ஆப் கி பார் ட்ரம்ப் நஹி துளசி கப்பார்ட்?
நேற்று ஹூஸ்டன் நகரில் நடைபெற்ற ஹௌடி மோடி நிகழ்ச்சியில் மோடி பகிங்கரமாக ஆங்கில பார் ட்ரம்ப் கி சர்க்கார் என்று கூறி ட்ரம்புக்கு பூஸ்ட் அளித்துள்ளார். இதை
எதிர்பார்த்தே இந்தியாவின் மிக நெருங்கிய நண்பரும் இந்தியாவில் உள்ள இந்து மத அமைப்புகளுடன் நேரடியாக தொடர்பில் இருக்கும் துளசி கப்பார்ட் நேற்றைய நிகழ்ச்சி
யில் கலந்து கொள்ள வில்லை.
எதிர்பார்த்தே இந்தியாவின் மிக நெருங்கிய நண்பரும் இந்தியாவில் உள்ள இந்து மத அமைப்புகளுடன் நேரடியாக தொடர்பில் இருக்கும் துளசி கப்பார்ட் நேற்றைய நிகழ்ச்சி
யில் கலந்து கொள்ள வில்லை.
ஆயிரம் தான் துளசி கப்பார்ட் பிஜேபி யின் சிந்தாந்ததை முன் வைத்து அமெரிக்க அரசியலில் இந்திய அமெரிக்க உறவை வளர்த்து வந்தாலும் அலுவலக ரீதியாக இப்போதைய
அதிபராக இருக்கும் ட்ரம்பை அடுத்த ஜனாதிபதியாக மோடி பிரமோட் செய்தது அவருக்கு கட்சி மதம் தாண்டி இந்தியா என்கிற தேசத்தின் மீதான பற்று தெளிவாகிறது.
அதிபராக இருக்கும் ட்ரம்பை அடுத்த ஜனாதிபதியாக மோடி பிரமோட் செய்தது அவருக்கு கட்சி மதம் தாண்டி இந்தியா என்கிற தேசத்தின் மீதான பற்று தெளிவாகிறது.
அமெரிக்காவின் அடுத்த அதிபர் தேர்தலில் இப்போதைய அதிபரான டொனால்ட் ட்ரம்ப் குடியரசு கட்சியின் சார்பாக மீண்டும் போட்டியிடுவது உறுதி. ஏனென்றால் ட்ரம்புக்கு போட்டியாக குடியரசு கட்சியில் இருந்து மார்க் சன்போர்டு அதிபர் தேர்தலில் போட்டியிட தயாராகி வந்தாலும் ட்ரம்புக்கு தான் அடுத்த ஆண்டு நவம்பரில் நடைபெறும் அதிபர்
தேர்தலில் குடியரசு கட்சியின் சார்பாக போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என்று உறுதியாக நம்பலாம்.
தேர்தலில் குடியரசு கட்சியின் சார்பாக போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என்று உறுதியாக நம்பலாம்.
அதே மாதிரி அவரை எதிர்த்து போட்டியிட ஜனநாயக கட்சியில் இருந்து மைக்கேல் பென்னட் முன்னாள் துணை அதிபர் ஜோ பைடன் கோரி புக்கர் துளசி கப்பார்ட்,எலிச பெத் வாரன் கமலா ஹாரிஸ் என்று பல பெயர்கள் அடிபட்டாலும் அடுத்து வரும் ஜனநாயக கட்சியின் வேட்பாளர் நிச்சயமாக
இந்தியாவோடு தொடர்பு உள்ளவராகவே இருப்பார்.
இந்தியாவோடு தொடர்பு உள்ளவராகவே இருப்பார்.
வருகின்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியின் சார்பாக போட்டியிட அதிக வாய்ப்புகள் இருப்பதாக கருதப்படுபவர்களில் மூன்று பேர் இந்தியாவோடு தொடர்பு உள்ளவர்கள். இதில் மைக்கேல் பென்னட் இந்தியா வில் பிறந்தவர்.அவருடைய அப்பா டாக்லஸ் பென்னட் டெல்லியில் உள்ள அமெரிக்க தூதர் அலுவலகத்தில் வேலை செய்த பொழுது பிறந்தவர் .
