பெருங்காய (மருந்து) உணவு...

மணக்கால் அய்யம்பேட்டை | 12:31 PM | Best Blogger Tips
நம்ம தமிழ்நாட்டில் ரசத்தையும், சாம்பாரையும் கமகமக்க வைக்கிற பெருமை பெருங்காயத்தை தான் சேரும்.

பச்சையாக இருக்கும் போது சகிக்க முடியாது. இதனுடைய வாசனை, சமையலில் சேர்த்த பிறகு கமகமக்கும்.

இதைப் பொரித்து உபயோகப்படுத்தலே நலம். பச்சையாக உபயோகித்தால் வாந்தியுண்டாகும்.

ஈரான், துருக்கி, ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் தான் பெருங்காயச்செடி வளருகிறது. சிறிய மரம் அளவுக்கு வளர்ந்த உடனே தண்டையும், வேரையும் கீறிவிட்டு, அதில் வடியும் பிசினை எடுத்து பக்குவப்படுத்தி காய வைத்தால், அதுதான் பெருங்காயம். பால் பெருங்காயம், சிவப்பு பெருங்காயம் என்று இதில் இரண்டு வகை இருக்கிறது.



பொதுவான நன்மைகள்:-

தினமும் பெருங்காயத்தை சாப்பாட்டில் சேர்த்துவந்தால் சுவை நரம்புகளைத் தூண்டி, ருசியை உண்டாக்கும். தானும் எளிதில் ஜீரணமாகி, மற்ற உணவுகளையும் சீக்கிரத்தில் செரிக்க வைக்கும். சுவை சேர்க்க மட்டுமின்றி, செரிக்கவும் இது உதவும். தசைகளுக்கு பலம் கொடுக்கும். சீறுநீரோட அளவைப் பெருக்கும் வயிற்று வலி, வயிறு உப்புசம் போன்ற தொல்லைகள் வராது. மலச்சிக்கலை நீக்கி, குடல்புழுக்களை அழிக்கும் அற்புத சக்தி வாய்ந்தது என்று ஏகப்பட்ட மருத்துவக் குணங்கள் இருக்கிறது. பிரசவத்திற்குப் பிறகு நஞ்சக் கொடியை வெளியேற்ற கொடுக்கப்படுகிறது. இதை ( பெருங்காயத்தை ) எண்ணெயில் கரைய வைத்துக் காயங்கட்கு மேலே பூசுவதற்கும், காது நோய்களில் பழக்கமான நேர் மருந்தாகக் காது வலியைக் குறைக்க பயன்படுகிறது.

மருத்துவகுணமும் உடையது:- வெங்காயம், பூண்டுக்கு உள்ள அதே மருத்துவக் குணங்கள் பெருங்காயதுக்கும் உள்ளன. நரம்புகளையும், மூளையையும் இயல்பாக்கி பாதிப்புகளைத் தடுக்கும்.

புரதச்சத்து பெற:- பெருங்காயத்தில் புரதச்சத்து நிறைந்திருக்கிறது. மீன் போன்ற அசைவ உணவுகளைச் சாப்பிட்டு புரதத்தைப் பெற முடியாத சைவ உணவுப் பழக்கம் உள்ளவர்களுக்கு அதை ஈடுகட்டும்.


மருந்து:-

கக்குவான்;- இதை நீர் விட்டு உரைத்து மார்பின் மீது பற்றிட குழந்தைகட்கு உண்டாகும் கக்குவான் குணப்படும்.

பிரசவத்தின் பின்;- பிரசவத்தின் பின், அழுக்கை வெளிப்படுத்தக் காயத்தைப் பொரித்து, வெள்ளைப் பூண்டு, பனை வெல்லத்துடன் சேர்த்துக் காலையில் கொடுக்கலாம்.

வ‌யி‌ற்று உ‌ப்பச‌ம்:- வ‌யி‌ற்று உ‌ப்பச‌ம் ஏ‌ற்ப‌ட்டவ‌ர்க‌ள் மோ‌ரி‌ல் ‌சி‌றிதளவு பெரு‌ங்காய‌த்தை கல‌ந்து குடி‌த்தா‌ல் ந‌ன்கு ஏ‌ப்ப‌ம் ‌வி‌ட்டு, உ‌ப்பச‌ம் குறையு‌ம்.

செ‌ரியாமை:- செ‌ரியாமை, ம‌ந்த‌ம், பு‌ளியே‌ப்ப‌ம், வா‌ய்‌ப்பு, வ‌யி‌ற்றுவ‌லி போ‌ன்றவ‌ற்‌றி‌ற்கு பொ‌ரி‌த்த பெரு‌ங்காய‌ம், உல‌ர்‌ந்த துள‌சி இலை சம அளவு எடு‌த்து சூரண‌ம் செ‌ய்து கொ‌ள்ளவு‌ம்.

பித்தம் நீங்க:- வாதத்தையும், கபத்தையும் இது கட்டுக்குள் வைக்கும்.

பல்வலி:- பெருங்காயப் பொடியை வெறுமனே வாணலியில் போட்டு வறுத்து, வலி எடுக்கும் சொத்தைப் பல்குழியில் வைத்து கடித்துக் கொண்டால், வலி நொடியில் பறந்துவிடும். அதோடு வாய் துர்நாற்றமும் போய்விடும்.

ஆஸ்துமா தொந்தரவு:- ஆஸ்துமா தொந்தரவால் மூச்சுவிட முடியாமல் அவதிப்படுகிறவர்கள், பெருங்காயப் பொடியை அனலில் போட்டு, அந்தப் புகையை சுவாசித்தால் மூச்சுத் திணறல் உடனே தீரும்.

அடிக்கடி தலைசுத்தல்:- 50 கிராம் சீரகத்தில் 2 ஸ்பூன் உப்பு, சிறிதளவு பெருங்காயம், ஒரு பெரிய எலுமிச்சம்பழத்தின் சாற்றையும் சேர்த்து ஒரு நாள் ஊறவைத்து அடுத்த நாள் வெயிலில் நன்றாகக் காயவைத்து ஒரு பாட்டலில் வைத்துக் கொண்டு தலைச்சுத்தல், வயிற்றுப்பொறுமல், பசியின்மைக்கு இதில் அரை ஸ்பூன் சீரகத்தை எடுத்து வெறும் வயிற்றில் சாப்பிட்டால் மிகவும் நல்லது.



தீமைகள்:-

அளவுக்குஅதிகமாகச் சாப்பிட்டால் பித்தம் கூடும்.




"வீட்டு உணவையே சாப்பிடு...

வண்ணத்தையும், ருசியையும் பார்த்து ஏமாறாதே".





நன்றி:-SUVAIinbam.com(சுவைஇன்பம் டார்ட் காம்)