சுபாஷ் சந்திர போஸை சிறையில் தாக்கிய பிரிட்டிஷ் ஐஜியை சுட்டுக்கொன்ற மூன்று இந்தியர்களின் தியாக வரலாறு

மணக்கால் அய்யம்பேட்டை | 11:37 AM | Best Blogger Tips

May be an image of monumentMay be an image of monument May be an image of monument

 சுபாஷ் சந்திர போஸை சிறையில் தாக்கிய பிரிட்டிஷ் ஐஜியை சுட்டுக்கொன்ற மூன்று இந்தியர்களின் தியாக வரலாறு:

 

லெப்டினன்ட் கர்னல் நார்மன் சிம்சன் 1940களில் வங்காளத்தின் ஐஜியாக (சிறை) இருந்தார். சிறையில் அடைக்கப்பட்ட சுதந்திரப் போராட்ட வீரர்களை சித்திரவதை செய்வதில் அவர் பெயர் பெற்றவர்.

 

நார்மனின் மேற்பார்வையில் கொடிய குற்றவாளிகள் சுதந்திரப் போராட்ட வீரர்களைத் தாக்குவது வழக்கம். ஒருமுறை நார்மனின் உத்தரவின் பேரில் சிறையில் இருந்த சுபாஷ் சந்திரபோஸை கைதிகள் குழு ஒன்று தாக்கியது. அன்று சுபாஷ் சந்திர போஸின் தோழர்கள் தேசப்பிரிய ஜதீந்திர மோகன், கிரண் சங்கர் ராய், சத்ய குப்தா போன்றோரும் தாக்கப்பட்டனர்.

 

இதற்குப் பிறகு பெங்கால் தன்னார்வலர்கள் குழு தனது இரு தொண்டர்களான தினேஷ் சந்திர குப்தா மற்றும் சுதீர் பாதல் குப்தா ஆகியோரை கல்கத்தாவுக்கு அழைத்தது. பினோய் கிருஷ்ண பாசு ஏற்கனவே கல்கத்தாவில் இருந்தார்.

 

பிரிட்டிஷ் அரசு நினைத்துக்கூடப் பார்க்காத ஒரு துணிச்சலான பணியைச் செய்யும் பொறுப்பு இந்த மூவருக்கும் வழங்கப்பட்டது.

 No photo description available.

ஐஜி சிம்சனுக்கு இனி உயிர்வாழத்தகுதி இல்லை, அவர் இந்த உலகத்தை விட்டுச்செல்லவேண்டிய நேரம் வந்துவிட்டது என்று மூவரிடமும் கூறப்பட்டது.

 

இதற்குப் பிறகு அவரை எங்கே, எப்படிக் கொல்வது என்ற கேள்வி எழுந்தது. பிரிட்டிஷ் நிர்வாகத்தின் அடித்தளத்தை ஆட்டம்காண வைக்கும் வகையில் அவரைக் கொல்ல வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. வங்காளத்தில் பிரிட்டிஷ் நிர்வாகத்தின் கோட்டையான ரைட்டர்ஸ் பில்டிங்கில் உள்ள அவரது அலுவலகத்தில் சிம்சன் பகிரங்கமாக சுட்டுக்கொல்லப்பட வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.

 

சுபாஷ் சந்திரபோஸ் உருவாக்கிய ’பெங்கால் தன்னார்வலர்கள் குழு’

 

1928 காங்கிரஸ் அமர்வின் போது சுபாஷ் சந்திர போஸால் பெங்கால் தன்னார்வலர்கள் குழு நிறுவப்பட்டது. தியாக உணர்வும் தேசபக்தியும் நிரம்பியவர்களின் ஒரு அமைப்பை அவர் உருவாக்கினார்.

 

பெங்கால் தன்னார்வலர் குழு உறுப்பினர்கள் சீருடையில் பார்க் சர்க்கஸில் தினமும் அணிவகுத்துச் செல்வார்கள். மேஜர் சத்ய குப்தா இதில் ஈடுபட்டவர்களுக்கு சண்டைப் பயிற்சி அளித்து வந்தார்.

 

வங்காளத்தின் பல்வேறு சிறைகளில் காவல் துறையின் அட்டூழியத்திற்கு எதிராக கிளர்ச்சி செய்ய 1930இல் 'ஆபரேஷன் ஃப்ரீடம்' என்ற இயக்கத்தை அவர் தொடங்கினார்.

 May be an image of temple and text

சிம்சனைக் கொல்லும் திட்டம் வெற்றியடைந்தாலும் அல்லது தோல்வியடைந்தாலும், அங்கிருந்து அவர்கள் உயிருடன் தப்பிச்செல்வதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு என்பதும் ஒரு தெளிவான விஷயமாக இருந்தது. இருந்த போதிலும், இந்த பெரிய பணிக்கு தாங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதில் இந்த மூன்று இளைஞர்களும் மகிழ்ச்சி அடைந்தனர். இந்த பணி பற்றி ஒரு சிலருக்கு மட்டுமே தெரியும்.

 

முன்னதாக டாக்காவின் பிரபல ஐஜி லாசனை டாக்காவில் உள்ள மருத்துவக் கல்லூரியில் வைத்து பினோய் கிருஷ்ண பாசு ஏற்கனவே சுட்டுக் கொன்றிருந்தார். எல்லா இடங்களிலும் போலீஸ் கண்காணிப்பு இருந்த போதிலும் அவர் வெற்றிகரமாக டாக்காவில் இருந்து கொல்கத்தா சென்றடைந்தார்.

 

பினாய்-பாதல்-தினேஷ் யார்?

 

பினாய் கிருஷ்ண பாசு 1908 ஆம் ஆண்டு செப்டம்பர் 11 ஆம் தேதி வங்கதேசத்தில் உள்ள முன்ஷிகஞ்ச் மாவட்டத்தில் பிறந்தார். 22 வயதிலேயே நாட்டிற்காக வாழ வேண்டும் என்று அவர் முடிவு செய்தார்.

 

தினேஷ் குப்தாவும் முன்ஷிகஞ்ச் மாவட்டத்தில் பிறந்தவர். பாதல் குப்தாவுடன், அவர்கள் இருவரும் பெங்கால் தன்னார்வலர்கள் குழுவின் உறுப்பினர்களாகவும் இருந்தனர். தனது சித்தப்பாக்கள் தர்னிநாத் குப்தா மற்றும் நாகேந்திரநாத் குப்தா ஆகியோரின் வாழ்க்கையின் தாக்கத்தால் புரட்சிகர நடவடிக்கைகளில் பங்கேற்க இவர்கள் முடிவு செய்தனர்.

 

இவர்கள் இருவரும் அலிப்பூர் சதி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு அரவிந்த கோஷுடன் பல நாட்கள் சிறையில் இருந்தனர். சிம்சனைக் கொல்லும் பணிக்காக இந்த மூன்று இளைஞர்களுக்கும் மேற்கத்திய பாணியிலான சூட் தைக்கப்பட்டது. அவர்களுக்காக ரிவால்வர்கள் மற்றும் தோட்டாக்களும் ஏற்பாடு செய்யப்பட்டன.

