ஒரு
சிறுவனுக்கு
நெடு
நாட்களாய்த்
தீராத
சந்தேகம்.
அந்தச்
சிறுவனின்
பெற்றோருக்கோ
சிறுவனுக்குப்
புரிந்த
மொழியில்
சொல்ல
முடியாத
இயலாமை.
ஒருநாள்
மூவரும்
ரமண
மகரிஷியைச்
சந்திக்கச்
சென்றிருந்த
போது
சிறுவன்
ரமணரை
நெருங்கி,
தன்
கேள்வியை
முன்
வைத்தான்.
*தியானம்
என்றால்
என்ன?*
சிரித்துக்
கொண்டே
அந்தச்சிறுவனுக்கு
இலையில்
ஒரு
தோசையைப்
பறிமாறச்
சொன்னார்.
சிறுவனிடம்,
*"நான் எப்போ 'ம்' சொல்றேனோ
அப்போ
சாப்பிட
ஆரம்பிக்கணும்.*
அதே
மாதிரி.....
*எப்போ 'ம்' சொல்றேனோ
அதுக்கப்புறம்
இலையில்
தோசை
இருக்கக்
கூடாது.*
புரிஞ்சுதா?"
என்றார்
சிரித்துக்
கொண்டே.
சிறுவனுக்கு
ஒரே
உற்சாகம்.
சுற்றியுள்ளோருக்குக்கோ
ஒரே
குழப்பம்.
சிறுவன்
*மகரிஷியின்
'ம்'
க்காகத்
தோசையில்
ஒரு
கையை
வைத்தபடி
தவிப்புடன்
அவர்
முகத்தைப்
பார்த்தபடி
இருந்தான்.*
சிறுவனை
சிறிது
காக்க
வைத்து
சற்றைக்குப்
பின்
*'ம்'* சொன்னார்
ரமணர்.
அடுத்த
சில
நிமிஷங்களுக்குள்
இரண்டாவது
*'ம்'* வந்து விடக் கூடாதே
என்ற
பதைப்புடன்
பெரிய,
பெரிய
விள்ளல்களாக
எடுத்து
அவசர
அவசரமாகத்
திணித்துக்
கொண்டே
மகரிஷியின்
முகத்தைக்
கவனிப்பதும்,
தோசையைப்
பிய்த்து
உண்பதுமாக
நேரம்
கரைந்தது.
ரமணர்
புன்னகை
மாறாமல்
அவனையே
பார்த்துக்
கொண்டிருந்தாரே
ஒழிய
*'ம்'* சொல்வதாக
இல்லை.
தோசையோ
சிறுத்து
ஒரு
சிறு
விள்ளலாக
மாறியிருந்தது
இப்போது.
சிறுவனும்
அந்த
விள்ளலில்
கையை
வைத்தபடி
எப்படா
இந்தத்
தாத்தா
*'ம்'* சொல்லுவார்
என்று
காத்திருந்தான்.
சுற்றியுள்ளவர்களுக்கும்
என்ன
தான்
நடக்கப்
போகிறது
என்றறிய
ஆவல்.
எதிர்பாராத
ஒரு
நொடியில்
*'ம்'* சொல்லவும்
சிறுவன்
சடாரென்று
கடைசி
விள்ளலை
வாயில்
போட்டுக்
கொண்டான்.
ரமணர்
புன்னகைத்தபடி.....
*"இரண்டு
'ம்'
- களுக்கு நடுவில்
உன்
கவனம்
எப்படித்
தோசை
மேலும்,
என்
மேலும்
இருந்ததோ,
அதே
போல்
நீ
எந்தக்
காரியம்
செய்தாலும்,
அடிநாதமாக
இறைவன்
மேல்
கவனம்
வைத்திருப்பாயானால்
அதன்
பெயர்
தியானம்.....
புரிந்ததா
இப்போ?"*
என்றார்
மகரிஷி
புன்னகைத்தபடி.
ரமணர்
சொன்ன
அந்த.....
*இரண்டு
'ம்'
கள்*
*வாழ்வு'ம்',*
*சாவு'ம்'*.....
இந்த
இடைப்பட்ட
காலத்தின்
எல்லா
நேரமுமே,
ஒருவன்
தியானத்தில் அமிழ வாய்த்திருப்பதைப்
புரிந்து
கொள்ள.....
*முதிரும்
காலமே
வேறுபடுகிறது.*
நன்றி இணையம்