காஷ்மீர் ஃபைல்ஸ் திறைப்படம்

மணக்கால் அய்யம்பேட்டை | 10:08 AM | Best Blogger Tips

 



 

காஷ்மீர் பண்டிட்டுகள் கோரப்படுகொலை பிறந்த நாட்டில் அகதிகளாக இன்றுவரை உலாவும் உண்மை சரித்திரம்

 

இது ஏதோ ஒரு திரைப்படம் போல் தோன்றவில்லை.  ஒரு வரலாற்றை வாழ்ந்து காட்டி,  நம்மை அந்த வரலாற்றின் ஒரு பகுதியாக்கி இருக்கிறார்கள்.  தலைமுறை தலைமுறையாக வாழ்ந்த ஒரு சமூகம் சொந்த நாட்டிலேயே சொல்ல இயலாத சித்தரவதைகளை அனுபவித்து,  சொந்த நாட்டிலேயே அகதிகளாய், நாடோடிகளாய்,  நாதி அற்றவர்களாய், திரிந்த உண்மை வரலாறு அது.

 

அந்த வரலாற்றை யாருமே கண்டு கொள்ளவில்லை.

அந்த வரலாற்றுக்காக யாருமே கூக்குரல் எழுப்பவில்லை.

அந்த வரலாற்றை உலகமே புறக்கனித்தது.  அல்லது புறக்கனிக்குமாறு அரசியல்வாதிகளால் செய்யப்பட்டது.

 

அந்த வரலாற்றை மீட்டு எடுத்து மீண்டும் நம் முன் அதன் பக்கங்களை பிரித்து காட்டி, நம்மை நாமே குற்ற உணர்வில் காறி உமிழ செய்துள்ளார் இந்த காவியத்தின் படைப்பாளி.  ஆம் இந்த திரைப்படத்தின் இயக்குனர் விவேக் ரஞ்சன் அக்னிஹோத்ரி.

 


சமூக வலைதளத்தில் பத்து பேர் பார்க்க ஒரு மதரீதியான‌ பதிவிடவே பத்து முறை யோசிக்கும் மக்களுக்கு இடையே ஜிகாத் குறித்தும்,  மத ரீதியான படுகொலைகளை குறித்தும், இந்துக்கள் மீது கட்டவிழ்க்கப்பட்ட பயங்கரமான அராஜகங்களை, கோடிக்கணக்கான மக்கள் பார்க்கும் வகையில் வெளிப்படுத்த‌ எத்தனை நெஞ்சுறம் வேண்டும் ? 

 

காஷ்மீரில் யுக யுகமாய் வாழ்ந்த பண்டிட் குடும்பங்கள் எப்படிப்பட்ட கோர படுகொலைகளுக்கு ஆளாகின ?  மிக மிக பரிச்சயமான நபர்கள் ஒரே நாளில் எப்படி பயங்கரவாதிகளாக மாறுகிறார்கள் ?  நமக்கு அக்கறை உள்ளதோ இல்லையோ நாம் சார்ந்த மதம் என்பது எத்தனை பெரிய தாக்கத்தை நம்மீது ஏற்படுத்துகிறது ?

அண்ணன் தம்பி மாமன் மச்சான் என்பதெல்லாம் எத்தனை பெரிய ஏமாற்று வேலை ?

என இப்படி ஒவ்வொரு கேள்விகளுக்கு பதில் தருகிறது இந்த திரைப்படம்.

 

படத்தில் தில்லி ஜவஹர்லால் பல்கலைகழகத்தை குறிக்கும் வகையில் JNU க்கு பதில் ANU என்று குறிப்பிடப்படுகிறது.  பல்கலைகழகத்தில் படிக்கும் ஒரு காஷ்மீர் பண்டிட் மாணவன் கிருஷ்ணாவின் தாத்தாதான் 'புஷ்கர் நாத் பண்டிட்' (அனுப்பம் கேர்).  தன் தாயும்,  தந்தையும், அண்ணனும் ஜிகாதிகளால் கொல்லப்பட்டதை அறியாமல் கிருஷ்ணா வளர்கிறான்.  ANU பல்கலைகழகத்தில் உள்ள இடது சாரி ஆசிரியை 'பல்லவி கோஷ்' அவனை காஷ்மீர் போராளிகளுக்கு ஆதரவாக செயல்பட போதனை செய்கிறாள்.  பல்கலைகழகத்தின் மாணவர் அணியின் தலைவனாக வேண்டும் என்றால் பெரும்பான்மையான காஷ்மீர் இஸ்லாமிய மாணவர்களின் ஆதரவு வேண்டும் என்றும்,  ஒரு காஷ்மீர் பண்டிட் மாணவனான கிருஷ்ணா,  காஷ்மீர் முஸ்லீம் மக்களுக்கு ஆதரவாக பேசினால், அது மிகப்பெரும் அரசியல் யுக்தியாக இருக்கும் என்றும் அவனை மூளை சலவை செய்கிறாள்.  கிருஷ்ணாவின் பாத்திரம் இந்தியாவில் ஊடகங்களால் கட்டமைக்கப்படும் செக்யூலர் இந்துக்களின் மனோபாவத்தை குறிக்கிறது. 

