இயற்கை சார்ந்த உணவு முறைகள்

மணக்கால் அய்யம்பேட்டை | 5:40 PM | Best Blogger Tips
இயற்கை சார்ந்த உணவு முறைகள்

தலைப்பிற்குள் செல்வதற்கு முன், உணவு எவ்வாறு ஆற்றலாக மாற்றப்படுகின்றது என்பதை, அறிவியல் முறைப்படி பார்க்கலாம்.

நாம் உண்ணும் உணவில் ஆறு முக்கிய ஊட்ட சத்துக்கள் ( Six Essential Nutrients ) உள்ளன. அவை ,

1. புரதங்கள் ( Proteins )
2. மாவுச்சத்து ( Carbohyrate )
3. கொழுப்பு ( Fat )
4. தாதுக்கள் ( Minerals )
5. உயிர் சத்துக்கள் ( Vitamins )
6. தண்ணீர் ( Water )

ஆகியன ஆகும்.

இதில் நம் உடலுக்கு ஆற்றலை கொடுப்பவை புரதங்கள், மாவுச்சத்து மற்றும் கொழுப்பு ஆகும்.எனவே இவை மிகுந்த முக்கியத்துவம் பெறுகின்றன.

இவற்றுள் மாவுச்சத்து ( சர்க்கரை ) உடனடி ஆற்றலை அளிக்க வல்லது. புரதம் மெதுவான மற்றும் நீடித்த ஆற்றலை கொடுப்பது.கொழுப்பு அதிக ஆற்றலை வழங்குவது ஆகும்.

இப்பொழுது நாம் உண்ணும் உணவு, உணவுப்பாதையில் அடையும் மாற்றங்களை வரிசையாக காணலாம்.

• உணவானது, வாயில் உமிழ்நீருடன் நன்கு கலக்கப்பட்டு அரைக்கப்படுகின்றது.உமிழ்நீரில் உள்ள அமிலேஸ் ( Amylase ) என்னும் நொதி ( Enzyme) உணவுத் துகள்களை ஒரளவு சிதைக்கின்றது.

• பின், உணவுக்குழல் வழியாக இரைப்பையை அடைகின்றது. அங்கு HCL அமிலம் மற்றும் பெப்சின் என்னும் என்சைம் சேர்க்கப்படுகின்றது.இவை உணவின் மீது வேதிமாற்றங்களை நிகழ்த்துகின்றன.மேலும் இரைப்பை தசைகளின் இயக்கங்களாலும் உணவு நன்கு அரைபடுகின்றது.

• அடுத்து உணவு கூழ்நிலையில், சிறுகுடலின் முன்பகுதியை ( duodenum ) அடைகின்றது.அங்கு பித்த நீர்,கணைய நீர் மற்றும் குடல் நீர் சேர்க்க்ப்பட்டு அடுத்தகட்ட வேதிமாற்றம் நிகழ்கின்றது.குடலின் தசை இயக்கங்கள் மூலமும் உணவு மேலும் அரைக்கப்படுகின்றது.

• இறுதியாக நன்கு சிதைக்கப்பட்ட உணவிலுள்ள ஊட்ட சத்துக்கள், உறிஞ்சப்பட்டு ரத்தத்தின் மூலம் கல்லீரலுக்கு எடுத்து செல்லப்படுகின்றன.அங்கு இச்சத்துக்கள் வடிகட்டப்பட்டு, நச்சு நீக்கப்பட்டு, மேலும் வேதிமாற்றங்கள் அடைகின்றன.

• பின் இச்சத்துக்கள் உடலின் பல்வேறு செல்களுக்கு ( Body cells ) எடுத்து செல்லப்படுகின்றன. அங்கு நடைபெறும் பல்வேறு தனி தனி வேதி மாற்றங்கள் மூலம் இவை, ATP ( Adenosine Triphosphate ) எனும் ஆற்றல் வடிவமாக மாற்றப்படுகின்றன.

• இந்த ஆற்றலே மனிதன் நகர்வதற்கும், உள்ளுறுப்புகள் செயல்படுவதற்கும்,புதிய செல்கள் உருவாக்கத்திற்கும் பயன்படுகின்றது.

மேலே பார்த்தவரையில் மூன்று நிகழ்வுகள் மிகுந்த முக்கியத்துவம் பெறுகின்றன.அவற்றை ஒவ்வொன்றாக பின்வருமாறு பார்ப்போம்,

1. சிதைவு வேதிமாற்றங்கள் ( Catabolism ) :

உணவுப்பாதையில், உணவுத்துகள்கள் பல்வேறு வேதிமாற்றங்களின் மூலம் மிக நுண்ணிய துகள்களாக சிதைக்கப்படுகின்றன.இவை சிதைவு வேதிமாற்றங்கள் ( Catabolism ) எனப்படுகின்றன.

இவற்றுள் குறிப்பாக செல்களில் நடக்கும் பல சிதைவு வேதிமாற்றங்கள் ( Catabolism ) மூலம், ஊட்டச்சத்துகள் முற்றிலும் சிதைக்கப்பட்டு ஆற்றல் பெறப்படுகின்றது. இதில் ஆக்ஸிஜன் பயன்படுத்தப்பட்டு , கார்பன் டை ஆக்சைடு கழிவாக வெளியேற்றப்படுகின்றது.தனித்தனியாக நடைபெறும் இந்த வினைகளை மொத்தமாக பார்க்கும்போது, எரி அறையில் ( Combustion Chamber ) உணவை எரிப்பது போல தோன்றுகின்றது.எனவே இது கலோரியை எரித்தல் ( Calorie Burning ) எனப்படுகின்றது.

