சாதாரணமாக கிடைப்பதாலேயே மிகச் சிறந்தவைகளின் மதிப்புகளை நாம் உணரத் தவறி விடுகிறோம். அது புல்லில் தொடங்கி மனிதன் வரை பொருந்தும்.
நம் வீட்டுத் தோட்டங்களில் சாதாரணமாக வளர்ந்து கிடக்கும் அறுகம்புல் பற்றி நமக்குத் தெரியுமா? ‘விநாயகருக்கு மாலையா கட்டி அம்மா போடுவாங்க!’ என ஊகமாக ஒரு விடை மனதில் தோன்றும். ஏன் இது விநாயகருக்கு? அனலாசுரன் என்ற அரக்கன் அனைவரையும் கொடுமைப் படுத்தி வந்தான். அவனது கொட்டத்தை யாராலும் அடக்க முடியாத நிலையில் தேவர்கள் விநாயகரின் உதவியை நாடினார்கள்.
அனலாசுரனுடன் மோதினார் விநாயகர். ஆனால், அவனை ஒடுக்க முடியவில்லை. கோபத்தில் அவனை அப்படியே தூக்கி விழுங்கினார் விநாயகர். வயிற்றினுள் சென்ற அனலாசுரன் வெப்பத்தை அதிகப்படுத்த சூடு தாங்கமுடியாமல் தவித்தார் விநாயகர். குடம் குடமாக தண்ணீர் அருந்தியும் சூடு குறைந்த பாடில்லை. ஒறு முனிவர் அறுகம்புல்லை விநாயகர் தலைமீது வைக்க, உடனே சூடு தணிந்தது. அனலாசுரன் விநாயகரின் வயிற்றுக்குள் ஜீரணமாகி விட்டான். அன்று முதல் விநாயகருக்கு அறுகம்புல் பிடித்த விஷயமாகி இன்றும் நாம் அதை அவருக்கு சமர்ப்பிக்கிறோம்.
இதில் மறைவாய் சொல்லப்பட்ட விஷயம் உடல் சூட்டை அறுகம்புல் தணிக்கும், ஜீரண சக்தியை உண்டாக்கும் என்பதே! அறுகம்புல் சிறு செடி. புல் வகையைச் சேர்ந்தது. பசுமையான அகலத்தில் குறைந்த, நீண்ட கூர்மையான இலைகளை கொண்ட தாவரம். தண்டு குட்டையாக இருக்கும். ஈரமான இடங்களில் வளரும். தமிழகத்தில் எல்லா மாவட்டங்களிலும் இது வளரும். இதன் தாவரவியல் பெயர் cynodon dactylon . சமஸ்கிருதத்தில் துர்வா என்றும் ஆந்திராவில் ஜெரிக்கி என்றும் கேரளத்தில் கருக்கா என்றும் கர்நாடகத்தில் காரிக ஹால்லு என்றும் அழைக்கிறார்கள். தமிழில் அறுகு, பதம், தூர்வை, மேகாரி என பல பெயர்கள் இதற்கு.
சொறி, சிரங்கு, படர்தாமரை போன்ற சரும நோய்கள் குணமாக அறுகம்புல்லுடன் மஞ்சள் சேர்த்து அரைத்துக் குளித்தால் போதும். உடனே குணமாகும். மூலநோய்க்கு காய்ச்சாத ஆட்டுப்பாலில், அரைத்த அறுகம்புல்லைக் கலந்து குடிக்க நிவாரணம் கிடைக்கும். நரம்புத் தளர்ச்சிக்கும், அல்சருக்கும், வெள்ளைப்படுதல், வெட்டை நோய்க்கும் இது அருமருந்து. தினமும் அறுகம்புல் சாறு குடிக்க ரத்தம் சுத்தமாகும். ஆனால், மருத்துவத்திற்கு இதை பயன் படுத்தும்போது சுத்தமான இடத்தில் வளர்ந்த அறுகம்புல்லை பயன்படுத்துவது நல்லது என்கிறார்கள், மருத்துவர்கள். ஆனால், ஆன்மிக அன்பர்களுக்கு விநாயகரின் ஸ்பரிசம் பட்டு அது பிரசாதமாக கிடைக்கும் போது மகத்துவமும் பல மடங்கு கூடிப் போகிறது. இந்து மதத்தில் ஆன்மிகத்தோடு அறிவியல் இழையோடி கிடப்பதற்கு மஞ்சள் பிள்ளையாரை அலங்கரிக்கும் அறுகம்புல்லே சாட்சி!
