சிவாஜி கணேசன்
தமிழ்நாடே அறியாத நடிகர் திலகத்தின் மறுபக்கம்..!!
ஏன் ஊடகங்கள் இவற்றை வெளிகொணரவில்லை?
சிவாஜி அவர்கள் அன்றைய பாரத பிரதமர் நேருவிடம், 1959ல் மதிய உணவு திட்டத்திற்கு ரூபாய் ஒரு லட்சம் (இன்றைய மதிப்பில் ஒரு கோடி) வழங்கியுள்ளார்
அதுமட்டுமின்றி , 1961ல் தாம்பரத்தில் காசநோய் மருத்துவமனை கட்டுவதற்காக ரூபாய் ஒரு லட்சம் வழங்கியுள்ளார்
1962ல் இந்தியா – சீனா போரின்போது ஒரு பெருந்தொகையை யுத்த நிதியாக வழங்கினார்.
புதுவை அரசின் பகலுணவு திட்டத்திற்கு ரூபாய் 1 லட்சம் கொடுத்துள்ளார்..
நேருஜி நினைவு அறக்கட்டளை நிதிக்காக ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் வழங்கினார்.
பெங்களூரில் நாடக அரங்கம் கட்ட ரூபாய் இரண்டு லட்சம் வழங்கினார்.
1960ல் பெருவெள்ளம் சென்னையை சூழ்ந்தபோது காமராஜர் முன்னிலையில் 1 லட்சம் உணவு பொட்டலங்களை அவரது இல்லத்தில் தயாரித்து கொடுத்ததோடு 800 மூட்டை அரிசியும் அள்ளிகொடுத்துள்ளார்.
1968-ல் உலகத்தமிழ்மாநாடு பேரறிஞர் அண்ணா அவர்களின் தலைமையில் நடைபெற்றபோது சென்னை கடற்கரையில் 10 தமிழறிஞர்களுக்கு சிலை வைக்கப்பட்டது.
அதிலே திக்கெட்டும் தமிழ் பரப்பிய திருவள்ளுவருக்கு சிலை அமைத்து தந்தது சிங்கத்தமிழன் சிவாஜி அவர்கள்.
சிலையும் அமைத்து உலக தமிழ் மாநாட்டிற்கு நிதியாக ரூபாய் 5 லட்சம் (இன்றைய மதிப்பு 5 கோடி) அள்ளித்தந்து அண்ணா அவர்களை அசர வைத்தவர் சிவாஜி.
1965ல் இந்தியாவுடன் பாகிஸ்தான் போரிட்டபோது அன்றைய பிரதமர் லால்பகதூர் சாஸ்திரியிடம், திருமதி. கமலா அம்மையாரின் 400 பவுன் தங்க நகைகளையும், பெங்களூரில் சிவாஜிக்கு பரிசாக கிடைத்த 100 பவுன் தங்க பேனாவையும், மொத்தம் 500 பவுன் இன்றைய மதிப்பு ரூ.1,00,00,000 கொடுத்து தேசத்தையே திரும்பி பார்க்க வைத்தவர்.
யுத்த நிதி அன்றைய முதலமைச்சர் திரு.பக்த வச்சலத்திடம் 1 லட்சம் நிதி வழங்கினார்.
மீண்டும் தமிழகமெங்கும் நாடகங்களை நடத்தி தன்னுடைய வியர்வையில் விளைந்த வெள்ளிகாசுகளாம் 17 லட்சம் (இன்றைய மதிப்பு 100 கோடி) வாரி வழங்கி தேசம் வெற்றிபெற துணை நின்றவர் சிவாஜி.
வெள்ளிவழா கண்ட பாசமலர் திரைப்படம் இந்தியில் ராக்கி என்ற பெயரில் சிவாஜி பிலிம்ஸ் தயாரித்து திரையிட்டு நாடு முழுவதும் வசூலான ஒரு நாள் தொகையை மீண்டும் யுத்த நிதியாக வழங்கி பெருமை சேர்த்தவர்.
1972ல் ராஜா திரைப்படத்தின் மூலம் வசூலான ஒரு நாள் தொகையை விமானபடையில் உயிர்நீத்த வீரர்களின் குடும்பங்களுக்கு வழங்கினார் சிவாஜி.
வீரபாண்டிய கட்டபொம்மன் நாடகத்தை 112 முறை தொடர்ந்து நடத்தி அதன் மூலம் வசூலான 32 லட்சத்தை (இன்றைய மதிப்பு 300 கோடி) பல கல்லூரிகளுக்கு வாரி வழங்கி கல்வியின் சிறப்பை உலகிற்கு உணர்த்தினார்.
1961ல் மும்பையில் பல பகுதியில் நாடகம் நடத்தியபோது பல லட்சம் மக்கள் திரண்டனர். அதன் மூலம் கிடைத்த 5 லட்சத்தை மகாராஷ்டிரா அரசிடம் வழங்கினார்.
தனக்கு சொந்தமான கோடம்பாக்கம் நிலத்தை அன்றைய மதிப்பு பல லட்சம் இன்றைய மதிப்பு பல கோடி நலிந்த நடிகர் நடிகைகள் வீடு கட்டிக்கொள்ள இலவசமாக வழங்கி நடிகர்களின் காவலராய் திகழ்ந்தவர்.
தன்னை வைத்து முதல் படம் எடுத்த திருவாளர் பெருமாள் முதலியார் அவர்களின் வீட்டிற்கு வருடந்தோறும் பொங்கலன்று சென்று சீர் செய்து அவர்கள் குடும்பத்திற்கு தன் இறுதி மூச்சு உள்ளவரை உதவிவந்தவர் நடிகர் திலகம்.
நடிகர் திலகம் மறைந்த பின்பும், திரு. பிரபு குடும்பத்துடன் சென்று வேலூரில் உள்ள திரு.பெருமாள் முதலியார் குடும்பத்திற்கு சீர் செய்து நன்றி செலுத்தி வருகிறார்கள்..
நன்றி இணையம்