மைக்ரோவேவ் அடுப்பு நல்லதா? கெட்டதா ?

மணக்கால் அய்யம்பேட்டை | 4:51 PM | Best Blogger Tips

ஓர் அலசல் ரிப்போர்ட் !!!

'மைக்ரோவேவ் அடுப்பு’ (நுண்ணலை அடுப்பு) மூலம் சமைத்தால் உணவில் இருக்கும் சத்துக்கள் போய்விடுமா?’ - இந்தச் சந்தேகம் பலருக்கும் இருக்கிறது. இன்னொருபுறம் மைக்ரோவேவ் அடுப்பில் சமைத்தால் பல பக்க விளைவுகள் ஏற்படும் என்ற அச்சமும் இருக்கிறது. இதில் எது உண்மை? எது புனைவு? சுகாதார மேம்பாட்டு அலுவலர் பூர்ணிமா, உணவியல் நிபுணர் கிருஷ்ணமூர்த்தி, மற...
்றும் புற்றுநோய் கதிரியக்க சிகிச்சை நிபுணர் கோ.ராஜா விளக்கம் கூறியுள்ளனர்

மைக்ரோவேவ் அடுப்பு எப்படிச் செயல்படுகிறது?
'மைக்ரோவேவ் அடுப்பில் உணவைச் சமைக்கும் போது, முதலில் அடுப்பினுள் மின்சார அலை உண்டாகும். அந்த அதிர்வினால் நீர், கொழுப்பு, சர்க்கரை ஆகியவற்றின் மூலக்கூறுகள் அதிர்வடைந்து ஒன்றுடன் ஒன்று உராய்ந்து வெப்பம் உண்டாகும். கண்ணாடி மற்றும் பீங்கான் பாத்திரங்களை இந்த அலை பாதிக்காது. மைக்ரோவேவ் அடுப்பில் சமைக்க அதற்குரிய பாத்திரங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்’ என்று பூர்ணிமா கூறினார்.

'மைக்ரோவேவ் அடுப்பில் சமைத்தால் சத்து இழப்பு ஏற்படுமா?’

இந்தக் கேள்விக்கு பதில் அளித்த டாக்டர் கோ.ராஜா, ''மைக்ரோவேவ் அடுப்புக்குள் இருக்கும் மேக்னெட்ரான் என்னும் கருவி அடுப்புக்குள் வைத்த உணவுப் பொருளைச் சூடேற்ற உதவுகின்றது. இதில் சமைக்கும் நேரமும் குறைவு, காய்கறிகளில் உள்ள சத்துக்கள் மறைந்து போகாது'' என்றார்.

இந்த சந்தேகம் குறித்து உணவியல் நிபுணர் கிருஷ்ணமூர்த்தியிடம் பேசியபோது,

''காய்கறிகளையும் ஒயிட் மீட் என்று சொல்லப்படும் மீன், கோழி ஆகியவற்றையும் மைக்ரோவேவ் அடுப்பில் சமைப்பதால் சத்துக்களில் பெரிய இழப்பு எதுவும் ஏற்படுவதில்லை. ரெட் மீட் எனப்படும் ஆட்டு இறைச்சி மற்றும் மாட்டு இறைச்சி போன்றவற்றில் நிறைய எண்ணெய் விட்டு மசாலாக்கள் சேர்த்துச் சமைத்தால் சாப்பிட ருசியாக இருக்குமே தவிர ஆரோக்கியமானதாக இருக்காது.'' என்றார். மற்ற சமையலுக்கும் மைக்ரோவேவ் சமையலுக்குமான வித்தியாசத்தையும் அவர் விளக்கினார்.

''மைக்ரோவேவ் அடுப்பில் பாலைச் சுடவைத்தால் அதிலுள்ள லைசோஸைம் சிதையும். சாதாரண அடுப்புச் சமையலின்போது பாத்திரத்தில் காய்கறிகளை அதிக நேரம் அடுப்பில் வைத்துவிட்டால் அது கருகியும் தீய்ந்தும் போய்விடும். அவற்றையே குக்கரில் வேக வைக்கும்போது காய்கறிகளின் ருசி குறைந்துவிடும் சாத்தியம் அதிகம். ஆனால் மைக்ரோவேவ் அடுப்பில் சரியான சூட்டில் முறையாகத் தயாரிக்கப்பட்ட உணவுகளின் சத்துக்கள் அப்படியே இருக்கும். காய்கறிகளின் நிறமும் மாறாது'' என்றார்.

மைக்ரோவேவ் அடுப்பை எப்படிப் பயன்படுத்த வேண்டும்?

சாதாரணமாக மைக்ரோவேவ் அடுப்பில் காய்கறிகளைச் சமைத்து முடித்ததும் ஸ்விட்சை அணைத்துவிட, அதன் இயக்கம் முழுவதும் நின்றுவிடும். ஸ்விட்ச் அணைக்கப்பட்ட நொடியில் மின் அலைகள் மறைந்து போவதால் அடுப்புக்குள் கதிர்வீச்சு எதுவும் இருக்காது. சமைத்த உணவிலும் எவ்விதக் கதிர்வீச்சின் தாக்கமும் இருக்காது. ஆனால், இதுவே அடுப்பில் கசிவு இருந்து அது தெரியாமல் சமைத்தால் நிச்சயம் பிரச்னை ஏற்படும். எனவே தரமான நிறுவனங்கள் தயாரிக்கும் அடுப்புகளையே பயன்படுத்தவேண்டும்.

மைக்ரோவேவ் அடுப்பில் சமைக்கும் போது அதன் கதவை நன்றாக மூடி லாக்கான பிறகே சமைக்க வேண்டும். சரியாக மூடாவிட்டால் கசிவு ஏற்பட்டுத் தீக்காயம் ஏற்படும். அடுப்பில் எதாவது பிரச்னை என்றால், உடனடியாகப் சர்வீஸுக்கு கொடுக்க வேண்டும்.

மைக்ரோவேவ் அடுப்பை வாங்கும்போது தரப்பட்ட கையேட்டை நன்றாகப் படித்த பின்னரே அதில் சமைக்க ஆரம்பிக்க வேண்டும். மைக்ரோவேவ் அடுப்பில் கோளாறு ஏற்பட்டால் அதை நாமே பழுது பார்க்க முயற்சி செய்யக் கூடாது.

'மைக்ரோவேவ் அடுப்பில் சமைத்தால் புற்றுநோய் ஏற்படும்’ என்று ஒரு பிரிவினருக்கு அச்சம் இருந்தாலும் இது குறித்து எந்த ஆராய்ச்சி முடிவும் இதுவரை வெளிவரவில்லை.

மைக்ரோவேவ் அடுப்பில் செய்யக் கூடாதவை:

மைக்ரோவேவ் அடுப்பில் உணவு சமைக்கும் போது அடிக்கடி திறந்து மூடக்கூடாது.குறுகிய வாயுள்ள பாத்திரத்தைப் பயன்படுத்தக் கூடாது
முட்டையை ஓட்டுடன் வைக்கக்கூடாது.
வறுவல் செய்யும்போது உப்பு போடக்கூடாது, ஏனெனில் அப்படிச் சமைத்தால் உப்பு தீய்ந்து அதிலிருக்கும் ஐயோடின் சிதைந்து போய்விடும். எனவே, வறுத்த பின்பு உப்பு சேர்க்க வேண்டும்.
பிளாஸ்டிக் மற்றும் காகிதப் பொருட்களைப் பயன்படுத்தக் கூடாது. பயன்படுத்தினால் அவை உருகி, எரிந்து போய்விடும்

தண்ணீரைச் சுட வைக்க மைக்ரோவேவ் அடுப்பைப் பயன்படுத்தக் கூடாது. ஏனெனில் இதன் நுண் கதிர்களால் தண்ணீரின் மூலக்கூறுகள் அசைக்கப்பட்டுத்தான் தண்ணீர் சூடாகும். அதனால் நீராவி வெளியேறாது. தண்ணீர் அதன் கொதி நிலையான 100 டிகிரி செல்ஸியஸ் அளவையும் தாண்டி சூடாகும். ஆனால், தண்ணீர் கொதிப்பில் சலனம் எதுவும் இருக்காது. இது தெரியாமல் அடுப்பை அணைத்ததும் உள்ளிருந்து நீரை அஜாக்கிரதையாக எடுத்தால் தப்பித் தவறி தண்ணீர் உடம்பில் பட்டுத் தீக்காயம் ஏற்படும்.

நன்றி
பரமக்குடி சுமதி
See More

துளசி (Ocimum sanctum)

மணக்கால் அய்யம்பேட்டை | 4:49 PM | Best Blogger Tips
துளசி (Ocimum sanctum) 
மூலிகைகளின் அரசியாக போற்றப் படுகிறது. துளசியை அறியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. பலரது வீடுகளின் கொல்லைப் புறத்தில், துளசிமாடம் அமைந்துள்ளதை இன்றுகூட நாம் காணலாம்.

துளசியானது இடியைத் தாங்கும் சக்தி கொண்டது என அறிவியல் அறிஞர்கள் அண்மையில் கண்டறிந்துள்ளனர். இதனால் தானோ என்னவோ வீடுகளில் துளசி வளர்த்திருப்பார்கள் என தோன்றுகிறது.
...

துளசியின் மணம் உடலுக்கு உற்சாகத்தைக் கொடுக்கக் கூடியது.

இதற்கு அரி, இராமதுளசி, கிருஷ்ண துளசி, திருத்துளாய், துளவு, குல்லை, வனம், விருத்தம், துழாய், மாலலங்கர் என பல பெயர்கள் உண்டு.

துளசி இந்தியா முழுவதும் காணப்படும் செடி வகையாகும். இதில் நற்றுளசி, செந்துளசி, நாய்த்துளசி, நிலத்துளசி, கல்துளசி, முள்துளசி, கருந்துளசி என பல வகைகள் உள்ளன.

துளசியை பொதுவாக தெய்வீக மூலிகை என்றே அழைப்பார்கள். கற்ப மூலிகைகளில் இதற்கு தனிச்சிறப்பு உண்டு. இந்து மதத்தினர், இலட்சுமி தேவியின் அம்சமாகவே எண்ணி இதனை வழிபடுகின்றனர்.

துளசியின் பயன்கள்

· இருதயம், ரத்த நாளங்கள், கல்லீரல், நுரையீரல் ஆகியவற்றை பலப்படுத்தும் தன்மையும் ரத்த ஓட்டத்தை சீராக்கும் தன்மையும், ரத்தத்தில் சர்க்கரையின் அளவை சீர்படுத்தும் தன்மையையும் கொண்டது.

· துளசி உடல் சூட்டை சீரான நிலையில் பாதுகாக்கிறது.

· நோய் எதிர்ப்புத் தன்மையை அதிகரிக்கிறது.

· மன அழுத்தத்தைப் போக்கும்தன்மை கொண்டது.

· உடலுக்கு பலத்தைக் கொடுக்கிறது.

· இருமல் மற்றும் சுவாச நோய்களுக்கு அரு மருந்தாக பயன்படுகிறது.

· கொழுப்பைக் குறைக்கும் தன்மை கொண்டது.

· ஜூரத்தைக் குறைக்கும் குணம் கொண்டது.

· வயிற்றுப் புண், வாய்ப்புண்களை குணப் படுத்தும்.

துளசியை கற்ப முறைப்படி தினமும் சாப்பிட்டு வந்தால் நோயில்லா பெருவாழ்வு வாழலாம்.

குழந்தைகளுக்கான மார்புச்சளி நீங்க

துளசி இலையை சாறு எடுத்து அதனுடன் கற்பூரவல்லி சாறு கலந்து சூடாக்கி தினமும் காலையில் வெறும் வயிற்றில் குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால், குழந்தைகளுக்கு உண்டாகும் மார்புச்சளி, மூச்சு விட முடியாமை, சளியினால் மூச்சுத்திணறல் போன்றவை நீங்கும். மார்புச்சளி வெளியேறும்.

துளசிச் சாறுடன் எலுமிச்சை சாறு சம அளவு சேர்த்து அதனுடன் தேன் கலந்து தொடர்ந்து 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் நரம்புத் தளர்வு நீங்கி உடல் புத்துணர்வடையும்.

பெண்களுக்கு

துளசியிலை, வில்வ இலை, வெற்றிலை சம அளவு எடுத்து இடித்து சாறு பிழிந்து அதனுடன் சம அளவு விளக்கெண்ணெய் சேர்த்து நன்கு காய்ச்சி ஆறியபின் பத்திரப்படுத்தி வைத்துக்கொண்டு, தினமும் காலையில் 1 தேக்கரண்டி எடுத்து அருந்தி வரவேண்டும். இவ்வாறு தொடர்ந்து ஒரு மண்டலம் (48 நாட்கள்) அருந்தி வந்தால் பெண்களுக்கு உண்டாகும் பெரும்பாடு (இரத்தப் போக்கு) குணமாகும்.

ரத்த அழுத்தம் குறைய

இரத்த அழுத்தம் உள்ளவர்கள் துளசி இலை, முற்றிய முருங்கை இலை சம அளவு எடுத்து இடித்து 50 மி.லி அளவு சாறில் 2 சிட்டிகை சீரகப்பொடி சேர்த்து காலை, மாலை என இருவேளை உட்கொள்ள வேண்டும். இவ்வாறு தொடர்ந்து 1 மண்டலம் அருந்தி வந்தால் இரத்த அழுத்தம் குறையும். இது சாப்பிடும் காலங்களில், உப்பு, காரம், புளியைக் குறைப்பது அவசியம்.

உடல் எடை குறைய

துளசி இலைச்சாறுடன் எலுமிச்சம் பழம் சேர்த்து சிறிது சூடாக்கி அதனுடன் தேன் கலந்து, உணவுக்குப்பின் உட்கொண்டால் உடல் எடை குறையும்.

குப்பைமேனி இலையையும், துளசி இலையையும் சம அளவு எடுத்து நிழலில் உலர்த்தி, தூள் செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.

இந்த சூரணத்தை தினமும் இருவேளை, வேளைக்கு இரண்டு சிட்டிகை என எடுத்து நெய்யில் குழைத்து தொடர்ந்து உட்கொண்டால் மூலச்சூட்டினால் ஏற்படும் கருப்பு நிறம் மாறும்.

அம்மான் பச்சரிசியுடன், துளசி இலை சம அளவு எடுத்து நன்கு அரைத்து பரு உள்ள இடத்தில் தடவி வந்தால் முகப்பரு மறையும்.

துளசி இலை – 9 எண்ணிக்கை

கடுக்காய் தோல் – 5 கிராம்

கீழாநெல்லி – 10 கிராம்

ஓமம் -5 கிராம்

மிளகு – 3

எடுத்து மைபோல் அரைத்து மோரில் கலந்து தினமும் மூன்று வேளை கொடுத்துவந்தால், சாம்பல், மண் தின்னும் குழந்தைகள் எளிதில் அவற்றை ஒதுக்கும்.

தொண்டைக்கம்மல், வலி நீங்க

தினமும் துளசியிலையை காலையில் வெறும் வயிற்றில் பச்சையாக மென்று சாறு இறக்கினால், சளி, தொண்டைக்கட்டு நீங்கும். உடலில் உள்ள நச்சுத்தன்மையும் நீக்கும்.