2. வளர்ச்சி வேதிமாற்றங்கள் ( Anabolism ) :

புதிய செல்களை உருவாக்கும் வேதிமாற்றங்கள், வளர்ச்சி வேதிமாற்றங்கள் ( Anabolism ) எனப்படுகின்றன.

முற்றிலும் சிதைக்கப்படாத ஊட்டச்சத்துக்கள் மற்றும் ATP ( Adenosine Triphosphate ) வடிவிலான ஆற்றலை பயன்படுத்தி இவ்வேதிமாற்றங்கள் நிகழ்கின்றன.

3. வளர்சிதை வேதிமாற்றங்கள் ( Metabolism ) :

வளர்ச்சி மற்றும் சிதைவு வேதிமாற்றங்களின் தொகுப்பே, வளர்சிதை வேதிமாற்றங்கள் ( Metabolism ) எனப்படுகின்றன.

மனித உடலின் ஒவ்வொரு செல்களிலும் நடைபெறும் இவ்வினைகள், உயிர் வாழ்வதற்கு மிகவும் இன்றியமையாதவை ஆகும்.நமது ஒவ்வொரு செயல்களும் இவற்றுடன் தொடர்புடையனவாகும்.

ஒவ்வொரு செல்களிலும் நடைபெறும் இவ்வினைகளை மொத்தமாக தொகுத்து பார்த்தால்,பல கோடிக்கணக்கான வேதிமாற்றங்கள், நமது உடலில் தினமும் நடப்பதை அறியலாம்.( ப்ப்ப்ப்ப்ப்ப்பா, என்ன ஒரு அதிசயமான படைப்பு நமது உடல் !!!!!. )

இதனால் Metabolism என்பது உடலின் ஆரோக்கியத்தை குறிக்கும் அளவீடாக பார்க்கப்படுகின்றது.

சரி, இப்பொழுது கட்டுரையின் தலைப்பிற்குள் செல்வோம்.

இனி, இயற்கை சார்ந்த உணவு முறைகளையும், அவை எவ்வாறு நம் உடலின் Metabolism மேம்பட உதவுகின்றன என்பதையும் பார்க்கலாம்.

இயற்கை சார்ந்த உணவு முறைகள் :

1. உணவின் குணமறிந்து உண்ணல் :

வாதம், பித்தம், கபம் என்னும் மூன்று குணங்களில் ஏதேனும் ஒரு குணத்தை,ஒவ்வொரு உணவுப் பொருளும் பெற்றிருக்கும்.இந்த மூன்று குணங்களும் நமது உடலில் சமநிலையில் இருக்குமாறு, நாம் நமது உணவு முறையை அமைத்து கொள்ள வேண்டும்.

2. காலமறிந்து உண்ணல் :

தினசரி, நமது உடலில் ஒவ்வொரு வேளையும்,ஒரு குணம் மேலோங்கி இருக்கும்.இதனை பின்வருமாறு காணலாம்.

• கபம், அதிகாலையில் தொடங்கி சிறிது சிறிதாக அதிகரித்து நண்பகலில் உச்சத்தை அடையும்.

• பித்தம், நண்பகலுக்கு பிறகு சிறிது சிறிதாக அதிகரித்து மாலையில் உச்சத்தை அடையும்.

• வாதம், இரவில் சிறிது சிறிதாக அதிகரித்து அதிகாலையில் உச்சத்தை அடையும்.

இவ்வாறு அதிகரிக்கும் குணங்களை சமன்படுத்தவே ,

“ காலையில் இஞ்சி, கடும்பகல் சுக்கு, மாலையில் கடுக்காய் “ – என்ற பாடல் வழி கூறுகின்றது.

இதில் இஞ்சி வாயுவைக் ( வாதம் ) குறைக்கும்; சுக்கு கபத்தை குறைக்கும்; கடுக்காய் பித்தத்தை குறைக்கும்.

இது தவிர வயதிற்கேற்ப மனித உடலில், இக்குணங்கள் பொதுவாக பின்வருமாறு அமைகின்றன. சிறுவயதில் கபம் மேலோங்கி இருக்கும்; நடுவயதில் பித்தம் அதிகமாக இருக்கும்;முதுமையில் வாதம் அதிகமாக இருக்கும்.

இதனை ஒட்டியே சிறு வயதில் குழந்தைகள் அடிக்கடி சளி தொல்லையாலும், நடு வயதினர் பித்தம் தொடர்புடைய நோய்களாலும்,மூத்த வயதினர் வாத நோய்களாலும் பொதுவாக அவதிப்படுவதைக் காணலாம்.

எனவே இவற்றுக்கு ஏற்ப நமது உணவு முறையை அமைத்துக் கொள்ள வேண்டும்.

3. பசித்து புசித்தல் :

“துய்க்க துவர பசித்து ”- என்கின்றார் வள்ளுவர் ( குறள் எண் 944 ).எனவே நன்கு பசித்தபின் உண்ண வேண்டும்.இதுவே முன்னர் உண்ட உணவு நன்கு செரித்ததற்கான அறிகுறி ஆகும்.

மேலும் முன் சென்ற உணவு நன்கு செரித்த பின் உண்டால், உடலுக்கு மருந்தே வேண்டாம் என்கிறார் ( குறள் எண் 942 ).

4. செரிக்கும் அளவறிந்து உண்ணல் :

நமது உடலின் செறிக்கும் அளவறிந்து உண்ண வேண்டும்.இவ்வாறு உண்டால் நீண்ட நாள் வாழலாம் என்கிறார் வள்ளுவர் ( குறள் எண் 943 ).

மேலும் சரியான உணவை அளவோடு உண்டால் உடலுக்கு தீங்கில்லை என்கிறார் ( குறள் எண் 945 ).