 

பினாய், வலியுல்லா லேனில் இருந்து மத்தியபூர்ஸில் உள்ள ராஜேந்திரநாத் குஹாவின் வீட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டார். பாதலும், தினேஷும் நியூ பார்க் தெருவில் உள்ள ரகசிய மறைவிடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

 

டிசம்பர் 8 ஆம் தேதி சிம்சனைக் கொல்லத் தேதி நிர்ணயிக்கப்பட்டது. மேலும் மூவரும் கிதிர்பூரில் உள்ள பைப் ரோடில் சந்திக்கும் திட்டம் உருவாக்கப்பட்டது.

 

1930 டிசம்பர் 8 ஆம் தேதி இந்த மூவரும் கடைசி முறையாக தங்கள் கோட் பாக்கெட்டுகளில் தங்கள் கைகளை செலுத்தி பாக்கெட்டுகளை சரிபார்த்தனர். அங்கு ரிவால்வர்களும் தோட்டாக்களும் இருந்தன. பாதல் தனது பாக்கெட்டில் பொட்டாசியம் சயனைடு காப்ஸ்யூலையும் வைத்திருந்தார்.

 

கடிகாரம் 12 மணியை காட்டியபோது இந்த மூவரின் பயணம் தொடங்கியது. ரைட்டர்ஸ் பில்டிங்கிற்கு அழைத்துச் செல்லும்படி ஒரு டாக்ஸி டிரைவரிடம் சொன்னார்கள்.

 

சுப்ரதீம் சர்க்கார் தனது 'இண்டியா க்ரைட் தட் நைட்' என்ற புத்தகத்தில், "டாக்ஸி ரைட்டர்ஸ் பில்டிங்கின் பிரதான வாயிலில் நின்றவுடன், அங்கிருந்த போலீஸ் அதிகாரி, சூட்-பூட் அணிந்த மூன்று பேர் கீழே இறங்குவதைக் கண்டார். டாக்ஸி கட்டணத்தை செலுத்திய பிறகு அந்த மூவரும் முழு தன்னம்பிக்கையுடன் முன்னேறினர்,” என்று குறிப்பிட்டுள்ளார்.

 

”போலீஸ் அதிகாரி மற்றும் அவரது குழுவினருக்கு இந்த மூவர் மீது எந்த சந்தேகமும் எழவில்லை. அவர்கள் மாடிப்படிகளில் ஏறி முதல் மாடியை அடைந்தனர். லெப்டினன்ட் கர்னல் சிம்சன் தனது அறையில் அமர்ந்து கடிதம் எழுதிக் கொண்டிருந்தார். அவரது தனிப்பட்ட உதவியாளர் ஜே.சி.குஹா மற்றும் பியூன் பாகல் கான் அருகில் நின்று கொண்டிருந்தனர். உதவி பியூன் ஃபாகு சிங், கதவுக்கு வெளியே இருந்தார்."

 

பியூனை தள்ளிவிட்டு சிம்சனின் அறைக்குள் நுழைந்தனர்

 

சிம்சனின் அலுவலகம் நீண்ட தாழ்வாரத்தின் மேற்கு முனையில் இருந்தது. பல பிரிட்டிஷ் அதிகாரிகளின் அலுவலகங்களும் அங்கு இருந்தன. சாஹிப்களின் அறைகளுக்கு வெளியே அவருடைய ஆர்டர்லிகள் நின்று கொண்டிருந்தனர். பல எழுத்தர்கள் கோப்புகள் மற்றும் காகிதங்களுடன் தாழ்வாரத்தில் அவர்களை கடந்து சென்றனர்.

 

மூன்று இளைஞர்களும் வேகமாக நடந்து சிம்சனின் அறையின் வாயிலை அடைந்தனர்.

 

அறைக்கு வெளியே இருந்த ஃபாகு சிங் அவர்களிடம், 'சஹாப்பைச் சந்திக்க வந்திருக்கிறீர்களா?' என்று கேட்டார். பினாய் பதிலுக்கு, 'அவர் உள்ளே இருக்கிறாரா?' என்று வினவினார். 'அவர் உள்ளே இருக்கிறார். ஆனால் பிஸியாக இருக்கிறார். நீங்கள் அவரை சந்திக்க நேரம் பெற்றுக்கொண்டுள்ளீர்களா? உங்களிடம் விசிட்டிங் கார்டு இருந்தால் அதை என்னிடம் கொடுங்கள் அல்லது இந்த பதிவேட்டில் உங்கள் பெயரை எழுதுங்கள். உங்களைப் பற்றி ஐயாவிடம் சொல்கிறேன். ஆனால் உள்ளிருந்து பதில் வரும் வரை நீங்கள் காத்திருக்க வேண்டும்,” என்று ஃபாகு கூறினார்.

 

மூவரும் எதையும் காதில் போட்டுக்கொள்ளாமல் ஃபாகு சிங்கை தள்ளிவிட்டு கதவைத் திறந்தனர். இதையடுத்து கண் இமைக்கும் நேரத்தில் அவர்கள் கைகளில் ரிவால்வர் வந்தது. சிம்சனின் உடல் குண்டுகளால் துளைக்கப்பட்டது.

 

சுப்ரதீம் சர்க்கார் எழுதுகிறார், "சிம்சன் தலையை உயர்த்தி, மூன்று இளைஞர்கள் ரிவால்வர்களுடன் தனக்கு முன்னால் நிற்பதைக் கண்டார். அவரது உதவியாளர் குஹா பின்வாங்கியவுடன் இந்த மூவரின் ரிவால்வர்களில் இருந்து தோட்டாக்கள் சிம்சனின் உடலைத்துளைத்தன. நகரும் வாய்ப்பு கூடக்கிடைக்காமல் நாற்காலியில் அமர்ந்தபடியே சிம்சனின் உயிர் உடலைவிட்டுப்பிரிந்தது.

 

இந்தக் காட்சியைப் பார்த்த குஹா கத்தியபடி , அறையை விட்டு வெளியே ஓடினார். ஃபாகு சிங் ஓடிப்போய் மற்றொரு பிரிட்டிஷ் அதிகாரி தஃப்னல் பாரெட்டின் அறையில் தஞ்சம் புகுந்தார்.

 

பாரெட் உடனடியாக அருகில் உள்ள லால் பஜாருக்கு போன் செய்து பாதுகாப்பு படையினரை எச்சரித்தார். "ரைட்டர்ஸ் பில்டிங்கில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. சிம்சன் இறந்துவிட்டார். ஆயுதமேந்திய பாதுகாப்பு ஆட்களை உடனடியாக அனுப்புங்கள்" என்று அவர் சொன்னார்.

 

'தாழ்வாரத்தில் நடந்த சண்டை'

 

போலீஸ் கமிஷனர் சார்லஸ் டெகார்ட் வாகனத்தை அழைப்பதை விட ரைட்டர்ஸ் கட்டிடத்திற்கு ஓடிச்செல்வது பொருத்தமானதாக இருக்கும் என்று நினைத்தார். அவருடன் சில ரிசர்வ் படை வீரர்களும் வந்தனர். இரண்டு மூன்று நிமிடங்களில் அவர்கள் ரைட்டர்ஸ் கட்டிடத்தை அடைந்தனர்.

 

இதற்கிடையில், பெங்கால் ஐஜி கிரெய்க் இரண்டாவது மாடியில் உள்ள தனது அறையில் இருந்து கையில் ரிவால்வருடன் முதல் தளத்திற்கு வந்தார்.