10 துளசியிலை எடுத்து அதனுடன் 5 மிளகு சேர்த்து நசுக்கி 2 டம்ளர் நீர்விட்டு அரை டம்ளராக சுண்டக் காய்ச்சி கஷாயம் செய்து சூடாக அருந்தி, பிறகு சிறிது எலுமிச்சை சாறு அருந்திவிட்டு நல்ல கம்பளி கொண்டு உடல் முழுவதும் போர்த்தி விட்டால் மலேரியா காய்ச்சல் படிப்படியாக குறையும்.

சிறுநீரகக் கல் நீங்க

துளசி இலையை ஒரு செப்புப் பாத்திரத்தில் நீர்விட்டு இரவு முழுவதும் ஊறவைக்க வேண்டும். மறுநாள் காலையில் வெறும் வயிற்றில் அந்த நீரை எடுத்து இலையோடு சேர்த்து அருந்தி வந்தால் சிறுநீரகக் கல் படிப்படியாக கரையும். இவ்வாறு ஒரு மண்டலம் அருந்துவது நல்லது. இதனால் ரத்தத்தில் உள்ள தேவையற்ற வேதிப் பொருட்கள், விஷநீர்கள் சிறுநீர் வழியாக வெளியேறி ரத்தத்தை சுத்தமாக்கும்.

சிறு சிறு பூச்சிக் கடிகளின் விஷம் நீங்க

கண்ணுக்குத் தெரியாத சிறு சிறு பூச்சிக் கடிகளால் சிலருக்கு உடலில் அலர்ஜி உண்டாகி சருமம் பாதிக்கப்படும். அல்லது வேறு வகைகளில் பாதிப்பு ஏற்படும். இந்த பூச்சிகளின் விஷத்தன்மை நீங்க துளசி இலையை சாறு எடுத்து அதனுடன் சம அளவு தும்பைச் சாறு கலந்து ஒரு வாரம் அருந்தி வந்தால் விஷம் எளிதில் இறங்கும்.

வாய்ப்புண் , வாய் நாற்றம் நீங்க

வயிற்றில் புண்கள் இருந்தால் வாயிலும் புண்கள் உண்டாகும். இதனால் வாய் நாற்றம் வீசும். வாய்ப்புண் ஆற துளசி இலையை பறித்து நீர்விட்டு அலசி, வாயில் வைத்து மென்று மெல்ல மெல்ல சாறினை உள்ளிறக்கினால், வாய்ப்புண் வயிற்றுப்புண் ஆறும். வாய் நாற்றமும் நீங்கும்.

மன அழுத்தம் நீங்க

மன அழுத்தத்தைப் போக்கும் குணம் துளசிக்கு உண்டு. துளசி இலையை நன்கு மைபோல் அரைத்து அதனுடன் வில்வ இலை சாறு சேர்த்து லேசாக சூடாக்கி அருந்தினால் மன அழுத்தம் நீங்கும்.

பற்கள் சம்பந்தப்பட்ட நோய்கள் தீர

துளசி இலை, புதினா இரண்டையும் சம அளவு எடுத்து நிழலில் உலர்த்தி பொடி செய்து அதனுடன் கிராம்புப் பொடி சேர்த்து தினமும் பல் துலக்கி வந்தால், பற்களின் சொத்தை, பல் ஈறு வீக்கம் மேலும் பற்கள் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களும் தீரும்.

தலைவலி தீர

ஒரு கைப்பிடி துளசி இலை மூன்று மிளகு, 1 துண்டு இஞ்சி எடுத்து நன்கு அரைத்து நெற்றியில் பற்று போட்டால் தலைவலி நீங்கும்.

கண்நோய்கள் தீர

துளசி இலை ஊறிய நீரை 1 மண்டலம் அருந்தி வந்தால் முக்குற்றங்களில் ஒன்றான பித்த அதிகரிப்பு குறையும். இதனால் கண் நரம்புகளின் சூடு குறைந்து நரம்புகள் பலப்படும். கண் சம்பந்தப்பட்ட நோய்கள் அணுகாது.

சரும நோய்கள் நீங்க

தேமல், படை உள்ள இடங்களில் துளசியும் உப்பும் சேர்த்து அரைத்து பூசி வந்தால் சரும நோய்கள் நீங்கும்.

துளசி இலைக்கு உள்ளத்தைத் தூய்மையாக்கும் குணமும் உண்டு.

தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்பட்டமைக்கான காரணங்கள்.

மணக்கால் அய்யம்பேட்டை | 4:46 PM | Best Blogger Tips

செம்மொழிக்குரிய அனைத்து 11 தகுதிகளையும் தன்னகத்தே கொண்ட மொழி தமிழ் மொழி
ஒன்றே.தொன்மை,முன்மை, நுண்மை, திண்மை, எண்மை, ஒண்மை, இனிமை,
தனிமை, இளமை, வளமை, தாய்மை, தூய்மை, மும்மை, செம்மை, இயன்மை, வியன்மை ‍என
...
பதினாறு செவ்வியல் தன்மைகளைக் கொண்டது நம் தமிழ்மொழி ஒன்றே!

1)தொன்மை (Antiquity)
2)தனித்தன்மை (Individuality)
3)பொதுமைப் பண்பு (Common Characters)
4)நடுவு நிலைமை (Neutrality)
5)தாய்மைத் தன்மை (Parental Kinship)
6)பண்பாடு,கலை,பட்டறிவு வெளிப்பாடு (Finding expression in the culture,art and life experience of the civilized society)
7)பிறமொழிக் கலப்பில்லாத தனித்தன்மை.(Ability to function independently without any impact or influence of any other language and literature)
8)இலக்கிய வளம் (Literary Powers)
9)உயர்சிந்தனை (Noble Ideas and Ideals)
10)கலை,இலக்கியத் தன்மை வெளிப்பாடு (Originality in artistic and literary expressions)
11)மொழிக் கோட்பாடு (Linguistic Principles)

L

இன்டர்நெட் பாங்கிங், போன் பாங்கிங் செய்பவரா நீங்கள்? அப்போ இதைப் படிங்க !! உபயோகமான தகவல்கள் !!

மணக்கால் அய்யம்பேட்டை | 4:42 PM | Best Blogger Tips

இன்டர்நெட் பாங்கிங், போன் பாங்கிங் செய்பவர்கள் தங்கள் வங்கிக் கணக்கை எப்படி பத்திரமாக பாதுகாப்பது என்பதை தெரிந்திருக்க வேண்டும்.

வங்கிகளில் கணக்கு வைத்திருப்போருக்கு அதை எப்படி பத்திரமாக வைப்பது என்பதும் தெரிந்திருக்க வேண்டும். இன்றைய நவீன உலகில் பணம் எடுக்க, வேறு கணக்கிற்கு அனுப்ப வங்கிக்கு போக பலருக்கு நேரமில்லை. அதனால் அருகில் உள்ள ஏடிஎம் மையங்களில் பணம் எடுக்கிறார்கள், இன்டர்நெட் பாங்கிங் மூலம் பண பரிவர்த்தனை செய்கிறார்கள். தற்போது பலர் போன் பாங்கிங் செய்கின்றனர். அதாவது இன்டர்நெட் வசிதியுள்ள செல்போனில் பண பரிவர்த்தனை செய்கின்றனர்.
...

இன்டர்நெட் பாங்கிங் , போன் பாங்கிங் செய்பவரா நீங்கள். அப்படி என்றால் உங்கள் வங்கிக் கணக்கை எப்படி பாதுகாப்பது என்று பார்ப்போம்.

1. யாராவது உங்களுக்கு போன் செய்து நாங்கள் வங்கியில் இருந்து அழைக்கிறோம் என்று கூறினால் உடனே அவர்கள் கேட்கும் தகவலைக் கொடுத்து விடாதீர்கள். மாறாக நீங்களே வங்கிக்கு போன் செய்யுங்கள்

2. ஒன்றுக்கும் மேற்பட்ட ஏ.டி.எம். கார்டு வைத்திருந்தால் அனைத்திற்கும் ஒரே பின் நம்பரை வைக்காதீர்கள்.

3. உங்கள் வங்கிக் கணக்கு பாஸ்வேர்டை கம்ப்யூட்டரில் சேவ் பண்ண வேண்டாம்.

4. போன் பாங்கிங் செய்பவர்கள் போனுக்கு செக்யூரிட்டி லாக் போடுங்கள்.

5. வங்கியைத் தொடர்பு கொண்டு நீங்கள் பேசும்போது அதை பிறர் கேட்காதவாறு பார்த்துக் கொள்ளுங்கள்.

6. தேதி அல்லது எண்களை பின் நம்பராக வைக்க வேண்டாம்.

7. இன்டர்நெட் சென்டருக்கு சென்று ஆன்லைனில் பண பரிவர்த்தனை செய்தால் அதை யாராவது பார்க்கிறார்களா என்று கவனிக்கவும். பரிவர்த்தனை முடிந்த பிறகு வங்கிக் கணக்கை லாக் அவுட் செய்ய மறக்க வேண்டாம்.

நன்றி

பெரோஸ்

வேப்பம்பூ பற்றிய தகவல்.

மணக்கால் அய்யம்பேட்டை | 4:34 PM | Best Blogger Tips
இந்த உலகில் எத்தனையோ வகையான மரங்களும், செடி கொடிகளும் இருந்தாலும்... அவை எல்லாம் வேப்பமரத்துக்கு ஈடாகாது. வேப்பமரத்திலிருந்து கிடைக்கும் வேப்பிலை, வேப்பம்பூ, வேப்பங்கொட்டை, வேப்ப எண்ணை, வேப்பம்பட்டை என அனைத்தும் நமக்கு உணவாக... மருத்துவப் பொருட்களாக பயன்படுகின்றன.

...
பொதுவாகவே, தமிழ் மருத்துவத்தில் தட்பவெப்ப நிலைக்கு ஏற்ப, அந்தந்த சூழலுக்கு ஏற்ப... உணவுப் பழக்க வழக்கமும் மாறும். தட்ப வெப்பநிலைக்கு அந்தந்த பருவத்தில் கிடைக்கும் உணவுகளையே நாம் சாப்பிட வேண்டும். கோடை காலம் ஆரம்பிக்கும் இந்த சித்திரை மாதத்தில் வேப்பம்பூ பூத்து... காற்றில் ஒருவித நறுமணத்தை பரப்பிக் கொண்டிருக்கும். கிருமி நாசினியான வேப்பம்பூவில் பல மருத்துவ குணங்கள் பொதிந்துள்ளன.

வெயில் காலத்தில் ஏற்படும் நாவறட்சி, தோல் வியாதி, அரிப்பு, வயிற்றுப்பிரட்டல் போன்ற பிரச்சினைகளுக்கு வேப்பம்பூ சிறந்த மருந்தாகின்றது. கபம், பித்தம் சம்பந்தப்பட்ட வியாதிகளை வேப்பம்பூ கட்டுப்படுத்தும்.

குடலில் தங்கியுள்ள கிருமிகளை அழிக்கும் ஆற்றல் வேப்பம்பூவுக்கு உண்டு. பாங்காக்கில் உள்ள தேசிய புற்று நோய் ஆராய்ச்சி நிறுவனம், `புற்று நோயை உருவாக்கக்கூடிய செல்களை வேப்பம்பூ அழிக்கும் தன்மை வாய்ந்தது' எனக் கண்டறிந்து நிரூபித்துள்ளனர். `அரோமா தெரபி' எனப்படும் சிகிச்சையில் மன அமைதியையும், சாந்தமான மனநிலையை உண்டாக்க வேப்பம்பூவை பயன்படுத்துகின்றனர்.

கோடை காலத்தில் அதிகமாக கிடைக்கும் வேப்பம்பூவை சேகரித்து, நிழலில் உலர்த்தி வைத்து, அதை சில வாரங்கள் பயன்படுத்தலாம். பழங்காலத்தில் வேப்பம்பூ பச்சடி சமைத்து சாப்பிட்டனர். இப்போதும் சித்திரை மாதத்தில் கிராமங்களில் வேப்பம்பூ பச்சடி சாப்பிடுகின்றனர். நீங்களும் தயாரித்து சாப்பிடுங்கள்.
See More
Like here first -->> @[433124750055265:274:இன்று ஒரு தகவல். Today A Message.]
இன்று வேப்பம்பூ பற்றிய தகவல்.

மாத்தூர் தொட்டிப் பாலம்:

மணக்கால் அய்யம்பேட்டை | 11:21 AM | Best Blogger Tips
மாத்தூர் தொட்டிப் பாலம் தமிழ்நாட்டில் கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ள ஆசியாவிலேயே மிகப்பெரிய தொட்டிப் பாலமாகும். இது மலைப்பாங்கான காடுகளாக இருந்த மாத்தூர் பகுதியில் உள்ள கணியான் பாறை என்ற மலையையும், கூட்டுவாயுப்பாறை என்ற மலையையும் இணைத்து பறளியாற்றுத் தண்ணீரைக் கொண்டு செல்வதற்காக இரண்டு மலைகளுக்கும் நடுவில் கட்டப்பட்டுள்ளது.

மாத்தூர் என்னும் கிராமம் திருவட்டாற்றிலிருந்து மூன்று கிலோமீட்டர் தொலையிலும், இந்தியாவின் தென்முனையாகிய [[கன்னியாகுமரி|கன்னியாகுமரியிலிருந்து 60 கி.மீ. தொலையிலும் உள்ளது.

இவ்வூர் குழித்துறை இரயில் நிலையத்திலிருந்து 15 கி.மீ. தொலையிலும், திருவனந்தபுரம் வானூர்தி நிலையத்திலிருந்து 70 கி.மீ. தொலையிலும் அமைந்திருக்கிறது.

பாலத்தின் சிறப்பியல்புகள்:

இரண்டு மலைகளை இணைக்கும் இந்தப் பாலம் நீளவாக்கில் 1204 அடியாகவும், தரைமட்டத்திலுருந்து 104 அடி உயரத்திலும் பிரம்மாண்டமாக கட்டப்பட்டு உள்ளது. இந்த பாலத்தைத் தாங்கி நிற்கும் ஒவ்வொரு தூணின் சுற்றளவும் 32 அடியாகும். இவ்வாறு மொத்தம் 28 தூண்கள் உள்ளன. பெரிய பெரிய தொட்டிகளாக தொகுக்கப்பட்டு தண்ணீர் செல்லும் பகுதிகள் ஏழு அடி அகலமாகவும், ஏழு அடி உயரமும் உயரமாகவும் காணப்படுகிறது.