5. நொறுங்கத் தின்றல் :

உணவை சிறிது சிறிதாக உமிழ்நீருடன் கலந்து, அதனை நன்கு மென்று பிறகு விழுங்க வேண்டும்.இதனையே நொறுங்கத் தின்றால் நூறு வயது என்றனர் நம் முன்னோர்கள்.வாயில் ஜீரணம் நடைபெறுவதை அன்றே உணர்ந்துள்ளனர்.

6. சரியான உணவு வகைகள் :

காய்கறிகள், பழங்கள், கீரைகள், சிறுதானியங்கள் போன்றவற்றை நம் முன்னோர்கள் உண்டு நீண்ட காலம் உடல் நலத்தோடு வாழ்ந்தனர்.இவற்றையே ஊட்டச்சத்து மதிப்பு ( Nutritional Value ) மிக்க உணவுகளாக அறிவியல் உலகம் அங்கீகரிக்கின்றது.ஆனால் இன்றைய குழந்தைகள் இவற்றை தொட்டுக் கூட பார்ப்பதில்லை என்பது வருத்தமான விஷயம்.

மேலும் நம் முன்னோர்கள் இயற்கை உரம் மற்றும் பூச்சி விரட்டிகளை ( கவனிக்கவும், பூச்சி கொல்லி அல்ல ) பயன்படுத்தி விளைவிக்கப்பட்ட இயற்கை உணவுகளையே ( Organic foods ) உண்டு நோயின்றி, நீண்ட நாட்கள் வாழ்ந்தனர்.

ஆனால் இன்று பெரும்பாலும் வேதியியல் உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகள் பயன்படுத்தி விளைவிக்கப்பட்ட உணவுகளையே உண்டு வருகின்றோம்.இவை நம் உடலில் அன்றாடம் நடக்கும் பல கோடிகணக்கான Metabolic வேதிமாற்றங்களை நேரடியாக பாதிக்கின்றன.இதனால் பல்வேறு கொடிய நோய்களுக்கு ஆளாகி வருகின்றோம்.

மேற்சொன்ன ஆறும், இயற்கை சார்ந்த உணவு முறைகள் ஆகும்.இவற்றை கடைபிடிப்பதன் மூலம் நம் உடலின் Metabolic வேதிமாற்றங்கள் சிறப்பாக நடைபெறும்; நாம் பல நோய்களிலிருந்து விடுதலை பெறலாம்; நல்ல ஆரோக்கியத்தை பெறலாம்.மேலும் குழந்தைகளின் உடல் நலத்தையும் உறுதி செய்யலாம்.

சரி, இதற்கெல்லாம் என்ன ஆதாரம் ?.

மேற்சொன்னவற்றுள் சிலவற்றை அறிவியல் உலகம் கிட்டதட்ட ஏற்றுக்கொண்டுள்ளது.பிறவற்றுக்கு இதனை கடைபிடித்து பயனடைந்த நம் முன்னோர்களே சான்று. மேலும் இன்று, இதனை பகுதியளவாவது கடைபிடித்து பயன் பெற்றுவரும் சில சமகால மனிதர்களே இதற்கு கூடுதல் சாட்சி ஆகும்.

ஆனால், பரபரப்பான இன்றைய வாழ்வில் இதெல்லாம் சாத்தியமா ?. வேறு வழியில்லை.சிறிது சிறிதாகவாவது முயல வேண்டும். ஏனென்றால் இன்றைய குழந்தைகளின் உணவுப்பழக்கம் Artificially Flavoured foods and drinks, processed foods என்று மோசமான நிலைக்கு சென்று கொண்டிருக்கின்றது.இது தவிர்க்கப்பட வேண்டும்.மக்களிடம் விழிப்புணர்வு அதிகரித்து,பரவலாக ஒத்த கருத்துடைய மனநிலை ஏற்படும்போது இதன் சாத்தியக்கூறுகள் அதிகரிக்கும்.

இதனை தயவு செய்து அனைவருக்கும் Share செய்யவும்.நன்றி.