 

சிம்சனை சுட்டுக் கொன்ற பிறகு, தினேஷ் சந்திர குப்தா, சுதிர் பாதல் குப்தா மற்றும் பினாய் கிருஷ்ண பாசு ஆகியோர் கைகளில் ரிவால்வர்களுடன் தாழ்வாரத்தில் மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி நடக்கத் தொடங்கினர்.

 

இதற்கிடையில் துப்பாக்கிச் சூடு நடந்த செய்தி எங்கும் பரவியது. தாழ்வாரத்தில் நடந்துகொண்டிருந்த மற்றவர்கள் கிடைத்த இடத்தில் ஒளிந்துகொண்டனர்.

 

தாழ்வாரத்தில் அமைதி நிலவியது. அப்போது இந்த மூவரும் சத்தமாக 'வந்தே மாதரம்' என்று முழக்கங்களை எழுப்பினர்.

 

பின்னர் இந்த முழு நிகழ்வுக்கும் ' பேட்டில் ஆஃப் வராண்டாஸ்' என்று பெயர் வழங்கப்பட்டது. அந்த நேரத்தில் ஃபோர்டு என்ற சார்ஜென்ட் சில தனிப்பட்ட வேலைக்காக ரைட்டர்ஸ் பிடிங்கிற்கு வந்திருந்தார். அவரிடம் ஆயுதம் ஏதும் இருக்கவில்லை. மாடிப்படிக்கு அருகே நின்றுகொண்டு அவர் இந்த முழு நிகழ்வையும் பார்த்துக்கொண்டிருந்தார்.

 

மூன்று இளைஞர்களும் பாஸ்போர்ட் அலுவலகத்திற்குள் நுழைந்தனர்

 

"ஐஜி கிரெய்க் இந்த மூன்று இளைஞர்களைப் பார்த்ததும் அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினார். ஆனால் அந்த தோட்டா அவர்கள் யாரையும் தாக்கவில்லை. ஃபோர்டு, கிரேக்கிடமிருந்து ரிவால்வரை வாங்கிக்கொண்டு மீண்டும் இந்த இளைஞர்களை நோக்கி சுட்டார்,"என்று சுப்ரதீம் சர்க்கார் எழுதியுள்ளார்.

 

"பினாய்-பாதல்-தினேஷ் ஆகிய மூவரும் ஓடியபடி பதிலடி கொடுக்க ஆரம்பித்தனர். சிறிது நேரத்தில் ரிவால்வரில் தோட்டாக்கள் தீரத்தொடங்கின. ரிவால்வர்களில் மீண்டும் தோட்டாக்களை லோட் செய்யவேண்டி இருந்தது. அந்த நேரத்தில் அவர்கள் மூத்த அதிகாரி ஜே.டபிள்யூ. நெல்சனின் அறைக்கு வெளியே தாங்கள் நிற்பதைக் கண்டார்கள்."

 

பாஸ்போர்ட் அலுவலகம் பக்கத்திலேயே இருந்தது. பினாயும் பாதலும் தங்கள் ரிவால்வர்களை லோட் செய்ய உள்ளே நுழைந்தனர். வெளியில் நின்று கொண்டே தினேஷ் ரிவால்வரை லோட் செய்ய முயன்றார்.

 

நெல்சன் தனது அறையின் கதவைத் திறந்தவுடன், தினேஷ் அவரை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். தோட்டா நெல்சனின் தொடையை தாக்கியது, அவர் சுடப்பட்ட போதிலும் அவர் தினேஷை எதிர்கொண்டு அவரது கையிலிருந்து ரிவால்வரைப் பறிக்க முயன்றார்.

 

துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டு பினாயும் பாதலும் கையில் ரிவால்வருடன் பாஸ்போர்ட் அலுவலகத்திலிருந்து வெளியே வந்தனர். பினாய் நெல்சனின் தலையில் ரிவால்வரின் பின்புறத்தால் அடித்தார். நெல்சன் தரையில் விழுந்தார். ஆனால் தரையில் ஊர்ந்தபடி அறைக்கு வெளியே சென்றுவிட்டார். அவரது உடல் முழுவதிலும் இருந்து ரத்தம் வழிந்து கொண்டிருந்தது. இதற்கிடையில் மூன்று வாலிபர்களும் மீண்டும் பாஸ்போர்ட் அலுவலகத்திற்குள் நுழைந்தனர்.

 

லால் பஜாரில் இருந்து ரிசர்வ் படை அங்கு வரும் வரை கிரேக் மற்றும் ஃபோர்டைத் தவிர யாருக்கும் தங்கள் அறையை விட்டு வெளியே வர தைரியம் இருக்கவில்லை.

 

இரண்டாவது மாடியில் உயர் போலீஸ் அதிகாரிகளின் அறைகள் இருந்தன ஆனால் யாரும் வெளியே வரவில்லை. பாதுகாப்பு படையினர் அங்கு சென்றடைந்தவுடன் நிலைமை மாறத் தொடங்கியது. பினாய்-பாதல்-தினேஷ் இருந்த பாஸ்போர்ட் அலுவலகம் எல்லா பக்கங்களிலும் இருந்து சுற்றி வளைக்கப்பட்டது.

 

கதவு இடுக்கில் இருந்து தினேஷ் சுட்டார். ஆனால் தோட்டா இலக்கை தாக்கவில்லை. போலீஸ் அதிகாரி ஜோன்ஸ் திருப்பிச் சுட்டார். இந்த தோட்டா தினேஷின் தோளில் பட்டு அவர் காயம் அடைந்தார்.

 

"அவர்கள் நாலாபுறமும் சுற்றி வளைக்கப்பட்டனர். துப்பாக்கி ஏந்திய வீரர்கள் கதவின் இருபுறமும் நிறுத்தப்பட்டனர். மூவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர். ஒரு அதிசயம் நடந்தால் மட்டுமே தாங்கள் பாதுகாப்பாக அங்கிருந்து வெளியேற்ற முடியும் என்று அவர்கள் உணர்ந்தனர்." என்று சுப்ரதீம் சர்க்கார் எழுதுகிறார்.

 

தாங்கள் பிடிபடப்போகிறோம் , தோட்டாக்கள் தீரப்போகின்றன என்று உணர்ந்தும் அந்த மூவரும் மரணத்திற்கு தயாரானார்கள். பாதல் தனது பாக்கெட்டிலிருந்து பொட்டாசியம் சயனைடு காப்ஸ்யூலை எடுத்து அதை விழுங்கினார்.

 

அவரது உடல் தரையில் சரிந்தது. அப்போது வெளியே நின்றிருந்த காவலர்களுக்கு அறைக்குள் இருந்து இரண்டு துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டது.

பினாயும், தினேஷூம் தங்களைத்தாங்களே தலையில் சுட்டுக்கொண்டனர்.

 

பினாய் மற்றும் தினேஷ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்

 

துணை கமிஷனர் பார்ட்லி கதவுக்கு அடியில் இருந்து எட்டிப்பார்த்தார். தரையில் ரத்த வெள்ளத்தில் இரண்டு பேர் கிடப்பதை அவர் கண்டார். போலீசார் கதவை திறந்து பார்த்தபோது, தினேஷ் அருகில் .455 வெப்லி ரிவால்வர் கிடந்தது.

