குறைந்த தூக்கம் உயர்ரத்த அழுத்த நோய்க்கு வழிவகுக்குமாம்….

மணக்கால் அய்யம்பேட்டை | 12:23 PM | Best Blogger Tips
குறைவாக தூங்குபவர்களுக்கு உயர்ரத்த அழுத்த நோய் ஏற்படும் என்று எச்சரிக்கின்றனர் மருத்துவர்கள். இன்றைக்கு தூக்கத்தைக் கெடுத்துக்கொண்டு டிவி, கம்யூட்டர் என்று கதியாக கிடப்பவர்களுக்கு உயர் ரத்த அழுத்தம் எளிதில் தாக்குமாம். அதேசமயம் தினசரி உறங்கும் நேரத்தை விட ஒரு மணிநேரம் முன்னதாக படுக்கைக்குச் செல்பவர்களுக்கு உயர் ரத்த நோய் பாதிப்பு ஏற்படுவதில்லை என்கின்றனர் நிபுணர்கள்.

இத்தாலியைச் சேர்ந்த பிஸா பல்கலைக்கழக ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆய்வில் இந்த உண்மை நிரூபிக்கப்பட்டுள்ளது. 58 வயதுடைய உயர்ரத்த அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களிடம் அவர்கள் சோதனை செய்தபோது அனைவரும் 5 மணிநேரத்திற்கு குறைவாக உறங்குவது கண்டறியப்பட்டது.

இதேபோல் மற்றொரு ஆய்வில் 75 வயதிற்கு மேற்பட்ட தூக்க குறைபாடினால் பாதிக்கப்பட்ட 784 பேர் பங்கேற்றனர். 2003ம் ஆண்டு முதல் 2007ம் ஆண்டுவரை அவர்களின் ரத்த அழுத்தம் சராசரியாக இருந்தது. அதே சமயம் தூக்கக்குறைபாடினால் பாதிக்கப்பட்ட பின்னர் 2007ம் ஆண்டு முதல் 2009ம் ஆண்டுவரை அவர்களின் ரத்த அழுத்தம் பரிசோதிக்கப்பட்டது. அவர்களில் 243 பேர் உயர்ரத்த அழுத்த நோயினால் பாதிக்கப்பட்டது தெரியவந்தது. இதன்மூலம் தூக்கக்குறைபாடு உள்ளவர்களுக்கு உயர் ரத்த நோய் ஏற்படும் வாய்ப்பு அதிகம் என்று ஆய்வாளர்கள் தெரிவித்தனர். இதன் காரணமாகவே மாரடைப்பு உள்ளிட்ட நோய்கள் ஏற்படுவதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

சீக்கிரம் உறங்கப் போங்க

அமெரிக்காவின் பாஸ்டனில் உள்ள ஹார்டுவேர்டு மருத்துவக் கல்லூரி நிபுணர்கள் உயர் ரத்த அழுத்த நோயினால் பாதிக்கப்பட்டவர்களிடம் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வில் பங்கேற்றவர்களை வழக்கமா உறங்கும் நேரத்தை விட ஒரு மணிநேரம் முன்னதாக படுக்கைக்கு செல்ல அனுமதித்தனர். 6 வாரம் தொடர்ந்து அவர்கள் நன்றாக உறங்கி இதுபோன்ற நடவடிக்கையில் ஈடுபடுத்தினர். பின்னர் அவர்களின் ரத்த அழுத்தம் பரிசோதிக்கப்பட்டது.

அவர்களின் உயர் ரத்தஅழுத்தம் குறைந்து சராசரி அளவாக இருந்தது. எனவே வழக்கத்தைவிட ஒரு மணி நேரத்துக்கு முன்னதாக தூங்கினால் ரத்த அழுத்த நோய் வராமல் தடுக்கலாம் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.