இப்படிக்கு,
தமிழ் இயற்கை சார்ந்த வாழ்வியல் பக்கம்.
Photo: இயற்கை சார்ந்த உணவு முறைகள் தலைப்பிற்குள் செல்வதற்கு முன், உணவு எவ்வாறு ஆற்றலாக மாற்றப்படுகின்றது என்பதை, அறிவியல் முறைப்படி பார்க்கலாம். நாம் உண்ணும் உணவில் ஆறு முக்கிய ஊட்ட சத்துக்கள் ( Six Essential Nutrients ) உள்ளன. அவை , 1. புரதங்கள் ( Proteins ) 2. மாவுச்சத்து ( Carbohyrate ) 3. கொழுப்பு ( Fat ) 4. தாதுக்கள் ( Minerals ) 5. உயிர் சத்துக்கள் ( Vitamins ) 6. தண்ணீர் ( Water ) ஆகியன ஆகும். இதில் நம் உடலுக்கு ஆற்றலை கொடுப்பவை புரதங்கள், மாவுச்சத்து மற்றும் கொழுப்பு ஆகும்.எனவே இவை மிகுந்த முக்கியத்துவம் பெறுகின்றன. இவற்றுள் மாவுச்சத்து ( சர்க்கரை ) உடனடி ஆற்றலை அளிக்க வல்லது. புரதம் மெதுவான மற்றும் நீடித்த ஆற்றலை கொடுப்பது.கொழுப்பு அதிக ஆற்றலை வழங்குவது ஆகும். இப்பொழுது நாம் உண்ணும் உணவு, உணவுப்பாதையில் அடையும் மாற்றங்களை வரிசையாக காணலாம். • உணவானது, வாயில் உமிழ்நீருடன் நன்கு கலக்கப்பட்டு அரைக்கப்படுகின்றது.உமிழ்நீரில் உள்ள அமிலேஸ் ( Amylase ) என்னும் நொதி ( Enzyme) உணவுத் துகள்களை ஒரளவு சிதைக்கின்றது. • பின், உணவுக்குழல் வழியாக இரைப்பையை அடைகின்றது. அங்கு HCL அமிலம் மற்றும் பெப்சின் என்னும் என்சைம் சேர்க்கப்படுகின்றது.இவை உணவின் மீது வேதிமாற்றங்களை நிகழ்த்துகின்றன.மேலும் இரைப்பை தசைகளின் இயக்கங்களாலும் உணவு நன்கு அரைபடுகின்றது. • அடுத்து உணவு கூழ்நிலையில், சிறுகுடலின் முன்பகுதியை ( duodenum ) அடைகின்றது.அங்கு பித்த நீர்,கணைய நீர் மற்றும் குடல் நீர் சேர்க்க்ப்பட்டு அடுத்தகட்ட வேதிமாற்றம் நிகழ்கின்றது.குடலின் தசை இயக்கங்கள் மூலமும் உணவு மேலும் அரைக்கப்படுகின்றது. • இறுதியாக நன்கு சிதைக்கப்பட்ட உணவிலுள்ள ஊட்ட சத்துக்கள், உறிஞ்சப்பட்டு ரத்தத்தின் மூலம் கல்லீரலுக்கு எடுத்து செல்லப்படுகின்றன.அங்கு இச்சத்துக்கள் வடிகட்டப்பட்டு, நச்சு நீக்கப்பட்டு, மேலும் வேதிமாற்றங்கள் அடைகின்றன. • பின் இச்சத்துக்கள் உடலின் பல்வேறு செல்களுக்கு ( Body cells ) எடுத்து செல்லப்படுகின்றன. அங்கு நடைபெறும் பல்வேறு தனி தனி வேதி மாற்றங்கள் மூலம் இவை, ATP ( Adenosine Triphosphate ) எனும் ஆற்றல் வடிவமாக மாற்றப்படுகின்றன. • இந்த ஆற்றலே மனிதன் நகர்வதற்கும், உள்ளுறுப்புகள் செயல்படுவதற்கும்,புதிய செல்கள் உருவாக்கத்திற்கும் பயன்படுகின்றது. மேலே பார்த்தவரையில் மூன்று நிகழ்வுகள் மிகுந்த முக்கியத்துவம் பெறுகின்றன.அவற்றை ஒவ்வொன்றாக பின்வருமாறு பார்ப்போம், 1. சிதைவு வேதிமாற்றங்கள் ( Catabolism ) : உணவுப்பாதையில், உணவுத்துகள்கள் பல்வேறு வேதிமாற்றங்களின் மூலம் மிக நுண்ணிய துகள்களாக சிதைக்கப்படுகின்றன.இவை சிதைவு வேதிமாற்றங்கள் ( Catabolism ) எனப்படுகின்றன. இவற்றுள் குறிப்பாக செல்களில் நடக்கும் பல சிதைவு வேதிமாற்றங்கள் ( Catabolism ) மூலம், ஊட்டச்சத்துகள் முற்றிலும் சிதைக்கப்பட்டு ஆற்றல் பெறப்படுகின்றது. இதில் ஆக்ஸிஜன் பயன்படுத்தப்பட்டு , கார்பன் டை ஆக்சைடு கழிவாக வெளியேற்றப்படுகின்றது.தனித்தனியாக நடைபெறும் இந்த வினைகளை மொத்தமாக பார்க்கும்போது, எரி அறையில் ( Combustion Chamber ) உணவை எரிப்பது போல தோன்றுகின்றது.எனவே இது கலோரியை எரித்தல் ( Calorie Burning ) எனப்படுகின்றது. 2. வளர்ச்சி வேதிமாற்றங்கள் ( Anabolism ) : புதிய செல்களை உருவாக்கும் வேதிமாற்றங்கள், வளர்ச்சி வேதிமாற்றங்கள் ( Anabolism ) எனப்படுகின்றன. முற்றிலும் சிதைக்கப்படாத ஊட்டச்சத்துக்கள் மற்றும் ATP ( Adenosine Triphosphate ) வடிவிலான ஆற்றலை பயன்படுத்தி இவ்வேதிமாற்றங்கள் நிகழ்கின்றன. 3. வளர்சிதை வேதிமாற்றங்கள் ( Metabolism ) : வளர்ச்சி மற்றும் சிதைவு வேதிமாற்றங்களின் தொகுப்பே, வளர்சிதை வேதிமாற்றங்கள் ( Metabolism ) எனப்படுகின்றன. மனித உடலின் ஒவ்வொரு செல்களிலும் நடைபெறும் இவ்வினைகள், உயிர் வாழ்வதற்கு மிகவும் இன்றியமையாதவை ஆகும்.நமது ஒவ்வொரு செயல்களும் இவற்றுடன் தொடர்புடையனவாகும். ஒவ்வொரு செல்களிலும் நடைபெறும் இவ்வினைகளை மொத்தமாக தொகுத்து பார்த்தால்,பல கோடிக்கணக்கான வேதிமாற்றங்கள், நமது உடலில் தினமும் நடப்பதை அறியலாம்.( ப்ப்ப்ப்ப்ப்ப்பா, என்ன ஒரு அதிசயமான படைப்பு நமது உடல் !!!!!. ) இதனால் Metabolism என்பது உடலின் ஆரோக்கியத்தை குறிக்கும் அளவீடாக பார்க்கப்படுகின்றது. சரி, இப்பொழுது கட்டுரையின் தலைப்பிற்குள் செல்வோம். இனி, இயற்கை சார்ந்த உணவு முறைகளையும், அவை எவ்வாறு நம் உடலின் Metabolism மேம்பட உதவுகின்றன என்பதையும் பார்க்கலாம். இயற்கை சார்ந்த உணவு முறைகள் : 1. உணவின் குணமறிந்து உண்ணல் : வாதம், பித்தம், கபம் என்னும் மூன்று குணங்களில் ஏதேனும் ஒரு குணத்தை,ஒவ்வொரு உணவுப் பொருளும் பெற்றிருக்கும்.