உற்சாகப்படுகிறார் விவேகானந்தர்

மணக்கால் அய்யம்பேட்டை | PM 2:36 | Best Blogger Tips
* நாம் செலுத்தும் பணிவுக்கும், மரியாதைக்கும் பிரதிபலனாக கடவுள் ஏதாவது நன்மை தர வேண்டும் என்று எதிர் பார்க்கும்வரை உண்மையான பக்தி ஏற்படாது.
* கடைநிலையில் வாழும் மனிதனுக்கும் உணவு கிடைக்கவேண்டும். பசித்தவனுக்கு உணவுஅளிப்பது தான் என்னுடைய ஆன்மிகம். அதை தவிர மற்றதெல்லாம் பொய்யே.
* அரசியல், சமுதாயத்தில் சுதந்திரத்தை நாம் பெற்றிருக்கலாம். ஆனால், ஆத்திரம், ஆசைஇவற்றுக்கு அடிமையாக இருக்கும் வரை சுதந்திரக்காற்றை சுவாசிக்க முடியாது.
* நீங்கள் உலகில் பிறந்திருப்பது வெல்வதற்காகவே. வெறும் கோழைத்தனத்தால் யாருக்கும் பணிந்து போவதற்கு அல்ல. நீங்கள் ஒரு சபையில் இருந்தால், உங்களுக்கு எல்லாரும் மரியாதை செய்யக்கூடிய அளவுக்கு நடந்து கொள்ள வேண்டும்.
* நம்முடைய வழிபாட்டில் கடவுளை நம் தாய் தந்தையராக ஒப்புக்கொள்கிறோம். ஆனால். அன்றாட வாழ்விலோ நாம் சந்திக்கும் அனைவரையும் எதிரிகளாக நினைக்கிறோம். 
* அந்தக்காலத்தில் கடவுளை நம்ப மறுப்பதே நாத்திகம். இப்போதோ தன்னை நம்ப மறுப்பவனே நாத்திகவாதி. தன்னம்பிக்கையோடு இருப்பதே உண்மையான ஆத்திகம். 
* அன்பு காட்டுவதே செயல்களில் எல்லாம் சிறந்த செயல். அன்பே மேலானது. தலைசிறந்த ஞானமும் அதுவே.
* உள்ளங்களை திறந்து வையுங்கள். பிரபஞ்சத்தில் உள்ள நல்ல எண்ணங்கள் அனைத்தும் நம்மை வந்து சேரட்டும். 
* நேர்மையான கோபம் என்று ஒன்று கிடையாது. பேராசையே கோபத்திற்கு அடிப்படைக் காரணம். அன்பு நெஞ்சத்தில் கோபத்திற்கு இடமே இருப்பதில்லை.
* அடக்கப்படாத மனம் மனிதனை எப்போதும் கீழ்நோக்கியே இழுத்துச் சென்று பாதாளத்தில் ஒருவனைத் தள்ளிவிடும்.
* வேடதாரியாகப் பொய் சொல்லி வாழ்வதை விட, உண்மை எங்கு இழுத்துச் சென்றாலும் தப்பில்லை என்று வாழ்வதே உயர்ந்தபண்பாகும். 
* முதலில் பணியாளனாக வேலை செய்யக் கற்றுக் கொள். எஜமானராக வாழும் தகுதி தானாக உன்னைத் தேடி வரும். 
* நன்மை விளையும் என்று உணர்ந்தால் மட்டுமே, மனதில் உள்ள அந்தரங்க விஷயங்களைப் பிறரிடம் சொல்லலாம்.
* மனதை அடக்கப் பழகியவன் வேறு எதற்கும் எளிதில் வசப்பட மாட்டான். அத்தகையவன் சிறந்த அறிவாளியாகவும் திகழ்வான்.
* இந்த உலகம் பெரிய உடற்பயிற்சி சாலை. நாம் அனைவரும் வலிமையுள்ளவர்களாக்கிக் கொள்ளவே இங்கு வந்திருக்கிறோம்.
* யாரிடமும் பொறாமை கொள்ளாதீர்கள். நன்மை செய்வோர் அனைவருக்கும் கைகொடுக்கத் தயங்காதீர்கள்.

உற்சாகப்படுகிறார் விவேகானந்தர்* நாம் செலுத்தும் பணிவுக்கும், மரியாதைக்கும் பிரதிபலனாக கடவுள் ஏதாவது நன்மை தர வேண்டும் என்று எதிர் பார்க்கும்வரை உண்மையான பக்தி ஏற்படாது.

 Via சர்வம் சிவமயம்