சளி, இருமல், ஆஸ்துமா போன்றவை நீங்க -இய‌ற்கை வைத்தியம் !

மணக்கால் அய்யம்பேட்டை | PM 6:26 | Best Blogger Tips
சளி, இருமல், ஆஸ்துமா போன்றவை நீங்க  -இய‌ற்கை வைத்தியம்:-

கொள்ளு எடுத்து சிறிய குறும்பலாக அதை இடித்து 200 மி.லி தண்ணீர் விட்டு நீர் பாதியாக சுண்டும் வரை நன்றாக கொதிக்க வைத்து அதனுடன் தேன் கலந்து குடித்து வந்தால் அதிக சளி ,ஆஸ்துமா குறையும்.

10 கிராம் கொள்ளு எடுத்து சிறிய குறும்பலாக அதை இடித்து 200 மி.லி தண்ணீர் விட்டு நீர் பாதியாக சுண்டும் வரை நன்றாக கொதிக்க வைத்து அதனுடன் தேன் கலந்து குடித்து வந்தால் அதிக சளி குறைந்து ஆஸ்துமா குறையும்.

ஹிஸாப் இலைகளை கசாயம் செய்து குடித்து வந்தால் இருமல், ஆஸ்துமா குறையும்.

விழுதி இலை சாறுடன் நல்லெண்ணெயை கலந்து காய்ச்சி தலையில் தேய்த்து குளித்து வந்தால் கபம் குறையும்.

இஞ்சி, வெள்ளெருக்கம்பூ, மிளகு ஆகியவற்றை சேர்த்து  கஷாயம்  செய்து சாப்பிட்டு வந்தால் சளி குறையும்.

தூதுவளை இலைகளை பாலில் நன்றாக‌ ஊற வைத்து குடித்து வந்தால் காது வலி, காது அடைப்பு குறையும்.

குறிப்பு:    அதிக சளியினால் ஏற்படும் காது வலி, காது அடைப்பு குறையும்.

தூதுவளை இலைகளை பாலில் கலந்து நன்றாக காய்ச்சி வடிகட்டி கற்கண்டு சேர்த்து இரவில் மட்டும் 10 நாட்கள் தொடர்ந்து குடித்து வந்தால் பீனிசம் குறையும். மீதியிருக்கும் இலைகளை எடுத்து எண்ணெயில் வதக்கி கூட்டு போல செய்து சாப்பிட்டு வந்தால் சளி, இருமல் போன்றவை குறையும்.

சங்கிலை தூதுவளை இலை ஆகியவற்றை பசும்பாலில் அரைத்து சாப்பிட்டு வந்தால் கபம் குறையும்.

தூதுவளை  இலை 10-15, மிளகு ½ டீ ஸ்பூன், அதிமதுரம் 1 துண்டு ஆகியவற்றை ஒரு கப்  தண்ணீர் விட்டு  வேகவைத்துக் காய்ச்சிக்  வடிகட்டி குடித்து வந்தால் சளி குறையும்.

மணலிக்கீரையை நிழலில் உலர்த்தி பொடியாக்கி 1 கிராம் அளவு தேன் கலந்து காலையில் சாப்பிட்டு வந்தால் மார்புச்சளி குறையும்.

மணலிக்கீரையை நன்கு நீரில் சுத்தம் செய்து  அதனுடன் சின்ன வெங்காயம், பூண்டு சேர்த்து நன்றாக வேக வைத்து சமைத்து சாப்பிட்டு வந்தால் மார்புச்சளி குறையும்.

வாழைப் பூவை ஆய்ந்து இடித்துப் பிழிந்த சாறு 100 மி.லி எடுத்து ஒரு தேக்கரண்டி தேனும், அரைதேக்கரண்டி நெய்யும்  சேர்த்துக் கலக்கி காலை வேளையில் 40 நாட்கள் கொடுத்து வந்தால் சளி, இருமல் குறையும்.

பேய் துளசி இலையை உலர்த்திப்பொடித்து 5 கிராம் எடுத்து 100 மில்லி கொதிக்கும் நீரில் ஊற‌வைத்து வடிகட்டிப் பால், சர்க்கரை கலந்து காலை, மாலை சாப்பிட்டு வந்தால் சளி தொடர்பான நோய்கள் குறையும்.

சளி ஏற்படும் நேரத்தில் தழுதாழைச் சாற்றை சிறிது எடுத்து அதன் வாசத்தை மூக்கில் முகர்ந்து வர சளி குறையும்.