இந்த மூன்று குணங்களும் நமது உடலில் சமநிலையில் இருக்குமாறு, நாம் நமது உணவு முறையை அமைத்து கொள்ள வேண்டும். 2. காலமறிந்து உண்ணல் : தினசரி, நமது உடலில் ஒவ்வொரு வேளையும்,ஒரு குணம் மேலோங்கி இருக்கும்.இதனை பின்வருமாறு காணலாம். • கபம், அதிகாலையில் தொடங்கி சிறிது சிறிதாக அதிகரித்து நண்பகலில் உச்சத்தை அடையும். • பித்தம், நண்பகலுக்கு பிறகு சிறிது சிறிதாக அதிகரித்து மாலையில் உச்சத்தை அடையும். • வாதம், இரவில் சிறிது சிறிதாக அதிகரித்து அதிகாலையில் உச்சத்தை அடையும். இவ்வாறு அதிகரிக்கும் குணங்களை சமன்படுத்தவே , “ காலையில் இஞ்சி, கடும்பகல் சுக்கு, மாலையில் கடுக்காய் “ – என்ற பாடல் வழி கூறுகின்றது. இதில் இஞ்சி வாயுவைக் ( வாதம் ) குறைக்கும்; சுக்கு கபத்தை குறைக்கும்; கடுக்காய் பித்தத்தை குறைக்கும். இது தவிர வயதிற்கேற்ப மனித உடலில், இக்குணங்கள் பொதுவாக பின்வருமாறு அமைகின்றன. சிறுவயதில் கபம் மேலோங்கி இருக்கும்; நடுவயதில் பித்தம் அதிகமாக இருக்கும்;முதுமையில் வாதம் அதிகமாக இருக்கும். இதனை ஒட்டியே சிறு வயதில் குழந்தைகள் அடிக்கடி சளி தொல்லையாலும், நடு வயதினர் பித்தம் தொடர்புடைய நோய்களாலும்,மூத்த வயதினர் வாத நோய்களாலும் பொதுவாக அவதிப்படுவதைக் காணலாம். எனவே இவற்றுக்கு ஏற்ப நமது உணவு முறையை அமைத்துக் கொள்ள வேண்டும். 3. பசித்து புசித்தல் : “துய்க்க துவர பசித்து ”- என்கின்றார் வள்ளுவர் ( குறள் எண் 944 ).எனவே நன்கு பசித்தபின் உண்ண வேண்டும்.இதுவே முன்னர் உண்ட உணவு நன்கு செரித்ததற்கான அறிகுறி ஆகும். மேலும் முன் சென்ற உணவு நன்கு செரித்த பின் உண்டால், உடலுக்கு மருந்தே வேண்டாம் என்கிறார் ( குறள் எண் 942 ). 4. செரிக்கும் அளவறிந்து உண்ணல் : நமது உடலின் செறிக்கும் அளவறிந்து உண்ண வேண்டும்.இவ்வாறு உண்டால் நீண்ட நாள் வாழலாம் என்கிறார் வள்ளுவர் ( குறள் எண் 943 ). மேலும் சரியான உணவை அளவோடு உண்டால் உடலுக்கு தீங்கில்லை என்கிறார் ( குறள் எண் 945 ). 5. நொறுங்கத் தின்றல் : உணவை சிறிது சிறிதாக உமிழ்நீருடன் கலந்து, அதனை நன்கு மென்று பிறகு விழுங்க வேண்டும்.இதனையே நொறுங்கத் தின்றால் நூறு வயது என்றனர் நம் முன்னோர்கள்.வாயில் ஜீரணம் நடைபெறுவதை அன்றே உணர்ந்துள்ளனர். 6. சரியான உணவு வகைகள் : காய்கறிகள், பழங்கள், கீரைகள், சிறுதானியங்கள் போன்றவற்றை நம் முன்னோர்கள் உண்டு நீண்ட காலம் உடல் நலத்தோடு வாழ்ந்தனர்.இவற்றையே ஊட்டச்சத்து மதிப்பு ( Nutritional Value ) மிக்க உணவுகளாக அறிவியல் உலகம் அங்கீகரிக்கின்றது.ஆனால் இன்றைய குழந்தைகள் இவற்றை தொட்டுக் கூட பார்ப்பதில்லை என்பது வருத்தமான விஷயம். மேலும் நம் முன்னோர்கள் இயற்கை உரம் மற்றும் பூச்சி விரட்டிகளை ( கவனிக்கவும், பூச்சி கொல்லி அல்ல ) பயன்படுத்தி விளைவிக்கப்பட்ட இயற்கை உணவுகளையே ( Organic foods ) உண்டு நோயின்றி, நீண்ட நாட்கள் வாழ்ந்தனர். ஆனால் இன்று பெரும்பாலும் வேதியியல் உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகள் பயன்படுத்தி விளைவிக்கப்பட்ட உணவுகளையே உண்டு வருகின்றோம்.இவை நம் உடலில் அன்றாடம் நடக்கும் பல கோடிகணக்கான Metabolic வேதிமாற்றங்களை நேரடியாக பாதிக்கின்றன.இதனால் பல்வேறு கொடிய நோய்களுக்கு ஆளாகி வருகின்றோம். மேற்சொன்ன ஆறும், இயற்கை சார்ந்த உணவு முறைகள் ஆகும்.இவற்றை கடைபிடிப்பதன் மூலம் நம் உடலின் Metabolic வேதிமாற்றங்கள் சிறப்பாக நடைபெறும்; நாம் பல நோய்களிலிருந்து விடுதலை பெறலாம்; நல்ல ஆரோக்கியத்தை பெறலாம்.மேலும் குழந்தைகளின் உடல் நலத்தையும் உறுதி செய்யலாம். சரி, இதற்கெல்லாம் என்ன ஆதாரம் ?. மேற்சொன்னவற்றுள் சிலவற்றை அறிவியல் உலகம் கிட்டதட்ட ஏற்றுக்கொண்டுள்ளது.பிறவற்றுக்கு இதனை கடைபிடித்து பயனடைந்த நம் முன்னோர்களே சான்று. மேலும் இன்று, இதனை பகுதியளவாவது கடைபிடித்து பயன் பெற்றுவரும் சில சமகால மனிதர்களே இதற்கு கூடுதல் சாட்சி ஆகும். ஆனால், பரபரப்பான இன்றைய வாழ்வில் இதெல்லாம் சாத்தியமா ?. வேறு வழியில்லை.சிறிது சிறிதாகவாவது முயல வேண்டும். ஏனென்றால் இன்றைய குழந்தைகளின் உணவுப்பழக்கம் Artificially Flavoured foods and drinks, processed foods என்று மோசமான நிலைக்கு சென்று கொண்டிருக்கின்றது.இது தவிர்க்கப்பட வேண்டும்.மக்களிடம் விழிப்புணர்வு அதிகரித்து,பரவலாக ஒத்த கருத்துடைய மனநிலை ஏற்படும்போது இதன் சாத்தியக்கூறுகள் அதிகரிக்கும். இதனை தயவு செய்து அனைவருக்கும் Share செய்யவும்.நன்றி. இப்படிக்கு, தமிழ் இயற்கை சார்ந்த வாழ்வியல் பக்கம்

