ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதி என அறிவித்த சவுதி அரேபியா

மணக்கால் அய்யம்பேட்டை | PM 3:28 | Best Blogger Tips



 சவுதி அரேபியா இஸ்லாமிய உலகம் அதிரும் ஒரு முடிவினை அறிவித்திருக்கின்றதுஇது நிச்சயம் வரவேற்கதக்கது

இந்தியாவின் ஒவ்வொரு குடிமகனும் மத இன வேறுபாடு தாண்டி இந்தியனாய் வரவேற்க வேண்டிய முடிவு இது

ஆம்இதுகாலமும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் அதை தாண்டிய சிக்கலான பலுசிஸ்தான் போன்றவை எங்களுக்கு என ஒரு மேப் வரைந்து பாகிஸ்தான் உலகுக்கு சொன்னது உலக நாடுகளும் அதை ஏற்றன

இப்பொழுது பாகிஸ்தான் செய்வது தவறுஇந்திய 370வினை ரத்து செய்த நிலையில் இனி காஷ்மீர் முழுக்க இந்தியாவுக்கே என முடிவு செய்து அறிக்கைவிட்டுவிட்டது சவுதி

ஆம்திருத்தபட்ட பாகிஸ்தான் படத்தை அந்நாடு சொல்லியிருக்கின்றதுஅதன்படி முழு காஷ்மீரும் இந்தியாவுக்கே என்கின்றது





(உண்மையில் பாகிஸ்தானின் குவாடர் துறைமுகம் சீனாவின் கட்டுபாட்டில் வந்து அதன் வழியாக சீனாவின் ஒரே சாலை திட்டம் இவ்வழியாக சீனாவுக்கு செல்லும் அதை மிக சரியாக அடித்து அது இந்திய பகுதி என சொல்லி அதிர வைக்கின்றது சவுதி)

இஸ்லாமிய நாடுகளின் தலைமை நாடான சவுதி அரேபியா அதுவும் பாகிஸ்தானுடன் நெருக்கமான உறவு கொண்ட சவுதி இதை செய்வது ஆச்சரியம்

காரணம் சவுதியில் பாகிஸ்தான் ராணுவம் உண்டுசவுதி அரசருக்கான தனிபட்ட பாதுகாப்பில் கிட்டதட்ட 3000 பாகிஸ்தானியர் உண்டு

ஆம் இதுதான் நடைமுறைவெளிபாதி தெரிந்தும் மீதி தெரியாமலும் நடக்கும் நடைமுறை

இப்பொழுது துருக்கி பாகிஸ்தான் நெருக்கம்சீன பாகிஸ்தான் நெருக்கம் என எரிச்சல் அடைந்த சவுதி "இத்தோடு ஒழிஎன கிளம்பிவிட்டது

பாகிஸ்தானுக்கு இது பெரும் அதிர்ச்சி பேரதிர்ச்சிஅவர்களின் 73 வருட அரசியலில் பெரும் அடி

இனி சவுதி அரச விஷயங்களிலும் பாகிஸ்தான் விரட்டபடலாம்சவுதி பாதுகாப்பினை இன்னொரு பெரும் சக்தி ஏற்கலாம்

ஏற்கனவே தலையில் கை வைத்திருக்கும் பாகிஸ்தான் இப்பொழுது துண்டு போட்டு மூடி கொண்டது

உய்குர் இஸ்லாமியர் சீனாவிடம் அடிவாங்கும் பொழுது அவர்களுடன் கொஞ்சிவிட்டு காஷ்மீர் என்றவுடன் ஊளையிடும் பாகிஸ்தானைமதம் எனும் பெயரில் கடும் அதர்ம தீவிரவாதிகளை உருவாக்கும் பாகிஸ்தானை சவுதி அடையாளம் கண்டு கொண்டது பெரும் நல்ல விடயம்

ராமர் கோவில் கட்டும் இந்தியாவினை நட்பாக்கி கொண்டுஇஸ்லாமிய பாகிஸ்தானை அந்நாடு விரட்டி அடிப்பது என்பது அது தர்மத்தின் வழி நடப்பதை சொல்கின்றது




நன்றி இணையம்