 

பினாய் தனது கால்சட்டையின் பின் பாக்கெட்டில் .32 போர் ஐவர் ஜான்சன் ரிவால்வர் வைத்திருந்தார். பாதலின் உடல் அருகே .32 போர் அமெரிக்க ரிவால்வர் ஒன்றும் கிடந்தது. தோட்டாக்கள் தரையில் சிதறிக்கிடந்தன. மூவரின் தொப்பிகளும் விழுந்திருந்தன.

 

இது தவிர, இந்திய தேசிய காங்கிரசின் இரண்டு கொடிகள் தரையில் கிடந்தன. பினாயின் கால்சட்டையிலும் ஒரு கொடி காணப்பட்டது.

 

பாதலின் உடல் பிணவறைக்கு கொண்டு செல்லப்பட்டது, பினாய் மற்றும் தினேஷ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

 

எப்படியாவது இந்த இருவரையும் காப்பாற்ற தங்களால் இயன்றவரை ஆங்கிலேயர்கள் முயன்றனர். இதன்மூலம் சதித்திட்டத்தைப் பற்றி தெரிந்துகொள்ள வாய்ப்பு கிடைக்கும் என்று அவர்கள் கருதினர். அடுத்த நாள் ஆனந்தபஜார் பத்ரிகாவின் தலைப்புச் செய்தி, 'வங்காளத்தின் சிறைக் கண்காணிப்பாளர் சுட்டுக் கொல்லப்பட்டார்.'என்று இருந்தது.

 

இருவரையும் காப்பாற்ற டாக்டர்கள் எவ்வளவோ முயன்றும் பினாயை காப்பாற்ற முடியவில்லை. அவர் 1930 டிசம்பர் 13 ஆம் தேதி காலமானார்.

 

அவர் இறப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு அவரது தந்தை தனது மகனை கடைசியாகப் பார்க்க அனுமதிக்குமாறு பிரிட்டிஷ் அரசிடம் முறையிட்டார். அவரது கோரிக்கையை அரசு ஏற்றுக்கொண்டது. பலத்த காயம் அடைந்த தினேஷ் உயிர் பிழைத்தது ஒரு ஆச்சரியமான விஷயம்.

 

இந்த விவகாரம் நீதிமன்றத்தை அடைந்தது. விசாரணை நடத்திய நீதிபதி ரால்ப் ரெனால்ட்ஸ் கார்லிக் தனது தீர்ப்பை வழங்கினார், 

"கொலைக்கான தண்டனை மரணம். கர்னல் சிம்சனைக் கொன்ற மூன்று பேரில் தினேஷ் சந்திர குப்தாவும் ஒருவர் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. எனவே இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 302 இன் கீழ் நான் அவருக்கு மரண தண்டனை விதிக்கிறேன்."

 

1931 ஜூலை 7 ஆம் தேதி அதிகாலை 4.45 மணிக்கு தினேஷ் தூக்கிலிடப்பட்டார். அப்போது அவரது வயது 19 மட்டுமே.

 

தினேஷின் மரணத்தை தடுத்து நிறுத்தக் கோரி கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது. இறுதியாக அவரது மரணத்தைத் தடுக்கக் கோரி ஆளுநருக்கு மனு அனுப்பப்பட்டது. அதை அவர் நிராகரித்தார்.

 

சட்டம்-ஒழுங்கு சீர்குலைவு ஏற்பட வாய்ப்புள்ளதால் அவர் தூக்கிலிடப்படும் தேதி மற்றும் நேரம் ரகசியமாக வைக்கப்பட்டது.

 

ஆனாலும் அந்த செய்தியை மறைக்க முடியவில்லை. 'Dauntless Dinesh Dies at Dawn’ (அச்சமற்ற தினேஷ் அதிகாலையில் மரணம்) என்ற தலைப்புச்செய்தியுடன் அடுத்த நாள் 'அட்வான்ஸ்' நாளேடு வெளியானது.

 

மறுநாள் கொல்கத்தாவின் ஒவ்வொரு தெருவிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பை மக்கள் கண்டனர். தினேஷ் சந்திர குப்தா தூக்கிலிடப்பட்டதற்கான அறிகுறியாக இது இருந்தது.

 

தினேஷ் தூக்கிலிடப்பட்ட 20 நாட்களுக்குப் பிறகு, அவருக்கு மரண தண்டனை விதித்த நீதிபதி ரால்ப் ரெனால்ட்ஸ் கார்லிக், கன்னையாலால் பட்டாச்சார்யாவால் அவரது நீதிமன்றத்தில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

 

சுதந்திரத்திற்குப் பிறகு, கல்கத்தாவில் உள்ள டல்ஹவுசி சதுக்கம் இந்த மூவரின் நினைவாக 'பிபிடி பாக்' என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. BBD என்றால் பினாய், பாதல் மற்றும் தினேஷ்

 

 Thanks & Copy FB 

Paranji Sankar

திருச்செங்கோட்டு

மணக்கால் அய்யம்பேட்டை | 10:39 AM | Best Blogger Tips

 May be an image of temple and text that says "12 12-Jul20267:12:36a. Jul 2026 7 7:1 7:12 12:3 2:36 am"

 திருச்செங்கோட்டு
May be an image of temple and text that says "ஸ்ரீதேவி பூதேவி சமேத அருள்மிகு ஆதிகேசவப்பெருமால" 

 திருச்செங்கோடு மலை மேல இருக்கிற ஸ்ரீ அர்த்தநாரீஸ்வரர் கோயில்
May be an image of temple and text that says "ဘလ அருள்மிகு செங்கோட்டு வேலவர் உற்சவர்" 
மலை ஏறுவதற்கு முன்பு அடிவாரத்தில் காருக்கு 20 ரூபாயும், பைக்குக்கு 10 ரூபாயும், டோக்கன் வாங்கிக் கொண்டனர்.
 May be an image of temple and text that says "ஸ்ரீ அர்த்தநார்ஸ்வரர் ஸ்வரர்"
2.5 கி.மீ தூரமுள்ள மலைச்சாலையில் காரில் ஏறிக்கொண்டே ஒரு புறம் திருச்செங்கோடு நகரத்தின் அழகை ரசித்தபடியே, மறுபுறம் குரங்குகள் கூட்டத்தோடு அமர்ந்து செய்யும் சேட்டைகளை ரசித்தபடியேயும், எங்கள் பயணம் தொடர்ந்தது.
 
திருச்செங்கோடு பேருந்து நிலையத்திலிருந்து மலை மீதுள்ள கோவிலுக்கு செல்ல தேவஸ்தான பேருந்துகளும் நிறைய உள்ளது.
மலைக்கு மேலே செல்ல படிப்பாதை வசதியும் உள்ளது.
 