இன்னொருவர் கமலா ஹாரிஸ் அவர்களின் பூர்வீகம் நம்முடைய சென்னை தான்.கமலா ஹாரிஸ் அம்மா சியாமளா கோபாலன் நம்முடைய சென்னை பெசண்ட் நகரில் பிறந்த
பிராமின். கேன்சர் ஆராய்ச்சிக்காக அமெரிக்காவுக்கு வந்தவர் அப்படியே ஒரு அமெரிக்கரை திருமணம் செய்து அமெரிக்காவில் செட்டிலாகியதால் அவருடைய மகள் கமலா ஹாரிஸ் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டி நாட்டு வெற்றி பெற்றால் அடுத்த அமெரி க்க அதிபரின் பூர்வீகம் நம்முடைய சென்னை என்று கொண்டாடலாம்.

கமலா ஹாரிஸ்க்கு ஆதரவாக அவருடைய தங்கை மாயா லட்சுமி அமெரிக்கா முழுவதும் சென்று ஆதரவு திரட்டி வருகிறார். ஒரு வேளை கமலா ஹாரிஸ் அமெரிக்க அதிபர்
தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற நேர்ந்தால் அதற்கான பெருமை அவருடைய தங்கை மாயாலட்சுமியையே சென்றடையும் .
தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற நேர்ந்தால் அதற்கான பெருமை அவருடைய தங்கை மாயாலட்சுமியையே சென்றடையும் .
அப்படி கமலா ஹாரிஸ் அமெரிக்க அதிபராக தேர்வானால் 2021 ல்
தங்கையுடையாள் படை க்கு அஞ்சாள் என்கிற தலைப்பில் உலகம் முழுவதும் மாயா லட்சுமி பற்றி எழுதி தள்ளி விடும். மாயா ஏற்கனவே 2016 ல்
நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் ஹிலாரி கிளி ண்டனின் பிரச்சார யுக்திகளை வகுத்தவர்.
மாயா லட்சுமியின் மகள் பெயர் என்ன தெரியுமா? மீனாஹாரிஸ்.
என்ன தான் அமெரிக்காவில் ஆங்கிலேயரை காதலித்து திருமணம் செய்து செட்டிலானா லும் தன்னுடைய வம்சாவளியில் வரும் குழ ந்தைகளுக்கு இந்து பெயர்களே இருக்க வேண்டும் என்று மகள்களிடம் சத்தியம் வாங்கி இருக்கிறார் சியாமளா கோபாலன்.
இன்று வரை அமெரிக்காவில் உள்ள இந்து கோயில்களில் அக்காவையும் தங்கையையும் சேர்ந்தே பார்க்கலாம்.
சரி போதும்ப்பா கமலா ஹாரிஸ் புராணம் துளசி கப்பார்ட் பற்றி விசயத்திற்கு வா என்கிறீர்களா இதோ வந்து விட்டேன்.
பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள அமெரிக்காவுக்கு சொந்தமான சமோயா தீவில் மைக்கப்பார்ட் என்பவருக்கு 1981 ல்
பிறந்த துளசி கப்பார்ட் தான் அமெரிக்காவின் முதல் மற்றும் ஒரேஇந்து மதத்தை சார்ந்த எம்பி என்கிற பெருமையை உடையவர். இதற்காகவே இவர் அடுத்த அமெரிக்க ஜனாதிபதியாக வர நாம் பிரார்த்தனை செய்வோம் .
என்னடா. மைக் கப்பார்ட் என்கிற ரோமன் கத்தோலிக்க கிறிஸ்தவருக்கு பிறந்த பெண் எப்படி இந்து மதத்திற்கு மாறினார் என்று உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம்.
