*1.பத்து நிமிடங்கள் முன்னதாக:*
காலை *6 மணிக்கு
எழுபவரா
நீங்கள்?*
*5.50க்கு
எழுந்து
பழகுங்கள்.*
கூடுதலாகக்
கிடைக்கிற
பத்து
நிமிடத்தில்,
அமைதியான
காலை
நேரத்தில்
உங்களின்
அன்றைய
வேலைக்கான
ஆற்றலின்
கதவுகள்
அகலத்
திறப்பதை
உணர்வீர்கள்.
*2.பத்து
நிமிடங்கள்
மௌனமாக:*
நீங்கள்
தியானப்
பயிற்சி
மேற்கொள்ளாதவராக
இருந்தால்,
விரைவில்
சரியான
இடத்தில்
*தியானம்
பழகுங்கள்.*
அதுவரை
ஒரு
நாளின்
மத்தியில்,
பத்து
நிமிடங்களாவது
*மௌனத்தில்
இருங்கள்*.
*3.முப்பது
நிமிடங்கள்:*
ஒரு நாளின்
முப்பது
நிமிடங்களை
உங்கள்
ஆரோக்கியத்திற்காகப்
பயன்படுத்துங்கள்.
*உடற்பயிற்சி,
நடைப்பயிற்சி,
யோகா*
என்று
உங்கள்
வழக்கம்
எதுவாக
இருந்தாலும்
சரி.
ஆரோக்கியத்துக்காக
*முப்பது
நிமிடங்கள்*
புத்துணர்ச்சிக்கான
சிம்மாசனம்
என்பதை
உணருங்கள்.
*4.உணவில்
ஒழுங்கு:*
வேலைச்
சுமையைக்
காரணம்காட்டி
உணவு
நேரத்தை
அடிக்கடி
தள்ளிப்
போடுவது,
உங்கள்
உடலியக்கத்துக்குள்
பிரச்சினையை
ஏற்படுத்தும்.
உணவுப்
பழக்கத்திலும்
இதமான
முறைகளைக்
கையாளுங்கள்,
வயதுக்கேற்ப
சாப்பிடுங்கள்.
*முறைப்படி
சாப்பிடுவதற்க்கு
பழகுங்கள்.*
*5.மறுநாளின்
டைரியை
முதல்
நாளே
எழுதுங்கள்:*
```Day
Task.``` உங்களின்
வாழ்க்கை
பரபரப்பின்றி
அவசரமின்றி
இருக்க
இந்த
பழக்கம்
உதவும்.
*நினைத்த
அனைத்தும்
நடப்பதை*
விரைவில்
உணர்வீர்கள்.
*6.அடைசல்கள்
அகற்றுங்கள்:*
அடைசல்கள்,
குப்பைகள்,
குவிந்துகிடக்கும்
கோப்புகள்
ஆகியவற்றில்
பிரபஞ்ச
சக்தி
தேங்கிவிடுகிறது.
அத்தகைய
இடங்களில்
செயலாற்றல்
தூங்கிவிடுகிறது.
போகி
பண்டிகைவரை
காத்திருக்காது
*அவ்வப்போது
அடைசல்களை
நீக்குங்கள்.*
*7.மனிதர்களை
நெருங்குங்கள்:*
இந்த உலகில்
காரணத்துடனோ
காரணம்
இன்றியோ
மனிதர்களை
வெறுக்கும்போது,
அந்த
வெறுப்பு
நமக்குள்ளே
வேண்டாத
சுரப்பிகளைத்
தூண்டி
பதட்டம்
சுரக்க
வைக்கிறது.
மனிதர்களை
நிறைகுறைகளுடன்
ஏற்றுக்கொண்டு
அவர்களை
*நேசிக்கத்
தொடங்குங்கள்.*
எல்லோரையும்
நேசிப்பது
அவர்களுக்கு
நல்லதோ
இல்லையோ,
உங்களுக்கு
ரொம்ப
நல்லது.
*8,அடுத்து
என்ன?
