நற்செயலைப் பாராட்டுங்கள்

மணக்கால் அய்யம்பேட்டை | 11:12 AM | Best Blogger Tips





எப்பொழுதும் எல்லோரும் விரும்பும் ஒரு செயல் எதுவென்றால் மற்றவர்கள் தன்மைப் பாராட்டுவது தான். ஆனால்!, அவர் உயிரோடு இருக்கும் பொழுது அவரைப் புகழ மறுப்பவர்கள், அவரது பிரிவிற்கு பின் புகழ்ந்து பேசுகிறார்கள்...

அதனால் தான் உயிரோடு இருக்கும் பொழுது பலருடைய அருமை தெரியாமலேயே போய் விடுகிறது...


ஒருவருடைய உன்னதமான செயலை அவர் வாழும் காலத்திலேயே பாராட்ட வேண்டும்...


நம் அருகில் கூட சாதனையாளர்கள் இருக்கலாம். அவரை இனம் கண்டு கொண்டு பாராட்ட வேண்டும். பாராட்டுவதற்கு ஒருபோதும் தயக்கம் காட்டக் கூடாது...!


நாம் அனைவரும் பாராட்டிற்காக ஏங்குகிறோம். இதில் யாரும் விதிவிலக்குகள் இல்லை. அடுத்தவரைப் பாராட்டினால், நமது மதிப்பு குறைந்து விடும் என்று நாம் தவறாக நம்புகிறோம். அல்லது பாராட்டுவதால் தலைக்கனம் அதிகமாகி விடும் என்று தவறாக நினைக்கிறோம்...


சமுதாயத்திற்கு நற்செயலை செய்தவரை உடனே பலர் முன்னிலையில் பாராட்ட வேண்டும். அதுவும் காலம் தாழ்த்தாமல் பாராட்டி விட வேண்டும்...


நேற்றைய உணவு இன்றைய பசியைத் தணிக்காது. பாராட்டியதற்கான பசி எப்போதும் தணியவே தணியாது...!


ஆம் நண்பர்களே...!


அடிக்கடி மற்றவர்களின் நற்செயலைப் பாராட்டுங்கள். அப்படியானால் உங்களைப் பலரும் நேசிப்பார்கள்...!


சாதனை செய்பவரை மற்றவர்கள் முன்னால் வைத்துப் பாராட்டுங்கள், மற்றவர் முன்னிலையில் அவரது மதிப்பு உயரட்டும். அது நீண்ட நாட்களுக்கு நினைவிருக்கும். பாராட்டுகள் உறவுகளையும் வளர்க்கும்...!!


நீங்கள் தகுதியானவர்களைப் புகழ்ந்தால், நீங்களும் புகழ் பெற வாய்ப்பு ஏற்படும்.




நன்றி இணையம்