Palaniswamy Palaniswamy

என் தங்கை கல்கி குமுதாவின் பதிவுதலைப்பிற்குள் செல்வதற்கு முன், உணவு எவ்வாறு ஆற்றலாக மாற்றப்படுகின்றது என்பதை, அறிவியல் முறைப்படி பார்க்கலாம்.

நாம் உண்ணும் உணவில் ஆறு முக்கிய ஊட்ட சத்துக்கள் ( Six Essential Nutrients ) உள்ளன. அவை ,

1. புரதங்கள் ( Proteins )
2. மாவுச்சத்து ( Carbohyrate )
3. கொழுப்பு ( Fat )
4. தாதுக்கள் ( Minerals )
5. உயிர் சத்துக்கள் ( Vitamins )
6. தண்ணீர் ( Water )

ஆகியன ஆகும்.

இதில் நம் உடலுக்கு ஆற்றலை கொடுப்பவை புரதங்கள், மாவுச்சத்து மற்றும் கொழுப்பு ஆகும்.எனவே இவை மிகுந்த முக்கியத்துவம் பெறுகின்றன.

இவற்றுள் மாவுச்சத்து ( சர்க்கரை ) உடனடி ஆற்றலை அளிக்க வல்லது. புரதம் மெதுவான மற்றும் நீடித்த ஆற்றலை கொடுப்பது.கொழுப்பு அதிக ஆற்றலை வழங்குவது ஆகும்.

இப்பொழுது நாம் உண்ணும் உணவு, உணவுப்பாதையில் அடையும் மாற்றங்களை வரிசையாக காணலாம்.

• உணவானது, வாயில் உமிழ்நீருடன் நன்கு கலக்கப்பட்டு அரைக்கப்படுகின்றது.உமிழ்நீரில்
உள்ள அமிலேஸ் ( Amylase ) என்னும் நொதி ( Enzyme) உணவுத் துகள்களை ஒரளவு சிதைக்கின்றது.

• பின், உணவுக்குழல் வழியாக இரைப்பையை அடைகின்றது. அங்கு HCL அமிலம் மற்றும் பெப்சின் என்னும் என்சைம் சேர்க்கப்படுகின்றது.இவை உணவின் மீது வேதிமாற்றங்களை நிகழ்த்துகின்றன.மேலும் இரைப்பை தசைகளின் இயக்கங்களாலும் உணவு நன்கு அரைபடுகின்றது.

• அடுத்து உணவு கூழ்நிலையில், சிறுகுடலின் முன்பகுதியை ( duodenum ) அடைகின்றது.அங்கு பித்த நீர்,கணைய நீர் மற்றும் குடல் நீர் சேர்க்க்ப்பட்டு அடுத்தகட்ட வேதிமாற்றம் நிகழ்கின்றது.குடலின் தசை இயக்கங்கள் மூலமும் உணவு மேலும் அரைக்கப்படுகின்றது.

• இறுதியாக நன்கு சிதைக்கப்பட்ட உணவிலுள்ள ஊட்ட சத்துக்கள், உறிஞ்சப்பட்டு ரத்தத்தின் மூலம் கல்லீரலுக்கு எடுத்து செல்லப்படுகின்றன.அங்கு இச்சத்துக்கள் வடிகட்டப்பட்டு, நச்சு நீக்கப்பட்டு, மேலும் வேதிமாற்றங்கள் அடைகின்றன.

• பின் இச்சத்துக்கள் உடலின் பல்வேறு செல்களுக்கு ( Body cells ) எடுத்து செல்லப்படுகின்றன. அங்கு நடைபெறும் பல்வேறு தனி தனி வேதி மாற்றங்கள் மூலம் இவை, ATP ( Adenosine Triphosphate ) எனும் ஆற்றல் வடிவமாக மாற்றப்படுகின்றன.

