திருச்சி, உறையூர் சுருட்டுகளை சப்ளை செய்த கதை..

மணக்கால் அய்யம்பேட்டை | 3:04 PM | Best Blogger Tips

 


வின்ஸ்டன் சர்ச்சிலுக்கு (Winston Churchill)

திருச்சி, உறையூர் சுருட்டுகளை சப்ளை செய்த கதை..

வின்ஸ்டன் சர்ச்சிலுக்குப் பிடித்தமான திருச்சி, உறையூர் சுருட்டுகள் அவருக்குத் தடையின்றி கிடைப்பதற்காகவே ஒரு பதவி உருவாக்கப்பட்டது அதன் பெயர் சிசிஏ, (CCA) அதாவது சர்ச்சில் சிகார் அசிஸ்டெண்ட் (Chuchil Cigar Assistant) என்ற பதவிதான் அது. தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் அலுவலகத்தில் இந்தப் பதவி நீண்ட காலத்துக்கு இருந்தது.

1945-ல் வின்ஸ்டன் சர்ச்சில் தோற்ற பிறகும் இந்தியா 1947-ல் சுதந்திரம் அடைந்த பிறகும் கூட இந்த சர்ச்சில் சிகார் அசிஸ்டெண்ட் பதவி பல ஆண்டுகளுக்கு நீடித்தது. பிறகு அரசு ஊழியர்களுக்கு சம்பளம் உயர்த்த முடிவு செய்ய கமிஷன் ஒன்றை அமைத்தது. இந்த சர்ச்சில் சிகார் அசிஸ்டெண்ட் பதவியிலிருப்பவரும் தனக்கும் சம்பள உயர்வு வேண்டும் என்று கமிஷனுக்கு கடிதம் எழுதியிருப்பதும் ஆச்சரியமான விஷயம்.

அந்தக் கடிதத்தை சிசிஏ (CCA) எழுதும் வரை அப்படி ஒரு பதவி இருப்பதே பலருக்கும் தெரியவில்லை என்பது அதைவிடவும் விநோதம்.

இந்தச் சம்பவத்தை அடிக்கோடிட்டு காட்டிய பிரதமர் மோடி, 'நிர்வாகத்திலும் ஆட்சி முறையிலும் மாற்றம் தேவை என்பதை வலியுறுத்தும் ஒரு மிகப்பெரிய உதாரணம் இந்த சர்ச்சில் சிகார் அசிஸ்டெண்ட் பதவி விவகாரம். சமூகம் முன்னேற, ஆட்சி முறை முன்னேற பழைய விஷயங்கள் களையப்பட வேண்டும், மாற்றங்கள் வர வேண்டும்' என்று பேசினார். பிரதமரின் பேச்சு பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

பிரதமர் மோடி மேலும் கூறும்போது 'சமூக சீர்த்திருத்தவாதிகளான

ராஜாராம் மோஹன் ராய் (Raja Ram Mohan Roy, Indian historian),

ஈஸ்வர் சந்திர வித்யாசாகர், (Ishwar Chandra Vidyasagar, Indian educator and social reformer)

ஜோதிராவ் புலே (Jyotirao Phule, Indian social activist)

அம்பேத்கர் (Dr B. R. Ambedkar) ஆகியோரும் தைரியமாக சமூக மாற்றங்களுக்கு உழைத்தனர்.


ஓடாத நீர் எப்போதும் நோய்களுக்குத்தான் இட்டுச் செல்லும் ஓடும் தண்ணீர்தான் புதிய ஆற்றலை உட்செலுத்தும். எனவே எதுவுமே மாறக்கூடாது என்ற மனநிலை தவறு, இளைய சமுதாயம் மாற்றங்களுக்காக நீண்ட காலம் காத்திருக்கக் கூடாது.

பொறுப்பை ஒருவர் கையில் எடுத்துக் கொண்டு நாட்டுக்கு எது தேவையோ அதைச் செய்ய வேண்டும். நாட்டின் முன்னேற்றத்தையே, 'இருப்பதை அப்படியே வைத்திருப்போம்' என்ற ஒரு மனநிலைதான்.

இந்த இடத்திற்கு வரும்போதுதான் மாற்றமடையா விஷயங்களுக்கான ஒரு கதையாக வின்ஸ்டன் சர்ச்சிலுக்கு திருச்சி உறையூர் சுருட்டு சப்ளை செய்வதற்காகவே எல்லாம் முடிந்த பிறகும், சுதந்திரம் அடைந்த பிறகு பல ஆண்டுகள் ஒரு பதவி நீடித்தது என்ற ஆச்சரியகரமான ஒரு வரலாற்றுச் செய்தியை பகிர்ந்து கொண்டார் பிரதமர் மோடி.

அனைத்தும் மாற்றத்துக்கு உரியதே, விவசாயச் சட்டங்களும் சீர்த்திருத்தங்களும் சமூகத்திற்கும் நாட்டுக்கும் அவசியமானது என்பதை வலியுறுத்த வின்ஸ்டன் சர்ச்சிலுக்கு திருச்சி உறையூர் சுருட்டுகளை அனுப்ப நியமிக்கப்பட்ட தமிழக அரச பதவி ஒன்றை பிரதமர் மோடி குறிப்பிட்டு பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.

சுதந்திரம் கிடைத்தப் பிறகும் பல பத்தாண்டுகளுக்கு அந்த பதவி நீடித்தது போன்று அனைத்தையும் அப்படியே மாறாமல் வைத்துக் கொண்டிருக்க முடியுமா என்ற கோணத்தில் பிரதமர் நரேந்திர மோடி மக்களவையில் பேசினார்.


மக்களவையில் குடியரசுத்தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் பேசிய பிரதமர் மோடி பல ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தில் நடந்த ஆனால் சுதந்திரத்துக்குப் பிறகும் நீடித்த ஒரு வரலாற்று நிகழ்வைக் குறிப்பிட்டது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது என சில பத்திரிக்கைகள் பாராட்டியுள்ளன.

Credit : Rajappa Thanjai

நன்றி இணையம்