பெயர் காரணம்:

தொட்டி வடிவில் கட்டப்பட்டிருப்பதால் தொட்டிப்பாலம் எனவும் இரு மலைகளுக்கு நடுவே தொட்டில் போன்ற அமைப்பில் இருப்பதால் தொட்டில்பாலம் எனவும் அழைக்கப்படுகிறது. இப்பாலத்தின் நடுப்பகுதிக்கு சென்று கீழே பார்த்தால் ஆற்று நீரும் அதனைக் கடக்க ஒரு சாலையும் அழகாகக் காட்சியளிக்கிறது. அணையிலிருந்து வரும் நீர் முதலில் மாத்தூர் பாலத்திற்கும் அதன்பின் செங்கோடி மற்றும் வடக்குநாட்டுப் பாலங்கள் வழியாக தேங்காய்ப்பட்டணம் கிராமத்திற்கும் செல்கின்றது.
மாத்தூர் தொட்டிப் பாலம் வழியாகக் கொண்டுசெல்லப்படும் நீர் கன்னியாகுமரி மாவட்டத்தின் கல்குளம், விளவங்கோடு ஆகிய இரு வட்டங்களில் உள்ள ஊர்களின் நீர்ப்பாசனத்திற்குப் பயன்படுகிறது.

அமைவிடம்:

1962 ம் ஆண்டு தமிழ்நாடு முதல்வராக இருந்த காமராஜரால் தொடங்கப்பட்ட இப்பாலம் 1969ல் முழுமையாக கட்டப்பட்டு நிறைவுபெற்றது இந்தப்பாலம் நாகர்கோவிலில் இருந்து 45 கட்டை (கி.மீ.) தூரத்திலும் திருவட்டாறிலிருந்து 3 கட்டை தூரத்திலும் அமைந்துள்ளது. நாகர்கோவிலில் இருந்து பேருந்து மூலம் இங்கு செல்லலாம்.

நன்றி: விக்கிபீடியா

உடலுக்கு சக்தியை தரவல்ல நெல்லிக்காய்

மணக்கால் அய்யம்பேட்டை | 11:20 AM | Best Blogger Tips
நீண்டகாலம் வாழ்ந்து, அவ்வையார் தமிழுக்கு தொண்டு செய்ய வேண்டும் என்ற நோக்கில், தனக்கு கிடைத்த அரிய வகை நெல்லிக்கனியை, அவ்வையாருக்கு மன்னர் அதியமான் கொடுத்ததாக வரலாறு உண்டு. இவ்வளவு சிறப்பும், பயனும் உள்ள நெல்லிக்காயில் ஏராளமான சத்துக்கள் உள்ளன. வைட்டமின் – சி அதிகம் உள்ள இந்த நெல்லிகாய் உடலுக்கு எனர்ஜியை தரக்கூடியது.

நோய் எதிர்ப்பு சக்தி உடையது. சர்க்கரை நோயாளிகள் நெல்லிக்கனியை தொடர்ந்து சாப்பிடலாம். கால்சியம், இரும்பு சத்துள்ள இந்த நெல்லிகாய் தலைமுடியை பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. தலைமுடி வேர்கள் வலுவாக இருக்க உதவுகிறது. முடி உதிர்வதை தடுக்கிறது. இதயம் தொடர்பான நோய்கள் வராமல் தடுக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தி உடைய இந்த நெல்லிக்காய் பார்வை குறைபாடு ஏற்படாமல் கண்களை பாதுகாக்கிறது. வயிற்றுபோக்கு ஏற்படாமல் தடுக்கிறது.

கர்ப்பிணிப் பெண்களும், காய்ச்சல் உள்ளவர்களும் நெல்லிக்காயை உண்ணக் கூடாது என்பார்கள். இது திரிதோஷ சமணி, வாத, பித்த, சிலேத்துமங்களை சமநிலையில் வைக்கக் கூடியது. இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு என்ற மூன்று சுவைகளும் முத்தோஷங்களை சமனப்படுத்தி, உடலைத் தேற்றுகிறது.

உடல் அசதி மற்றும் அஜிரணக் கோளாறுகளுக்கு இது கைகண்ட மருந்தாகும். அத்துடன் வாயுத் தொல்லைகளைப் போக்கக்கூடிய குணம் இதற்கு உண்டு. இரத்த உறைவினால் உண்டாகும் பல நோய்களைப் போக்கும் ஆற்றலும் முக்கியமாக பித்தத் தொடர்பான வியாதிகளுக்கு நெல்லிக்காய் லேகியம் தினசரி வெறும் வயிற்றில் உட்கொள்வதால் நல்ல பலன் பெறலாம்.

அடங்கியுள்ள சத்துக்கள்

புரதம் – 0.4 கி
கொழுப்பு – 0.5 கி
மாச்சத்து – 14 கி
கல்சியம் – 15 மி.கி
ஸ்பரஸ் – 21 மி.கி
இரும்பு – 1 மி.கி
நியாசின் – 0,4 மி.கி
வைட்டமின் ´பி1` – 28 மி.கி
வைட்டமின் ´சி` – 720 மி.கி
கலோரிகள் – 60

இதுபோன்ற பல்வேறு நன்மைகளை உடைய இந்த நெல்லிக்காய், முதுமையை தடுத்து நம்மை இளைமையாக வைத்திருக்க உதவுகிறது. ஏராளமான பயன்களை கொண்ட நெல்லிக்காய், தாராளமாக கிடைக்க கூடியது. எனவே, நீங்களும் நெல்லிக்காயை விரும்பி சாப்பிடலாமே.

கர்ப்பிணிகளுக்கு அன்னாசிப்பழம் நல்லதா? கெட்டதா?

மணக்கால் அய்யம்பேட்டை | 11:19 AM | Best Blogger Tips
பெண்கள் கர்ப்பமாக இருக்கும் போது உண்ணும் உணவுகளில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் சிறு தவறு ஏற்பட்டாலும், வயிற்றில் வளரும் குழந்தைக்கு பெரும் பாதிப்பு ஏற்படும். அவ்வாறு கர்ப்பிணிகள் உண்ணும் உணவில் சில நல்ல உணவுகள் மற்றும் சில கெட்ட உணவுகளும் உள்ளன. அதிலும் கர்ப்பமாக ஒரு பெண் இருந்தால், அவர்கள் வீட்டில் இருப்போர் பல ஆலோசனைகளைச் சொல்வார்கள். உதாரணமாக, கர்ப்பமாக இருக்கும் போது நட்ஸ் மற்றும் சிறு உடற்பயிற்சிகளை செய்ய வேண்டும் என்று சொல்வது.

அதுமட்டுமின்றி இந்த நேரத்தில் உண்ணும் உணவுகளில் உள்ள நல்லது மற்றும் கெட்டது பற்றியும் அதிகம் சொல்வார்கள். உதாரணமாக, கர்ப்பத்தின் போது பப்பாளியை சாப்பிடக் கூடாது. அவ்வாறு சாப்பிட்டால், கருச்சிதைவு ஏற்படும் என்றெல்லாம் சொல்வார்கள். எப்படி பப்பாளியை கர்ப்பிணிகள் சாப்பிட்டால், வயிற்றில் உள்ள சிசுவிற்கு பாதிப்பு ஏற்படுமோ, அதேப்போல் அன்னாசிப் பழத்தை சாப்பிட்டாலும், சிலர் பாதிப்பு ஏற்படும் என்று சொல்வார்கள். சரி, இப்போது அன்னாசியை சாப்பிடுவது நல்லதா கெட்டதா, இவற்
றில் எது உண்மை என்று பார்ப்போமா!!!

குறை பிரசவம்: கர்ப்பிணிகள் அனைவரும் சாப்பிடக்கூடாத பழங்களில், அன்னாசியும் ஒன்று. ஏனெனில் அவற்றை அதிக அளவில் சாப்பிட்டால், அதில் உள்ள புரோமிலியன் (Bromelian) கருப்பையை பலவீனமடையச் செய்துவிடும். அதுமட்டுமின்றி கருப்பை சுவர்களில் சுருக்கத்தை ஏற்படுத்தும். மேலும் இந்த பழத்தை அதிக அளவில் சாப்பிட்டால், வயிற்றுப்போக்கு ஏற்படும். நிறைய பெண்களுக்கு இதனை சாப்பிட்டதால், குறைப் பிரசவம் ஏற்பட்டுள்ளது. எனவே அதனை சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது.

கருச்சிதைவு: அன்னாசிப் பழத்தை கர்ப்பமாக இருக்கும் போது சாப்பிட்டால், கருச்சிதைவு ஏற்படும் வாய்ப்பு உள்ளது. ஏனெனில் இதில் உள்ள புரோமிலியன் (Bromelian) என்னும் நொதி, பப்பாளியில் உள்ள பப்பைன் (Papain) நொதிக்கு சமமானது. புரோமிலியன் கருப்பையின் சுவற்றை மிகவும் மென்மையாக்கிவிடுவதால், கருவை சுமக்க முடியாத நிலையை உண்டாக்கி, சிதைவை ஏற்படுத்துகிறது. அதிலும் அன்னாசியில் பச்சை மற்றும் கனியாமல் கெட்டியாக இருக்கும் பழத்தை சாப்பிடுவது மிகுந்த கெடுதலை ஏற்படுத்தும். ஆகவே இதனை ஒரு 10 மாதம் சாப்பிடாமல் கட்டுப்பாட்டுடன் இருப்பது மிகவும் நல்லது.

மற்ற பிரச்சனைகள்: பொதுவாகவே அளவுக்கு அதிகமாக அன்னாசிப் பழத்தை சாப்பிட்டாலே, வயிற்றுப்போக்கு மற்றும் நெஞ்சு எரிச்சல் போன்றவை ஏற்படும். ஏனெனில் அதில் உள்ள அமிலம் மிகவும் மோசமானது. ஆகவே இத்தகைய பழத்தை கர்ப்பிணிகள் சாப்பிட்டால், அவர்களுக்கு எவ்வளவு பிரச்சனையை உண்டாக்கும் என்பதை நினைத்துப் பாருங்கள்.

என்ன தான் இந்த பழத்தில் வைட்டமின் சி மற்றும் கர்ப்பமாக இருக்கும் போது உடலுக்கு அவசியமான, செரிமானத்தை சரியாக நடத்தும் நொதியைக் கொண்டாலும், இதை சாப்பிடுவதற்கு முன்பு மருத்துவரை அணுகுவது நல்லது. மேலும் இந்த பழத்தை சாப்பிட்டு, அந்த மாதிரியான பிரச்சனை எதுவும் ஏற்படாமல் இருக்கிறது என்று மற்றவர்களை சாப்பிட சொல்ல வேண்டாம். ஏனெனில் உங்கள் கர்ப்பப்பை வலுவுடன் இருக்கலாம். ஆனால் அவ்வாறே அனைவருக்கும் நடக்கும் என்று நினைப்பது தவறானது. எனவே பாதுகாப்பான பிரசவம் நடைபெற வேண்டுமெனில், இதனை சாப்பிடுவதை தவிர்ப்பதே நல்லது.
கர்ப்பிணிகளுக்கு அன்னாசிப்பழம் நல்லதா? கெட்டதா?

பெண்கள் கர்ப்பமாக இருக்கும் போது உண்ணும் உணவுகளில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் சிறு தவறு ஏற்பட்டாலும், வயிற்றில் வளரும் குழந்தைக்கு பெரும் பாதிப்பு ஏற்படும். அவ்வாறு கர்ப்பிணிகள் உண்ணும் உணவில் சில நல்ல உணவுகள் மற்றும் சில கெட்ட உணவுகளும் உள்ளன. அதிலும் கர்ப்பமாக ஒரு பெண் இருந்தால், அவர்கள் வீட்டில் இருப்போர் பல ஆலோசனைகளைச் சொல்வார்கள். உதாரணமாக, கர்ப்பமாக இருக்கும் போது நட்ஸ் மற்றும் சிறு உடற்பயிற்சிகளை செய்ய வேண்டும் என்று சொல்வது.

அதுமட்டுமின்றி இந்த நேரத்தில் உண்ணும் உணவுகளில் உள்ள நல்லது மற்றும் கெட்டது பற்றியும் அதிகம் சொல்வார்கள். உதாரணமாக, கர்ப்பத்தின் போது பப்பாளியை சாப்பிடக் கூடாது. அவ்வாறு சாப்பிட்டால், கருச்சிதைவு ஏற்படும் என்றெல்லாம் சொல்வார்கள். எப்படி பப்பாளியை கர்ப்பிணிகள் சாப்பிட்டால், வயிற்றில் உள்ள சிசுவிற்கு பாதிப்பு ஏற்படுமோ, அதேப்போல் அன்னாசிப் பழத்தை சாப்பிட்டாலும், சிலர் பாதிப்பு ஏற்படும் என்று சொல்வார்கள். சரி, இப்போது அன்னாசியை சாப்பிடுவது நல்லதா கெட்டதா, இவற்றில் எது உண்மை என்று பார்ப்போமா!!!

குறை பிரசவம்: கர்ப்பிணிகள் அனைவரும் சாப்பிடக்கூடாத பழங்களில், அன்னாசியும் ஒன்று. ஏனெனில் அவற்றை அதிக அளவில் சாப்பிட்டால், அதில் உள்ள புரோமிலியன் (Bromelian) கருப்பையை பலவீனமடையச் செய்துவிடும். அதுமட்டுமின்றி கருப்பை சுவர்களில் சுருக்கத்தை ஏற்படுத்தும். மேலும் இந்த பழத்தை அதிக அளவில் சாப்பிட்டால், வயிற்றுப்போக்கு ஏற்படும். நிறைய பெண்களுக்கு இதனை சாப்பிட்டதால், குறைப் பிரசவம் ஏற்பட்டுள்ளது. எனவே அதனை சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது.

கருச்சிதைவு: அன்னாசிப் பழத்தை கர்ப்பமாக இருக்கும் போது சாப்பிட்டால், கருச்சிதைவு ஏற்படும் வாய்ப்பு உள்ளது. ஏனெனில் இதில் உள்ள புரோமிலியன் (Bromelian) என்னும் நொதி, பப்பாளியில் உள்ள பப்பைன் (Papain) நொதிக்கு சமமானது. புரோமிலியன் கருப்பையின் சுவற்றை மிகவும் மென்மையாக்கிவிடுவதால், கருவை சுமக்க முடியாத நிலையை உண்டாக்கி, சிதைவை ஏற்படுத்துகிறது. அதிலும் அன்னாசியில் பச்சை மற்றும் கனியாமல் கெட்டியாக இருக்கும் பழத்தை சாப்பிடுவது மிகுந்த கெடுதலை ஏற்படுத்தும். ஆகவே இதனை ஒரு 10 மாதம் சாப்பிடாமல் கட்டுப்பாட்டுடன் இருப்பது மிகவும் நல்லது.

மற்ற பிரச்சனைகள்: பொதுவாகவே அளவுக்கு அதிகமாக அன்னாசிப் பழத்தை சாப்பிட்டாலே, வயிற்றுப்போக்கு மற்றும் நெஞ்சு எரிச்சல் போன்றவை ஏற்படும். ஏனெனில் அதில் உள்ள அமிலம் மிகவும் மோசமானது. ஆகவே இத்தகைய பழத்தை கர்ப்பிணிகள் சாப்பிட்டால், அவர்களுக்கு எவ்வளவு பிரச்சனையை உண்டாக்கும் என்பதை நினைத்துப் பாருங்கள்.