• இந்த ஆற்றலே மனிதன் நகர்வதற்கும், உள்ளுறுப்புகள் செயல்படுவதற்கும்,புதிய செல்கள் உருவாக்கத்திற்கும் பயன்படுகின்றது.

மேலே பார்த்தவரையில் மூன்று நிகழ்வுகள் மிகுந்த முக்கியத்துவம் பெறுகின்றன.அவற்றை ஒவ்வொன்றாக பின்வருமாறு பார்ப்போம்,

1. சிதைவு வேதிமாற்றங்கள் ( Catabolism ) :

உணவுப்பாதையில், உணவுத்துகள்கள் பல்வேறு வேதிமாற்றங்களின் மூலம் மிக நுண்ணிய துகள்களாக சிதைக்கப்படுகின்றன.இவை சிதைவு வேதிமாற்றங்கள் ( Catabolism ) எனப்படுகின்றன.

இவற்றுள் குறிப்பாக செல்களில் நடக்கும் பல சிதைவு வேதிமாற்றங்கள் ( Catabolism ) மூலம், ஊட்டச்சத்துகள் முற்றிலும் சிதைக்கப்பட்டு ஆற்றல் பெறப்படுகின்றது. இதில் ஆக்ஸிஜன் பயன்படுத்தப்பட்டு , கார்பன் டை ஆக்சைடு கழிவாக வெளியேற்றப்படுகின்றது.தனித்தனி
யாக நடைபெறும் இந்த வினைகளை மொத்தமாக பார்க்கும்போது, எரி அறையில் ( Combustion Chamber ) உணவை எரிப்பது போல தோன்றுகின்றது.எனவே இது கலோரியை எரித்தல் ( Calorie Burning ) எனப்படுகின்றது.

2. வளர்ச்சி வேதிமாற்றங்கள் ( Anabolism ) :

புதிய செல்களை உருவாக்கும் வேதிமாற்றங்கள், வளர்ச்சி வேதிமாற்றங்கள் ( Anabolism ) எனப்படுகின்றன.

முற்றிலும் சிதைக்கப்படாத ஊட்டச்சத்துக்கள் மற்றும் ATP ( Adenosine Triphosphate ) வடிவிலான ஆற்றலை பயன்படுத்தி இவ்வேதிமாற்றங்கள் நிகழ்கின்றன.

3. வளர்சிதை வேதிமாற்றங்கள் ( Metabolism ) :

வளர்ச்சி மற்றும் சிதைவு வேதிமாற்றங்களின் தொகுப்பே, வளர்சிதை வேதிமாற்றங்கள் ( Metabolism ) எனப்படுகின்றன.

மனித உடலின் ஒவ்வொரு செல்களிலும் நடைபெறும் இவ்வினைகள், உயிர் வாழ்வதற்கு மிகவும் இன்றியமையாதவை ஆகும்.நமது ஒவ்வொரு செயல்களும் இவற்றுடன் தொடர்புடையனவாகும்.

ஒவ்வொரு செல்களிலும் நடைபெறும் இவ்வினைகளை மொத்தமாக தொகுத்து பார்த்தால்,பல கோடிக்கணக்கான வேதிமாற்றங்கள், நமது உடலில் தினமும் நடப்பதை அறியலாம்.( ப்ப்ப்ப்ப்ப்ப்பா, என்ன ஒரு அதிசயமான படைப்பு நமது உடல் !!!!!. )

இதனால் Metabolism என்பது உடலின் ஆரோக்கியத்தை குறிக்கும் அளவீடாக பார்க்கப்படுகின்றது.

சரி, இப்பொழுது கட்டுரையின் தலைப்பிற்குள் செல்வோம்.

இனி, இயற்கை சார்ந்த உணவு முறைகளையும், அவை எவ்வாறு நம் உடலின் Metabolism மேம்பட உதவுகின்றன என்பதையும் பார்க்கலாம்.

இயற்கை சார்ந்த உணவு முறைகள் :

1. உணவின் குணமறிந்து உண்ணல் :

வாதம், பித்தம், கபம் என்னும் மூன்று குணங்களில் ஏதேனும் ஒரு குணத்தை,ஒவ்வொரு உணவுப் பொருளும் பெற்றிருக்கும்.இந்த மூன்று குணங்களும் நமது உடலில் சமநிலையில் இருக்குமாறு, நாம் நமது உணவு முறையை அமைத்து கொள்ள வேண்டும்.

2. காலமறிந்து உண்ணல் :

தினசரி, நமது உடலில் ஒவ்வொரு வேளையும்,ஒரு குணம் மேலோங்கி இருக்கும்.இதனை பின்வருமாறு காணலாம்.

• கபம், அதிகாலையில் தொடங்கி சிறிது சிறிதாக அதிகரித்து நண்பகலில் உச்சத்தை அடையும்.

• பித்தம், நண்பகலுக்கு பிறகு சிறிது சிறிதாக அதிகரித்து மாலையில் உச்சத்தை அடையும்.

• வாதம், இரவில் சிறிது சிறிதாக அதிகரித்து அதிகாலையில் உச்சத்தை அடையும்.

இவ்வாறு அதிகரிக்கும் குணங்களை சமன்படுத்தவே ,

“ காலையில் இஞ்சி, கடும்பகல் சுக்கு, மாலையில் கடுக்காய் “ – என்ற பாடல் வழி கூறுகின்றது.

இதில் இஞ்சி வாயுவைக் ( வாதம் ) குறைக்கும்; சுக்கு கபத்தை குறைக்கும்; கடுக்காய் பித்தத்தை குறைக்கும்.