இதுவே
மந்திரம்:*
வெற்றியோ
தோல்வியோ,
சாதனையோ
சவாலோ,
எது
நேர்ந்தாலும்
*அடுத்தது
என்ன*
என்று
கேளுங்கள்.
அப்போதுதான்
அடுத்த
கட்டம்
நோக்கி
நகர
முடியும்.
குழந்தை
கண்ணாடியை
உடைத்துவிட்டதா?
அடுத்தது
என்ன?
அள்ளிப்போட
வேண்டியதுதான்.
```(WHAT NEXT?)``` இது வெற்றியின்
மந்திரங்களில்
முக்கியமானது.
*9.நம்பிக்கைத்
தீர்மானம்
நிறைவேற்றுங்கள்:*
ஒவ்வொருநாள்
விடியலிலும்
உங்கள்
மீது
நீங்களே
நம்பிக்கைத்
தீர்மானம்
நிறைவேற்றுங்கள்.
“இதே
உற்சாகத்துடன்
வேலையில்
இறங்கலாம்.
இன்றைய
வேலைகளை
சரியாக
முடிக்கலாம்”
என்று
உங்கள்
மீது
நீங்களே
*நம்பிக்கை
வைத்து
நாளைத்
தொடங்குங்கள்.*
*11.பணத்துக்கு
வேலை
கொடுங்கள்:*
உங்கள்
வருமானம்
எவ்வளவாக
இருந்தாலும்
அந்தப்
பணத்துக்கு
வேலை
கொடுங்கள்.
பணம்,
தன்னைத்தானே
பலமடங்கு
பெருக்கிக்கொள்கிற
பேராற்றல்
உடையது.
ஈட்டிய
பணத்தை
*புத்திசாலித்தனமாக
முதலீடு
செய்யுங்கள்.*
அது
தானாகவே
பெருகும்.
*12.கடிகாரத்தை
மட்டுமல்ல
நேரத்தையும்
கையில்
கட்டுங்கள்:*
உங்கள்
நேரம்
உங்கள்
பொறுப்பிலும்
கண்காணிப்பிலும்
இருக்கட்டும்.
அரட்டை
– அவதூறு – அனாவசியமான
பேச்சு
என்று
*அடுத்தவர்கள்
உங்கள்
நேரத்தைக்
கொள்ளையடிக்க
இடம்
கொடுக்காமல்
விழிப்புடன்
இருங்கள்.*
*13.நகைச்சுவை
உணர்வை
வளர்த்துக்
கொள்ளுங்கள்:*
இறுக்கமாய்
இருப்பதால்
நாம்
எதையும்
சாதிக்கப்
போவதில்லை
– மன இறுக்கத்தையும்
மன
அழுத்தத்தையும்
வளர்த்துக்
கொள்வதைத்
தவிர!!
வெற்றியாளர்களும்
வரலாற்று
புருஷர்களும்
நகைச்சுவை
உணர்வு
நிறைந்தவர்களாகவே
இருந்திருக்கிறார்கள்.
*நகைச்சுவை
உணர்வு,*
வாழ்வின்
பூட்டப்பட்ட
*பல
கதவுகளைத்
திறந்துவிடும்.*
*14.மனிதத்தன்மையே
கடவுள்தன்மையின்
ஆரம்பம்:*
மற்றவர்களின்
சிரமங்களைப்
புரிந்துகொள்வதும்,
மனித
நேயத்துடன்
உதவுவதும்,
மற்றவர்களை
மன்னிப்பதும்,
மனிதர்களின்
பகுதிநேர
வேலை.
கடவுளுக்கோ,
முழுநேர
வேலை.
முதலில்
உங்களையும்,
பிறகு
மற்றவர்களையும்
முழுமனதோடு
மன்னித்து,
மலர்ச்சியாய்
–
மகிழ்ச்சியாய்
–
*வாழ்க்கை
என்கிற
கொண்டாட்டத்தில்*
தீவிரமாகப்
பங்கெடுங்கள்.
*புதிய
சிந்தனை
அல்ல
இது....*
*புத்துணர்சியூட்டும்
சிந்தனை.*