என்ன தான் இந்த பழத்தில் வைட்டமின் சி மற்றும் கர்ப்பமாக இருக்கும் போது உடலுக்கு அவசியமான, செரிமானத்தை சரியாக நடத்தும் நொதியைக் கொண்டாலும், இதை சாப்பிடுவதற்கு முன்பு மருத்துவரை அணுகுவது நல்லது. மேலும் இந்த பழத்தை சாப்பிட்டு, அந்த மாதிரியான பிரச்சனை எதுவும் ஏற்படாமல் இருக்கிறது என்று மற்றவர்களை சாப்பிட சொல்ல வேண்டாம். ஏனெனில் உங்கள் கர்ப்பப்பை வலுவுடன் இருக்கலாம். ஆனால் அவ்வாறே அனைவருக்கும் நடக்கும் என்று நினைப்பது தவறானது. எனவே பாதுகாப்பான பிரசவம் நடைபெற வேண்டுமெனில், இதனை சாப்பிடுவதை தவிர்ப்பதே நல்லது.

ஆச்சர்யத்தில் ஆழ்த்த உலகில் எத்தனையோ உண்மைகள் ....

மணக்கால் அய்யம்பேட்டை | 11:16 AM | Best Blogger Tips
சாதாரணமாக ஒருநிமிடத்திற்கு 20 முறை இமைக்கப்படும் கண்கள் கணிப்பொறியை பயன்படுத்தும்பொழுது வெறும் 7முறையே இமைக்கப்படுகின்றன.

ஒவ்வொரு மாதமும் ஒரு மில்லியனுக்கும் மேலான டொமைன்கள் புதிதாகப் பதிவுசெய்யப்படுகின்றன.

ஈபே என்ற நிறுவனம் ஒரு நொடிக்கு சுமார் ரூ.40,000 மதிப்புள்ள வர்த்தகம் செய்கிறது.

பேஸ்புக்கை உங்களுக்கு ஹேக் செய்யத்தெரியுமென்றால் அந்நிறுவனம் உங்களுக்கு ரூ.25,000 தரும்.

கூகுள், ஆப்பிள் மற்றும் மைக்ரோசாப்ட் ஆகிய நிறுவனங்களுக்கு இருக்கும் ஒற்றுமை என்னவெனில், இவையனைத்தும் முதலில் மிகச்சிறிய இடத்தில தொடங்கப்பட்டதே.

ஹெச்பி 1939ல் பலோ அல்டோவில் தொடங்கப்பட்டது.

யூட்டுயுப்.காம் (You Tube ) என்ற டொமைன் பதிவுசெய்யப்பட்டது 2005, பிப்ரவரி 14ல் தான்.

சாதாரணமாக ஒரு தட்டச்சாளரின் விரல்கள், ஒரு நாளுக்கு சுமார் 12.6 மைல்கள் பயணிக்கின்றன.

கடந்தவருடம் அமெரிக்காவில் திருமணம் செய்துகொண்ட தம்பதிகள் 8ல் ஒருபகுதியினர் இணையத்தினால் சந்திதுக்கொண்டவர்களே.

மைஸ்பேஸ் நிறுவத்தின் அறிக்கைப்படி இதில் 110 மில்லியன் பயனாளர்கள் இருக்கிறார்கள். ஆனால் இப்பொழுதுதான் மெக்ஸிகோவில் தனது சேவையைத் தொடர்ந்துள்ளது.

முதன்முதலில் கணிப்பொறியின் சுட்டெலியை (Mouse 1994ல் வடிவமைத்தவர் டௌக் என்கேல்பர்ட் என்பவராவார்.

2012ல் சுமார் 17பில்லியன் அளவிலான பயனாளர்கள் இணையத்தில் இணைக்கப்படுவார்கள் எனத்தெரிகிறது.

சுமார் 1.06 பில்லியன் பயனாளர்கள் உடனடி மெசேஜிங்கிள் இணைந்திருக்கிறார்கள்.

via Nagoorkani Kader Mohideen Basha

via @[100000888786399:2048:Nagoorkani Kader Mohideen Basha]

கண்டங்கத்திரி மருத்துவப் பயன்கள் !!!

மணக்கால் அய்யம்பேட்டை | 4:49 PM | Best Blogger Tips
கண்டங்கத்திரி மருத்துவப் பயன்கள் !!!

மனிதனுக்கு நீண்ட ஆயுளையும், ஆரோக்கியத்தையும், நோய் எதிர்ப்பு சக்தியையும் கொடுப்பவைதான் கற்ப மூலிகைகள். கற்பம் என்றால் உடலை நோயின்றி ஆரோக்கியமாக வைப்பது. இதில் மூலிகைகள் பல உள்ளன.ஒவ்வொரு மூலிகைகளுக்கும் அதனதன் தன்மைப்படி தனித்தனி மருத்துவக் குணங்கள் உண்டு. இதில் கண்டங்கத்திரி ஒரு கற்ப மூலிகை. இதனுடைய மருத்துவப் பயன்கள் ஏராளம். கண்டங்கத்திரி படர்செடி வகையைச் சார

்ந்தது.

இந்த தாவரம் முழுவதும் முட்களாக காணப்படும், மலர்கள் கொத்தாக இருக்கும், கனிகள் கோள வடிவத்தில் இருக்கும், விதைகள் தட்டையானவை.

இதன் இலைகளின் சாற்றை மிளகுடன் சேர்த்து தயாரிக்கப்படும் மருந்து மூட்டு வலிக்கு மருந்தாக பயன்படுகிறது.

இதன் வேர் ஆஸ்துமா எதிர்ப்பு குணம் கொண்டது. இருமல், காய்ச்சலைப் போக்கும், கனிகளின் சாறு தொண்டை வலியைக் குணமாக்குகிறது.

இருமலுக்கு கனிகளைக் காய வைத்து, பொடியாக்கி, தேனுடன் கலந்து பயன்படுத்தலாம்.

விதைகளை எரித்து அதில் இருந்து வரும் புகையை ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டவர்களை நுகரச் செய்யலாம், அப்போது உடலில் உள்ள சளி நீங்கும். செரிமானத்தை அதிகரிக்கும். மலச்சிக்கலைத் தீர்க்கும் மருந்தாகவும் பயன்படுகிறது.

இது எல்லா இடங்களிலும் செழித் து வளரும் தன்மை கொண்டவை. இதன் இலை, பூ, காய் பழம், விதை, வேர் அனைத்தும் மருத்துவப் பயன் கொண்டவை. கார்ப்புச் சுவை கொண்ட இது சித்த, ஆயுர்வேத மருத்துவ முறைகளில் அதிகம் சேர்க்கப்படுகிறது.- கண்டங்கத்திரிக்கு காசம், சுவாசம், ஷயம், அக்கினி மந்தம், சன்னி, வாதம், தோஷ நோய்கள் , தீச்சுரம், வாதநோய், ரத்தசுத்தி போன்றவற்றைத் தடுக்கும்

குணமுண்டு.கண்டங்கத்திரியின் மருத்துவப் பயன்கள் சுவாச நோய்களுக்கு இன்றைய புறச்சூழ்நிலை மாறுபாட்டால் உண்டான அசுத்தக் காற்றை சுவாசிக்கும்போது அவை உடலில் ஒவ்வாமையை உண்டுபண்ணி நுரையீரலைப் பாதிக்கிறது. மேலும் உடலுக்குத் தேவையான பிராண வாயுவை தடைசெய்கிறது. இதனால் மூச்சுக் குழல் தொண்டைப் பகுதிகள் பாதிக்கப்படுகின்றன.

சளிபிடித்துக்கொள்ளுதல், மூக்கில் நீர் வடிதல், அதிகளவு தும்மல் மூச்சுத் திணறல் போன்றவை உண்டாகிறது. சுவாசம் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களையும் குணப்படுத்தும் தன்மை கண்டங்கத்திரிக்கு உண்டு. கண்டங்கத்திரியின் தன்மை பற்றி அகத்தியர் கூறும் கருத்து இதோ .. மாறியதோர் மண்டைச்சூலை கூறியதோர் தொண்டைப்புண் தீராத நாசிபீடம் தலையில் நீர் கோர்த்தல், சூலை நீர் எனப்படும் கப நீர், பித்த நீர் இவற்றை சீராக்கி செயல்படுத்தி மாற்றவும், தொண்டையில் நீர்க்கட்டு, தொண்டை அடைப்புகள், மூக்கில் நீர் வடிதல், சளி உண்டாதல் போன்றவற்றிற்கும், மூச்சுத் திணறல், இருமல், ஈழை, இழுப்பு இவற்றிற்கும் சிறந்த நிவாரணம் தரக்கூடியது கண்டங்கத்திரி

இது தீராத ஆஸ்துமா, வலிப்பு நோய் போன்றவற்றிற்கு சிறந்த நிவாரணியாகும். கண்டங்கத்திரி காது, மூக்கு, தொண்டை, வயிற்றுப்பகுதி மூதலிய இடங்களில் உள்ள தேவையற்ற சளியைப் போக்குகிறது. கண்டங்கத்திரிக்கு ரத்தத்தில் சளியையும், ரத்தக் குழாய்களில் உண்டாகும் கொழுப்பு அடைப்புகளையும் நீக்கும் தன்மை உண்டு. அதேபோல் மார்புச் சளியை நீக்கி குரல்வளையில் தேங்கிநிற்கும் சளியை நீக்கி சுவாசத்தை சீராக்கும்.

கண்டங்கத்திரி இலையின் சாற்றை தேங்காய் எண்ணெயுடன் கலந்து கொதிக்க வைத்து ஆறிய பின் பூசி வந்தால் வியர்வை நாற்றம் நீங்கும். தலைவலி, சரும பாதிப்பு இவைகளுக்கு மேல்பூச்சாகப் பூசினால் சிறந்த நிவாரணம் கிடைக்கும். கண்டங்கத்திரி எல்லா பகுதிகளிலும் வளரும் தன்மை கொண்டது. இதனை முறைப்படி பயன்படுத்தி நாமும் நோயின்றி வாழ்வோம்.

நன்றி
பரமக்குடி சுமதி

"வாழ்க்கையின் வெற்றிக்கு 20 கோட்பாடுகள்"

மணக்கால் அய்யம்பேட்டை | 1:34 PM | Best Blogger Tips
* எந்த விசயமாக இருந்தாலும் அல்லது எந்த பிரச்சினையாக இருந்தாலும் அதை அழகாக கையாளுங்கள்.

* அர்த்தமில்லாமலும்,தேவையில்லாமலும் பின் விளைவுகளை அறியாமலும் பேசிக் கொண்டிருப்பதை விடுங்கள்.

* தானே பெரியவன்,தானே சிறந்தவன் என்ற அகந்தையை விடுங்கள்.

* விட்டுக் கொடுங்கள்.

* சில நேரங்களில்,சில சங்கடங்களை சகித்துத்தான் ஆக வேண்டும் என்பதை உணருங்கள்.

* நீங்கள் சொன்னதே சரி,செய்வதே சரி என்று கடைசி வரை வாதாடாதிர்கள்.

* குறுகிய மனப்பான்மையை விட்டொழியுங்கள்.

* உண்மை எது,பொய் எது என்று விசாரிக்காமல் இங்கே கேட்டதை அங்கும்,அங்கே கேட்டதை இங்கும் சொல்வதை விடுங்கள்.

* மற்றவர்களை விட உங்களையே எப்போதும் உயர்த்தி நினைத்து கவலைப்படாதீர்கள்.

* அளவுக்கதிகமாய் தேவைக்கதிகமாய் ஆசைப்படாதீர்கள்.

* எல்லோரிடத்திலும் எல்லா விசயங்களையும், அவர்களுக்கு சம்பந்தம் உண்டா இல்லையோ,சொல்லி கொண்டிருக்காதீர்கள்.

* கேள்விபடுகிற எல்லா விசயங்களையும் அப்படியே நம்பி விடாதீர்கள்.

* உங்கள் கருத்துகளில் உடும்புபிடியை இல்லாமல் கொஞ்சம் தளர்த்திக்கொள்ளுங்கள்.

* மற்றவர்களுக்கு உரிய மரியாதையை காட்டவும்,இனிய இதமான சொற்களை பயன்படுத்தவும் மறக்காதீர்கள்.

* புன்முறுவல் காட்டவும்,சிற்சில அன்பான சொற்களை சொல்லவும் கூட நேரமில்லாமல் நடந்து கொள்ளாதீர்கள்.

* பேச்சிலும்,நடத்தையிலும்,திமிர்த்தனத்தயும் தேவையில்லாத மிடுக்கையும் தவிர்த்து அடக்கத்தையும் பண்பாட்டையும் காட்டுங்கள்.

* அவ்வபோது நண்பர்கள் உறவினார்கள் நேரில் சந்தித்து மனம் திறந்து பேசுங்கள்.

* பிணக்கு ஏற்படும்போது அடுத்தவர் முதலில் இறங்கி வர வேண்டும் என்று காத்திருக்காமல் நீங்களே பேச்சை துவக்க முன்வாருங்கள்.

*தேவையான இடங்களில் நன்றியும்,பாராட்டையும் சொல்ல மறவாதீர்கள்.

ஆண்களின் ஸ்பெர்ம்களை கொல்லும் செயல்கள்...

மணக்கால் அய்யம்பேட்டை | 12:51 PM | Best Blogger Tips
இன்றைய மார்டன் காலத்தில் தம்மிடம் அனைத்து வசதிகள் இருந்தாலும், சிலருக்கு முக்கியமான பிரச்சனை ஏதாவது இருக்கும். ஏனெனில் இந்த மார்டன் காலத்தில் அனைத்துமே மிகவும் மார்டனாக மாறிவிட்டது. அதாவது உணவு பழக்கவழக்கங்கள், வாழ்க்கை முறை, நடைமுறை பழக்கவழக்கங்கள் போன்ற அனைத்திலுமே வித்தியாசத்தை காணலாம். அந்த வித்தியாசத்தினால், பலருக்கு குழந்தை பெறுவதில் சிக்கல் ஏற்படுக
ிறது. ஏனெனில் அந்த வித்தியாசமானது ஆரோக்கியமற்றது.

மேலும் என்ன தான் துணையுடன் உறவில் ஈடுபட்டு, நிம்மதியை உணர்ந்தாலும், சிலரால் கர்ப்பமாக முடியவில்லை. இதற்கு ஒருவரை மட்டும் குற்றம் சொல்ல முடியாது. இருவரின் மீதுமே குற்றமானது இருக்கும். அதுமட்டுமின்றி என்ன தான் முயற்சித்தாலும் கர்ப்பமாக முடியாத நிலையில் சிலர் இருப்பர். இதற்கு பெரும் காரணம் நடவடிக்கை மற்றும் பழக்கவழக்கங்கள் தான். அதிலும் ஆண்களால் தான் பெரும் கஷ்டம் ஏற்படும். ஏனெனில் அவர்களின் ஒருசில செயல்களால் ஸ்பெர்ம்களின் உற்பத்தி பாதிக்கப்பட்டு, கர்ப்பமாவதில் தடையை ஏற்படுத்துகின்றன. இப்போது அந்த மாதிரியான செயல்களில், ஆண்களின் எந்த செயல்கள் கர்ப்பத்திற்கு தடையை உண்டாக்குகின்றன என்பதைப் பார்ப்போமா...