என்னடா. மைக் கப்பார்ட் என்கிற ரோமன் கத்தோலிக்க கிறிஸ்தவருக்கு பிறந்த பெண் எப்படி இந்து மதத்திற்கு மாறினார் என்று உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம்.
ஆனால் நூலைப்போல சேலை தாயைப்போல பிள்ளை என்று ஒரு பழமொழி இருக்கிறது அல்லவா அதன் அடையாளம் தான் துளசி கப்பார்ட்.
துளசி கப்பார்ட்டின் அம்மா கரோல் அமெரிக்காவின் இந்தியானா மாநிலத்தில் பிறந்தவர். பாருங்கள் அதென்னப்பா அமெரிக்காவிலும் இந்தியானாஎன்று கேட்கிறீர்களா. இந்தியானா என்றால்இந்தியர்களின் நிலம் என்று அர்த்தம். செமயா இருக்கிறது அல்லவா.
அமெரிக்காவில் இந்தியானா என்கிற பெய ரில் இந்தியாவை முன்னிறுத்தி ஒரு மாநிலமே இருக்கிற பொழுது இந்திய அமெரிக்க உறவு வளராமலா இருக்க முடியும்? அது
துளசி கப்பார்ட் மூலமாக மிகவும் நெருக்கமாகி வருகிறது.
துளசி கப்பார்ட் மூலமாக மிகவும் நெருக்கமாகி வருகிறது.
இந்தியானாவில் பிறந்த துளசி கப்பார்ட்டின் அம்மாவுக்கு அங்கு வாழ்ந்த இந்தியர்களை பார்த்து இந்து மதத்தின் மீது பற்று ஏற்பட்டு இந்துவாக வாழ விரும்பினார். அதையே தன்னுடைய மகளுக்கும் உணர்த்தி வளர்த்தார்.
சிறு வயதிலேயே தன்னுடைய அம்மா மூல மாக உணரப்பட்ட இந்து மதத்தை உள்வாங்கி ஹூவாய் தீவில் வளர்ந்த துளசி கப்பார்ட் அங்கேயே அமெரிக்க ராணுவத்தில் பணிபுரிந்தார்.
பிறகு அவருடைய அப்பா மைக் கப்பா ஹூ வாய் தீவின் செனட் உறுப்பினராக இருந்ததால் அரசியல் ஆர்வம் ஏற்பட்டு ஜனநாயக கட்சியில் இணைந்து தேர்தலில் போட்டியிட்டு ஹூவாய் தீவின் சார்பாக அமெரிக்க காங்கிரஸ் என்று அழைக்கப்படும் நாடாளு மன்றத்தில் மக்கள் பிரதிநிதியாக 2012 ல் இருந்து வருகிறார்.
அமெரிக்க எம்பியாக பதவியேற்கும் பொழுது பகவத்கீதையை சாட்சியாக முன் வைத்து பதவியேற்று நான் ஒரு இந்து என்று பகிங்கரமாக அறிவித்த தால் அமெரிக்க நாடாளு மன்றத்தில் துளசி கப்பார்ட் மதரீதியாக இந்து என்றே அடையாளம் காணப்படுகிறார்.
தொடர்ந்து 4 வது முறையாக அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டதன் மூலமாக அமெரிக்க அரசியலிலும் ஜனநாயக கட்சியிலிலும் துளசி
கப்பார்ட் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது.இதனால் ஐனநாயக கட்சியின் சார்பாக இவரே வேட்பாளராக அறிவிக்க ப்படவாய்ப்புகள் இருக்கிறது.
கப்பார்ட் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது.இதனால் ஐனநாயக கட்சியின் சார்பாக இவரே வேட்பாளராக அறிவிக்க ப்படவாய்ப்புகள் இருக்கிறது.
