நீட் தேர்வை பற்றி தெளிவான விவரங்களை கூறும் இக்கட்டுரை பெரிதாக இருக்கும். உங்களது பொன்னான ரேத்தில் சில நிமிடங்களை இக்கட்டுரையை படிக்க செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்.
நீட் என்றால் என்ன?
பிற தேர்வுகளிலிருந்து நீட் தேர்வை வேறுப்படுத்துவது எது?
நீட் தேர்வில் எப்படி வெற்றி பெறுவது?
நீட் தேர்வில் வெற்றி காணுவது எளிதான செயலா?
போன்ற கேள்விகளுக்கு அனைவருக்கும் பதில் கிடைத்ததுண்டா?
தமிழ்நாட்டில் விழிப்புணர்வின்றி நடந்த சம்பவங்கள் அனைத்தும் மீண்டும் நிகழாமல் இருக்க மக்கள் நீட் தேர்வை பற்றி அறிந்துக்கொள்ள வேண்டும்.
நீட் என்றால் என்ன?
நீட் என்பது மருத்துவம் படிக்க வேண்டும் என்ற ஆர்வமுள்ள அனைத்து மாணவர்களுக்காக நடத்தப்படும் மருத்துவ நுழைவுத் தேர்வாகும்.
"திறமையான மாணவர்களுக்கு மட்டுமே வாய்ப்பு" மேலும், திறமையும் மருத்துவராக வேண்டும் என்ற கனவையும் உடைய மாணவர்கள் எவரேனும் மருத்துவராக முடியும் என்ற கருத்துரு கொண்டு இயங்குவதே நீட் தேர்வு. திறமையான மருத்துவர்களை தேர்ந்தெடுக்க நடைபெறுவதால் நீட் தேர்வு மிகவும் கடினமாக இருக்கும்.
இந்தியாவில் நீட் தேர்வு முதல் முறையாக 2013 ஆம் ஆண்டு CBSE நடத்தியது. அதன்பின் 2019ஆம் ஆண்டு முதல் நீட் தேர்வை NTA நடத்தும். இயற்பியலில்(Physics) 45 கேள்விகள், வேதியியலில் (Chemistry) 45 கேள்விகள், உயிரியலில் (Biology) 90 கேள்விகள் என மொத்தம் 180 கேள்விகளுக்கு மூன்று மணி நேரம் கொடுக்கப்படும்.
அனைத்து கேள்விகளும் தெரிவு வினாவிடை (MCQ) போன்று அமைக்கப்பட்டிருக்கும். ஒவ்வோரு சரியான பதிலுக்கும் 4 மதிப்பெண்;ஒவ்வோரு தவறான பதிலுக்கும் -1.
பிற தேர்வுகளிலிருந்து நீட் தேர்வை வேறுப்படுத்துவது எது?
மாணவர்கள் எழுதும் +2 பொதுத் தேர்வும் நீட் தேர்வும் ஒன்றல்ல. +2 பொதுத் தேர்வில் பத்தியாக பதிலளிக்க வேண்டும். ஆனால் நீட் தேர்வில் அனைத்தும் MCQ ஆகும் அதாவது ஒரு கேள்விக்கு நான்கு பதில்கள் கொடுக்கப்பட்டிருக்கும்; அதில் கேட்கப்பட்டுள்ள கேள்விக்கு மிகவும் பொருத்தமான சரியான விடையை தேர்ந்தெடுக்க வேண்டும். இவ்வகை அமைப்பின் கடினமான பகுதி என்னவென்றால் கொடுக்கப்பட்டுள்ள நான்கு பதிலும் சரியான விடை போன்று தோன்றும் ஆனால் அதில் ஒன்று மட்டுமே சரியான விடையாகும்.
எனவே இத்தேர்வு பலருக்கு கடினமாக தோன்றும்.
நீட் தேர்வில் எப்படி வெற்றி பெறுவது?
நீட் தேர்வில் எப்படி வெற்றி பெறுவது?
கொடுக்கப்பட்ட பாடப்பகுதிகளிலுள்ள கருத்துகள் அனைத்தின் தெளிவான புரிதல் அவசியம்.
கருத்துகளை மனப்பாடம் செய்வதில் பயனில்லை.
அதை தெளிவாக புரிந்துக்கொள்ள வேண்டும்.
முக்கியமாக தேர்வைக் கண்டு பயப்படக்கூடாது.