சுடு நீர் தொட்டி குளியல்:

சுடு நீர் தொட்டியில் குளித்தால், உடலில் உற்பத்தி செய்யப்படும் ஸ்பெர்ம்களின் எண்ணிக்கை குறையும். எப்படியெனில் பொதுவாக ஆண்களின் விரைகள் எப்போதும் மற்ற உறுப்புகளை விட சற்று குளிர்ச்சியாக இருக்கும், இருக்கவும் வேண்டும். ஆனால் அவ்வாறு குளிர்ச்சியின்றி, விரைகளின் வெப்பமானது 98 டிகிரிக்கு மேல் அதிகரித்தால், அந்த வெப்பம் ஆண்களின் ஸ்பெர்ம்களை அழித்துவிடும். ஆகவே ஆண்கள் குழந்தைகள் பெற நினைக்கும் போது, சுடு நீர் தொட்டிகளில் குளிப்பதை தவிர்ப்பது நல்லது.

உள்ளாடைகள்:

நிறைய ஆய்வில் மிகவும் இறுக்கமாக இருக்கும் உள்ளாடைகளை அணிந்தால், ஸ்பெர்ம்களின் உற்பத்தி தடைபடும் என்று கண்டறியப்பட்டுள்ளது. ஏனெனில் அவ்வாறு நீண்ட நேரம் இறுக்கமான உள்ளாடையை அணிவதால், விரைகள் அதிக வெப்பமடைந்து, ஸ்பெர்ம்களின் எண்ணிக்கையை குறைத்துவிடுகிறது. எனவே எப்போதும் லூசாக இருக்கும் உள்ளாடையை அணிய வேண்டும்.

மொபைல்:

குழந்தை பெற நினைக்கும் போது, அதிகமாக மொபைல் பயன்படுத்துவதை நிறுத்திவிட வேண்டும். அதிலும் ஒரு ஆய்வில் ஆண்கள் ஒரு நாளைக்கு நான்கு மணிநேரத்திற்கு மேல் தொடர்ந்து மொபைலை பயன்படுத்தினால். ஸ்பெர்ம்களின் உற்பத்தி குறையும் என்று கூறுகிறது. ஏனெனில் ஆண்கள் தாங்கள் பயன்படுத்தும் மொபைலை, எப்போதுமே பேண்ட் பாக்கெட்டில் வைப்பதால், மொபைலிலிருந்து வரும் அதிர்வுகள், விரைகளை பாதிக்கிறது. எனவே தான், ஸ்பெர்ம்களும் பாதிக்கப்படுகின்றன. எனவே ஆண்கள் மொபைலை பேண்ட் பாக்கெட்டில் வைக்காமல் இருப்பது நல்லது.

எடை அதிகம்:

இன்றைய காலத்தில் ஒரே இடத்தில் உட்கார்ந்த வேலை செய்வோரின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. அதனால் அவர்களின் உடல் எடை அதிகரித்துவிடுவதோடு, அதன் காரணமாக பாலியல் சுரப்பிகளின் செயல்பாடு பாதிக்கப்படுகிறது. பெண்கள் குண்டாக இருந்தால், அவர்களது ஈஸ்ட்ரோஜெனின் அளவு அதிகரிக்கும். ஆனால் அதுவே ஆண்கள் குண்டாக இருந்தால், அது ஸ்பெர்ம்களின் எண்ணிக்கையை குறைத்துவிடும். எனவே ஆண்கள் எப்போதும் தங்கள் உடல் எடையின் மீது அதிக கவனம் செலுத்துவதோடு, உடற்பயிற்சி, யோகா போன்றவற்றை செய்ய வேண்டும்.

ஆல்கஹால்:

ஆல்கஹால் பருகுவதை, குழந்தைப் பெறுவதற்கு முயற்சிக்கும் போது குறைத்துவிட வேண்டும். ஏனெனில் அந்த ஆல்கஹால் ஆண்களின் ஸ்பெர்ம்களின் உற்பத்திக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தும். எப்படியெனில் ஆல்கஹால் பருகினால், உடலானது ஸ்பெர்ம்களின் உற்பத்திக்கு தேவையான ஜிங்க் சத்தை உறிஞ்சவிடாமல் செய்துவிடும். ஆகவே குழந்தை பெறும் வரை இதனை தவிர்ப்பது மிகவும் நல்லது.

தூங்கா நகரத்தின் சிறப்புகளில் ஒன்றாகிய திருமலை நாயக்கர் மகாலை

மணக்கால் அய்யம்பேட்டை | 12:49 PM | Best Blogger Tips
நண்பர்களே இன்று தூங்கா நகரத்தின் சிறப்புகளில் ஒன்றாகிய திருமலை நாயக்கர் மகாலை பற்றி தெரிந்து கொள்வோம் ..

திருமலை நாயக்கர் அரண்மனை அல்லது திருமலை நாயக்கர் மகால் என அழைக்கப்படும் அரண்மனை, மதுரையை ஆண்ட நாயக்க மன்னர்களில் ஒருவரான திருமலை நாயக்கரால் கி.பி. 1636 ஆம் ஆண்டில் கட்டுவிக்கப்பட்டது.

மதுரையில் அமைந்துள்ள இக் கட்டிடம், புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயிலிலிருந்து சுமார் 2 கிலோமீட்டர் தென் கிழக்குத் திசையில் அமைந்துள்ளது.

இத்தாலியக் கட்டிடக் கலைஞர் ஒருவரால் வடிவமைக்கப்பட்டதாகக் கருதப்படுகின்றது ..

இக் கட்டிடத்தின் நான்கில் ஒரு பகுதியே தற்போது எஞ்சியுள்ளது .

இந்து, முஸ்லிம் கட்டிடக் கலைப் பாணிகள் கலந்து அமைந்த இந்தோ சரசனிக் பாணி என அழைக்கப்படும் கட்டிடக்கலைப் பாணியில் வடிவமைக்கப் பட்ட இந்த அரண்மனை, அக்காலத்தில் இரண்டு முக்கிய பகுதிகளைக் கொண்டதாக அமைந்திருந்தது.

ஒன்று சொர்க்க விலாசம் என்றும் மற்றது ரங்க விலாசம் என்றும் அழைக்கப்பட்டன.

சொர்க்க விலாசம் மன்னரின் வசிப்பிடமாகவும், ரங்க விலாசம் அவரது தம்பியான முத்தியாலு நாயக்கரின் வசிப்பிடமாகவும் இருந்தது.

இந்த அரண்மனைத் தொகுதியில், இசை மண்டபம், நாடக சாலை, பல்லக்குச் சாலை, ஆயுத சாலை, வழிபாட்டிடம், வேறு அரச குடும்பத்தினர்க்கும், பணியாளர்களுக்குமான வசிப்பிடங்கள், அந்தப்புரம், பூங்காக்கள், தடாகங்கள் போன்ற பல்வேறு பகுதிகள் அடங்கியிருந்தன.

தற்போது சொர்க்க விலாசம் என்ற பகுதியே எஞ்சியுள்ளது.

திருமலை நாயக்கர் மஹால் 1971 ஆம் ஆண்டு தேசிய நினைவுச்சின்னமாக அறிவிக்கப்பட்டது.

சுற்றுலா வளர்ச்சியை கருத்தில் கொண்டு 1981 ஆம் ஆண்டுமுதல் ஒலி-ஒளி காட்சி அமைக்கப்பட்டு இன்றுவரை நடந்து கொண்டு இருக்கிறது.

சுற்றுலா வளர்சிக் கழகம் சார்பில் நடைபெறும் இந்த ஒலி-ஒளி கட்சி நாள்தோறும் மலை 6.45 க்கு ஆங்கிலத்திலும், பின் இரவு 8 மணிக்கு தமிழிலும் நடைபெறுகிறது.

திருமலை மன்னரின் வாழ்க்கையில் நடந்த முக்கிய நிகழ்ச்சிகளையும், அவரது ஆளுமைத்திறனையும், சிலப்பதிகார நினைவுகளையும் இக்காட்சிகள் நினைவுபடுத்துகின்றன.

கைகேமராக்களைக் கொண்டு செல்வதில் தடை இல்லை. ஆனால் வீடியோ காமிராக்களுக்கு சிறப்பான அனுமதி மேலிடத்திலிருந்து பெறவேண்டும்

அரண்மனைக்கு வெளியே மாநகராட்சியால் பராமரிக்கப்படும் பூங்கா ஒன்று அமைந்துள்ளது. ஒரு பாதிநாளை அமைதியுடனும் வியப்புடனும் கழிக்க இந்த பழைமையான சின்னம் சிறந்த இடமாகும்.

- sara

நன்றி தமிழ் விக்கிபீடியா

( நமது பழைய பக்கத்தை யாரோ hack செய்து அழித்து விட்டார்கள்.. அதில் பதிவு செய்யப்பட்ட முக்கியமான கட்டுரைகள் மறு பதிவு செய்யப்படுகின்றது. –sara )

Note: other page owners please share our post instead of copy and pasting ..

மங்குஸ்தான் பழம் உடல்நல நன்மைகள்

மணக்கால் அய்யம்பேட்டை | 12:44 PM | Best Blogger Tips
பழங்கள் உடலுக்கு நேரடியாக சத்துக்களைக் கொடுக்கும் தன்மை கொண்டவை. பழங்களில் உள்ள உயிர் சத்துக்களான வைட்டமின்கள், தாதுப் பொருட்கள் உடலுக்கு வலுவூட்டுகின்றன. இதில் உள்ள நார்ச்சத்துகள் குடலுக்கு நல்லது.

பழங்காலத்தில் மனிதர்கள் பழங்களையே உணவாக உண்டு வந்தனர். அதனால் நோய்களின் தாக்கம் இல்லாமல் ஆரோக்கியமாக வாழ்ந்தனர்.இவை மலைப் பகுதிகளில் விளையக் கூடியவை. இது மாதுளம் பழ

த்தைப் போன்ற தோற்றத்தில் இருக்கும். இந்தப்பழத்தின் தோல் பகுதி தடிமனாக இருக்கும்.

இப்பழத்தின் தோல் பகுதியை உடைத்தால் மூன்று அல்லது நான்கு சுளைகள் இருக்கும். சுளைகள் இளஞ்சிவப்பு, வெள்ளை நிறத்தில் இருக்கும்.மலேசியா, மியான்மர், இந்தோனேசியா, தாய்லாந்து ஆகிய நாடுகளில் அதிகம் விளைகிறது. தென்னிந்தியாவில் மலைப் பகுதியில் தோட்டப் பயிராக இதனை வளர்க்கின்றனர்.

இதற்கு சூலம்புளி என்ற பெயரும் உண்டு

தமிழ் - மன்கோஸ்தான்

இஂக்லீஶ் - மன்கோஸ்டீன்

மாலாயலாம் - மன்குஸ்தா

தெழுகு - மௌகூஸ்த்ா

பட்யாநிகல் நாமே - கர்சினிய மன்கோஸ்தான

சீதபேதி

இரத்தக் கழிச்சல் உள்ளவர்களுக்கு மங்குஸ்தான் பழத்தின் மேல் தோலை சுட்டு அல்லது பச்சையாக அரைத்து அதனுடன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் சீதபேதி உடனே குணமாகும்.

உடல் சூட்டைத் தணித்து தேகத்தை சமநிலையில் வைத்திருக்கும்.

வயிற்றுவலியைக் குணப்படுத்தும் தன்மை இதற்கு உண்டு.

கண் எரிச்சலைப் போக்க

கம்பியூட்டரில் வேலை செய்யும் இளைய தலைமுறையினருக்கு பொதுவாக கண்கள் வறட்சி அடைந்து கண் எரிச்சலை உண்டாக்கும். இதனால் சிலர் தலைவலி, கழுத்து வலி என அவதிக்குள்ளாவார்கள். இவர்கள் மங்குஸ்தான் பழம் சாப்பிட்டு வந்தால் கண் எரிச்சல் நீங்கி, கண் நரம்புகள் புத்துணர்வு பெறும்.

வாய் துர்நாற்றம் நீங்க

வயிற்றில் புண் இருந்தால் வாயில் புண் ஏற்படும். இதனால் வாய் துர்நாற்றம் வீசும், மேலும் உண்ணும் உணவுப் பொருட்கள் பல் இடுக்குகளில் தங்கி விடுகின்றன. இதனால் உண்டாகும் கிருமிகளால் வாய் துர்நாற்றம் வீச ஆரம்பிக்கும்.

மங்குஸ்தான் பழத்தை நன்கு சுவைத்து சாப்பிட்டு, அல்லது அதன் தோலை காயவைத்து பொடி செய்து தேன்கலந்து சாப்பிட்டு வந்தால் வாய் துர்நாற்றம் நீங்கும்.

மூலநோயை குணப்படுத்த

நாம் உண்ணும் உணவானது செரிமானம் ஆகாமல் அசீரணக் கோளாறு ஏற்பட்டு அதனால் வாயு சீற்றமாகி கீழ் நோக்கி மூலப் பகுதியை பாதிக்கிறது. இதனால் மூலத்தில் புண் ஏற்படுகிறது. மூலநோய் விரைவில் குணமாக எளிதில் சீரணமாகக் கூடிய உணவுகளை உண்பது நல்லது. அதோடு மங்குஸ்தான் பழத்தை சாப்பிட்டு வந்தால் மூலநோயால் ஏற்பட்ட பாதிப்புகள் குறையும்.

பெண்களுக்கு

மாதவிலக்கு காலங்களில் பெண்களுக்கு ஏற்படும் அதிக இரத்தப் போக்கை குறைக்க மங்குஸ்தான் பழம் உதவுகிறது. கிடைக்கும் காலங்களில் மங்குஸ்தான் பழத்தை வாங்கி சாப்பிடுவது நல்லது. அல்லது மங்குஸ்தான் பழத்தின் தோலை காய வைத்து பொடிசெய்து பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் அதிக இரத்தப் போக்கு குறையும்.

சிறுநீரைப் பெருக்க

சிறுநீர் நன்கு வெளியேறினால் தான் உடலில் தங்கியுள்ள தேவையற்ற அசுத்த நீர் வெளியேறும். சிறுநீர் நன்கு வெளியேற மங்குஸ்தான் பழம் சிறந்த மருந்தாகும்.

* இருமலை தடுக்கும்

* சூதக வலியை குணமாக்கும்

* தலைவலியை போக்கும்

* நாவறட்சியை தணிக்கும்.

மங்குஸ்தான் பழத்தில்

நீர் (ஈரப்பதம்) - 83.9 கிராம்

கொழுப்பு - 0.1 கிராம்

புரதம் - 0.4 கிராம்

மாவுப் பொருள் - 14.8 கிராம்

பாஸ்பரஸ் - 15 மி.கி.

இரும்புச் சத்து - 0.2 மி.கி

உடலுக்குத்தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களையும் கொண்ட இப்பழத்தை உண்டு பயனடைவோம்.

சந்திரகலை என்றால் என்ன?

மணக்கால் அய்யம்பேட்டை | 12:38 PM | Best Blogger Tips
இடது நாசிச்(.இடது பக்க மூக்கு) சுவாசம் சந்திரகலை எனவும், வலது நாசிச்( .வலது பக்க மூக்கு) சுவாசம் சூரியகலை எனவும் அழைக்கப்படும். சந்திரகலையை மதி/இடகலை/இடைக்கால் எனவும், சூரியகலையை பிங்கலை/பின்கலை/வலக்கால் எனவும் அழைக்கப்படுவதுண்டு.