படிப்பாதை வழியாக 1200 படிகளை கடந்து கோயிலுக்கு மேலே செல்லலாம்.
படிப்பாதை வழியாக செல்லும் வழியில் 60 அடி நீளம் கொண்ட ஆதிசேஷனின் திரு உருவத்தை காணலாம்.
 May be an image of text
நாகதோஷம் உள்பட பல்வேறு தோஷங்களால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு வந்து நாகர் வழிபாடு செய்தால் தோஷங்கள் நீங்கும் என்பது மக்களின் நம்பிக்கை.
 May be an image of ‎temple and ‎text that says "‎消ル造 செங்கோட்டு வேலவர் சக்கோடுவேவ்சன்ணதி சன்ணத் யாமிருக்க பயமேன் חרדישים הותי 時コ 15 15Jul2026 Jul 15Jul2 2026, pm 00417‎"‎‎
காலை நேரமாதலால், கோவில் இயற்கை அழகோடு, நல்ல அருமையான தென்றல் காற்றோடு, பனி படர்ந்து, சூப்பராக இருந்தது.
குரங்குகள் அங்கும் இங்கும் தாவிக் கொண்டிருந்தன. 
 May be an image of Victoria Peak and fog
முகூர்த்த நாள் என்பதால் எங்கே பார்த்தாலும் புதியதாய் திருமணமான மணமக்கள், தங்கள் சொந்தங்களோடு, போட்டோ எடுத்தபடி, இங்குமங்குமாக உலாவிக் கொண்டிருந்தனர்.
திருச்செங்கோட்டின் தொன்மையான பெயர் திருக்கொடிமாடச்செங்குன்றூர்.
 May be an image of temple
திருக்கொடிமாடச்செங்குன்றூர் என்றால் கொடிகள் அசைந்தாடுகின்ற மாடமாளிகைகள் நிறைந்த செந்நிற மலையை உடைய ஊர் என்பது பொருள்.
 May be an image of street and monument
திருச்செங்கோடு ஈரோட்டில் இருந்து கிழக்கில் 20 கிலோமீட்டர் தொலைவிலும், சேலத்தில் இருந்து தென்மேற்கு 45 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது.
 
இத்திருத்தலத்தில் அருள்மிகு ஸ்ரீ அர்த்தநாரீஸ்வரர், அருள்மிகு ஸ்ரீ செங்கோட்டு வேலவர், அருள்மிகு ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் ஆகிய மூன்று தெய்வங்களும் கருநிலை கொண்ட மூர்த்திகளாக எழுந்தருளியுள்ளனர்.
 May be an image of flower
இங்கு எவ்வாறு சிவபெருமான் தன்னுடைய பாதியையும், பார்வதி தேவி தன்னுடைய பாதியையும் இணைத்து அர்த்தநாரீஸ்வரராக இங்கே காட்சி தருகிறார்களோ அதே போல தம்பதியர் இங்கு சென்று வழிபட்டால், 
 
தம்பதிகளுக்குள் உள்ள சண்டை சச்சரவுகள் நீங்கி, இருவரும் ஒன்றிணைந்து சந்தோஷமாக குடும்ப வாழ்க்கையை வாழ்வர்.
 
அடிக்கடி சண்டை சச்சரவுகள் வரும் கணவன் மனைவி இங்கே சென்று வழிபட்டு வர, குடும்பத்தில் அமைதியும், தம்பதிக்குள் ஒற்றுமையும் நிலவும்.
 May be an image of temple
சாமி தரிசனம் முடிந்து கோவிலை வலம் வரும்போது சிற்ப மண்டபத்தில் உள்ள சிற்பங்கள் நம் கண்களை கவருகின்றன.
 
அதிலும் ஒரு இடத்தில் அண்ணாந்து பார்த்தால் மேலே உள்ள சிற்பங்களில் கல்லினால் செதுக்கப்பட்ட கற்சங்கிலிகள் நம்மை ஆச்சரியப்படுத்தும். 
 
சிற்பங்களைக் கண்டு ரசித்து மெய்மறந்து போவீர்கள்.
 
திருச்செங்கோடு ஸ்ரீ அர்த்தநாரீஸ்வரர் திருக்கோவில் தினசரி திறந்திருக்கும் நேரம் :
காலை 6 மணி முதல் மாலை 7 மணி வரை.
தினசரி காலை 6:15 மணிக்கு கோ பூஜையும், காலை 8 மணிக்கு கால சந்தி பூஜையும், மதியம் 12 மணிக்கு உச்சி கால அபிஷேக பூஜையும், மாலை 5 மணிக்கு சாய ரட்சை பூஜையும், மாலை 6 மணிக்கு தங்க ரத புறப்பாடும் நடைபெறுகிறது.
 May be an image of temple and text
மதியம் 2 மணியிலிருந்து 3 மணி வரை உணவு இடைவேளைக்காக கோவில் நடை அடைக்கப்பட்டு இருக்கும்.
 May be an image of motorcycle, temple and monument
பௌர்ணமி தினத்தன்று பக்தர்கள் திருச்செங்கோடு மலையை கிரிவலம் வருவது விசேஷமாகும். 
 May be an image of grass, road, street and fog
இந்த திருச்செங்கோடு நாகமலையை ( சேஷகிரியை ) ஒருமுறை வலம் வந்தால் 3 உலகங்களுக்கும் சென்று வந்தால் என்ன பலன் கிடைக்குமோ அந்த பலன் கிடைக்கும்.
பக்தர்களின் கோரிக்கைகள் நிறைவேறும்.
நோய் மற்றும் பிணிகளின்றும் மீட்கப்பட்டு உடல் நலமுடன் வாழ்வர்.
 May be an image of temple and monument
நேரம் கிடைக்கும் போது நீங்களும் உங்கள் குடும்பத்தினரும் இங்கு சென்று ஸ்ரீ அர்த்தநாரீஸ்வரரை வழிபட்டு வாழ்வில் அனைத்து செல்வங்களையும் பெற்று மென்மேலும் மகிழ்ச்சியாக வாழ்ந்திட வாழ்த்துகிறேன்.
 
May be an image of temple and text that says "செங்கோட் 会 யாமிரு 時 Lnce ctions ្អ្នក1គន 15 15Jul2026, 15Jul Jul 2026,"
May be an image of temple and monumentMay be an image of jeep, car, road and text that says "OИ J Rmh န- 12-Jul-20267:30:21am 12-Ju Jul 2026 7:30:21 am"

May be an image of monument and temple 

 

May be an image of temple and text 

May be an image of christmas tree, monument, temple and text 

May be an image of cable car, temple and Victoria Peak 

🙏🌹நன்றி இணையம்            🌹🙏

🌷 🌷🌷 🌷 🌷 🌷🌷 🌷

 

கதவு மலை சிவன் கோவிலில்

மணக்கால் அய்யம்பேட்டை | 9:58 AM | Best Blogger Tips

 May be an image of tree and text that says "கதவு மலை நாதன் கோவிலுக்கு செல்லும் வழி"

 

கூட்டமே இல்லாத ஒரு சிவன் கோவிலில்... 30 நிமிடம் அமைதியா உட்கார்ந்த அந்த அனுபவம் இன்னும் மனசை விட்டு போகவில்லை. ❤️🙏
 
பொதுவாக பெரிய கோவில்களுக்கு போனா...
கூட்டத்தோட கூட்டமா போய்...
வரிசையில நின்னு...
 
சாமியை பார்த்தோமா, பார்க்கலையா என்று தெரியாம திரும்பி வந்துடுவோம்.
ஆனா...
 
