கன்னட சிற்பி விஸ்வேரய்யரும்

மணக்கால் அய்யம்பேட்டை | AM 11:03 | Best Blogger Tips

 


கன்னட சிற்பி விஸ்வேரய்யரும் தமிழ்நாட்டு ஈரோட்டு ராம்சாமியும் சமகாலத்தவர்கள்

இதில் கன்னட விஸ்வரர் ஒரு அய்யர், அக்காலத்திலே கட்டட பொறியியல் படித்து மைசூர் சமஸ்தானத்துக்கு திவானாக வந்தவர்

மிக சிறந்த அறிவாளியும் தீர்க்கமான சிந்தனையும் மிக நீண்ட தொலைநோக்கும் கொண்டவர், அவரின் ஆற்றலும் அறிவும் அவரை திவான் எனும் நிலைக்கு உயர்த்தின

அன்றைய மைசூர் சமஸ்தானம் பின் தங்கித்தான் இருந்தது, காவேரியின் பிறப்பிடம் என்றாலும் சொல்லிகொள்ளும் அணை அவர்களுக்கு இல்லை

இது போக தஞ்சாவூர் பக்கம் காவேரி வெள்ளம் வந்தால் அதற்கு மைசூர் மகாராஜா நஷ்ட ஈடு கொடுக்கும் வினோத தண்டனை எல்லாம் இருந்தது, மன்னரும் தலையில் அடித்து கட்டி கொண்டிருந்தார்

விஸ்வேசரய்யர் அதை தடுக்க யோசனை சொன்னார், இந்த நஷ்ட ஈட்டுக்கு அணை கட்டி நம் பக்கம் காவேரியினை திருப்பினால் விளையும் நன்மைகளை பட்டியலிட்டு சொன்னார்

அதே நேரம் தமிழக நலன் காக்க மேட்டூர் அணை திட்டம் பற்றியும் அவர் சொன்னார், காவேரியின் அணைகளில் மேட்டூர் அணைதான் குறிப்பிடதக்கது

விஸ்வேரய்யாவின் சிந்தனையினை ஏற்றுகொண்ட சமஸ்தானம் செழித்தது, மாபெரும் ஆலைகளும் விவசாய நிலங்களும் செழித்து வளர்ந்தன

சிறு கிராமான பெங்களூர், அதாவது 18ம் நூற்றாண்டில் சென்னை மதராசபட்டினம் என கொண்டாடபட்ட காலத்தில் சிறு கிராமமாக இருந்த பெங்களூர் அசுரவளர்ச்சி பெற ஆரம்பித்தது

மன்னராட்சி முடிந்து மக்களாட்சி வரும் பொழுதும் கன்னட சட்டசபையான "விதான சவுதா" அவரே திட்டமிட்டு கொடுத்தார்

இன்று பெங்களூரும் கர்நாடகாவும் மாபெரும் வளர்ச்சி பெற்றிருக்கின்றதென்றால், எந்த தஞ்சாவூர் பக்கம் இருந்து வெள்ளத்துக்கு நஷ்ட ஈடு கேட்டு மிரட்டினார்களோ, அவர்களையே தண்ணீர் தா என கதற வைத்திருக்கின்றது என்றால் அதற்கு காரணம் விஸ்வேசரய்யர்

பெங்களூர் இன்று உலகின் மிக முக்கிய நகரங்களில் ஒன்று என்றால் அதற்கு காரனமும் அவரே

இது கன்னட நிலை

விஸ்வேரய்யாவினை "அய்யர்" என மதித்து அவரின் அறிவுக்காக கன்னடம் தலைவனாக்கி வளர்ந்த பொழுது தமிழகம் ஒரு முட்டாளை தலைவன் என சொல்லிகொண்டிருந்தது , அவன் பெயர் ஈரோட்டு ராம்சாமி

கன்னடம் தேசியம், இந்தி படித்தல், மாநில முன்னேற்றம் என வேகமாக இருந்தபொழுது இந்து எதிர்ப்பு, இந்திய எதிர்ப்பு, மாநிலத்தை நாசமாக்குதல் என செய்துகொண்டிருந்தான் ராம்சாமி

அங்கே ஒரு பிராமணனை அறிவாளி என கொண்டாடி அவர்கள் வேகமாக வளர்ந்தபொழுது, பார்ப்பானிய எதிர்ப்பு என சொல்லி இங்கு அறிவாளிகளை விரட்டிவிட்டு அயோக்கியர்கள் சூழ வலம் வந்தான் ராம்சாமி

காவேரியில் அந்த கன்னடர்கள் அணைகட்டி அணைமேல் அணைகட்ட திட்டமும் வைத்திருக்க, இங்கே வெட்டி பகுத்தறிவு, வேடிக்கை இந்து எதிர்ப்பு என சொல்லி தமிழனை முட்டாளாக்கி கொண்டிருந்தான் ராம்சாமி

இன்று கர்நாடாகம் அந்த பிராமண அய்யர் போட்ட பாதையில் செழித்து வளர்ந்து கணிப்பொறி முதல் விவசாயம் வரை முன்னணியில் நிற்கின்றது

ஆம் 18ம் நூற்றாண்டில் சிறு கிராமமாக இருந்த பெங்களூர் இன்று உலக நகராயிற்று, ஆனால் அன்றே உலக பெருநகராக இருந்த சென்னை இன்று கூவம் ஓடும் அளவு நாசமாயிற்று

அந்த அய்யரை கொண்டாடிய மாநிலம் இன்று நீரில் செழித்து முப்போகம் விளைகின்றது, பிராமணனை விரட்டி அடித்த தஞ்சை டெல்டா நீருக்கு காத்து கதறிகொண்டிருக்கின்றது

ஒரு அறிவாளியினை அவன் சாதி தாண்டி மதம் தாண்டி இந்தியன் என கொண்டாடிய மாநிலம் முன்னணியில் இருப்பதும், பார்ப்பான் இந்து எதிர்ப்பு என காட்டுமிராண்டிதனம் செய்த ஒரு கயவனை பெரியவன் என கொண்டாடி அவனுக்கு ஜால்ரா அடித்தவனை பேரரிஞன் என கொண்டாடிய மாநிலம் நாசமாகி கொண்டிருக்கின்றது

இப்பொழுது பெங்களூர் ரயில் நிலையம் இந்தியாவின் முதல் குளிரூட்டபட்ட ரயில் நிலையமாய் இன்று திறக்கபடுகின்றது

ஆனால் ராம்சாமியின் தமிழகம் பழைய வெள்ளையன் கால கட்டடத்துக்கு புரட்சி தலைவன் ராம்சந்தர் பெயரை வைத்து பல்லிளித்து கொண்டிருகின்றது

விஸ்வேஸ்ரய்யர் எங்கள் தந்தை என சொன்ன கன்னடன் இன்று பல துறையில் முன்னேறி நாட்டுக்கு வழிகாட்டுகின்றான்

ராம்சாமி பகுத்தறிவுக்கு தகப்பன் என சொன்ன தமிழக கோஷ்டி ஒரு வாஷிங் மெசினுக்கும், சில நூறு ரூபாய் பணத்துக்கும் ஏங்க வைத்திருக்கின்றது

தன்னலமற்ற அறிவாளியினை கொண்டாடும் இனம் செழிக்கும் என்பதற்கும், அரைகிறுக்கு காட்டுமிராண்டி ஒருவனை கொண்டாடும் சமூகம் உருப்பாடாது என்பதற்கும் கன்னடமும் தமிழகமும் மிக சிறந்த உதாரணங்கள்

 

நன்றி இணையம்