Thanks To Dinakaran Newspaper








![இந்தியாவில் சாதனை படைத்த முதல் பெண்கள்
பெண்கள் இடம் பெறாத துறையே இல்லை என்று சொல்லும் அளவுக்கு முன்னேற்றம் கண்டுள்ளோம். ஆனால், ஒவ்வொரு துறையிலும், ஒரு பெண் முதல் முறையாக நுழையும் போது, அதில் உள்ள பல்வேறு பாதகங்களையும் அனுபவித்து, அவருக்குப் பின் வரும் பெண்களுக்கு வழிகாட்டியாக இருந்துள்ளார். அதுபோன்று பல்வேறு துறைகளில் முதல் முறையாக காலடி எடுத்து வைத்த பெண்களின் பட்டியலை இங்கு காணலாம்.
* முதல் பெண் குடியரசுத் தலைவர் - பிரதீபா பாட்டில் 2007
* முதல் மத்திய அமைச்சர் - ராஜ்குமாரி அம்ருதா கௌர் (1947 - 57)
* முதல் பெண் கவர்னர் - சரோஜினி நாயுடு (1947 - 49)
* ராஜ்சபை முதல் பெண் துணை சபாநாயகர் - வயலட் அல்வா
* முதல் பெண் முதல்வர் (உத்திர பிரதேசம்) - சுசேதா கிருபலானு (1963 - 67)
* குடியரசு தலைவர் தேர்தலில் போட்டியிட்ட முதல் பெண்மணி - மனோகர நிர்மலா ஹோல்கர் (1967)
* முதல் பெண் ஐஏஎஸ் அதிகாரி - அன்னா ராஜன் ஜார்ஜ்
* மக்களவை முதல் பெண் சபாநாயகர் - மீரா குமார் (2009)
* மக்சாசே விருது பெற்ற முதல் பெண்மணி - அன்னை தெரசா (1962)
* இந்திய தேசிய காங்கிரசின் தலைவரான முதல் பெண்மணி - அன்னிபெசன்ட் (1917)
* காங்கிரஸ் தலைவரான முதல் பெண்மணி - சரோஜினி நாயுடு (1925)
* ஏர்மார்ஷல் பதவி வகித்த முதல் பெண்மணி - பத்மாவதி பந்தோ பாத்யாயா (2004)
* பால்கே விருது பெற்ற முதல் நடிகை - தேவிகா ராணி ரோரிச் (1969)
* புக்கர் பரிசு பெற்ற முதல் நடிகை - அருந்ததி ராய் (1997)
* மிஸ் வேர்ல்ட் பட்டம் பெற்ற முதல் பெண்மணி - ரீத்தா ஃபரியா பவல் (1966)
* மிஸ்யூனிவேர்ஸ் பட்ட பெற்ற முதல் பெண்மணி - சுஸ்மிதா சென் (1994)
* பாரதரத்னா விருது பெற்ற முதல் பெண்மணி - இந்திராகாந்தி (1971)
* ஆஸ்கார் விருது பெற்ற ஒரே பெண்மணி - பானு அதய்யா
* முதல் பெண் பிரதமர் - இந்திரா காந்தி (1966)
* உச்ச நீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதி - எம்.பாத்திமா பீவி (1989)
* உயர்நீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதி - கேரளா (அன்னா சாண்டி-1959)
* உயர் நீதிமன்றத்தின் முதல் பெண் தலைமை நீதிபதி - (இமாச்சல்) - லீலா சேத் (1991)
* ஐ.நா. பொதுச்சபையின் முதல் பெண் தலைவர் - விஜய லட்சுமி பண்டிட்
* முதல் பெண் ஐபிஎஸ் - கிரண்பேடி (1972)
* விண்வெளி சென்ற முதல் பெண்மணி - கல்பனா சௌலா
* எவரஸ்டில் ஏறிய முதல் பெண்மணி - பச்சேந்திரி பால்
* ஆங்கிலக் கால்வாயை நீந்தி கடந்த முதல் பெண்மணி - சுரதி ஸாஹா
* ஏழு வளைகுடாக்களை நீந்திக் கடந்த முதல் பெண்மணி - பிலா சௌத்ரி
* ஞானபீட விருது பெற்ற முதல் பெண்மணி - ஆஷா பூர்ணா தேவி (1976)
* ஒலிம்பிக் போட்டியில் போட்டியிட்ட முதல் பெண்மணி - நீலிமா கோஷ் (1952)
* லெப்டினன்ட் ஜெனரல் பதவி வகித்த முதல் பெண்மணி - புனிதா அரோரா (2004)
ரிலாக்ஸ் ப்ளீஸ் ஆங்கிலத்திலும் @[297395707031915:274:Relaxplzz]](https://fbcdn-sphotos-d-a.akamaihd.net/hphotos-ak-ash3/s403x403/1236610_606096186107381_807241415_n.jpg)



![பெண்களின் பாதுகாப்பிற்கு சில ஆலோசனைகள்..