கதவு மலை சிவன் கோவிலில் நான் அனுபவிச்சது அதுக்கு நேர்மாறானது.
தாண்டிக்குடியிலிருந்து சுமார் 30–45 நிமிடம் jeep-ல off-road பயணம்.
 May be an image of mountain
போகும் வழியிலேயே சில இடங்களில் jeep-ஐ நிறுத்தி, மேற்கு தொடர்ச்சி மலையின் அழகை ரசிக்கணும் போல இருக்கும். அந்த road trip-ஏ இந்த பயணத்தோட ஒரு பெரிய நினைவு. 🌿
கோவிலுக்கு போனப்போ...
அங்க யாருமே இல்லை.
No photo description available. 
நானும்...
சிவனும்...
சுற்றியிருந்த இயற்கையும்...
அவ்வளவுதான்.
 
அந்த அமைதியில கிட்டத்தட்ட 30 நிமிடம் எதுவும் பேசாம உட்கார்ந்திருந்தேன்.
எவ்வளவு வெயில் அடிச்சாலும்...
அங்க வீசுற காற்று மட்டும் அவ்வளவு இதமா இருக்கும்.
 
அந்த 30 நிமிட அமைதி...
அந்த 5 மணி நேர பயணம்...
என் வாழ்க்கையில மறக்க முடியாத நினைவுகளில் ஒன்றா மாறிடுச்சு. ❤️
இந்த மலை, ஒரு பெரிய கதவு மாதிரி தோற்றம் கொடுக்குறதால்தான் "கதவு மலை"ன்னு அழைக்கப்படுறதுன்னு உள்ளூர் மக்கள் சொல்றாங்க.
 
இங்குள்ள இன்னொரு தனிச்சிறப்பு...
சிவபெருமான் லிங்க வடிவில் இல்லாமல், உருவ வடிவில் அருள்பாலிக்கிறார் என்பதுதான்.
சாதாரண நாட்களில் இங்கு அமைதியாக தரிசனம் செய்யலாம்.
 
ஆனா மகா சிவராத்திரி மாதிரி முக்கிய நாட்களில், நிறைய பக்தர்கள் நடந்தே மலையை அடைந்து வழிபடுறாங்க.
 
அடுத்த முறை கொடைக்கானல், தாண்டிக்குடி அல்லது பண்ணைக்காடு பக்கம் போற வாய்ப்பு கிடைச்சா...
 
ஒரு 4–5 மணி நேரம் ஒதுக்கி இந்த இடத்துக்கு போயிட்டு வாங்க.
 
சில பயணங்கள்...
 
நம்ம camera-ல மட்டும் இல்ல...
 
நம்ம மனசுலயும் நிரந்தரமா பதிஞ்சிடும். ❤️

🙏🌹நன்றி இணையம்            🌹🙏

🌷 🌷🌷 🌷 🌷 🌷🌷 🌷


Thanks & Copy fromTN Explorer

 

பொதுவாகவே பத்து ரூபாய்

மணக்கால் அய்யம்பேட்டை | 10:29 AM | Best Blogger Tips

 May be an image of one or more people, crowd, temple, street and text

பொதுவாகவே பத்து ரூபாய் 

சாப்பாட்டுக்கடையில் மதியம் உணவு வழங்கும் நேரமான 12 மணியிலிருந்து 1.30 மணி வரை பெரும்பாலும் எந்த மொபைல் அழைப்பையும் ஏற்க மாட்டேன். 


பசியுடன் வருபவர்களை சரியாக கவனித்து உபசரிக்க முடியாது என்பதால்.. உணவு வழங்கும் நேரத்தில் மொபைலில் பேசிக்கொண்டிருப்பதை தவிர்த்து விடுவேன்.

உணவு வழங்கி முடித்த பிறகு 1.30 மணிக்கு மேல் தவறவிட்ட அனைத்து அழைப்புகளை கவனித்து, சம்பந்தப்பட்டவர்களை அழைத்து பேசி விடுவதை வழக்கமான வைத்திருக்கிறேன்.

இன்றும் மதியம் சாப்பிட வருபவர்களுக்கு டோக்கன் வழங்கிக்கொண்டிருந்த போது..
சுமார் ஒரு மணியளவில் வந்த ஒரு அழைப்பை கவனித்தேன். 


ஏனோ அந்த அழைப்பை தவிர்க்க வேண்டாம் என்று மனதின் ஓரத்தில் ஒரு மெல்லிய குரல் அசரீரியாக ஒலிக்க..
அந்த அழைப்பை உயிர்ப்பித்து 'வணக்கம்' சொன்னேன்.

எதிர்பக்கம் சில கண நொடிகள் அமைதி காத்தபின் 30 - 32 வயது மதிக்கத்தக்க ஒரு ஆண் பேசினார்.
''சார்.. நான் ராஜேஷ், காளையார்கோவிலிருந்து (பெயர் ஊர் மாற்றப்பட்டுள்ளன) பேசறேன். சமீபத்தில் ஒரு மாசமாகவே பத்து ரூபாய் சாப்பாட்டுக்கடை ரீல்ஸ் எல்லாம் பேஸ்புக், இன்ஸ்டாகிராமில் பார்த்துக்கிட்டிருக்கேன்.
அங்கே சாப்பிட வர்றவங்களுக்கு நானும் சாப்பாடு கொடுக்கணும்னு ஆசைப்படறேன். நான் பணம் அனுப்பிச்சா.. நீங்க சாப்பாடு கொடுத்துடுவீங்களா, சார்..?''
என்று தயக்கத்துடன் கேட்க..

''சரிங்க தம்பி.. கொடுத்துடலாம்..''
என்று (எதிரே வந்து நின்ற மூட்டை தூக்கும் வேலை செய்யும் வயதான பெரியவர் ஒருவர் அணிந்திருந்த மொத்தமான டிராயர் கிழிந்திருப்பதை கவனித்துக்கொண்டே) நான் சொன்னதும்..

''எவ்வளவு சார் பணம் அனுப்பணும்..? சொன்னீங்கன்னா இப்போ அனுப்பிடறேன்..!''
என்று தொடர்ந்த தயக்கத்துடன் எதிர்பக்கம் குரல் ஒலித்ததை கவனித்தேன்.

எதிரே நின்ற பெரியவருக்கு எப்போதும் கைவசம் வைத்திருக்கும் கைலிகளில் ஒன்றை எடுத்து கொடுத்து, அவரிடம் பிங்க் கலர் டோக்கனை கொடுத்து அவரை சாப்பிட அனுப்பி விட்டு..
மொபைலில், ''நீங்க எத்தனை பேருக்கு சாப்பாடு கொடுக்கணும்னு விரும்பறீங்களோ.. அது ஒருத்தராக இருந்தாலும் சரி.. பத்து பேராக இருந்தாலும் சரி.. நூறு பேராக இருந்தாலும் சரி.. அந்தளவுக்கு பணம் அனுப்பினால் போதும்ங்க தம்பி. நாம சாப்பாடு கொடுத்துடலாம்..!''
என்று சொன்னேன்.

