கொள்ளையடிக்கும் கூட்டத்தில் நடுவில் உத்தமர் உயர்திரு.மோடி

மணக்கால் அய்யம்பேட்டை | 3:59 PM | Best Blogger Tips

Image result for மோடி

கேள்வி: இந்தியாவில் ஏழ்மை எப்போது ஆரம்பமானது?

பதில்: 26மே2014-ல் தான் அதற்கு முன் அனைவரும் 60 ஆண்டுகள் காங்கிரஸ் ஆட்சியில் குளிர்ந்த காபியை பருகி கொண்டே கார்களில் ஊரை வலம்வந்த வண்ணமாக இருந்தனர்.
Image result for மோடி
கேள்வி: அம்பானி மற்றும் அதானி எப்போது பணக்காரர்கள் ஆனார்கள்?

பதில்: 26மே2014-ல் தான் அதற்கு முன் மும்பை தெருக்களில் பிச்சை எடுத்து கொண்டு திரிந்தனர்.

கேள்வி:பெட்ரோல் விலை எப்போது உயர்ந்தது?

பதில்: - 26மே 2014-ல் தான் 
அதற்கு முன் லிட்டர் 14ருபாய்க்கு கிடைத்தது.

கேள்வி: காஷ்மீர் பிரச்சினை எப்போது ஆரம்பமானது?
பதில்: 26 மே 2014-ல்
அதற்கு முன் எல்லா தீவிரவாதிகளும் அமைதியின் தூதுவர்களாக குழந்தைகளுக்கு சாக்லேட் கொடுத்தவண்ணம் சாலைகளில் சுற்றி திரிந்தனர்.
Image result for மோடி
கேள்வி: சீனா மற்றும் பாகிஸ்தானுடன் கருத்து வேறுபாடு எப்போதிலிருந்து உருவானது?
பதில்: 26மே 2014-லிருந்து, அதற்கு முன் அவர்கள் இந்திய மக்கள் மீது பாசமழை பொழிந்தனர் வழியில் எங்கு சந்தித்தாலும் கைகுலுக்கி கட்டியணைத்து முத்தமழை பொழிந்தனர்.

கேள்வி: வெளிநாட்டு வங்கிகளில் கறுப்பு பணம் எப்போதிலிருந்து பதுக்கப்பட்டது?
பதில்: 26மே2014-லிருந்து, அதற்கு முன் கறுப்பு பணம் என்ற ஒன்று இருந்தது இல்லை.

கேள்வி: -விவசாயிகள் தற்கொலை எப்போதிலிருந்து ஆரம்பமானது?
பதில்: 26மே2014-லிருந்து, அதற்கு முன் 24மணிநேரம் தடையில்லா மின்சாரம், உரங்கள் யாவும் வயல் டெலிவரி, பயிர் அறுவடைக்கு முன்பே அரசே வயல்களுக்கு வந்து நல்ல பணம் விவசாயிகளுக்கு கொடுத்து, பயிரை அரசேஅறுத்து சென்றனர்.
Image result for மோடி
கேள்வி: விமானத்தில் பறந்த முதல் இந்திய பிரதமர் யார்?

பதில்: நரேந்திர மோடி ஜி,
அதற்கு முன் பிரதம மந்திரிகள் கனவுகளில் மட்டுமே குடும்பசகிதம் வெளிநாடு சென்று வந்தனர்.
Image may contain: 3 people, including Senthil Kumar, people smiling, stripes and closeup
நன்றி
Ponni Rav
i