேட்டதால்

சொல்கின்றோம்..

இங்கு

எழுத்தாளன் என்பவன்

எழுதி பிழைக்க முடியாது.

அவன் பிழைக்க

சில பத்திரிகை முதலாளிகள் தயவு

சில ஊடகத்தார் தயவு..

தேவை..

பெரும் ஊடகங்களும்

அவற்றின் பிடிகளும்,

மிஷனரிகள் மற்றும்

திராவிட கும்பலின்

கைகளில் உள்ளன..

எந்த புத்தகம் வரவேண்டும்

எந்த புத்தகம் வரகூடாது

என்பதை

எங்கோ இருந்து

சில சக்திகள்

தீர்மானிக்கின்றன‌...

இலக்கியதரம் என

ஒரு பிம்பமும் உருவாக்கபட்டத..

கழிவறையில்

பயன்படுத்த கூட முடியாத

எழுத்துக்களை தாங்கிய

காகிதமெல்லாம்

பெரும் இலக்கியம் என்றாயின..

அவற்றுக்கு

பிராண்ட் வேல்யூ கூட

உருவாக்கபட்டது

அதெல்லாம் படித்தால்

ஒருவனுக்கு

பைத்தியம் பிடிக்கும்

அல்லது

வாசிப்பு வழக்கத்தையே

வெறுத்துவிடுவான்..

இங்கு

தமிழ்மொழிக்கென

இலக்கணமும்,

எழுத்துக்கென

பல வரைமுறைகளும்

இருந்தன‌..

மிஷனரிகளும்,

திராவிட கும்பலும்

தலையெடுத்தபின்

அவை எல்லாம் ஒழிக்கபட்டு,

புதுகவிதை வகையறாக்கள்

உருவாயின‌..


தொல்காப்பியனே

சொல்லாத வகையான

"வசன கவிதை" என்பதை

கருணாநிதி உருவாக்கினார்..

அது வசனத்திலும் வராது,

கவிதையிலும் வராது,

இலக்கணமே பொருந்தாது..

ஆனால்

அவர் "முத்தமிழ் அறிஞர்"...

அவர்

தொடங்கிவைத்த

இம்சைகள் பல...

அறிவுஜீவிகள் எனும் பெயரில்

மனநலம் பாதிக்கபட்டவர்களை

எழுத இழுத்து வந்தது..

அவர்கள் எழுதுவது

காவியங்களாயின‌..

இதில்

கம்யூனிஸ்டுகள் ஒருபக்கம்,

சாதிகள் ஒருபக்கம்

இன்னும் பல பக்கங்களில்

இருந்தும்

என்னவெல்லாமோ எழுதி

தமிழ் பத்திரிகை துறையே நாசமானது,

இதில்

துப்பறியும் கதை, பேய்கதை

இன்னபிற

இலக்கிய கொடுமைகள்

எல்லாம் நடந்தன‌..

இப்படி எல்லாமே

1950க்கு பின்

மிக மிக நாசமானது..

எழுத்தோலையில்

எழுதிய காலங்களில்

இந்து இலக்கியங்கள்

மட்டுமே இருந்தன,

அவற்றுக்கு போட்டியாக

சமணமும் பவுத்தமும்

எழுதி பார்த்தும்

இந்துமத இலக்கியங்களே

காலத்தை வென்றன‌..

ஒரு வகையில்

தமிழகம்

மிக மிக மோசமாக

ஆங்கில ஆட்சியில்

வஞ்சிக்கபட்டது..

இந்துக்களுக்கு எதிரான சதி

இங்கு

அச்சடிப்பு வந்த காலத்தில்

தொடங்கியது..

தமிழின்

மிக உன்னதமான

இலக்கியங்கள் என

கம்பராமயணம்,

கந்தபுராணம்,

ஆண்டாள் பாடல்கள்,

திருவாசகம் என

பெரும் வரிசை உண்டு..

ஆனால்

ஐம்பெரும் காப்பியம் என

எதை சொன்னார்கள் தெரியுமா?

இந்துக்கள் பற்றி பேசாத

இந்து வெறுப்பினை சொல்ல்லும்

சமண புத்த காவியங்களை

ஐம்பெரும் காவியம் என்றார்கள்

சிலப்பதிகாரம்,

ணிமேகலை,

குண்டலகேசி,

வளையாபதி,

சீவக சிந்தாமணி என

கம்பராமாயணம் அளவு

இலக்கிய சுவை

இல்லாதவையெல்லாம்

முன்னிறுத்தபட்டன

சரி ,

ஐஞ்சிறு காப்பியங்களிலாவது

தமிழக

இந்து இலக்கியங்கள் வந்ததா

என்றால்

அதுவுமில்லை,

அங்கும்

உதயணகுமார காவியம்,

நாககுமார காவியம்,

சோதர காவியம் ,

சூளாமணி ,

நீலகேசி என

சமண பவுத்த காவியங்கள்

இதையும்

தமிழகம் ஏற்றது,

மானமுள்ள

இந்து ஒருவனும்,

கம்பனின் காவியமும்

ஆண்டாளின் பாடலும்

மாணிக்கவாசகரின் தமிழும்

இதை விட குறைவா..??