இங்கு 'கால்' என்பது மூச்சைக் குறித்து நிற்கின்றது. அதனால் தான் 'காலனைக் காலால் உதைத்தேன்' எனச் சித்தர்களும் ஞானியரும் கூறுவதுண்டு. இங்கு காலனாகிய இறப்பை, காலாகிய மூச்சுக்காற்றைச் சுழிமுனையில் ஒடுங்கச் செய்வதன் மூலம் பிறவிப்பிணி நீங்கி ஒளியுடம்பு பெற்று மரணமில்லாப் பெருவாழ்வு/சகாக்கலை அடைதலைக் குறிக்கும்.

'விதியை மதியால் வெல்லலாம்' என்பார்கள். இங்கு மதி என்று கூறப்படுவது புத்தி அல்ல. மதி என்றால் சந்திரன். 16 அங்குலம் ஓடக்கூடிய சந்திரகலையை சுருக்க சுருக்க ஆயுள் விருத்தியாகும். எனவே விதி முடிவும் விலகியே போகும். நன்றி.

ஒரு நிமிடத்திற்கு 15 மூச்சு; மூச்சை உள்ளே இழுப்பது ஒரு பங்கு, நேரம் . உள்ளே அதை தங்கவைப்பது 4 பங்கு நேரம். மூச்சை வெளியே விடுவது 2 பங்கு நேரம். இதுதான் பிராணாயாமத்தின் சாராம்சம்.

நமது நுரையீரலில் வலது, இடது என இரு பகுதிகள். வலது நுரையீரலில் 3 பகுதிகள், இடது நுரையீரலில் 2 பகுதிகள். நுரையீரல் 'ஸ்பாஞ்' போல காற்றுப் பைகளால் ஆனது. வலதுபக்கம் சாய்ந்து படுக்கும்போது, வலது நுரையீரலில் உள்ள 3 பகுதிகளும் அழுத்தப்பட்டு இடது நாசி வழியாக மூச்சுக்காற்று ஒரே சீராக உள்ளிழுக்கப்பட்டு உடல் முழுக்க 'பிராணா' சக்தி சீராகப் பரவுகிறது .

இடது நாசி வழியாக ஓடும் மூச்சு , 'சந்திரகலை'. இது குளுமையானது . வலது நாசி வழியாக ஓடும் மூச்சு , 'சூரியகலை'. இது வெப்பமானது. வலதுபக்கம் சாய்ந்து படுக்கும்போது குளுமையான 'சந்திரகலை' அதிகரிக்கும். இது மன படபடப்பைக் குறைத்து தூக்கத்தையும் வரவழைக்கும்.

வள்ளுவரின் மருந்தில்லா மருத்துவம்..!

மணக்கால் அய்யம்பேட்டை | 12:36 PM | Best Blogger Tips
நோயின்றி வாழ அனைவரும் விரும்புவர். எப்படித்தான் முன்னெச்சரிக்கையுடன் வாழ்ந்தாலும் எவ்வாறேனும் நோய் வந்துவிடுகின்றது. நோய் வந்தால் மருந்து உட்கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் நோய் தீரும். ஆனால் நோயே வராமல் நம்மைக் காத்துக் கொள்வது எப்படி? அதிலும் நோயுற்றால் மருந்தில்லாமல் மருத்துவம் செய்ய இயலுமா? அவ்வாறு மருத்துவம் செய்தால் நோய் நீங்குமா? இவ்வாறு பல்வேறு வினாக்கள்
நம் உள்ளத்தில் எழுகின்றன. இவற்றிற்கெல்லாம் விடையளித்து மருந்தில்லா மருத்துவத்தையும் தமிழ் சித்தர் திருவள்ளுவர் எடுத்தியம்புகிறார்.

உணவே நோய்

பெரும்பாலான நோய்களுக்கு மூல காரணமாக உணவு அமைகின்றது. உணவின் வாயிலாகவே நோய்க்கிருமிகள் பரவி உடலில் நோயை ஏற்படுத்துகின்றன. நாம் உண்ணும் உணவு தூய்மையானதாக இருத்தல் வேண்டும். உணவு தூய்மையானதாக இருப்பினும் அவ்வுணவை அவரவர் உடற் தேவைக்கேற்ப உண்ணல் வேண்டும். உணவைச் சுவைக்காக உண்ணுதல் கூடாது. பசிக்கின்றதே என கிடைக்கின்ற தூய்மையற்ற உணவையும் உண்ணுதல் கூடாது. உடல் நலத்திற்கேற்ற உணவை உண்ணல் வேண்டும்.சுவையுடன் இருக்கின்றது என்பதற்காக உணவை அளவிற்கு அதிகமாக உண்ணுவதும் நோயைத் தரும். மேலும் சிலர் உணவு கிடைக்கின்றதே என்பதற்காக முன்பு உண்ட உணவு செரிமானம் ஆகிய பிறகு உண்ணாது உண்பர். இதனால் முன்னர் உண்ட உணவு விஷமாக (Food poison) மாறி உயிருக்குக் கேடுவிளைவிக்கும். அதனால் முன்பு உண்ட உணவு முழுமையும் செரிமானம் ஆகிய பின்னர் உணவினை உண்ணுதல் வேண்டும். நோய் வருமுன் காப்பதற்கு இதுவே சிறந்த வழி. இத்தகைய மருந்தில்லா மருத்துவத்தின் முதற்படிநிலையை,

மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அற்றது போற்றி உணின்(942)

என்று வள்ளுவப் பெருந்தகை குறிப்பிடுகின்றார்.

அளவாக உண்ணுதல்

எதற்கும் ஒரு அளவுண்டு என்று வழக்கத்தில் அனைவரும் கூறுவது இயல்பு. இது மற்றவற்றிற்குப் பொருந்துகிறதோ இல்லையோ நாம் உண்ணும் உணவிற்கு அளவு உண்டு. அவரவர் உடற்கூற்றிற்கு ஏற்ப, தேவைக்கு ஏற்ப அறிந்து உண்ணுதல் வேண்டும். உணவின் அளவு கூடினாலும் குறைந்தாலும் உடலில் நோய்ஏற்படும். உணவு அளவு குறைந்தால் சிலருக்கு குறைந்த அழுத்த நோய் ஏற்படும். இதனை '‘low pressure’ என்று கூறுவர். உணவு சரியாக உண்ணாமையால் வரக்கூடிய நோயே இக்குறைந்த ரத்த அழுத்த நோயாகும். உணவு சரியான நேரத்தில் உணாமலோ, குறைந்த அளவிலோ உண்டால் உடலில் உள்ள குளுக்கோஸின் அளவு குறைந்து உடலில் படபடப்பு ஏற்பட்டு குறைந்த ரத்த அழுத்தம் ஏற்பட்டு உயிருக்கே ஊறுநேரக்கூடிய அளவிற்கு இது கொண்டு சென்று விடும். தேவைக்கு அதிகமாக உண்டாலும் உயர் ரத்த அழுத்தம் ஏற்படும். இதனை ‘High pressure’ என்பர். சிலர் இறைச்சி உணவை அதிக அளவில் உண்டு தங்களின் உயிருக்கு இறுதியைத் தாங்களே தேடிக்கொள்வர்.

இறைச்சியில் உள்ள கொழுப்பு இரத்தத்தில் கலந்து அதிக அழுத்தத்தை ஏற்படுத்தி ரத்தக் குழாயில் உயர் ரத்த அழுத்தம் ஏற்படச் செய்கின்றது. தேவையான கொழுப்பு மட்டுமே உடல் எடுத்துக் கொள்கின்றது. மற்ற தேவையற்ற கொழுப்பு இரத்த்த்திலும், உடலில் ஆங்காங்கேயும் தங்கிவிடுகின்றது. அவ்வாறு தங்கிவிடும் கொழுப்பு இரத்தக் குழாயை அடைப்பதும் உண்டு. இதனால் இரத்தம் உடலில் அல்லது இதயத்திற்குப் போகின்ற தமனிகளில் உள்ள சிறிய வழியை அடைத்து இதயத் தாக்குதல் ஏற்படவும் வழி ஏற்படுகிறது. இதனை அறிந்தே வள்ளுவர் மருந்தில்லா
மருத்துவத்தின் இரண்டாவது படிநிலையாக,

மிகினும் குறையினும் நோய் செய்யும்(941)

என்று குறிப்பிட்டு அவரவர் உடற்திறத்திற்கு ஏற்ப உண்டால் மருந்து தேவையில்லை என்று குறிப்பிடுகின்றார்.

நீண்ட நாள் வாழ

உலகில் தோன்றிய மக்கள் நீண்டநாள் வாழ வேண்டும் என்று விரும்புகின்றனர். அதற்காக பல்வேறு வகையான மருந்துகளை உட்கொள்கின்றனர். காயகல்பம் உண்கின்றனர். சிலர் தங்கபஸ்பம், பல்வேறுவகையான பஸ்பங்களையும் உண்ணுகின்றனர். எவ்வகையிலேனும் தங்களது வாழ்நாளை நீட்டித்துக் கொள்ள அவரவர்க்குத் தகுந்தவாறு முயல்கின்றனர். இம்முயற்சியிலேயே சிலர் தங்களது குறிக்கோளை அடையமுடியாமல் இறந்தும் விடுகின்றனர். பல்வேறு காலங்களில் பல நாட்டினரும் தமது வாழ்நாளை நீடித்துக் கொள்ள முயன்றிருக்கின்றனர். இவ்வாறு பல்வேறு வகையான மருந்துகளைத் தேடி அலைவது வீணானான செயலாகும். வாழ் நாளை நீடித்துக் கொள்வதற்கு மருந்துகளோ பஸ்பங்களோ, காயகல்பங்களோ தேவையில்லை. அவ்வாறெனில் எங்ஙனம் வாழ்நாளை நீட்டித்துக் கொண்டு நோயின்றி வாழலாம்? என்ற வினாவும் நம்முள் பலருக்கு எழுகின்றது.

நலமுடன் நீண்ட நாள் வாழ மருந்தே வேண்டாம்.அதற்கு அளவுடன் உண்ண வேண்டும். அதுமட்டுமல்லாது தாம் முன்னர் உண்ட உணவு முழுமையாக செரிமானம் ஆகிய பின்னர் உண்டாலே போதுமானது. இவ்வாறு தொடர்ந்து முன்னர் உண்ட உணவு முழுமையாக செரித்த பின்னர் அளவுடன் உணவு உண்டாலே நீண்ட நாள் வாழலாம்.
இத்தகைய மருந்தில்லா மருத்துவத்தை,

அற்றால் அளவறிந்து உண்க அஃதுடம்பு
பெற்றான் நெடிதுய்க்கு மாற(943)

என்ற திருக்குறள் நமக்கு எடுத்துரைக்கின்றது. நாம் அளவில்லாது செரிக்காது தொடர்ந்து உணவை உண்டு கொண்டு இருப்பதனால்தான் உடலில் நோய் ஏற்படுகின்றது. அளவறிந்தும் நாம் உண்பதில்லை. இதனால் தேவையற்ற கொழுப்பு நமது உடலில் சேர்ந்து விடுகின்றது. அதிகப்படியான சதை உடலில் போட்டுவிடுகின்றது. தகுந்த உடற்பயிற்சியும் இல்லாத நிலையில் நாம் உண்ட உணவே நமக்கு நோயை உண்டாக்கும் விஷமாக மாறிவிடுகின்றது. எனவே நீண்ட நாள் நோயின்றி வாழ வள்ளுவர் கூறும் மருந்தில்லா மருத்துவத்தை அனைவரும் கடைபிடித்து வாழ்தல் வேண்டும்.

உணவு உண்ணும்முறை நம்மில் பலருக்கு எவ்வாறு உண்ண வேண்டும் என்பதும் எவ்வளவு, எவ்வப்போது உண்ண வேண்டும் என்பதும் தெரிவதில்லை. இத்தகைய உணவு உண்ணுகின்ற முறையினை நாம் நன்கு அறிந்து கொண்டோமானால் நம்மை நோய் என்பது அணுகாது. நன்கு பசித்த பின்னர் தான் நாம் உணவினை உண்ண வேண்டும். அதுவே சரியான உணவு உண்ணும் முறையாகும். “பசித்துப் புசி“ என்ற பழமொழியும் உணவு உண்ணும் முறையை நன்கு எடுத்துரைக்கின்றது.இவ்வாறு உண்ணுவதே ஒரு மருந்தில்லா மருத்துவ முறையாகும். இத்தகைய மருத்துவ முறையை,

அற்றது அறிந்து கடைபிடித்து மாறல்ல
துய்க்கத் துவரப் பசித்து (944)

என எடுத்துரைக்கின்றார் வள்ளுவர்.

உண்ட உணவு செறித்து(ஜீரணமானது) அறிந்து அப்பழக்கத்தை முறையாகக் கடைபிடித்து மாறுபாடில்லாமல், நன்றாகப் பசித்த பின்னர் உணவினை உண்க அதுவே மருந்தில்லா மருத்துவம் என்று இக்குறட்பாவில் வள்ளுவப் பெருந்தகை தெளிவுறுத்தியிருக்கிறார். உணவு வகைகளை, உண்ணும் நேரத்தை மாற்றுதல் பசித்தவுடன் உண்ண வேண்டும். ஆனால் பலர் பசி எடுத்தாலும் அந்த நேரத்திற்கு உண்பதில்லை. அப்போது தேநீரோ அல்லது காபியோ அருந்திவிட்டு காலம் தாழ்த்தி உண்கின்றனர். இன்னும் சிலர் காலை உணவை பதினோரு மணி, பகல் உணவை மூன்று மணி இரவு உணவை பன்னிரெண்டு மணி என சரியான நேரத்திற்கு என்று இல்லாமல் மனம் போன போக்கில் உண்பர். இது வலியச் சென்று நோயை
நாமே வரவழைத்துக் கொள்வது போன்றது. இவ்வாறு சரியான நேரத்திற்கு உண்ணாமல் இருப்பதும் நோயினை உடலில் உண்டாக்கும். இதனால் பலருக்கு தீராத வயிற்று வலி (ulcer) ஏற்படுகின்றது. பசி எடுத்தவுடன் உண்ணாமல் இருப்பதால் இரைப்பையில் சுரக்கும் அமிலத்தால் குடல் புண்ணாகி விடுகின்றது. இவ்வாறு ஏற்படுகின்ற புண்ணால் சில சமயங்களில் குடலையே வெட்டி எடுக்கக்கூடிய சூழலும் ஏற்படுகின்றது.

அதனால் பசி ஏற்பட்ட சிறிது நேரத்தில் உணவு உண்பது உடல் நலத்திற்கு நல்லது. சரி பசிஎடுத்து விட்டது கிடைக்கும் உணவினை உண்ணுவது நல்லதா? எனில் அவ்வாறு செய்யக் கூடாது. அவரவர் உடல்நிலைக்குத் தக்கவாறு ஏற்ற உணவை உண்ணுதல் நலம் பயக்கும். சிலருக்கு எண்ணெய் அதிகம் ஊற்றிச் செய்யப்பட்ட உணவோ, அல்லது அதிகமான காரம், உப்பு, புளிப்பு உள்ள உணவோ ஒத்துக் கொள்வது கிடையாது.