1. இரவானாலும், பகலானாலும் இரயிலில் பயணம் செய்யும் போது ஆட்களே இல்லாத அல்லது ஒரு சிலர் மட்டுமே இருக்கும் கம்பார்ட்மெண்டில் ஏறாதீர்கள். ஆட்கள் இருக்கும் பக்கமே ஏறுங்கள்.
2. ஆட்டோவில் தனியே பயணம் செய்ய வேண்டியத் தருணம் வந்தால், ஆட்டோவில் ஏறும் போதே தொலைபேசியில் உங்கள் வீட்டாருக்கோ இல்லை நண்பருக்கோ அழைத்துப் பேசத் தொடங்குங்கள்.எங்கு இருந்து எங்கு செல்கிறீர்கள் என்பதை சொல்லி விட்டு தொடர்ந்து இறங்கும் இடம் வரும் வரை அழைப்பைத் துண்டிக்காமல் பேசிக் கொண்டே செல்லுங்கள்.
( அதற்காக ஆட்டோக்காரர் சரியான ரூட்டில் தான் செல்கிறாரா என்பதை கவனிக்காமல் விட்டு விடாதீர்கள்)
3.பேருந்து நிலையம், இரயில் நிலையம், பேருந்து நிறுத்தம் என எங்கு நின்றாலும் ஏதேனும் ஒரு குடும்பம் நிற்கும் பக்கமோ இல்லை பெண்கள் கூட்டமாக நிற்கும் பக்கமோ நில்லுங்கள். தனியே நிற்காதீர்கள்.
4.இரவில் வீதியில் தனியாக நடக்க வேண்டி வந்தால், அச்சத்தோடு தலையை குனிந்தபடி நடக்காதீர்கள். நிமிர்ந்து எல்லா பக்கமும் நோட்டம் விட்ட படி நடங்கள்.அதற்காக திரு திருவென முழிக்க கூடாது.பயம் வந்தால் மீண்டும் தொலைபேசியில் துணைத் தேடிக் கொள்ளுங்கள்.தொலைபேசியை பையில் வைத்து விட்டு ஹெட் போனில் பேசுங்கள்.
5.கேலி கிண்டல் செய்யும் ஆண்களை எப்போதும் கண்டு கொள்ளாதீர்கள். முறைக்காதீர்கள்.நீங்கள் ஆகாயத்தில் நடப்பது போலவும் உங்கள் காதில் எதுவுமே விழாதது போலவும் நினைத்துக் கொண்டு நடையைக்கட்டுங்கள்.
6.கண்ட இடத்தில் எல்லாம் மொபைல் ரீ சார்ஜ் செய்யாதீர்கள். எவரையும் எளிதில் நம்பி மொபைல் நம்பர் கொடுக்காதீர்கள்.காதலனே அழைத்தாலும் தேவையற்ற நேரங்களில் தேவையற்ற இடங்களுக்கு செல்லாதீர்கள்.
7.மற்ற பெண்கள் அப்படி இருக்கிறார்களே என்று எவரை பார்த்தும் எதையும் செய்யாதீர்கள்.
8.உங்கள் சுதந்திரத்திற்கான எல்லையை யாரும் சொல்லிதரக் கூடாது.நீங்களே உங்களுக்கு எல்லை இட்டுக் கொள்ளுங்கள்.
# தன் குடும்ப பொருளாதாரத்தை உயர்த்த வேண்டும் என்ற நல்ல நோக்கில் தான் வளர்ந்த ஊரை விட்டு ஏதோ ஒரு நகரத்தில், பெண்கள் விடுதியில் தன் வாழ்க்கையை கழித்துக் கொண்டிருக்கும் பெண்களுக்காக சொல்கிறேன். உங்களுக்கு உங்களை விட பெரிய பாதுகாப்பு யாருமில்லை என்று நினைத்துக் கொள்ளுங்கள்.
-ஆதிரா.
ரிலாக்ஸ் ப்ளீஸ் ஆங்கிலத்திலும் @[297395707031915:274:Relaxplzz]](https://fbcdn-sphotos-e-a.akamaihd.net/hphotos-ak-ash3/s403x403/1233574_606602446056755_1851665286_n.jpg)