தேர்வுபயத்தால் படித்த பகுதியையும் மறக்க வாய்ப்புகள் அதிகம். இந்நிலை ஏற்படாமல் இருக்க படிக்கும் பொழுதே அப்பகுதியை நன்கு புரிந்துக் கொண்டும் அதில் அதிக பயிற்சியும் மேற்கொள்ள வேண்டும்.
நீட் தேர்வில் வெற்றி பெற தனக்கென ஒரு அட்டவணையை அமைத்துக்கொள்ள வேண்டும்.
அதில் எந்த பாடப்பகுதி உங்களது பலமாகும் எது பலவீனமாகும் என்ற தகவல் தெளிவாக இருத்தல் வேண்டும். இந்த தகவலைக் கொண்டு நீங்கள் எவ்வாறு பயிற்சி பெற வேண்டும் என்பதை அறிந்துக் கொள்ளலாம். உங்கள் ஆற்றலுக்கேற்ப உங்களுக்கான பயிற்சிகளை தினமும் தவறாமல் செய்வது உங்களை வெற்றி பாதையை நோக்கி பயனிக்க வைக்கும்.
பெரும்பாலான மாணவர்களுக்கு நீட் பயிற்சி மேற்கொள்ள வெளிமாநிலங்கள் செல்லும் எண்ணம் உண்டு. இந்த முடிவை எடுக்கும் முன்னால், அந்த இடத்தின் சூழல், செலவுகள், உணவு முறை போன்ற பல காரணிகளுக்கு உங்களின் உடல் ஒத்துலைக்குமா என சிந்தித்து முடிவெடுக்க வேண்டும். உங்கள் எதிர்காலம் நல்வழியில் அமைய சிந்தியுங்கள்.
நீட் தேர்வில் வெற்றி காணுவது எளிதான செயலா?
நீட் தேர்வில் வெற்றி பெறுவது இயலாத செயல் அல்ல.
ஆனால் அது எளிதும் அல்ல. கடினமான கேள்விகளும் பதில்களும் கொண்டு அமைந்திருக்கும் இத்தேர்வில் வெற்றி பெற மிகவும் கடினமாக உழைக்க வேண்டும்.
விடாமுயற்சியுடன், எவ்வித தடை கற்களையும் வெற்றி மேடையாக மாற்றும் வண்ணம் தைரியமும் நம்பிக்கையும் கொண்டு அயராது உழைத்தால் மட்டுமே நீட் தேர்வில் வெற்றி காண முடியும்.
தற்பொது இருக்கும் அனைத்து நீட் பயிற்சி நிறுவனங்களின் course fees என்ன என்பதை அந்தந்த நிறுவனமே முடிவெடுக்கின்றன. எனவே பயிற்சி பெற நிலையான கட்டணம் இது தான் என ஒன்றில்லை.
இச்சூழ்நிலையில் scholarship தேர்வுகளை நடத்துவது வெறும் dataகளை சேகரிப்பதற்காக மட்டுமே. scholarshipஆல் கட்டணம் குறைவு என பெரிதாக ஒன்றில்லை.
நீங்கள் online shopping இல் வாங்கிய பொருள் உங்களின் எதிர்பார்பை பூர்த்தி செய்யவில்லை என்றால் அந்த பொருளை திரும்பக்கொடுத்து பணத்தை பெரும் வாய்ப்புண்டு. நீட் படிக்க, பயிற்சி பெற நீங்கள் இணைந்த நிறுவனம் உங்களின் தேவையையும் எதிர்பார்பையும் பூர்த்தி செய்யவில்லை என்றால், அந்த நிறுவனத்திலிருந்து கட்டணமாக நீங்கள் செலுத்திய பணத்தை திரும்பப் பெற முடியுமா?
கல்வியை, தள்ளுபடியில் கிடைக்கும் ஓர் பொருளன கருதுவது தவறு. மேலும் அதை வியாபாரமாக எண்ணுவது மிகவும் தவறு.
Copy from & Thanks To
Krishna Institute NEET Coaching Centre
Shri Vari Complex, Above ICICI Bank 4th Floor
36/1 1st Main Road,
Ramalinga Nagar, Woraiyur, Trichy
For More Details 86 80 85 6666
860 854 6666
0431 40 50 266
Shri Vari Complex, Above ICICI Bank 4th Floor
36/1 1st Main Road,
Ramalinga Nagar, Woraiyur, Trichy
For More Details 86 80 85 6666
860 854 6666
0431 40 50 266
நன்றி !
Course Details http://krishnainstitute.net/index.php
Course Details http://krishnainstitute.net/index.php