 


தாத்தாவின் அஸ்தியை அவரின் இறுதி ஆசைப்படி காஷ்மீரில் கரைக்க செல்லும் கிருஷ்ணா தன் பெற்றோருக்கும்,  உறவினருக்கும்,  தன் இந்து பண்டிட் மக்களுக்கும் நடந்தேறிய கொடூரங்களை உணர்கிறான்.

 

ஆசிரியை பல்லவி கோஷ் நிகழ்காலத்தில் மோடி அவர்களுக்கு எதிராக தேச விரோதிகள் அரங்கேற்றும் நிகழ்வுகளை ஒரே வாக்கியத்தில் உணர்த்துகிறாள். "நாட்டை ஆள்வது மட்டும் தான் அவர்கள் (அரசு) ஆனால் உண்மையில் சிஸ்டம் நம் கையில்தான் உள்ளது" என்கிறாள். சிஸ்டம் என அவள் குறிப்பிடுவது உலகளாவிய ஊடக பலம்,  தீவிரவாதிகளின் பின்னனி,  இடது சாரி மற்றும் காங்கிரஸ் போன்ற செக்யூலர் வியாபாரிகள் ஆகியவற்றை குறித்துதான்.

 

படம் கொடூரமாக இந்துக்கள் மீது தீவிரவாதம் தலைவிரித்து ஆடும் 90 களுக்கும்,  நிகழ்காலத்திற்கு மாறி மாறி பயனிக்கின்றது.   ரத்த வெள்ளத்தில் இந்திய ராணுவ வீரர்கள் கொல்லப் படுவதையும்,  90 களில் பாரதம் எப்படிப்பட்ட கேவலமான அரசியல் பின்னனியில் இருந்தது என்பதையும்,  தீவிரவாதிகளை விட அதிகமாக‌ இந்திய அரசியல் தலைவர்களால் காஷ்மீர் பண்டிட்டுகள் வஞ்சிக்கப்பட்டார்கள் என்பதையும் திரைப்படம் ஆணித்தரமாக சுட்டிக் காட்டுகிறது.

 

மதம் மாறு அல்லது மரணித்து போ,  அல்லது காஷ்மீரை விட்டு ஓடிப் போ எனும் பொருள் பட 'ரலீவ், கலீவ், சலீவ்' என இந்துக்களை நோக்கி எங்கு பார்த்தாலும் கோஷங்கள் காஷ்மீரில் எழுகிறது. தங்களோடு ஆண்டாண்டு காலம் வசித்த காஷ்மீர் இஸ்லாமிய‌ சிறுவர்களும்,  சிறுமிகளும் கூட இந்த கோஷத்தை எழுப்புகிறார்கள். அக்கம் பக்கத்தில் பல காலமாக ஒன்றாக வசிக்கும் முஸ்லீம்களே தீவிரவாதிகளிடம் இந்துக்களை காட்டிக் கொடுக்கிறார்கள்.  கல்வி கற்று கொடுத்த ஆசிரியர் அனுப்பம் கேர் குடும்பத்தையே சூரையாடுகிறான் அவரின் மாணவன். 

"நீ என் மாணவன் பிட்டா அல்லவா ? எனக் கேட்கிறார் அனுப்பம் கேர்.  நான் உன் மாணவன் அல்ல நான் JKLF இன் விங் கமேண்டர் என்கிறான் அவரிடம் படித்த அந்த மாணவன். 