என கேட்கவில்லை

நெல்லை

சைவ சித்தாந்த கழகம்

எழுப்பிய குரல்களெல்லாம்

எடுபடவில்லை..

பின்னும்

"தமிழ் இந்து இலக்கியம்"

என வரவேண்டிய பெயரை

"தமிழ் பக்தி இலக்கியம்"

என மாற்றி

பல நுணுக்கங்களை புகுத்தியது

மிஷனரி அரசியல்.

எனினும்

இந்துதர்மம்

அன்றே

பல அதிசய பிறவிகளை கொடுத்தது.

.வே சாமிநாதய்யர்...

இன்னும் பல

தமிழ் இந்து அறிஞர்கள்

தோன்றி

இந்து பெருமைகளை

பேசினார்கள்..

மிஷனரி அச்சகங்களை போல

இந்துக்களும்

அச்சகம் தொடங்கினார்கள்

அதில்தான்

கல்கி,

பாஷ்யம் எனும் சாண்டில்யன்

போன்றோர் எழுதினர்..

இந்துக்களின் பெருமைகள்

கொஞ்சம் வெளிவந்த

காலத்தில்தான்

இரண்டாம் எதிர்ப்பாக

திராவிட கும்பல் எழும்பிற்று..

ஆம்

முதல் வெறுப்பு

கால்டுவெல் காலமும்

சத்தமில்லாமல்

மிஷனரிகள்

தமிழக இலக்கிய எழுத்துலகில்

ஊடுருவிய காலம்..

இரண்டாம் வெறுப்பே

நீதிகட்சி

திராவிட கும்பலெல்லாம்

ஆடிய காலம்..

அதில்தான்

இந்துக்களின் சிறப்பான

கம்பராமாயணத்தை விமர்சிப்பது,

நாயன்மார் கதையினை

கொச்சைபடுத்துவது,

திருவாசகத்தை பழிப்பது என

அட்டகாசம் செய்தார்கள்..

ஆம்

இருக்கும் இலக்கியங்கள்

பலவற்றை

சமண இலக்கியமாக்கிவிட்டார்கள்,

அதிலும்

இந்து இடங்களை மறைத்தார்கள்.

திருகுறளும்

இந்துக்களுக்கு அல்ல என்றார்கள்

எஞ்சி இருக்கும்

இந்து நூல்களையும்

கொச்சைபடுத்த கிளம்பினார்கள்

வஞ்சகன் அண்ணாதுரை

"கம்ப ரசம்" எழுதியதும்

கயவன் ராம்சாமி

"பெரிய புராணத்தை கொளுத்துவோம்"

என கிளம்பியதும்

அப்படித்தான்..

எனினும்

ஆனந்த விகடனின் வாசன்,

கல்கியின் கிருஷ்ண மூர்த்தி

போன்றவர்கள்

மிக அழகான எழுத்து மூலம்

இந்து பெருமைகளை

வெளிகொண்டு வந்தார்கள்..

குமுதம் போன்றவையும்

அதை செய்தன,

இன்னும் பல உண்டு

இதில்தான்

கண்ணதாசன்,

ஜெயகாந்தன்

போன்றோர்

ஓரளவு

இந்துத்வமும் தேசியமும்

பேசமுடிந்தது..

பின்

திராவிட கும்பல்

ஆட்சிக்கு வந்ததும்

பத்திரிகை உலகமும்

இலக்கிய உலகமும்

அவர்களால் வளைக்கபட்டன‌..

ஆனந்த விகடனும்,

கல்கியும்

இன்னும் பலவும்

சிக்கல்களுக்கு உள்ளானது,

பாரம்பரியமான

இந்து பத்திரிகையும்

அவர்களால் வளைக்கபட்டது..

விளைவு

இந்துபெருமைகளையோ

கலாச்சாரங்களையோ

எழுத இடமில்லாது போயிற்று

ஜெயகாந்தன் எனும்

மாபெரும் எழுத்தாளன்

அவனுக்கு

தளம் இல்லாமல் முடக்கபட்டான்,

இச்சிக்கலில் விழுந்த

கண்ணதாசனே

கடைசியில்

"இயேசு காவியம்" எழுதி

சரணடைந்தார்

ஆம்

தேசியம் பேசினால்

இங்கு இதுதான் நடக்கும்

என்பது

எல்லா எழுத்தாளனுக்கும்

புரிந்தது

அதன் பின் அப்படியே

எழுத்தாளர் கூட்டம்

இரண்டுவகையாக பிரிந்தது

ஒன்று

கருணாநிதியிடம்

சரணடைந்தது..

