நிரூபியுங்கள்

மணக்கால் அய்யம்பேட்டை | 12:40 PM | Best Blogger Tips

Image result for உறவுImage result for உறவு
*தாயிடம் நிரூபியுங்கள்*- கடைசி வரை அன்பாக இருப்பேன் என்று.
தந்தையிடம் நிரூபியுங்கள்* - கடைசி வரை உங்கள் பெயரை காப்பாற்றுவேன் என்று.
*மனைவியிடம் நிரூபியுங்கள்* - கடைசி வரை என் காதல் உனக்கானது மட்டும் என்று.
*சகோதரனிடம் நிரூபியுங்கள்*- கடைசி வரை உனக்கு உறுதுணையாய் இருப்பேன் என்று.
*சகோதரியிடம் நிரூபியுங்கள்* - கடைசி வரை உனக்கு செய்யும் சீர் ஒரு சுமையே இல்லை என்று
*மகனிடம் நிரூபியுங்கள்* -கடைசி வரை உலகமே எதிர்த்தாலும் நான் உன் பக்கம் என்று
*மகளிடம் நிரூபியுங்கள்* - கடைசி வரை உன் கண்ணில் நீர் வழிந்தால் என் கண்ணில் ரத்தம் வரும் என்று
வேறு எவருக்கு நீங்கள் எதை நிரூபித்தாலும் *அது கடலில் கொட்டிய பெருங்காயமே*.
தோற்று போனால் வெற்றி கிடைக்குமா ?
 *அம்மாவிடம் தோற்று போ, அன்பு அதிகரிக்கும்..
 *அப்பாவிடம் தோற்று போ, அறிவு மேம்படும்..*
 *துணையிடம் தோற்று போ, மகிழ்ச்சி இரட்டிப்பாகும்..*
 *பிள்ளையிடம் தோற்று போ, பாசம் பன்மடங்காகும்..*
 *சொந்தங்களிடம் தோற்று போ, உறவு பலப்படும்..*
 *நண்பனிடம் தோற்று போ, நட்பு உறுதிப்படும்..*
 *ஆகவே தோற்று போ,*

தோற்று போனால் வெற்றி கிடைக்கும்

🙏 அன்புடன் வாழுங்கள்.மற்றவரை அன்புடன் வாழ வழி வகுப்போம்..