''சரிங்க சார்.. ஐம்பது பேருக்கு சாப்பாடு கொடுக்கறதுக்கு பணம் இப்போ அனுப்பிடறேன் சார்.'
என்று சொன்ன குரலில் இப்போது தயக்கம் போய் தழுதழுப்பு பரவிக்கொண்டிருப்பதை கவனித்துக்கொண்டே..
''சரிங்க தம்பி. நீங்க இதே நம்பருக்கு வாட்ஸ் அப் இருக்கு. அதுல உங்க பேரையும் உங்க பேமிலி பேர்களையும் அனுப்பிடுங்க.
நாளைக்கு நாம சாப்பாடு கொடுத்துடலாம்..''
என்றேன்..

அதிகமான சதவீத தழுதழுப்பான குரலில்..
''சார்.. என்னோட வொய்ப் பேரு சங்கரி. (பெயர் மாற்றப்பட்டுள்ளது)
அவங்க பேருல சாப்பாடு கொடுத்துடலாம் சார்..''
என்று சொல்லும்போதே அந்த பக்கம் அந்த ராஜேஷ் உடைந்துக்கொண்டிருப்பதை உணர முடிந்தது.

சமையலறையில் இருந்த விஜியை அழைத்து வருபவர்களுக்கு டோக்கன் கொடுக்க சைகையால் சொல்லி விட்டு..
கடைக்கு வெளியே வந்து போக்குவரத்து நிறைந்த சாலையை கடந்து எதிரே இருந்த ஹவுசிங் போர்டு கட்டிட நிழலில் போய் நின்று..
''தம்பி.. உங்க ரெண்டு பேர் பேர்லேயும் கொடுத்துடலாமே..?
ஏன் அவங்க பேர்ல மட்டும் கொடுக்க சொல்றீங்க..?''
என்று யோசனையுடன் நான் கேட்டதும்..

கரகரத்த குரலில் ராஜேஷ், '' சார்.. நான் நல்லா வசதியோடு இருந்தேன். பிஸினஸ்ல நஷ்டமாகி கோடிக்கணக்கான பணத்தை கோட்டை விட்டுட்டேன் சார். இதனால என்கிட்டே என் வொய்ப் கோவிச்சுக்கிட்டு போய் மூணு வருஷமாச்சு.. இன்னிக்கு வரைக்கும் நான் எத்தனையோ தடவை போன் செஞ்சும் எடுக்க மாட்டேங்கறாங்க. மெசேஜ் அனுப்பிச்சாலும் ரிப்ளை செய்ய மாட்டேங்கறாங்க.. டைவர்ஸுக்கு அப்ளை பண்ணியிருக்காங்க சார்.
நான் ஒத்துக்காம இருக்கேன்.
ஆனாலும் என்னோட உயிரே அவங்கதான் சார்.
நாளைக்கு அவங்க பிறந்த நாள் சார்..
என்கிட்டே இப்போ கொஞ்சமாத்தான் பணம் இருக்கு. அதை அனுப்பறேன். அவங்க பேர்ல அங்கே பசியோட வர்றவங்களுக்கு சாப்பாடு கொடுங்க சார்.. சாப்பிடறவங்களோட வாழ்த்து அவங்களுக்கு கிடைக்கட்டும் சார்..
அது போதும் எனக்கு..
அவங்கதான் சார் எனக்கு எல்லாமே..''
என்று சொல்லும்போதே முழுமையாக உடைந்து அழ ஆரம்பிக்க..

எனக்கு என்ன ஆறுதல் சொல்வது என்று தெரியாமல் சில நொடிகள் அமைதியாக இருந்த நான்..
அலைபேசி அழைப்பை துண்டித்து விட்டு..

மீண்டும் சாலையை கடந்து பத்து ரூபாய் சாப்பாட்டுக்கடைக்குள் வந்து..
சாப்பிட வருபவர்களுக்கு டோக்கன் கொடுக்க ஆரம்பித்தேன்.

சில நிமிடங்கள் கழித்து,
ராஜேஷ் வாட்ஸ் அப் எண்ணிற்கு
'நாளை உங்க மனைவியின் பெயரில் உணவு வழங்கி விடுவோம்.
இனி உங்கள் வாழ்வில் உங்கள் விருப்பம் போல அனைத்தும் மாறும். அனைத்தும் நிகழும்..
உங்கள் பொருளாதார சூழலும்..உங்கள் மனைவியின் மனமும் மாறலாம்.
இதை நான் ஃபார்மாலிட்டிக்காக சொல்லவில்லை.
பத்து ரூபாய் சாப்பாட்டுக்கடையின் அனுபவத்தில் சொல்கிறேன், தம்பி..!''
என்று என் மனதில் அந்த நிமிடம் தோன்றியதை மெசேஜாக அனுப்பி விட்டு..

எதிரே தட்டுத்தடுமாறி தள்ளாடியவாறு படியேறி வந்து நின்ற (வழக்கமாக கடைக்கு சாப்பிட வரும் எண்பது வயதிற்கு மேல் இருக்கும்) அந்த நலிந்த தேகம் கொண்ட பெண்மணியிடம்..
''என்னம்மா சாப்பிட்டீங்களா..? சாப்பிடுறீங்களா..?''
என்று அவருக்கு கொடுக்க பிங்க் கலர் டோக்கனை எடுத்துக்கொண்டிருக்கும்போதே..

அந்த வயதான பெண்மணி என்னருகில் வந்து நடுநடுங்கும் தன்னுடைய கைகளால் என்னுடைய தலையை தடவி கொடுத்து..


''வயிறார சாப்பிட்டுட்டேன் கண்ணு. நீ உன் மனசில நினைச்சது எல்லாம் நிறைவேறி சந்தோசமாக இருப்பே..!''
என்று சொல்ல சொல்ல..

எனக்கு அந்த ராஜேஸும் சங்கரியும் நினைவுக்கு வந்தனர்..!
 

 May be an image of one or more people, temple and text that says "வாங்க.. சாப்பிடலாம்.. neched रेबा 10 சாப்பாடுக்டை டுக்டை KPR சேவா் சேவ лBT ரே எ தாக்கதடப வாங்கா சாப்பிடனா் 10 ரூபாய் சாப்பாட்டு អចយ័ល சமிடனாம ரூர ROTSH 08522 иEBO 89522 밀구로" 

 

Copy from FB 

 

செலவழிக்கத் தெரியாத முதியவர்கள்

மணக்கால் அய்யம்பேட்டை | 9:53 AM | Best Blogger Tips

T.N. Budget 2025-26: Tamil Nadu to set up 25 Anbucholai centres for the  elderly - The Hindu 

செலவழிக்கத் தெரியாத முதியவர்கள்

“சேமித்த வாழ்க்கை ஆனால் வாழ மறந்த வாழ்க்கை!”

இந்தியாவின் பல ஓய்வுபெற்றவர்களின் வாழ்க்கையில் ஒரு வியப்பான முரண்பாடு உள்ளது.


அவர்களிடம் பணம் இருக்கிறது… சொத்து இருக்கிறது… பாதுகாப்பு இருக்கிறது…
ஆனால் வாழ்க்கையை அனுபவிக்கும் மனநிலை இல்லை.
Bengaluru: Determined to stay fit, senior citizen brisk-walks 200m to  victory | Bengaluru News - Times of India
திரு. சர்மா — இது ஒரு பெயர் மட்டும் அல்ல.