மேலும் சிலர் சைவ உணவைச் சாப்பிட்டுவிட்டு மாமிச உணவு கிடைக்கின்றது என்பதற்காக சைவத்திலிருந்து அசைவ உணவு முறைக்கு மாறுவர். இவ்வாறு உணவை மாற்றுவதும் நோய்க்கு இடங்கொடுக்கும் செயலாகும். அதனால் அவரவர் உடலுக்கு உகந்த உணவை உட்கொள்ள வேண்டும். அவ்வாறு உண்டு வந்தால் நோயும் வராது. மருந்தும் வேண்டாம். இத்தகைய எளிய மருந்துவத்தை,

மாறுபாடு இல்லாத உண்டி மறுத்துண்ணின்
ஊறுபாடு இல்லை உயிர்க்கு (945)

என வள்ளுவர் நவில்கிறார்.

நமது தேசத் தந்தை மகாத்மாகாந்தி இங்கிலாந்து சென்று படித்தபோது தமது உணவு முறையை மாற்றிக் கொள்ளவே இல்லை. அங்கு அசைவ உணவே அதிகம் கிடைத்து. இருந்தாலும் பல்வேறு சிரமங்களுக்கிடையிலும் எக்காரணத்தைக் கொண்டும் அவர் தமது உணவு உண்ணும் முறையை மாற்றிக் கொள்ளவில்லை. இதனை தமது சத்திய சோதனை நூலில் அவரே குறிப்பிடுவது நோக்கத்தக்கது. அதிகம் உண்ணுவது தமக்குப் பிடித்த உணவு இருந்தால் சிலர் அளவைவிட அதிகமாக உண்பர். இது மிகப்பெரிய உடல்நலக் கேட்டைத் தரும் செயலாகும். எப்போதும் உணவை மிதமாக உண்ணல் வேண்டும். அது உடல் நலத்தைப் பாதுகாக்கும் செயல் எனலாம். உண்ணும்போது சிறிது பசி இருக்கும் நிலையிலேயே நாம் உண்ணுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். அது உடலுக்கு எப்போதும் துன்பத்தைத் தராது. அதிகம் உண்பவரை வழக்கில் ‘பெருந்தீனிக்காரன்‘ என்று குறிப்பிடுவர். இப்பெருந்தீனிக்காரனிடத்தில் எப்போதும் நோய் குடிகொண்டிருக்கும். இவ்வாறு உண்பவர்களுக்கு, இதயத்தாக்குதல், உடல் எடை கூடுதல், உடல் பருமனாதல், உடலில் கொழுப்பு அதிக அளவில் ஏற்படுதல், தொப்பை ஏற்படுதல் உள்ளிட்ட பல உடற் கோளாறுகள் ஏற்படும். மிதமாக உண்டால் உடலில் மகிழ்ச்சி என்றும் நிலைத்திருக்கும். அதிகம் உண்டால் நோய், துன்பம் நிலைத்திருக்கும்.நோய் வராமல் செய்யும் வழிமுறையாகவும் இதனைக் கொள்ளலாம். இத்தகைய அரிய மருத்துவ முறையை,

இழிவறிந்து உண்பான்கண் இன்பம்போல் நிற்கும்
கழிபே ரிரையான்கண் நோய் (946)

என வள்ளுவப்பெருந்தகை மொழிவது நோக்கத்தக்கது.
இன்னும் பலருக்குச் சில ஐயங்கள் எழலாம். நல்ல பசி. பசித்த பின்னர் தானே உண்ண வேண்டும். அதை எப்படி உண்டால் என்ன? என்று கருதுவாருமுளர். அது தவறான ஒன்றாகும். நமக்குப் பிடித்தமான உணவை உண்டாலும் பசி அடங்கும் வரை மட்டுமே உண்ண வேண்டும். அதுவே மகிழ்வைத் தரும். பசியடங்கிய பின்னரும் எழாது உணவை உண்டு கொண்டு இருத்தல் கூடாது. அவ்வாறு அதிக அளவில் உண்பதே பெருந்தீனி தின்பது என்று கூறுவர். பசி அடங்கியவுடன் உண்பதை நிறுத்தி விடுதல் நல்லது.உணவின் ருசிக்காக அதிக அளவு உணவை உண்டால் அதிகமான நோய்கள் நமது உடலில் தங்கி உடலை வருத்தும். எனவே அதிகம் உணவை உண்ணுவதைத் தவிர்த்தல் வேண்டும். இத்தகைய
அரிய மருத்துவ அறிவுரையை,

தீயள வன்றித் தெரியான் பெரிதுண்ணின்
நோயள வின்றயிப் படும்(947)

என வள்ளுவப் பேராசான் குறிப்பிடுவது குறிப்பிடத்தக்கது. இவை மருந்தில்லா மருத்துவத்தின் நோய்த் தடுப்பு முறைகளாகும். மருத்துவம் பார்க்கும் முறை இவ்வாறெல்லாம் இருந்தும் நோய் வந்துவிட்டால் என்செய்வது. நோய் வந்தவுடன் மருத்துவரை நாடிச் சென்று பார்த்தல் வேண்டும். அம்மருத்துவர் அது எத்தகைய நோய், அது எதனால் வந்தது? அதனை எந்த வழியில் தீர்க்கலாம் என அறிந்து சிகிச்சையைத் தொடங்க வேண்டும். இன்று சில மருத்துவர்கள் எந்தவிதமான நோய் அந்நோய் வந்த்தற்கான காரணம் என்ன என்பதையெல்லாம் அறிந்து கொள்ளாமலேயே ஏதோ ஒரு சிகிச்சையைத் தொடங்கிவிடுகின்றனர். அது முடிவில் நோயாளியின் உயிருக்குக் கேட்டை விளைவித்துவிடுகின்றது. இக்கேடுகளையெல்லாம் தவிர்க்கவே திருவள்ளுவப் பேராசான்,

நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல் (948)

என்ற மருத்துவம் பார்க்கும் முறையையும் எடுத்துக் கூறுகின்றார்.

நோயாளி, மருத்துவர், மருந்து, மருந்தைக் கொடுப்பவர் என்ற நான்கும் மருத்துவமுறையில் முக்கியமானவையாகும். இவை ஒன்றைஒன்று சார்ந்திருக்கின்றது. இந்நான்கும் ஒன்றிணையும் போதுதான் நோயாளி நோயிலிருந்து முற்றிலும் குணமடைகின்றார். இத்தகைய மருத்துவ முறையினை, உற்றவன் தீர்ப்பான் மருந்துழைச் செல்வானெற்று அப்பால்நாற் கூற்றே மருந்து என வள்ளுவர் குறிப்பிடுகின்றார். நோயின் தன்மை, வந்த காரணம், அதனைப் போக்கும் பொருத்தமான மருத்துவமுறை இவற்றையெல்லாம் அறிந்து ஒரு மருத்துவர் செயல்பட வேண்டும். பணத்தின் பொருட்டு, அல்லது நோயாளிக்கு வந்திருப்பது இத்தகைய நோய் என்பது தெரியாமல் மருத்துவம் செய்தல் கூடாது என்ற மனிதநேயத்துடன் கூடிய மருத்துவ முறையினை வள்ளுவர் கூறியிருப்பது இன்றைய சமுதாயத்திற்கு வழிகாட்டுவதாக அமைகின்றது. மருந்து கொடுத்தல் நோய் பற்றி தெரிந்து கொண்டபின் அதற்குரிய மருந்தினை அளவுடன் கொடுத்தல் வேண்டும். அனைவருக்கும் நோயின் தன்மைக்கேற்பவும், நோயாளியின் வயது, நோயின் அறிகுறி ஏற்பட்ட காலம் ஆகியவற்றின் அடிப்படையிலேயே மருந்து கொடுப்பது நல்லது. இவற்றை மீறி மருந்தினை அளவிற்கு அதிகமாகக் கொடுத்தால் நோயாளிக்கு பக்க விளைவுகள் ஏற்பட்டு நோயாளியின் உயிருக்கு ஊறு நேரும். இதனை மருத்துவர் நன்கறிதல் வேண்டும் என்பதை,

உற்றான் அளவும் பிணியளவும் காலமும்
கற்றான் கருதிச் செயல் (949)

என்று குறிப்பிடுகின்றார். வள்ளுவரின் கூற்று மிகச் சிறந்த மருந்தாளுரின் கூற்றைப் போலவும் அனுபவம் நிறைந்த மருத்துவரின் செயலை நினைவுறுத்துவதைப் போன்றும் அமைந்திருப்பது உன்னற்பாலது. மயக்க மருந்து கொடுக்கும் மருத்துவர் நோயாளியின் தன்மை, வயது, போன்றவற்றையெல்லாம் கவனத்தில் கொண்டு மயக்க மருந்தை சரியான அளவில் கொடுத்தல் வேண்டும். அவ்வாறு கொடுக்காவிடில் நோயாளி நீள்துயிலில் ஆழ்ந்துவிட நேரிடும். இத்தகைய மருந்தளிக்கும் முறையை அனைத்துத் தரப்பு மருத்துவர்களும் நன்கு அறிந்திருப்பது மருத்துவத்துறையை மென்மேலும் சிறப்புடையதாக ஆக்கும். உடலை நலமுடன் வைத்திருக்க உதவும் வள்ளுவர் கூறும் மருந்தில்லா மருத்துவத்தை அனைவரும் கையாள்வது எளிதாகும். வள்ளுவர் வழி வாழ்க்கையை அமைத்து சமுதாயத்திற்குப் பயன்படுமாறு வாழ்வோம்.

நன்றி : தமிழ் உலகின் பழமையான மொழி

பெருங்காய (மருந்து) உணவு...

மணக்கால் அய்யம்பேட்டை | 12:31 PM | Best Blogger Tips
நம்ம தமிழ்நாட்டில் ரசத்தையும், சாம்பாரையும் கமகமக்க வைக்கிற பெருமை பெருங்காயத்தை தான் சேரும்.

பச்சையாக இருக்கும் போது சகிக்க முடியாது. இதனுடைய வாசனை, சமையலில் சேர்த்த பிறகு கமகமக்கும்.

இதைப் பொரித்து உபயோகப்படுத்தலே நலம். பச்சையாக உபயோகித்தால் வாந்தியுண்டாகும்.

ஈரான், துருக்கி, ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் தான் பெருங்காயச்செடி வளருகிறது. சிறிய மரம் அளவுக்கு வளர்ந்த உடனே தண்டையும், வேரையும் கீறிவிட்டு, அதில் வடியும் பிசினை எடுத்து பக்குவப்படுத்தி காய வைத்தால், அதுதான் பெருங்காயம். பால் பெருங்காயம், சிவப்பு பெருங்காயம் என்று இதில் இரண்டு வகை இருக்கிறது.

பொதுவான நன்மைகள்:-

தினமும் பெருங்காயத்தை சாப்பாட்டில் சேர்த்துவந்தால் சுவை நரம்புகளைத் தூண்டி, ருசியை உண்டாக்கும். தானும் எளிதில் ஜீரணமாகி, மற்ற உணவுகளையும் சீக்கிரத்தில் செரிக்க வைக்கும். சுவை சேர்க்க மட்டுமின்றி, செரிக்கவும் இது உதவும். தசைகளுக்கு பலம் கொடுக்கும். சீறுநீரோட அளவைப் பெருக்கும் வயிற்று வலி, வயிறு உப்புசம் போன்ற தொல்லைகள் வராது. மலச்சிக்கலை நீக்கி, குடல்புழுக்களை அழிக்கும் அற்புத சக்தி வாய்ந்தது என்று ஏகப்பட்ட மருத்துவக் குணங்கள் இருக்கிறது. பிரசவத்திற்குப் பிறகு நஞ்சக் கொடியை வெளியேற்ற கொடுக்கப்படுகிறது. இதை ( பெருங்காயத்தை ) எண்ணெயில் கரைய வைத்துக் காயங்கட்கு மேலே பூசுவதற்கும், காது நோய்களில் பழக்கமான நேர் மருந்தாகக் காது வலியைக் குறைக்க பயன்படுகிறது.

மருத்துவகுணமும் உடையது:- வெங்காயம், பூண்டுக்கு உள்ள அதே மருத்துவக் குணங்கள் பெருங்காயதுக்கும் உள்ளன. நரம்புகளையும், மூளையையும் இயல்பாக்கி பாதிப்புகளைத் தடுக்கும்.

புரதச்சத்து பெற:- பெருங்காயத்தில் புரதச்சத்து நிறைந்திருக்கிறது. மீன் போன்ற அசைவ உணவுகளைச் சாப்பிட்டு புரதத்தைப் பெற முடியாத சைவ உணவுப் பழக்கம் உள்ளவர்களுக்கு அதை ஈடுகட்டும்.

மருந்து:-

கக்குவான்;- இதை நீர் விட்டு உரைத்து மார்பின் மீது பற்றிட குழந்தைகட்கு உண்டாகும் கக்குவான் குணப்படும்.

பிரசவத்தின் பின்;- பிரசவத்தின் பின், அழுக்கை வெளிப்படுத்தக் காயத்தைப் பொரித்து, வெள்ளைப் பூண்டு, பனை வெல்லத்துடன் சேர்த்துக் காலையில் கொடுக்கலாம்.

வ‌யி‌ற்று உ‌ப்பச‌ம்:- வ‌யி‌ற்று உ‌ப்பச‌ம் ஏ‌ற்ப‌ட்டவ‌ர்க‌ள் மோ‌ரி‌ல் ‌சி‌றிதளவு பெரு‌ங்காய‌த்தை கல‌ந்து குடி‌த்தா‌ல் ந‌ன்கு ஏ‌ப்ப‌ம் ‌வி‌ட்டு, உ‌ப்பச‌ம் குறையு‌ம்.

செ‌ரியாமை:- செ‌ரியாமை, ம‌ந்த‌ம், பு‌ளியே‌ப்ப‌ம், வா‌ய்‌ப்பு, வ‌யி‌ற்றுவ‌லி போ‌ன்றவ‌ற்‌றி‌ற்கு பொ‌ரி‌த்த பெரு‌ங்காய‌ம், உல‌ர்‌ந்த துள‌சி இலை சம அளவு எடு‌த்து சூரண‌ம் செ‌ய்து கொ‌ள்ளவு‌ம்.

பித்தம் நீங்க:- வாதத்தையும், கபத்தையும் இது கட்டுக்குள் வைக்கும்.

பல்வலி:- பெருங்காயப் பொடியை வெறுமனே வாணலியில் போட்டு வறுத்து, வலி எடுக்கும் சொத்தைப் பல்குழியில் வைத்து கடித்துக் கொண்டால், வலி நொடியில் பறந்துவிடும். அதோடு வாய் துர்நாற்றமும் போய்விடும்.

