நசிகேதன் என்ற சிறுவன் எமதர்மனிடம் கேட்ட கேள்விகள் ....

மணக்கால் அய்யம்பேட்டை | முற்பகல் 1:27 | Best Blogger Tips
நசிகேதன் என்ற சிறுவன் எமதர்மனிடம் கேட்ட கேள்விகள் ....

யஜுர்வேதம்----கட உபநிடதம்

1.1.20. நசிகேதன்----மரணத்திற்கு பிறகு மனிதன் வாழ்கிறான் என்று சிலரும்,இல்லை என்று சிலரும் கூறுகிறார்கள்.இந்த சந்தேகத்தை உன்னிடம் கேட்டு தெளிவுபெற விரும்புகிறேன்

1.1.21. எமன்-----நசிகேதா இந்த விஷயத்தில் தேவர்களுக்கு கூட சந்தேகம் உள்ளது.(தேவர்களுக்கு கூட தெரியாது) இந்த விஷயம் நுட்பமானது,எளிதாக அடையக்கூடியது அல்ல. எனவே வேறு ஏதாவது கேள்.

1.1.22. நசிகேதன்------இந்த விஷயத்தில் தேவர்களுக்கும் சந்தேகம் உள்ளதா! எமதர்மனே! இதனை எளிதாக அறியமுடியாது என்று நீயும் சொல்கிறாய்.ஆனால் இதை உபதேசிப்பதற்கு உன்னைப்போல வேறொருவர் கிடைக்க மாட்டார்கள். வேறு எந்த வரமும் இதறகு இணையாகாது.

1.1.23. எமதர்மன்---நுாறு ஆண்டு ஆயுள் உள்ள மகன்களையும் பேரன்களையும் கேள்.ஏராளம் பசுக்கள்,யானை பொன்,குதிரை போன்றவற்றை கேள், புமியில் பரந்த அரசைகேள்,நீயும் எவ்வளவு நாள் வாழவிரும்புகிறாயோ அவ்வளவு நாள் வாழ்ந்துகொள்.

1.1.24,25.எமதர்மன்---- செல்வம்,நீண்ட ஆயுள் உட்பட இந்த உலகத்தில் உனக்கு எதுதேவையோ சொல் அதை நிறைவேற்றித்தருகிறேன்.சாரதிகளுடன் தேர்களை தருகிறேன்.வாத்திய கலைஞர்களைத்தருகிறேன்,தேவலோக கன்னியர்களை கேள் அதைவேண்டுமானாலும் தருகிறேன்.ஆனால் மரணத்திற்கு பின் நடப்பது பற்றிகேட்காதே.

1.1.26.27,28நசிகேதன்-----எமதர்மரே! நீ கூறுகின்ற இன்பங்கள் அனைத்தும் நிலையற்றவை.இவைகள் மனிதனின் ஆற்றலை வீணாக்குகின்றன.வாழ்க்கையோ குறுகியது.அதனால் இவைகள் வேண்டாம்.செல்வத்தால் மனிதனுக்கு திருப்தி ஏற்படாது.அதிக ஆயுள் வாழ்வதாலும் திருப்தி ஏற்படாது.

1.1.29.எமதர்மரே! எந்த விஷயத்தில் பலருக்கு சந்தேகம் உள்ளதோ,எதை தெரிந்துகொண்டால் பெரும் பயன்கிடைக்குமோ,எது ரகசியமாக வைக்கப்ட்டுள்ளதோ,அதை தெரிந்துகொள்ள விரும்புகிறேன்.வேறு எதுவும் வேண்டாம்.

1.2.1 எமதர்மன்---மேலானது மற்றும் சுகம் தருவது என இரண்டு உள்ளது.இரண்டும் வேறுபட்ட பலனை தருகிறது.மேலானதை ஏற்றுக்கொள்பவனுக்கு நன்மை கிடைக்கிறது.சுகம் தருவதை தேர்ந்தெடுப்பவன் வீழ்ச்சியடைகிறான்.

1.2.2,3. மூடன் உடம்புக்கு சுகம் தருவதை தேர்ந்தெடுக்கிறான்.ஆனால் நசிகேதா நீயோ மேலான வழியை தேர்ந்தெடுத்திருக்கிறாய்.

1.2.4,5.இறைநெறி மேலானது, உலகியியல் இன்பம் கீழானது உடலுக்கு சுகம் தருவது.நீ இறை நாட்டம் உடையவன்உலகியல் இன்பங்களை விரும்புபவர்கள் குருடனால் வழிகாட்டப்பட்ட குருடனைப்போல மீண்டும் மீண்டும் பிறந்து இறக்கிறார்கள்.

1.2.7,8.அறிய வேண்டிய ரகசியம் இந்த ஆன்மாபற்றியது.ஏற்கனவே ஆன்மாவை அறிந்தவன் உபதேசத்தை பின்பற்றினால் குழப்பம் இல்லை.உலகியல் இன்பத்தில் நாட்டம் உள்ளவர்களுக்கு இதைப்பற்றி தெரியாது.

1.2.9,10 வாதங்கள் மூலம் இதை அறியமுடியாது.உண்மையை உணர்ந்தவர் ஒருவர் மூலம் இதைப்பற்றி தெரிந்துகொள்ள வேண்டும்.

1.2.11.நசிகேதா! சொர்க்கலோகத்தில் அளவற்ற இன்பங்கள் நிறைந்துள்ளன.அங்கே பயம் இல்லை.நீண்ட நாட்கள் வாழலாம்.புத்திசாலியான நீ இதை நன்கு அறிந்திருந்தும் சொர்க்கத்தை உறுதியுடன் மறுத்துவிட்டாய்.

1.2.12.நீ கேட்ட ஆன்மா சிரமப்பட்டு அடையவேண்டியது.இதயக்குகையில் ஒளிர்வது,இருண்டபகுதியில் உள்ளது,பழமையானது,ஒளிமயமானது. புத்தி விழிப்புற்றவன் அத்யாத்ம யோகத்தால் தியானத்தின் மூலம் அதை அறிகிறான்.
(அத்தியாத்மயோகம் என்பது ஆன்மாவுடன் இணைதல் என்று பொருள்)
இங்கே இதயம் என்று சொல்வது இரத்தஓட்டத்திற்கு காரணமான இதயம் அல்ல.)

Via உபநிஷத்துகளின் விஞ்ஞான ரகசியங்கள்