மணக்கால் அய்யம்பேட்டை | PM 3:06 | Best Blogger Tips

 


எந்த வீட்டில் கடிகாரம் இந்த திசையில் மாட்டி இருக்கின்றதோ, அந்த வீட்டில் கஷ்டமும் வறுமையும் நிரந்தரமாக தங்க தான் செய்யும்.....

கடிகாரம் என்பது வெறும் நேரம் பார்ப்பதற்கு மட்டுமல்ல. நம்முடைய வாழ்க்கையின் நேரத்தை நல்ல நேரமாகவும் மாறுவதற்கு கூட, இந்த கடிகாரம் ஒரு காரணமாக இருக்கின்றது. இது நம்மில் பல பேருக்கு தெரியவில்லை. நம் வீட்டில் வரக்கூடிய கஷ்டத்திற்கு நாம் கடிகாரம் மாட்டியிருக்கும் திசையும், கூட ஒரு காரணமாக இருக்கலாம். ஒரு வீட்டில் எந்த திசையில் கடிகாரம் இருக்க வேண்டும்? எந்த திசையில் வைத்தால் வீட்டில் வறுமை நீங்கும். குறிப்பாக அது எந்த வண்ணத்தில் இருக்க வேண்டும், எந்த வடிவத்தில் இருக்க வேண்டும், இப்படிப்பட்ட பல குழப்பங்களுக்கான தீர்வைத்தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

இந்த பூமியில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் போது, சுழல்கின்ற காலச்சக்கரத்தை நமக்கு வலியுறுத்துவதே இந்த கடிகாரம் தான். அந்த காலத்தில் நம்முடைய முன்னோர்கள் வீட்டில் கடிகாரத்தை மாட்டி வைக்க வில்லை. வானத்தை பார்த்து, வானத்திலுள்ள சூரியனைப் பார்த்து தான் நேரத்தை கணித்தார்கள். அவர்களுடைய முன்னேற்றம் தடைபடாமல் இருந்ததற்கு வீட்டில் கடிகாரம் இல்லாததும் ஒரு காரணம். சரி, இப்போது நம்முடைய முன்னேற்றம் தடைபடாமல் இருக்க என்ன செய்வது?


முதலில் உங்களுடைய வீட்டில் கடிகாரம் இருக்க வேண்டிய திசை வடக்கு திசை. வடக்கு பக்கம் உள்ள சுவற்றில் உங்களுடைய கடிகாரத்தை மாட்ட வேண்டும். அந்த கடிகாரம் தெற்கு பார்த்த வாறு இருக்க வேண்டும். இப்படி இருந்தால் உங்களுடைய வீட்டில் பண கஷ்டம் வராது. பொருளாதார சூழ்நிலை உயர்ந்துகொண்டே இருக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது. குறிப்பாக வடக்கு திசை சுவற்றில் மாட்டப்படும் கடிகாரம் வட்ட வடிவில் இருப்பது நமக்கு இன்னும் அதிகப்படியான பலனைப் பெற்றுத் தரும்.

வீட்டில் நோய்நொடிகள் இல்லாமல் இருக்க வேண்டும். குடும்பத் தலைவனின் ஆரோக்கியத்தில் குறைபாடு இருந்தால் உங்களுடைய வீட்டில் கிழக்கு பக்கம் உள்ள சுவற்றில் கடிகாரத்தை மாற்ற வேண்டும். அப்போது கடிகாரம் மேற்கே பார்த்தவாறு இருக்கும். கிழக்குப்பக்கம் நீங்கள் மாட்டும் கடிகாரம், பிரவுன் கலர் அதாவது மரச்சாமான்களின் வண்ணத்தில் இருந்தால் மிகவும் நல்லது.

கிழக்கு பக்கம் மாட்டும் கடிகாரத்தை வட்ட வடிவில் அல்லது சதுர வடிவில் மாற்றிக் கொள்ளலாம். சிலபேரது வீட்டில் ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை சத்தம் எழுப்பும் கடிகாரம் இருக்கும் அல்லவா? அந்த கடிகாரம் இருந்தால் அதை கிழக்குப்பக்கம் மாட்டி வையுங்கள். உங்களுடை வீட்டில் செல்வ செழிப்பு மேலும் அதிகரிக்கும் என்றும் சொல்லப்பட்டுள்ளது.

