
புதிய வேதியியல், புதிய வரலாறு, புதிய பாரதம் ...
இந்தியாவுக்கு மட்டுமல்ல உலகத்திற்கே வழிகாட்டும் "உலகத்தலைவர் மோதி" ...
உலகின் குருவாய் பாரதம் ...

இத்தனை ஆண்டுகளாக இந்தியர்கள் என்றாலே பாம்பாட்டிகள், காட்டுவாசிகள் என்று மிஷனரிகள் மூலமாக வல்லரசு நாடுகளின் மக்கள் நினைத்து கொண்டிருந்த தவறான எண்ணங்களை நொறுக்கி "இந்தியர்கள்கள் தான் உலகின் ஆதியான மேன்மக்கள்" என உலகிற்கு உணர்த்தியவரே!
ரஷ்யாவில் ஒரு ரஷ்யன் என்னை முறைத்துக்கொண்டு நீ யார் எனக் கேட்டபோது "நான் இந்தியன். உங்கள் நாட்டின் வளர்ச்சிக்காக ஆயிரக்கணக்கில் கோடிகளை வாரிவழங்கியுள்ள மோடியின் நாட்டுக்காரன்" என்றதும் அடங்கி போய்விட்டான் அந்த ரஷ்யன்.
அமெரிக்காவுக்கே போயி அமெரிக்க வாழ் இந்தியர்களிடம் அமெரிக்க ஜனாதிபதியை அறிமுகம் செய்து வைக்கும் ஆற்றல் அடடா.... அடடா.... அடடா.... உம்மைத்தவிர எவருக்கு வரும் ?

இன்று அமெரிக்க தலைவனே உம்மை அண்டி நிற்கிறாரே..!! எத்தனை எத்தனை அதிசயங்கள்..!!!!
ஒரு இந்தியனாக கண்களில் ஆனந்த கண்ணீரோடு தலை நிமிர்ந்து நிற்கிறேன். உம்மை வணங்குகிறேன்!
இன்றைய இந்தியர்களால் உமக்கு பேறு!
உம்மால் ஒவ்வொரு இந்தியனுக்கும் பெரும் பெருமை!

ஒரே நாளில் உலகம் முழுக்க பிரபலமான படத்தில் உள்ள இந்த சிறுவன் அமெரிக்காவில் சங்க கார்யவாஹ் பொறுப்பில் இருக்கும் பிரபாகர் என்பவரின் மகன் சாத்விக் ஹெக்டே, அமெரிக்காவில் ஷாகா செல்லும் ஸ்வயம்சேவக்..