FDI யின் நிஜ முகம்...!

மணக்கால் அய்யம்பேட்டை | PM 12:03 | Best Blogger Tips


FDI மசோதா வெற்றி பெற்றதால் நாளையே உங்கள் தெருவில் வால் மார்ட்டோ இல்லை ஜெசி பென்னியோ இல்லை டெஸ்கோவோ தங்கள் கடையை விரித்து உங்கள் தெரு முனை அண்ணாச்சிகளை துரத்தி விடுவார்கள் என நினைக்க வேண்டாம்...

நான் FDI க்கு எதிராக எழுதிய காரணம், காங்கிரசின் மேஜை அடி டீலில் புழங்கிய பணம்.. அல்லாது நான் வணிகர் சங்கத் தலைவர் வெள்ளையன் போன்றோருக்கு மகுடி ஊதியதாக எண்ண வேண்டாம்... அல்லது அந்த கொள்கையில்லாத கூட்டமைப்புக்கு சார்பு செய்தோ அல்ல..

அவர் வருடா வருடம் எத்தனை கோடி செலவு செய்கிறார் தன பதவியை தக்க வைக்க? அதற்கு யார் பணம் கொடுக்கிறார்கள்? அவர் என்ன டாடா பிர்லா அம்பானியின் வாரிசா? இல்லை பணமில்லாமல் படுத்துக் கொண்டு ஜெயிக்க காந்தி அண்ணா எம்ஜியாரா?

இன்றைக்கு அரிசி விலை கொள்முதல் விலையான ரூ 15 லிருந்து ரூ 40 ஆன காரணம் இடைத் தரகர்களால்தான்... விற்பவன் விலையை விட மூன்று மடங்கு அதிகம் விற்க, பதுக்கலை நாடும் நடுவாந்திர அண்ணாச்சிகள்தான் இதில் பலன் பெறுகிறார்கள்...

இதுவரை யாரேனும் வணிகர் சங்கத் தலைவர் வெள்ளையனை கேட்டதுண்டா..? எப்படி இத்தனை வருடம் அவர் அந்தத் தலைவர் பதவியை தக்க வைத்துக் கொண்டுள்ளார் என்று..? அவர் என்ன காமராசரா? மக்களுக்கு விருப்பு வெறுப்பின்றி தொண்டு செய்ய...?

இடைத்தரகர்கள் தங்கள் சார்பாக கூப்பாடு போட ஒரு ஆளை தயார் செய்து வைத்திருக்கிறார்கள்.... வெள்ளையன் போல ஒரு ஆளை.... நல்ல கொழுத்த பணம் கொடுத்து... தங்கள் சார்பாக அரசாங்கத்திடம் பேசவும், ஒரு நாள் கடை அடைப்பு செய்யவும்... ஒவ்வொரு தெருவிலும் கடை வைத்திருக்கும் அன்னாச்சிகளே விழித்துக் கொள்ளுங்கள்.... இவர்கள் நல்லவர்கள் இல்லை... உங்கள் பணத்தில் உப்பு தின்று ஏப்பம் விடுபவர்கள்.

எழுதி வைத்துக் கொள்ளுங்கள் இன்று உங்கள் டைரியில்... FDI மூலமாக வரும் ஆதாயம் நேரடியாக பொது மக்களுக்கே போயிச் சேரும் என்பது உறுதி.... இருபத்தி ஐந்து வருடமாக தரமான பொருள்களை வெளிநாட்டில் உபயோகித்தவன் நான்.

இனி நேரடி கொள்முதல் மூலம் நடுத் தரகர்களின் கொள்ளை நின்று போகும்.... விவசாயிக்கு பணம் நேரடியாகப் போய்ச் சேரும், தர வாரியாக விற்பனை மேலோங்கும்.... நீங்கள் தரம் வேண்டுமென்றால் விலை கொடுங்கள்... பரவாயில்லை தரம் சுமாராக இருந்தால் போதும் என்றால் குறைந்த விலைக்கே உங்களுக்கு வால் மார்ட்டில் கிடைக்கும்..,... பத்து விதமான அரிசி வகைகள், பத்து விதமான பால் வகைகள், கலப்பில்லாத அரிசி, புழு இல்லாத பருப்பு, கல் இல்லாத கடுகும் மிளகும்.

நீங்கள் நிஜமாகவே அனுபவிக்கப் போகிறீர்கள், உங்களை ஏமாற்றிய இடைத் தரகர்களை ஒதுக்கி விட்டு... யாரும் சொல்வது போல சீனாவிலிருந்து இறக்குமதி செய்து விற்கப் போவதில்லை.... இந்தியாவிலேயே கொள்முதல் செய்து இந்தியாவிலேயே விற்கப் போகிறார்கள்... சீனாவிலிருந்து உணவுப் பொருள்கள் இறக்குமதி செய்ய பல ஆண்டுகளாக தடை செய்யப் பட்டுள்ளது...

நாசிக்கிலிருந்து வரும் நல்ல வெங்காயத்தை வகை வகையாய் பார்க்கப் போகிறீர்கள்.... தர்பூஸ் பழம் மஞ்சள் கலரில் பார்க்கப் போகிறீர்கள்... எதை எடுப்பது என்று தெரியாமல் இஞ்சி தக்காளி, பூண்டு, காய்கறி வகைகளில் திளைக்கப் போகிறீர்கள்.

நான் இத்தனை வருடங்களாக அனுபவித்த தரம் மிக்க பொருட்களை நீங்கள் அனுபவிக்கப் போகிறீர்கள்.

வழக்கம் போல என்னை என்னை FDI க்கு ஆதரவு அளிக்கும் அந்நிய அடிவருடி என்று விளித்தாலும் சரி, இல்லை காங்கிரசின் கைக்கூலி என்று கூப்பிட்டாலும் சரி.

என் கருத்துக்களில் நான் மாற மாட்டேன்.

ஜெய் ஹிந்த்...!

நன்றி : டிமிடித் பெட்கோவ்ஸ்கி.