உங்களால் கிழக்கு பக்கம் உள்ள சுவற்றிலும் கடிகாரத்தை மாட்ட முடியவில்லை. வடக்குப் பக்கம் உள்ள சுவற்றிலும் கடிகாரத்தை மாற்ற முடியவில்லை, என்றால் மேற்கு சுவற்றில் கடிகாரத்தை மாட்டி வைத்துக் கொள்ளலாம்.

எக்காரணத்தைக் கொண்டும் தெற்குப் பக்கத்தில் மட்டும் கடிகாரத்தை மாட்டக்கூடாது. இதற்கு என்ன காரணம்? கடிகாரத்தில் எப்போதுமே முள் ஓடிக்கொண்டே இருக்கும். ஓடிக்கொண்டே இருக்கும் போது அதில் ஒரு விதமான சத்தம் எழும். பொதுவாக அது நம்முடைய காதுகளுக்குக் கேட்காது. சில சமயங்களில் அமைதியாக இருக்கும் சூழ்நிலையில் நமக்கு அந்த சத்தம் கேட்கும் அல்லவா? தெற்கு என்பது எமதர்ம ராஜாவுக்கும், நம்முடைய முன்னோர்களுக்கும் சொந்தமான திசை. ஆகவே அவர்களை தொந்தரவு கொடுக்கும் அளவிற்கு சத்தம் எழுப்பும் இந்த கடிகாரத்தை அந்த இடத்தில் மாற்றக் கூடாது என்றும் சொல்லப்பட்டுள்ளது.

நம்முடைய வீட்டில், நேரம் பார்ப்பதற்காக அடிக்கடி பார்க்கக்கூடிய பொருள் கடிகாரம். இந்த கடிகார கண்ணாடியில் நிச்சயம் விரிசலும் அல்லது உடைந்து இருக்கவே கூடாது. அப்படி இருந்தால் எதிர்மறை ஆற்றல் நமக்கு உண்டாகிவிடும் என்றும் சொல்லப்பட்டுள்ளது. நம்முடைய கால நேரத்தை குறித்து, நமக்கு வரக்கூடிய நல்லது கெட்டதை நிர்ணயிக்கும் சக்தியும் இந்த கடிகாரத்திற்கு உண்டு. ஆகவே, இந்த கடிகாரத்தை எக்காரணத்தைக் கொண்டும் மெதுவாக ஓட விடக்கூடாது. அதாவது கடிகாரம் எப்போதும் சரியான நேரத்தில் தான் இருக்க வேண்டும். 5 நிமிடங்கள் அதிகமாக வைத்துக் கொள்ளலாமே தவிர ஒரு நிமிடம் கூட நம்முடைய கடிகாரம் பின்னோக்கி ஓடக் கூடாது. என்பதையும் நீங்கள் கவனித்துக் கொள்ள வேண்டும்.

ஓடாத கடிகாரத்தை சுவற்றில் மாட்டி வைக்காதீர்கள். உங்களுடைய வீட்டில் நிறைய கடிகாரம் இருக்கின்றது என்பதானால் ஆங்காங்கே எல்லா இடங்களிலும் கடிகாரத்தை மாட்டி வைக்க கூடாது. குறிப்பாக நில வாசலுக்கு வெளியில் கடிகாரம் இருக்கவே கூடாது. சிலபேர் பால்கனியில் எல்லாம் கடிகாரம் மாட்டி வைத்திருப்பார்கள். அது மிகவும் தவறு. ஒரு கடிகாரத்திற்கு வாஸ்துப்படி எத்தனை விஷயங்கள் சொல்லப்பட்டுள்ளன! நம்பிக்கையுள்ளவர்கள் பின்பற்றி பலன் அடையலாம் என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

- வாஸ்து சாஸ்திர குறிப்புகள் நூலில் இருந்து.......

 

நன்றி இணையம்