
கூட்டமே இல்லாத ஒரு சிவன் கோவிலில்... 30 நிமிடம் அமைதியா உட்கார்ந்த அந்த அனுபவம் இன்னும் மனசை விட்டு போகவில்லை. 

பொதுவாக பெரிய கோவில்களுக்கு போனா...
கூட்டத்தோட கூட்டமா போய்...
வரிசையில நின்னு...
சாமியை பார்த்தோமா, பார்க்கலையா என்று தெரியாம திரும்பி வந்துடுவோம்.
ஆனா...
கதவு மலை சிவன் கோவிலில் நான் அனுபவிச்சது அதுக்கு நேர்மாறானது.
தாண்டிக்குடியிலிருந்து சுமார் 30–45 நிமிடம் jeep-ல off-road பயணம்.

போகும் வழியிலேயே சில இடங்களில் jeep-ஐ நிறுத்தி, மேற்கு தொடர்ச்சி மலையின் அழகை ரசிக்கணும் போல இருக்கும். அந்த road trip-ஏ இந்த பயணத்தோட ஒரு பெரிய நினைவு. 
கோவிலுக்கு போனப்போ...
அங்க யாருமே இல்லை.
நானும்...
சிவனும்...
சுற்றியிருந்த இயற்கையும்...
அவ்வளவுதான்.
அந்த அமைதியில கிட்டத்தட்ட 30 நிமிடம் எதுவும் பேசாம உட்கார்ந்திருந்தேன்.
எவ்வளவு வெயில் அடிச்சாலும்...
அங்க வீசுற காற்று மட்டும் அவ்வளவு இதமா இருக்கும்.
அந்த 30 நிமிட அமைதி...
அந்த 5 மணி நேர பயணம்...
என் வாழ்க்கையில மறக்க முடியாத நினைவுகளில் ஒன்றா மாறிடுச்சு. 
இந்த மலை, ஒரு பெரிய கதவு மாதிரி தோற்றம் கொடுக்குறதால்தான் "கதவு மலை"ன்னு அழைக்கப்படுறதுன்னு உள்ளூர் மக்கள் சொல்றாங்க.
இங்குள்ள இன்னொரு தனிச்சிறப்பு...
சிவபெருமான் லிங்க வடிவில் இல்லாமல், உருவ வடிவில் அருள்பாலிக்கிறார் என்பதுதான்.
சாதாரண நாட்களில் இங்கு அமைதியாக தரிசனம் செய்யலாம்.
ஆனா மகா சிவராத்திரி மாதிரி முக்கிய நாட்களில், நிறைய பக்தர்கள் நடந்தே மலையை அடைந்து வழிபடுறாங்க.
அடுத்த முறை கொடைக்கானல், தாண்டிக்குடி அல்லது பண்ணைக்காடு பக்கம் போற வாய்ப்பு கிடைச்சா...
ஒரு 4–5 மணி நேரம் ஒதுக்கி இந்த இடத்துக்கு போயிட்டு வாங்க.
சில பயணங்கள்...
நம்ம camera-ல மட்டும் இல்ல...
நம்ம மனசுலயும் நிரந்தரமா பதிஞ்சிடும்.