ஏனென்றால் ஹிலாரி கிளிண்டன் மாதிரி துளசி கப்பார்ட் இப்பொழுது ஜனநாயக கட்சியிலும் அமெரிக்க ஆட்சி அதிகாரங்களிலும் செல்வாக்காக இருக்கிறார்.அமெரிக்க நாடாளும ன்றத்தின் முக்கிய குழுக்களான ஆயுத சேவைகள் கமிட்டி மற்றும் வெளி விவ காரங்களுக்கான கமிட்டிகளில் துளசி அங்கம் வகித்து வருகிறார்.
இந்திய அமெரிக்க உறவுக்கு தொடர்ந்து , இவர் அளித்து வரும் ஆதரவினால் அமெ ரிக்க இந்திய உறவு மேம்பட்டதோடு அல்லாமல் அமெரிக்க நாடாளுமன்றத்தில் இந்து மதத்தின் வேத மந்திரங்கள் ஒலிக்க ஆரம்பித்தன.
இதனால் அமெரிக்க வாழ் இந்தியர்கள் மத்தியில் துளசி கப்பார்ட்டுக்கு ஆதரவு அதிகரித்து வருகிறது இந்தியர்கள் தான் அங்கு ள்ள முக்கியமான பல மாகாணங்களில் தேர்தல் வெற்றியை நிர்ணயிக்கும் சக்தியை கொண்டவர்ளாக இருக்கிறார்கள்.
முக்கியமான விசயம் என்னவென்றால் குடியரசு கட்சியை சேர்ந்தவரும், பல ஜனா திபதி தேர்தல்களுக்கு அந்த கட்சி சார்பில் உயர்மட்டக்குழு உறுப்பினராக இருந்து தேர்தல் யுக்திகளை வகுத்து வரும் இந்திய வம்சாவளியை சேர்ந்த டாக்டர் சம்பத் சிவாங்கி வெளிப்படையாகவே துளசி கப்பார்ட் க்கு ஆதரவு தெரிவித்து குடியரசு கட்சி யினருக்கு குறிப்பாக ட்ரம்புக்கு இனிமா கொடுத்துள்ளார்.
ஜனநாயக கட்சி சார்பில் துளசி கப்பார்ட், வேட்பாளராக அறிவிக்கப்பட்டால் அமெரிக்க தே ர்தலில் போட்டியிடும் முதல் இந்து வேட்பாளர் என்ற பெருமையை இவர் பெறுவார். இதைப் போல அவர் ஜனாதிபதியாக தேர்வானால் அமெரிக்காவின் வரலாற்றில் ஒரு இந்து பெ ண்மணி ஜனாதிபதியாக இருந்தார் என்று உலகம் உள்ளவரை அமெரிக்க வரலாறு கூறிக் கொண்டே இருக்கும்.
எனவே ஆப்கி பார் ட்ரம்ப் சர்க்கரா இல்லை துளசி கப்பார்ட் சர்க்காரா என்று காலம் தான் தீர்மானிக்கும்.ட்ரம்பா இல்லை துளசி கப்பார்டா என்றால் அமெரிக்க வாழ் இந்தியர்களில்
பெரும்பாலான மக்கள் துளசி கப்பார்ட்டுக்கே ஆதரவு தெரிவிக்கிறார்கள்.துளசி கப்பார்ட் ஜனநாயக கட்சியின் வேட்பாளராக தேர்வாகவில்லை என்றால் அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதி ட்ரம்ப் தான்..
பெரும்பாலான மக்கள் துளசி கப்பார்ட்டுக்கே ஆதரவு தெரிவிக்கிறார்கள்.துளசி கப்பார்ட் ஜனநாயக கட்சியின் வேட்பாளராக தேர்வாகவில்லை என்றால் அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதி ட்ரம்ப் தான்..
எது எப்படியோ அடுத்த அமெரிக்க ஜனாதிபதியை தீர்மானிக்கும் இடத்தில இந்தியா இருக்கிறதை நினைக்கும் பொழுது மோடியின் ஆட்சியில் இந்தியா சென்று கொண்டு இருக்கும் பாதையை அறிந்து கொள்ளலாம்.