உங்கள் தந்தை, மாமா, அயலவர்… அல்லது  நாமே கூட இருக்கலாம்.
அவர் வளர்ந்த காலம் பற்றாக்குறையின் காலம்.
ரேஷன் கடை வரிசை, சேமிப்பு தான் பாதுகாப்பு, அரசு வேலை தான் கனவு — அந்த தலைமுறை.
40 ஆண்டுகள் அவர் உழைத்தார்.

டாக்ஸி கட்டணம் / ஆட்டோ கட்டணம் தவிர்க்க பஸ்ஸில் சென்றார்

பேருந்து கட்டணம் மிச்சப்படுத்த நடந்தார்

கிழிந்த காலர் சட்டையையும் மாற்றாமல் அணிந்தார்.
தனது ஆசைகளை தள்ளிவைத்து குழந்தைகளின் கல்வி, திருமணம், குடும்பத்தின் எதிர்காலம் என்பதற்காக வாழ்ந்தார்.
இன்று அவருக்கு:
EMI இல்லாத வீடு,
FD,  போன்ற சேமிப்புகள்,
மாதாந்திர ஓய்வூதியம்,
வங்கியில் பணம்
எல்லாமே இருக்கிறது.
ஆனால், மே மாத வெப்பத்தில் கூட

“மின்சாரம் வீண்  செலவு…” என்று ஏசியை அணைத்து விட்டு வியர்த்து தூங்குகிறார்.
இதுதான் இந்திய ஓய்வுபெற்றவர்களின் மிகப் பெரிய சோகமான உண்மை.

“Switch Failure” — சேமிப்பிலிருந்து செலவிற்கு மாற முடியாத மனநிலை
நிதி உளவியல் வல்லுநர்கள் இதை
“Switch Failure” என்று கூறுகிறார்கள்.
Repair Window Switch: Quick Guide to repair window switch Like a Pro – T1A  Auto
40 வருடங்கள் மனதில் ஒரே கட்டளை:
“சேமிப்பு,  சேமிப்பு இன்னும் 
அந்த மனநிலை பாதுகாப்பாக மாறிவிடுகிறது.
 

அதனால் ஓய்வுக்குப் பிறகு:
“இப்போது செலவழித்து வாழ்க்கையை அனுபவி”
என்று சொன்னாலும், மனம் அதை ஏற்க மறுக்கிறது.
பணம் செலவிடுவது கூட அவர்களுக்கு தவறு செய்த உணர்வை தருகிறது.

இந்திய குடும்பங்களில் தினமும் நடக்கும் சில உண்மைகள்
FD வட்டியை மட்டும் பயன்படுத்துவது
வட்டியை செலவிடுவார்கள்.
ஆனால் முதல்தொகையை தொடவே மாட்டார்கள்.
“அது குழந்தைகளுக்காக…”
“அவசரத்திற்கு…”
என்று வைத்துக் கொண்டே இருப்பார்கள்.
ஆனால் பணவீக்கம் மெதுவாக அவர்களின் வாழ்க்கை தரத்தை சுருக்கிக் கொண்டே போகும்.
ATTR-CM முதுகுவலி: ஸ்பைனல் ஸ்டெனோசிஸை எவ்வாறு நிர்வகிப்பது
மருத்துவ சிகிச்சையையும் தள்ளிப்போடுவது
வங்கியில் பணம் இருந்தாலும்:
முழங்கால் அறுவை சிகிச்சை,
கண் அறுவை சிகிச்சை,
நல்ல மருத்துவ வசதி
இவற்றை “செலவு அதிகம்” என்று ஒத்திவைப்பார்கள்.
ஆரோக்கியத்தை விட பணத்தை பாதுகாக்க முயற்சிப்பார்கள்.

பயணத்திலும் அதே மனநிலை
70 வயதிலும்:
AC Coach வேண்டாம்,
Flight வேண்டாம்,
நல்ல ஹோட்டல், ஹோட்டல் சாப்பாடு வேண்டாம்…
“சில ரூபாய் மிச்சமாகட்டும்” என்பதற்காக உடலை கஷ்டப்படுத்திக் கொள்வார்கள்.

குழந்தைகளுக்காக எல்லாம் விட்டுச் செல்லும் மனநிலை
“நாம் கஷ்டப்பட்டு சம்பாதித்தது பிள்ளைகளுக்குத்தான்…”
இந்த எண்ணம் பல பெற்றோரின் மனதில் ஆழமாக உள்ளது.
ஆனால் சில நேரங்களில்: தாங்கள் வாழாமல், அவர்களுக்காக மட்டும் சேமித்து, இறுதியில் வாழ்க்கையே அனுபவிக்காமல் போகிறது.

அவர்களின் மிகப் பெரிய பயம் என்ன?
“நான் இன்னும் 20 வருடம் வாழ்ந்தால்…?”
பணம் தீர்ந்து போகுமோ என்ற பயம்.
ஏனெனில் அவர்கள்:
பணவீக்கம் எப்படி பணத்தின் மதிப்பை சுருக்கியது,
வாழ்க்கைச் செலவு எப்படி உயர்ந்தது
என்பதை நேரில் பார்த்தவர்கள்.
அதனால் மிக மோசமான நாளுக்காக தயார் செய்கிறார்கள்.

ஆனால் அதற்குள், நல்ல நாட்களை வாழ மறந்துவிடுகிறார்கள்.
இறுதியில் என்ன நடக்கிறது?
ஒரு நாள் அவர்கள் இல்லாமல் போகிறார்கள்.
பின்னால்:
வங்கியில் உள்ள தொகை,
பயன்படுத்தாத நகைகள்,
காலியாக இருக்கும் பெரிய வீடு…
இவை மட்டும் இருக்கும்.
ஆனால் அவர்களுடன் சேர்ந்து புதையுண்டு போவது:
செல்லாத சுற்றுலாக்கள்,
வாங்காத சிறிய ஆசைகள்,
குடும்பத்துடன் செலவிடாத தருணங்கள்,
சொல்லாமல் விட்ட அன்பு.

முடிவுரை
சேமிப்பு மிக முக்கியம்.


ஆனால் வாழ்க்கையை முழுவதும் சேமிப்பதற்காக மட்டும் வாழக் கூடாது.
பணம் என்பது


“பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டிய பொருள்” மட்டும் அல்ல…


“வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்க பயன்படுத்த வேண்டிய கருவி” கூட.
ஓய்வு என்பது வாழ்க்கையின் முடிவு அல்ல.
அது:


மெதுவாக வாழ,
உடலை கவனிக்க,
விருப்பங்களை நிறைவேற்ற,
குடும்பத்துடன் நேரம் செலவிட,
மனநிம்மதியை அனுபவிக்க
கிடைத்திருக்கும் இரண்டாவது வாய்ப்பு.
இறுதியில் மனிதர்கள் நினைவில் வைத்துக் கொள்வது


நீங்கள் எவ்வளவு பணம் சேமித்தீர்கள் என்பதல்ல…


நீங்கள் எவ்வளவு சந்தோஷமாக வாழ்ந்தீர்கள் என்பதுதான்.


எனவே இன்றைய 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் உங்கள் தேவைகளுக்கு செலவழியுங்கள், வாழ்க்கையை மகிழ்வோடு வாழுங்கள், சந்தோஷமாக இருங்கள் 

 

🙏🌹நன்றி இணையம்            🌹🙏

🌷 🌷🌷 🌷 🌷 🌷🌷 🌷