இது தவிர வயதிற்கேற்ப மனித உடலில், இக்குணங்கள் பொதுவாக பின்வருமாறு அமைகின்றன. சிறுவயதில் கபம் மேலோங்கி இருக்கும்; நடுவயதில் பித்தம் அதிகமாக இருக்கும்;முதுமையில் வாதம் அதிகமாக இருக்கும்.

இதனை ஒட்டியே சிறு வயதில் குழந்தைகள் அடிக்கடி சளி தொல்லையாலும், நடு வயதினர் பித்தம் தொடர்புடைய நோய்களாலும்,மூத்த வயதினர் வாத நோய்களாலும் பொதுவாக அவதிப்படுவதைக் காணலாம்.

எனவே இவற்றுக்கு ஏற்ப நமது உணவு முறையை அமைத்துக் கொள்ள வேண்டும்.

3. பசித்து புசித்தல் :

“துய்க்க துவர பசித்து ”- என்கின்றார் வள்ளுவர் ( குறள் எண் 944 ).எனவே நன்கு பசித்தபின் உண்ண வேண்டும்.இதுவே முன்னர் உண்ட உணவு நன்கு செரித்ததற்கான அறிகுறி ஆகும்.

மேலும் முன் சென்ற உணவு நன்கு செரித்த பின் உண்டால், உடலுக்கு மருந்தே வேண்டாம் என்கிறார் ( குறள் எண் 942 ).

4. செரிக்கும் அளவறிந்து உண்ணல் :

நமது உடலின் செறிக்கும் அளவறிந்து உண்ண வேண்டும்.இவ்வாறு உண்டால் நீண்ட நாள் வாழலாம் என்கிறார் வள்ளுவர் ( குறள் எண் 943 ).

மேலும் சரியான உணவை அளவோடு உண்டால் உடலுக்கு தீங்கில்லை என்கிறார் ( குறள் எண் 945 ).

5. நொறுங்கத் தின்றல் :

உணவை சிறிது சிறிதாக உமிழ்நீருடன் கலந்து, அதனை நன்கு மென்று பிறகு விழுங்க வேண்டும்.இதனையே நொறுங்கத் தின்றால் நூறு வயது என்றனர் நம் முன்னோர்கள்.வாயில் ஜீரணம் நடைபெறுவதை அன்றே உணர்ந்துள்ளனர்.

6. சரியான உணவு வகைகள் :

காய்கறிகள், பழங்கள், கீரைகள், சிறுதானியங்கள் போன்றவற்றை நம் முன்னோர்கள் உண்டு நீண்ட காலம் உடல் நலத்தோடு வாழ்ந்தனர்.இவற்றையே ஊட்டச்சத்து மதிப்பு ( Nutritional Value ) மிக்க உணவுகளாக அறிவியல் உலகம் அங்கீகரிக்கின்றது.ஆனால் இன்றைய குழந்தைகள் இவற்றை தொட்டுக் கூட பார்ப்பதில்லை என்பது வருத்தமான விஷயம்.

மேலும் நம் முன்னோர்கள் இயற்கை உரம் மற்றும் பூச்சி விரட்டிகளை ( கவனிக்கவும், பூச்சி கொல்லி அல்ல ) பயன்படுத்தி விளைவிக்கப்பட்ட இயற்கை உணவுகளையே ( Organic foods ) உண்டு நோயின்றி, நீண்ட நாட்கள் வாழ்ந்தனர்.

ஆனால் இன்று பெரும்பாலும் வேதியியல் உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகள் பயன்படுத்தி விளைவிக்கப்பட்ட உணவுகளையே உண்டு வருகின்றோம்.இவை நம் உடலில் அன்றாடம் நடக்கும் பல கோடிகணக்கான Metabolic வேதிமாற்றங்களை நேரடியாக பாதிக்கின்றன.இதனால் பல்வேறு கொடிய நோய்களுக்கு ஆளாகி வருகின்றோம்.

மேற்சொன்ன ஆறும், இயற்கை சார்ந்த உணவு முறைகள் ஆகும்.இவற்றை கடைபிடிப்பதன் மூலம் நம் உடலின் Metabolic வேதிமாற்றங்கள் சிறப்பாக நடைபெறும்; நாம் பல நோய்களிலிருந்து விடுதலை பெறலாம்; நல்ல ஆரோக்கியத்தை பெறலாம்.மேலும் குழந்தைகளின் உடல் நலத்தையும் உறுதி செய்யலாம்.

சரி, இதற்கெல்லாம் என்ன ஆதாரம் ?.

மேற்சொன்னவற்றுள் சிலவற்றை அறிவியல் உலகம் கிட்டதட்ட ஏற்றுக்கொண்டுள்ளது.பிறவற்றுக்க
ு இதனை கடைபிடித்து பயனடைந்த நம் முன்னோர்களே சான்று. மேலும் இன்று, இதனை பகுதியளவாவது கடைபிடித்து பயன் பெற்றுவரும் சில சமகால மனிதர்களே இதற்கு கூடுதல் சாட்சி ஆகும்.

ஆனால், பரபரப்பான இன்றைய வாழ்வில் இதெல்லாம் சாத்தியமா ?. வேறு வழியில்லை.சிறிது சிறிதாகவாவது முயல வேண்டும். ஏனென்றால் இன்றைய குழந்தைகளின் உணவுப்பழக்கம் Artificially Flavoured foods and drinks, processed foods என்று மோசமான நிலைக்கு சென்று கொண்டிருக்கின்றது.இது தவிர்க்கப்பட வேண்டும்.மக்களிடம் விழிப்புணர்வு அதிகரித்து,பரவலாக ஒத்த கருத்துடைய மனநிலை ஏற்படும்போது இதன் சாத்தியக்கூறுகள் அதிகரிக்கும்.

Palaniswamy Palaniswamy
 
கல்கி குமுதாவின் பதிவு