ஆஸ்துமா தொந்தரவு:- ஆஸ்துமா தொந்தரவால் மூச்சுவிட முடியாமல் அவதிப்படுகிறவர்கள், பெருங்காயப் பொடியை அனலில் போட்டு, அந்தப் புகையை சுவாசித்தால் மூச்சுத் திணறல் உடனே தீரும்.

அடிக்கடி தலைசுத்தல்:- 50 கிராம் சீரகத்தில் 2 ஸ்பூன் உப்பு, சிறிதளவு பெருங்காயம், ஒரு பெரிய எலுமிச்சம்பழத்தின் சாற்றையும் சேர்த்து ஒரு நாள் ஊறவைத்து அடுத்த நாள் வெயிலில் நன்றாகக் காயவைத்து ஒரு பாட்டலில் வைத்துக் கொண்டு தலைச்சுத்தல், வயிற்றுப்பொறுமல், பசியின்மைக்கு இதில் அரை ஸ்பூன் சீரகத்தை எடுத்து வெறும் வயிற்றில் சாப்பிட்டால் மிகவும் நல்லது.

தீமைகள்:-

அளவுக்குஅதிகமாகச் சாப்பிட்டால் பித்தம் கூடும்.

"வீட்டு உணவையே சாப்பிடு...

வண்ணத்தையும், ருசியையும் பார்த்து ஏமாறாதே".

நன்றி:-SUVAIinbam.com(சுவைஇன்பம் டார்ட் காம்)
 
குறைந்த தூக்கம் உயர்ரத்த அழுத்த நோய்க்கு வழிவகுக்குமாம்….

மணக்கால் அய்யம்பேட்டை | 12:23 PM | Best Blogger Tips
குறைவாக தூங்குபவர்களுக்கு உயர்ரத்த அழுத்த நோய் ஏற்படும் என்று எச்சரிக்கின்றனர் மருத்துவர்கள். இன்றைக்கு தூக்கத்தைக் கெடுத்துக்கொண்டு டிவி, கம்யூட்டர் என்று கதியாக கிடப்பவர்களுக்கு உயர் ரத்த அழுத்தம் எளிதில் தாக்குமாம். அதேசமயம் தினசரி உறங்கும் நேரத்தை விட ஒரு மணிநேரம் முன்னதாக படுக்கைக்குச் செல்பவர்களுக்கு உயர் ரத்த நோய் பாதிப்பு ஏற்படுவதில்லை என்கின்றனர் நிபுணர்கள்.

இத்தாலியைச் சேர்ந்த பிஸா பல்கலைக்கழக ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆய்வில் இந்த உண்மை நிரூபிக்கப்பட்டுள்ளது. 58 வயதுடைய உயர்ரத்த அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களிடம் அவர்கள் சோதனை செய்தபோது அனைவரும் 5 மணிநேரத்திற்கு குறைவாக உறங்குவது கண்டறியப்பட்டது.

இதேபோல் மற்றொரு ஆய்வில் 75 வயதிற்கு மேற்பட்ட தூக்க குறைபாடினால் பாதிக்கப்பட்ட 784 பேர் பங்கேற்றனர். 2003ம் ஆண்டு முதல் 2007ம் ஆண்டுவரை அவர்களின் ரத்த அழுத்தம் சராசரியாக இருந்தது. அதே சமயம் தூக்கக்குறைபாடினால் பாதிக்கப்பட்ட பின்னர் 2007ம் ஆண்டு முதல் 2009ம் ஆண்டுவரை அவர்களின் ரத்த அழுத்தம் பரிசோதிக்கப்பட்டது. அவர்களில் 243 பேர் உயர்ரத்த அழுத்த நோயினால் பாதிக்கப்பட்டது தெரியவந்தது. இதன்மூலம் தூக்கக்குறைபாடு உள்ளவர்களுக்கு உயர் ரத்த நோய் ஏற்படும் வாய்ப்பு அதிகம் என்று ஆய்வாளர்கள் தெரிவித்தனர். இதன் காரணமாகவே மாரடைப்பு உள்ளிட்ட நோய்கள் ஏற்படுவதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

சீக்கிரம் உறங்கப் போங்க

அமெரிக்காவின் பாஸ்டனில் உள்ள ஹார்டுவேர்டு மருத்துவக் கல்லூரி நிபுணர்கள் உயர் ரத்த அழுத்த நோயினால் பாதிக்கப்பட்டவர்களிடம் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வில் பங்கேற்றவர்களை வழக்கமா உறங்கும் நேரத்தை விட ஒரு மணிநேரம் முன்னதாக படுக்கைக்கு செல்ல அனுமதித்தனர். 6 வாரம் தொடர்ந்து அவர்கள் நன்றாக உறங்கி இதுபோன்ற நடவடிக்கையில் ஈடுபடுத்தினர். பின்னர் அவர்களின் ரத்த அழுத்தம் பரிசோதிக்கப்பட்டது.

அவர்களின் உயர் ரத்தஅழுத்தம் குறைந்து சராசரி அளவாக இருந்தது. எனவே வழக்கத்தைவிட ஒரு மணி நேரத்துக்கு முன்னதாக தூங்கினால் ரத்த அழுத்த நோய் வராமல் தடுக்கலாம் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

சிரிப்பதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள்

மணக்கால் அய்யம்பேட்டை | 12:22 PM | Best Blogger Tips
வாய்விட்டு சிரித்தால் நோய் விட்டு போகும்' என்று கூறுவார்கள். இது எல்லோருக்கும் தெரிந்திருந்தும், சிலர் ஏனோ மருந்துக்குக் கூட சிரிப்பதே இல்லை. எப்போதும் மூஞ்சை `உம்' என்றே வைத்துக் கொண்டிருப்பார்கள்.

அடிக்கடி சிரித்துக்கொண்டு இருப்பவர்களுக்கு நிறைய பலன்கள் கிடைக்கின்றன என்கிறார்கள் மருத்துவர்கள். வாய்விட்டு சிரிப்பதால் கிடைக்கும் பலன்களாக மருத்துவர்கள் கூறுபவை :

* நாம் ஒவ்வொருவரும் உயிர்வாழ ஆக்சிஜன் இன்றியமையாதது. நாம் சிரிக்கும்போது அந்த ஆக்சிஜன் போதுமான அளவு உடலுக்கும் செல்கிறது. இதனால் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

* சிரிப்பதால் தசைகளில் ஏற்படும் வலிகம் தவிர்க்கப்படும். மன அழுத்தமும் போக்கப்படுகிறது.

* சிரிப்பு, தகவல்களை உடனுக்குடன் உள்வாங்கிக் கொள்ளும் வகையில் செயல்பட மூளைக்கு உறுதுணை புரிகிறது.

* சிரிப்பு, சமூகத்தோடு ஒன்றி மகிழ்ச்சியுடன் வாழ வழிவகை செய்கிறது. உதாரணம் : அடிக்கடி நகைச்சுவைகளை அள்ளி விடுபவர்களை சுற்றி ஒரு கூட்டம் எப்போதும் இருந்து கொண்டே இருக்கும்.

join nagapattinamnews@gmail.com

* உடல் சோர்வு தவிர்க்கப்பட்டு, புத்துணர்வுடன் செயல்பட சிரிப்பு துணை புரிகிறது.

* எவ்வளவு கடினமான பணிகளை செய்தாலும் புதிய உத்வேகம் கிடைக்கும் வகையில் உடலுக்கும் தூண்டுதலை சிரிப்பு ஏற்படுத்துகிறது.

* ரத்த ஓட்டம் சீராக இருக்க உதவுகிறது.

* இதயம் தொடர்பான நோய்கம் வருவதையும் சிரிப்பு தடுக்கிறது.

இப்படி... சிரிப்பதால் கிடைக்கும் பலன்களை அடுக்கிக்கொண்டே போகிறார்கள் மருத்துவர்கள்.

ஆண்களின் அழகைக் கெடுக்கும் 7 விஷயங்கள்!!!

மணக்கால் அய்யம்பேட்டை | 12:22 PM | Best Blogger Tips

அழகு என்பது பெண்களுக்கு மட்டும் என்பதில்லை ஆண்களுக்கும் தான். ஆனால் என்ன ஆண்களை விட பெண்கள் அவற்றிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றனர் என்பதால், அழகு பெண்களுக்கு மட்டும் என்று நினைக்கின்றோம். ஏனெனில் ஆண்களுக்கு அழகை பராமரிக்க சரியான நேரம் இல்லை. அவர்கள் குடும்பத்தை நன்கு ஒரு நிலைக்கு கொண்டு வர வேண்டுமென்று, ஓயாது உழைத்துக் கொண்டிருக்கின்றனர். மேலும் பல
ர் வேலையில் அதிக ஆர்வம், பொறுப்பு காரணமாக, அழகை கண்டு கொள்ளாமல் விடுகின்றனர்.

அதுமட்டுமின்றி ஸ்டைல் என்பதற்காக சிகரெட் பிடிப்பது, தூங்குகிறேன் என்ற பெயரில் அழகை கெடுக்கும் வகையில் தூங்குவது மற்றும் பல செயல்களாலும், ஆண்களின் அழகானது பாதிக்கப்படுகிறது. இவையே நீண்ட நாட்கள் தொடர்ந்தால், இளமையிலேயே முதுமைத் தோற்றத்தைத் தான் பெற நேரிடும். இதற்காக அடிக்கடி மேக்-கப் போட சொல்லவில்லை. அழகைக் கெடுக்கும் செயல்களை தவிர்த்து, அழகுப் பொருட்களில் சிலவற்றை மட்டும் பயன்படுத்தினாலே போதுமானது. சரி, இப்போது அத்தகைய அழகைக் கெடுக்கும் செயல்கள் என்னவென்று படித்துப் பார்த்து, அவற்றை சரிசெய்து, பெண்களின் முன் அழகாகக் காட்சியளியுங்கள்.

குப்புற தூங்குவது

தூங்கும் போது பக்கவாட்டிலோ அல்லது குப்புறப் படுத்து தூங்குவதால், முகமானது தலையணையில் அழுத்தப்படுகிறது. இவ்வாறு நீண்ட நேரம் தூங்குவதால், சருமத்துளைகளால் சுவாசிக்க முடியாமல், சுருக்கங்கள் ஏற்படுகின்றது. ஆகவே எப்போதும் முகத்தை அழுத்தும்படியாக தூங்காமல் இருக்க வேண்டும்

மாய்ச்சுரைசரை தவிர்ப்பது

மேலும் ஆண்கள் மாய்ச்சுரைசரை பயன்படுத்தாமல் இருப்பார்கள். ஏனெனில் அதைப் பயன்படுத்துவதை சிலர் விரும்பமாட்டார்கள். விருப்பமில்லை என்பதற்காக அதை தவிர்த்தால், பின் சருமம் மென்மையிழந்து, வறட்சியடைந்துவிடும். எனவே தினமும் படுக்கும் முன்னும், குளித்தப் பின்னரும் மாய்ச்சுரைசரை தடவுவது நல்லது.

சோப்பு

ஆண்கள் அழகுப் பொருட்களை பயன்படுத்த மாட்டேன் என்பதற்காக எப்போதும் முகத்திற்கு சோப்பை மட்டுமே பயன்படுத்துவர். இவ்வாறு எப்போதும் சோப்பை பயன்படுத்தினால், சருமம் வறட்சியடைந்துவிடுவதோடு, நாளடைவில் சுருக்கங்களும் வந்துவிடும். ஆகவே சோப்பைத் தவிர்த்து, ஆண்களுக்கென்று கடைகளில் விற்கும் ஃபேஸ் வாஷ்ஷை வாங்கி, பயன்படுத்துவது நல்லது.

புகைப்பிடித்தல்

அனைவருக்குமே புகைப்பிடித்தல் உடல் நலத்திற்கு கேடு என்பது நன்கு தெரியும். அதிலும் இவற்றை பிடிப்பதால், புற்றுநோய் வரும் என்பதும் தெரிந்த விஷயமே. ஆனால் அந்த சிகரெட்டை அதிகம் பிடிப்பதால், உடல் ஆரோக்கியம் கெடுவதோடு, அழகும் தான் பாதிக்கப்படும். அதாவது சருமத்தில் கோடுகள் மற்றும் வாயைச் சுற்றிலும் சுருக்கங்கள் ஏற்படும். ஆகவே அழகாக காணப்பட வேண்டுமென்று ஆசைப்பட்டால், இவற்றை தவிர்ப்பது நல்லது.

மொபைல்

மொபைலானது வீட்டில் இருக்கும் டாய்லெட்டை விட மிகவும் அசுத்தமானது. ஏனெனில் அந்த மொபைலை பாக்டீரியாவின் இருப்பிடம் என்று சொல்லலாம். அந்த அளவு அவற்றை பல இடங்களில் வைப்பதோடு, நிறைய பேரின் கைகளுக்கு சென்று, எண்ணற்ற பாக்டீரியாவை அதில் வைத்திருக்கும். அத்தகைய பாக்டீரியா அதிகம் நிறைந்துள்ள மொபைலை காதுகளில் வைத்து பேசும் போது, அதில் உள்ள பாக்டீரியாக்கள் முகத்திற்கு வந்து, கரும்புள்ளிகள், முகப்பருக்கள் மற்றும் பல தொற்றுநோய்களை சருமத்தில் வரவழைக்கின்றன. ஆகவே மொபைலை எப்போதும் கண்ட இடங்களில் வைப்பதை தவிர்க்க வேண்டும்.

பொடுகு

ஆண்கள் பல இடங்களுக்கு சுற்றுவதால், தலையில் பொடுகு வரும் வாய்ப்பு அதிகம் உள்ளது. அவ்வாறு வரும் பொடுகு அரிப்பை மட்டும் உண்டாக்குவதில்லை. சருமத்தையும் பாதிக்கிறது. அதுவும் எப்படியெனில், தலை அரிக்கும் போது கைகளை தலையில் வைக்கிறோம், பின் அதேக் கைகளை முகத்திலும் வைக்கிறோம். இதனால் பல சருமப் பிரச்சனைகள் வருகின்றன. ஆகவே நல்ல ஆன்டி-டான்ட்ரப் ஷாம்புகளை பயன்படுத்தி, தலையை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.

சூரியஒளி

ஆண்கள் ஒரு புல்லட் ப்ரூஃப் இல்லை. எப்படி பெண்களின் மீது சூரிய கதிர்கள் பட்டால் பிரச்சனைகள் வருகிறதோ. அதேப் போல் ஆண்களின் மீது பட்டாலும் பிரச்சனைகள் ஏற்படும். அதிலும் அளவுக்கு அதிகமாக வெளியே சுற்றுவது ஆண்கள் தான். அவ்வாறு சுற்றும் போது அளவுக்கு அதிகமான சூரியக்கதிர்கள் சருமத்தில் படுவதால், சரும புற்றுநோய்கள் வருவதோடு, பல தொற்றுநோய்களும் வரும். ஆகவே எப்போதும் வெளியே வெயிலில் செல்லும் போது, அரை மணிநேரத்திற்கு முன்னரே சன் ஸ்கிரீன் லோசனை தடவி, பின்னர் செல்ல வேண்டும். இதனால் சருமமானது பாதுகாக்கப்படுவதோடு, சுருக்கங்கள் ஏற்படாமலும் தடுக்கும்.