பேஸ்புக்கில் மிகப்பெரிய தொல்லை என்றால் அது இந்த Photo Tag தான். பேஸ்புக்கால் வரும் நோட்டிஃபிகேஷன்களில் பெரும்பங்கை இந்த Photo Tags பிடித்துக்கொள்ளும். இதனால் பேஸ்புக்கை திறந்தாலே எரிச்சல்தான் வரும். Tag பண்ணுவது நண்பர்கள் ஆகையால் நேராக போய் “என்னை Tag பண்ணாதே” என்று சொல்லவும் பலர் தயங்குவார்கள். சாதாரண நாட்களை விட ஏதாவது விஷேட தினங்களில் பெருந்தொகையான நோடிஃபிகேஷன்கள் வந்து மெயில் இன்பாக்ஸை நிரப்பிவிடும்.
இவற்றிலிருந்து தப்புவதற்கு ஒரே வழி, Photo Tag ஐ OFF செய்துவிடுவதுதான். பேஸ்புக்கில் Photo Tag செட்டிங்கை மாற்றுவதன்மூலம் நீங்கள் அனுமதியளித்த பின்னரே ஒருவர் உங்களை Tag பண்ணும்படி செய்யலாம்.
இதை எப்படி செய்வது
உங்கள் பேஸ்புக் கணக்கில் நுழைந்துகொள்ளுங்கள். அதில் Privacy Settings செல்லுங்கள்
அங்கு Timeline and Tagging என்பதற்கு அருகில் உள்ள Edit Setting என்பதை கிளிக் பண்ணுங்கள்
கிளிக் பண்ணியதும் புதிய பாப் அப் விண்டோ ஒன்று வரும். அதில் Review posts friends tag you in before they appear on your timeline என்பதை On செய்யுங்கள்.
On பண்ணியதும் புதிய பாப் அப் விண்டோ தோன்றும். அதில் Review Control ஐ Enable செய்துவிட்டால் சரி,
இப்போது செட்டிங்ஸ் முழுமையடைந்துள்ளது. இதன் பின்னர் உங்களை யாராவது Tag பண்ணினால் அவை உங்கள் அனுமதிக்காக காத்திருக்கும். நீங்கள் அனுமதி அளித்த பின்னரே உங்களை Tag செய்யும். அனுமதிக்காக காத்திருக்கும் Tags ஐ உங்கள் ப்ரோபைலில் Activity Log என்ற பகுதியில் காணலாம்.
இந்த பதிவு உங்களுக்கு பிரயோசனமாக இருந்தால் உங்கள் நண்பர்களிடமும் பகிர்ந்துகொள்ளுங்கள்.
Thanks from FB தமிழ் -கருத்துக்களம்-