இன்னொன்று

தேசியமும் இந்துத்வமும்

எழுதுவதில்லை என

முடிவு செய்துவிட்டது..

இதில்தான்

வாலி போன்றவர்கள் கூட

மேல்மட்ட

இந்துத்வம் பேசினார்களே

தவிர

இந்து ஆதரவு

திராவிட முகம் கிழிப்பெல்லாம்

பேசவே இல்லை..

சுஜாதா இதில் கைதேர்ந்தவர்

அவருக்கும்

தன் எழுத்து

முடங்கிவிட கூடாது எனும்

அச்சம் இருந்தது,

திராவிட அரசியலை

தொடாமல் எழுதிவந்தார்..

மதனும் அவ்வகையே..

அதன் பின்

பாலகுமாரன் எழுதினார்,

அவரும்

இந்து மத ஆணிவேர் வரை

தொட்டு எழுதினார்

மற்றபடி

திராவிடத்தில் கைவைக்கவில்லை,

ஆனால்

இந்துமதம் பற்றி எழுத வந்தபின்

அவரின்

சினிமா வாய்ப்புகள்

குறைந்ததை உணர்ந்தார்

எனினும்

ஒரு யோகியின்

மனநிலையில் இருந்ததால்

கர்மா என ஏற்றுகொண்டு

சுதர்மத்தை செய்தார்..

"உடையார்" போன்றவை

அதன் பின்பே பிறந்தன

அதன் பின் இங்கு

இந்துத்வம்

தேசியம் பேசும்

எழுத்தாளர்கள் யாரும் இல்லை

இன்றிருக்கும்

எழுத்தாளர்களை

மூவகையாக பிரிக்கலாம்.

முதலாவது

மனநிலை பிறண்ட கோஷ்டிகள்

அது

என்னவெல்லாமோ எழுதி

இலக்கியம், கவிதை என

சொல்லி கொள்ளும்,

கழுதைக்கும்

4 ஆதரவாளன் உண்டு

என்பது போல்

அங்கும் சில கூட்டம் இருக்கும்..

இரண்டாம் வகை

சமர்த்தானது..

எது எழுதினால் காசு வருமோ

அதை மட்டும் எழுதி

பிரபல பத்திரிகை முதலாளிகளை

பகைக்காமல் பார்த்து கொள்ளும்,

இவைதான்

விகடன்

குமுதம்

இந்து

பத்திரிகைகளில்

"சமத்துவம்" "மதசார்பின்மை"

என பேசி

தங்கள் தொழிலை

காத்து கொள்ளும்

மூன்றாம் வகை

சினிமா மற்றும் டிவி சீரியலில்

சிக்கி கிடக்கும் வகை..

இவைகள்

மாபெரும் திறமைசாலிகள்..

ஆயிரம் வாதங்களோடு எழுதும்

அற்புத சிந்தனைவாதிகள்..

ஆனால்

இந்துத்வா எழுதினால்

தேசியம் எழுதினால்

சில்லறை தேறாது என்பதால்

தேசியமும் பேசாது,

இந்துமதமும் பேசாது

இந்த

மூன்றுவகை கோஷ்டிகளாலும்

ஒரு காலமும்

இந்துத்வமோ

தேசியமோ

மலராது,

காரணம்

முதல் வகை

பைத்தியம் வகை

மற்ற இரண்டும்

சோறும் காசும் கண்ட இடத்துக்கு

எழுதும் வகை

விஷயம் இதுதான்.

இங்கு எழுத்தாளனுக்கு

வாழ்வு வழங்கும்

பத்திரிகை முதல் டிவி சினிமாவரை

இந்துவிரோத கும்பலின்

கைகளில் சிக்கி உள்ளன,

அதனால்

பசியாற விரும்புவன்

ஒரு காலமும்

தேசியமும் தெய்வீகமும்

எழுதபோவதில்லை

எழுதினால்

அவன் அங்கு

நிலைக்க போவதுமில்லை

யார் இந்துத்வம் எழுத முடியும்

யார் தேசியம் எழுதமுடியும்

என்றால்

அதற்கு ஒரு சுதர்மம் வேண்டும்,

ஒரு தனி வைராக்கியம் வேண்டும்

"சல்லி காசு இல்லாவிட்டாலும்,

பட்டினி கிடந்தாலும்,

உயிரே போனாலும்

தேசியமும் இந்துமதமும் தவிர

எதையும் எழுதமாட்டேன்"

