மணக்கால் அய்யம்பேட்டை | 1:35 AM | Best Blogger Tips
பழைய சாதம் என்று சொன்னால் ஏழைகள், கிராமிய மக்கள்தான் அதிகம் சாப்பிடுவார்கள். நகரங்களில் வசிப்பவர்களின் உணவு Fast Foodதான். இதனால்தான் Fastடாகவே நோயாளியாகிறோம். இந்த ஃபாஸ்புட் உணவுகளை சாப்பிட்டு வயிற்றை கெடுத்துக்கொள்வதை விட, ருசியுடன் ஆரோக்கியமும் தருகிற பழைய சாதம் மிகவும் நல்லதாக இருக்கிறது.

சமைத்த சாதத்தில் இரவு தண்ணிர் ஊற்றி ஊற வைத்தால் அந்த சாதத்தில் நல்ல பாக்டீரியாக்கள் உற்பத்தியாகிறது. அவை குடலை பாதுகாக்கிறது.  

உணவு நன்றாக செரிக்கசெய்கிறது. மறுநாள் அந்த பழைய சாதத்தை சாப்பிட்டால், பசி அடங்குவதுடன் வயிற்று புண், மலச்சிக்கல் மூலநோய் வாயுகோளாறு போன்றவை தீர்க்கும் மருந்தாகவும் இருக்கிறது. பழைய சாதத்தில் வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் இருக்கிறது.

பழைய சாதம் பலருக்கு சாப்பிட ஆசையாகதான் இருக்கிறது. ஆனால் பல நேரங்களில் பழைய சோறு கெட்டுபோய்விடுகிறதே, என்ன செய்வது? என்று பலரின் கேள்வி.

முன்பெல்லாம் அரிசியை பொங்க வைத்து அந்த கஞ்சியை வடித்து விடுவார்கள். இதனால் தேவை இல்லாத நச்சுகள் கஞ்சியோடு வெளியேறிவிடும். 

அதனால் அந்த சாதம் இரண்டு நாட்கள் கூட கெடாமல் இருந்தது. ஆனால் இப்போது சமையல் குக்கரில்தான். சாதத்தின் கஞ்சி தண்ணிர் வெளியேற வாய்ப்புகள் இல்லை. இதனால்  காலையில் சமைத்த சாதம் இரவே கெட்டு போகிறது. அதனால், பழைய சாதம் சாப்பிட விரும்புகிறவர்கள், குக்கரில் சாதம் செய்யாமல் பாத்திரத்தில் சமைத்து, அரிசி பொங்கியவுடன் அந்த கஞ்சியை வடிகட்டிவிட்டு சாதத்தில் நல்ல தண்ணிர் ஊற்றி, மறுநாள் சிறிது உப்பு கலந்து சாப்பிட்டால் தேவாமிர்தம் போல இருக்கும்.

வயிற்றுக்கு எந்த கோளாறும் வராது. உடல் குளிர்ச்சி பெறும். ஆரோக்கியமும் கிடைக்கும். அலர்ஜி, அல்சர்,  தோல் வியாதி போன்றவை நீங்கும் என்கிறார்கள் இன்றைய மருத்துவர்கள். இதைதான் நம் பெரியவர்கள் பாடல் மூலமாக அன்றே சொன்னார்கள் -

“ஆற்று நீர் வாதம் போக்கும்
அருவிநிர் பித்தம் போக்கும்
சோற்றுநிர் இரண்டையும் போக்கும்!”

G.vijaya lakshmi
Copyright www.bhakthiplanet.com

http://www.manamakkalmalai.com/

Like This Page----> http://www.facebook.com/bhakthiplanetபழைய சாதம் என்று சொன்னால் ஏழைகள், கிராமிய மக்கள்தான் அதிகம் சாப்பிடுவார்கள். நகரங்களில் வசிப்பவர்களின் உணவு Fast Foodதான். இதனால்தான் Fastடாகவே நோயாளியாகிறோம். இந்த ஃபாஸ்புட் உணவுகளை சாப்பிட்டு வயிற்றை கெடுத்துக்கொள்வதை விட, ருசியுடன் ஆரோக்கியமும் தருகிற பழைய சாதம் மிகவும் நல்லதாக இருக்கிறது.

சமைத்த சாதத்தில் இரவு தண்ணிர் ஊற்றி ஊற வைத்தால் அந்த சாதத்தில் நல்ல பாக்டீரியாக்கள் உற்பத்தியாகிறது. அவை குடலை பாதுகாக்கிறது.

உணவு நன்றாக செரிக்கசெய்கிறது. மறுநாள் அந்த பழைய சாதத்தை சாப்பிட்டால், பசி அடங்குவதுடன் வயிற்று புண், மலச்சிக்கல் மூலநோய் வாயுகோளாறு போன்றவை தீர்க்கும் மருந்தாகவும் இருக்கிறது. பழைய சாதத்தில் வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் இருக்கிறது.

பழைய சாதம் பலருக்கு சாப்பிட ஆசையாகதான் இருக்கிறது. ஆனால் பல நேரங்களில் பழைய சோறு கெட்டுபோய்விடுகிறதே, என்ன செய்வது? என்று பலரின் கேள்வி.

முன்பெல்லாம் அரிசியை பொங்க வைத்து அந்த கஞ்சியை வடித்து விடுவார்கள். இதனால் தேவை இல்லாத நச்சுகள் கஞ்சியோடு வெளியேறிவிடும்.

அதனால் அந்த சாதம் இரண்டு நாட்கள் கூட கெடாமல் இருந்தது. ஆனால் இப்போது சமையல் குக்கரில்தான். சாதத்தின் கஞ்சி தண்ணிர் வெளியேற வாய்ப்புகள் இல்லை. இதனால் காலையில் சமைத்த சாதம் இரவே கெட்டு போகிறது. அதனால், பழைய சாதம் சாப்பிட விரும்புகிறவர்கள், குக்கரில் சாதம் செய்யாமல் பாத்திரத்தில் சமைத்து, அரிசி பொங்கியவுடன் அந்த கஞ்சியை வடிகட்டிவிட்டு சாதத்தில் நல்ல தண்ணிர் ஊற்றி, மறுநாள் சிறிது உப்பு கலந்து சாப்பிட்டால் தேவாமிர்தம் போல இருக்கும்.

வயிற்றுக்கு எந்த கோளாறும் வராது. உடல் குளிர்ச்சி பெறும். ஆரோக்கியமும் கிடைக்கும். அலர்ஜி, அல்சர், தோல் வியாதி போன்றவை நீங்கும் என்கிறார்கள் இன்றைய மருத்துவர்கள். இதைதான் நம் பெரியவர்கள் பாடல் மூலமாக அன்றே சொன்னார்கள் -

“ஆற்று நீர் வாதம் போக்கும்
அருவிநிர் பித்தம் போக்கும்
சோற்றுநிர் இரண்டையும் போக்கும்!”

G.vijaya lakshmi
Via bhakthiplanet