பல வெற்றிகளை பெற மோடிஜி

மணக்கால் அய்யம்பேட்டை | 1:21 PM | Best Blogger Tips




 

முந்தைய சோனியா காங்கிரஸ் அரசு செய்த தவறுகளை திருத்த குறைந்தபட்சம் 60 வருடங்கள் ஆகும் என்பதே பலரின் கணிப்பு...

ஆனால் இந்த மோடி ராஜ்ஜியம் அவ்வளவு காலம் எடுத்துக் கொண்டால் எப்பொழுது இந்த பாரதத்தை அகண்ட பாரதமாக மாற்றுவது என்று யோசித்து விரைவாக காய்களை நகர்த்தி கொண்டிருக்கிறது ...

கடந்த சோனியா காங்கிரஸ் ஆட்சி காலங்களில் கிட்டத்தட்ட 250 தனியார் காப்பீட்டு நிறுவனங்களை 1956 இல் நேரு வலுக்கட்டாயமாக அரசுடமையாக்கி ஒரே நிறுவனமாக LIC உருவாக்கினார்...

LIC யின் அப்போதைய மதிப்பு சுமார் ரூ 5 கோடி. LIC யின் இன்றைய மதிப்பு சுமார் 31 லட்சம் கோடி...!

LIC மற்றும் BSNL தனியார் மயமாக்க யுபிஏ காலத்தில் முயற்சி எடுக்கப்பட்டது. ஏகப்பட்ட ஊழல் காரணமாக credibility crisis. முயற்சி வெற்றிபெறவில்லை.

BSNL தனியார் மயமாக்க பாஜக ஒப்புக் கொள்ளவில்லை - “தொலை தொடர்பு ஒரு Strategic asset” என்கிறது பாஜக. எனவே, அதிகப்படியாக இருக்கும் ஊழியர்களை VRS கொடுத்து அனுப்பியிருக்கிறது அரசு.

LICயை தனியார்மயமாக்க பாஜக முயற்சிக்கிறது... LIC பங்கு விற்பனை உலகின் மிகப்பெரும் விற்பனையாக இருக்கும் என்கிறார்கள் (சவுதி அராம்கோவையும் மிஞ்சும் என்கிறார்கள்).

டாட்டாவிடமிருந்து விமான நிறுவனத்தை நேரு பிடுங்கி, அதை அரசுடைமையாக்கி ஏர் இண்டியா - இன்று அது 90,000 கோடி நஷ்டம்.

இந்திரா தனியார் வங்கிகளை அரசுடமையாக்கினார் பின்னாளில். அவையும் தனியார் மயத்தை நோக்கி...

பாதுகாப்பு, வருவாய் (revenue), விண்வெளி ஆய்வு (ISRO), தொலை தொடர்பு (BSNL) போன்ற முக்கியமானவற்றை தவிர வேறெதையும் (ரயில்வே போக்குவரத்து, வங்கிகள், ஆயுள் காப்பீடு...) தன்வசம் வைத்துக் கொள்வதாக இல்லை மோதி அரசு. .

காங்கிரஸின் திட்டப்படி - சோவியத் முறையில் - அனைத்து தொழில் நிறுவனங்களையும் காங்கிரஸ் அரசு வைத்துக் கொள்ளும். தன் ஜால்ராக்களுக்கு அங்கே பொறுப்பு கொடுத்து காசு பார்ப்பார்கள். எல்லாம் கோடி கோடியாக ஊழல் நடக்கும்.

அதே சமயம், அரசு நிறுவனங்கள் (வங்கி, ரயில்வே, BSNL, LIC...) எல்லாம் தகர டப்பா குலுக்கிகளின் கம்யூனிச சொர்க்கம். வேலையை விட்டு தூக்க முடியாது - யூனியன். நிரந்தர சம்பளம்.

பொதுமக்களின் வரிப்பணத்தில் ஆரம்பிக்கப்பட்டாலும், பொதுமக்களுக்கு இதில் எந்த லாபமும் கிடையாது. எவரையும் கேள்வி கேட்க முடியாது. கழுதை தேய்ந்து கட்டெறும்பானது போல, நிறுவனங்களை தொடர்ந்து நடத்த முடியாமல் போய்விடும்.

BSNL வருமானத்தில் கிட்டத்தட்ட 86% ஊழியர்களின் சம்பளத்திற்கே போனபின் மீதமிருக்கும் 14% இல் என்ன upgrade செய்ய முடியும்? நிறுவனம் நட்டத்தில். ஏர் இண்டியாவும் இதே கதை.

அவற்றை மூடாமல் தொடர்ந்து நடத்த மக்கள் வரிப்பணத்தை மீண்டும் அவற்றில் கொட்டி வந்தன அரசுகள்.

மக்கள் வரிப்பணத்தில் அரசு நிறுவனங்கள் நஷ்டம்.

மக்கள் வரிப்பணம் மக்களுக்கு நஷ்டம், காங்கிரஸ் கம்யூனிஸ்ட்டுகளுக்கு லாபம்..!

இந்த ஊழல் நாடகத்தை மாற்ற முயற்சிக்கிறது பாஜக கூட்டணி.

ரயில்வேயில் வெற்றி.

BSNL - பாதி வெற்றி.

ஏர் இண்டியா - இந்த ஆண்டு விற்பனை.

LIC - இந்த ஆண்டு பங்குகள் விற்பனை.

மேலும் பல வெற்றிகளை பெற மோடிஜி, அமித்ஷா ஜி கூட்டனிகளுக்கு கரம் கொடுப்போம் உறுதியாக...!

ஜெய் ஹிந்த்..!

பாரத் மாதா கி ஜெய்..!

 

நன்றி இணையம்