எனும் தவகோலத்தில்

ஒரு எழுத்தாளன் வேண்டும்

அப்படி

ஒரே ஒருவன் இருந்தான்

அவன் பெயர் சோ.ராமசாமி

எந்த மிரட்டலுக்கும் அஞ்சாமல்

நாடெல்லாம் காங்கிரசும்

தமிழகமெல்லாம் திராவிடமும்

இருந்த கொடுங்காலத்தில்

தொடங்கிய

அவனின் போராட்டம்,

அந்திம காலம் வரை நீடித்தது

கடைசி வரை

உண்மையினை

மட்டும் எழுதினான்

அந்த பீஷ்மர்

அப்படி வைராக்கியமும்,

எழுத்தில்

புகழும்,விருதும்,காசும்,சோறும்,

எதிர்பார்க்காமல்

எழுதுபவன் மட்டுமே,

இங்கு

இந்து..இந்திய..தேசிய...

எழுத்தாளனாக

நிற்க முடியும்

அந்த தியாகத்துக்கு

எவனும் தயார் இல்லை

என்பதால்

ஒதுங்கி கொண்டு

ஆங்காங்கே எழுதுபவனை

"சங்கி எழுத்தாளன்"

என பட்டம் போட்டு

ஒரு ஆனந்தம் அடைகின்றார்கள்..

அவர்களால்

ஒரு மாற்றமும்

வரப்போவதில்லை

மக்களுக்கும்

ஒரு சிந்தனையும்

வரப்போவதில்லை

மாறாக

1700ம் ஆண்டு

மிஷனரிகள்

இந்துக்களின் கண்களை

கட்ட தொடங்கினர்,

திராவிடம்

அதை மேலும் கட்டியது

இந்த சுயநல கோஷ்டி

அதை இன்னும்

அழுத்தமாக கட்டி

மக்களை

குருடாக்கி கொண்டிருக்கின்றது

அந்த கட்டுக்களை

அவிழ்க்க எழுதுபவன்

சங்கி என்றால்

அது

அவர்களுக்கு பெருமையே..

இந்த சதி

இன்று நேற்று வந்ததல்ல..

கம்பனையும்,

ஓளவையும்

இன்னும் அழியா புகழ்பெற்ற

சங்க புலவர்களையும் ,

கபிலனையும்,

பரணரையும்,

புகழேந்தியினையும்,

வள்ளுவனையும்,

சேக்கிழாரையும்

ஒட்ட கூத்தனையும்

இந்துக்கள் என்பதற்காக

ஒதுக்கிவிட்டு..

இந்த

மாபெரும் தமிழ் இலக்கியத்தில்

ஐம்பெரும் காவியம்,

ஐஞ்சிறு காவியம் என

சமண இலக்கியத்தை

தூக்கி வைத்தான்

அல்லவா

மிஷனரி

வெள்ளையனின் கைகூலிகள்..

அன்று தொடங்கிய சர்ச்சை..!!

சமண இலக்கியம் உண்டாம்,

பவுத்த இலக்கியம் உண்டாம்,

இன்னும் என்னென்ன

இலக்கியமோ உண்டாம்,

ஏன்...

தலித் இலக்கியம்

திராவிட இலக்கியம்

கூட உண்டாம்

ஆனால்

"பக்தி இலக்கியம்"

உண்டே தவிர

"இந்து இலக்கியம் "

என ஒன்று

அன்றுமில்லை..

இன்றுமில்லை...

இந்த புரட்டில் வந்ததுதான்

ஈரோட்டு ராம்சாமிக்கு

யுனெஸ்கோ விருது என்பது,

இன்னும்

அவர்கள் செய்த

மோசடிகளையெல்லாம்

தோலுரித்தால்

ராம்சாமிக்கு

கோவணம் கூடமிஞ்சாது

அவ்வளவு

பொய்பிம்பமும்

ஏமாற்று சிந்தனையும்

இங்கு உண்டு,

அன்று

வெள்ளையன்..,

அவனை அடுத்து

காங்கிரஸ் திமுக ,

திமுகவின் சினிமா,

திராவிடத்தின்

ஊடகபிடி, அச்சகபிடி

என

இன்றுவரை

அந்த பொய்பிம்பம்

நீண்டு வருகின்றது..!!

இங்கிருந்து சிந்தியுங்கள்..

உங்களில் இருந்தே

ஆயிரம்

சோ.ராம்சாமியும்,

கண்ணதாசனும்,

ஜெயகாந்தனும்

உருவாகி வந்து

திராவிடத்தின்

கழுத்தை நெறிப்பார்கள்...!!

நன்றி : Stanley Rajan