வெள்ளைப் பூண்டை தோல் உரித்து பசும்பாலில் கலந்து வேக வைத்து ஒரு சிட்டிகை மஞ்சள் தூள், கால் ஸ்பூன் மிளகுப்பொடி போட்டு கடைந்து தேவையான அளவு, பனங்கற்கண்டு சேர்த்து, இரவு தூங்க போகும் முன் சாப்பிட நெஞ்சு சளி குறையும்.

சிற்றரத்தை, ஓமம், அதிமதுரம், சுக்கு, மிளகு, திப்பிலி, நெல்லிவற்றல், சீந்தில் தண்டு ஆகியவற்றை சமஅளவு எடுத்து ஒன்றிரண்டாக மொத்த எடைக்கு பொடித்து பனங்கற்கண்டு பாதியளவு சேர்த்து 2 மேசைக்கரண்டியளவு தண்ணீரில் கொதிக்க வைத்து 60 மில்லியாக சுண்டியப் பின் வடிகட்டி சாப்பிட சளியினால்  ஏற்படும்  காய்ச்சல், இருமல் குறையும்.

பேரரத்தையை வெந்நீர் விட்டு மைய அரைத்து தொண்டை மற்றும் மார்பில் லேசாக தடவி வர சளி குறையும்.

கரிசலாங்கண்ணி இலையைப் பிழிந்து சாறு எடுத்து, சிறிது அதனுடன் நல்லெண்ணெய் சேர்த்து,  பின்பு சிறிது அதிமதுரம் தூளையும் சேர்த்து  காலை மாலை சாப்பிட்டு வர சளி குறையும்.

ஒரு மண் சட்டியில் கண்டங்கத்திரி வேர்,ஆடாதோடை இலை,தூதுவளை இலை,சிற்றரத்தை அனைத்தையும் போட்டு தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து ,பின்பு காலை மாலை அரை டம்ளர் எடுத்துக் கொண்டு  ஒரு தேக்கரண்டி பனங்கற்கண்டைச் சேர்த்து  குடித்து வர  சளி குறையும்.

கொடிப்பசலை இலைகளைச் சாறு பிழிந்து தேன் கலந்து கொடுத்தால் சளி, இருமல் குறையும்.

வெங்காயத்தாளை சமைத்து சாப்பிட்டு வந்தால் கபம், கோழை குறையும்.

முருங்கை பூ, மூன்று பூண்டு பற்கள், மிளகு சிறிதளவு கற்பூரம் சேர்த்து அரைத்து சாப்பிட்டு வர சளி குறையும்.

அமுக்க‌ரா வேர் சூரணம்,  தூதுவ‌ளை சம அளவு கலந்து 5 கிராம்  தேனில் தினம், மூன்று வேளை பத்தியத்துடன் கொடுத்து வர காய்ச்சல் குறையும்.

அமுக்கிரான் வேர் சூரணம் 5 கிராம் எடுத்து தேனில் காலை, மாலை கொடுத்து வர‌ சளி குறையும்.

கல்யாண முருங்கை இலைகளைப் பி‌ழிந்து சாறு எடுத்து, ஒரு கப் வெந்நீரில் கலந்து குடித்து வந்தால் கபம் குறையும்.

4 ஓமவல்லி இலைகளை எடுத்து நீ‌ரிலிட்டு காய்ச்சி குடித்து வந்தால் சளி மற்றும் இருமல் குறையும்.

வால் மிளகை எடுத்து இடித்து தூள் செய்து தேனில் கு‌ழப்பி சாப்பிட்டு வந்தால் சளி, கபம் குறையும்.

அறுவதா இலையுடன் ஒரு துண்டு இஞ்சி சேர்த்து அரைத்து சாப்பிட்டால் சளி குறையும்.

ஐந்து கருந்துளசி  இலைகளோடு, இரண்டு மிளகு சேர்த்து வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் சளி மற்றும் ஒவ்வாமை குறையும்.

கைப்பிடி நாய்த்துளசி  இலைகளுடன், நான்கு மிளகு சேர்த்து அரைத்து ஒரு கப் வெந்நீரில் கரைத்து அருந்தினால் மார்புச்சளி மற்றும் கபம் குறையும்.கொள்ளு எடுத்து சிறிய குறும்பலாக அதை இடித்து 200 மி.லி தண்ணீர் விட்டு நீர் பாதியாக சுண்டும் வரை நன்றாக கொதிக்க வைத்து அதனுடன் தேன் கலந்து குடித்து வந்தால் அதிக சளி ,ஆஸ்துமா குறையும்.

கைப்பிடி நாய்த்துளசி இலைகளுடன், நான்கு மிளகு சேர்த்து அரைத்து ஒரு கப் வெந்நீரில் கரைத்து அருந்தினால் மார்புச்சளி மற்றும் கபம் குறையும்.
 
Via  Karthikeyan Mathan