 

அதிர வைக்கும் கடும் குளிரில் மரண வேட்டையில் இருந்து தப்பித்து ஓடுகிறார்கள் இந்துக்கள். ஒரு லாரியை பிடித்து பெண்கள் குடும்பத்தோடு இரவு நேரத்தில் கடும் குளிரில் பயனிக்கிறார்கள்.  உயிரை காப்பாற்றிக் கொள்வதை விட அவர்களுக்கு அந்த சூழ்நிலையில் எதுவுமே முக்கியமில்லை.  ஓடும் லாரியில் வயதுக்கு வந்த ஒரு மாணவிக்கு அடக்க இயலாத வகையில் இயற்கை உபாதை.  ஓடும் லாரியிலிருந்தே பெண்கள் ஒரு போர்வையை தடுப்பாக பயன்படுத்த,  சிறுநீர் கழிக்கிறாள்.  அதே வேளையில் அந்த பகுதியின் உயரமான மரங்களில் தங்கள் உறவினர்கள் அரை நிர்வானமாக கொல்லப்பட்டு கட்டிப் போடப்பட்டிருப்பதை கண்டு அவள் அலறுகிறாள்.  அதை கேட்டு மற்ற பெண்களும் அந்த காட்சியை பார்த்து அலறுகிறார்கள். உண்மையில் பார்ப்பவர்களை உறைய வைக்கும் காட்சி.

 

காஷ்மீரில் இருந்து ஜம்முவிற்கு தப்பி வரும் இந்துக்கள் கொடூரமான முகாம்களில் தங்க வைக்கப்படுகிறார்கள்.  பல நோய்களில் இறக்கிறார்கள். நாட்டை ஆளும் அரசியல் கட்சிகள் அவர்களை மிகக் கேவலமாக புறக்கனிக்கின்றன. வாழ்நாள் முழுவதும் ஆர்டிக்கிள் 370 ஐ நீக்குங்கள் என போராடும் ஒரு போராளியாக அனுப்பம் கேர் மரணிக்கிறார். 

 

இறுதியில் ANU பல்கலைகழகத்தில் மாணவர் தேர்தலுக்காக கிருஷ்ணா பேசும் பேச்சுதான் படத்தின் அதி அற்புதமான ஹைலைட்.  (காஷ்யப புரா என அடியேன் எழுதிய காஷ்மீர் சரித்திரத்தின் சுருக்கமாகவே இது தெரிந்தது)

 

படத்தை குறித்து எத்தனை பக்கங்கள் எழுதினாலும்,  அதை நீங்கள் பார்க்கையில் ஏற்படும் உணர்வுக்கு ஈடாக புள்ளி ஒரு சதவீதம் கூட ஏற்படுத்த இயலாது.  அனுப்பம் கேரும், மிதுன் சக்கரவர்த்தியும் மற்ற‌ சக நடிகர்களும் நடிக்கவில்லை,  வாழ்ந்திருக்கிறார்கள். 

 

படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் கூட்டம் அப்படி ஒரு அமைதி காக்கிறது.  ஆங்காங்கே சில மெல்லிய அடக்க இயலாத விம்மல்கள் கூட கேட்கிறது.  ஹவுஸ்புல் காட்சி கூட, அந்த அமைதியால் யாருமே இல்லாதது போல் இருக்கிறது.  திரையரங்கில் ஒரு மொபைல் போன் ஒலிக்க,  "எழுந்து வெளியே போய் பேசுங்கள்" என மற்றவர்கள் கண்டிக்கிறார்கள்.  அப்படி ஒரு அர்ப்பணிப்போடு இந்த படத்தை கூட்டம் பார்க்கிறது.  இவர்கள் யாருமே சினிமா பார்ப்பவர்களாய் தெரியவில்லை.  ஒரு மாபெரும் அஞ்சலியில் பங்கு கொள்பவர்களாக இருக்கிறார்கள்.

 

நீங்கள் ஆயிரம் பசுக்களை தானம் செய்திருக்க‌லாம்,  ஆயிரம் கோவில் கும்பாபிஷேகத்திற்கு சென்று வந்திருக்க‌லாம்,  ஆயிரம் புன்னிய‌ நதிகளில் நீராடி இருக்க‌லாம்,  ஆயிரம் மகான்களின் ஆசியை பெற்றிருக்க‌லாம்.  ஆனால் இந்த திரைப்படத்தை காசு கொடுத்து பார்த்து உங்கள் ஆதரவை தெரிவிக்கவில்லை என்றால் அவை யாவுமே வீண் தான்.  நம் ஒவ்வொருவரின் ஆதரவும் இந்த திரைப்படத்திற்கு இல்லாமல் வேறு எதற்கு இருக்க வேண்டும் ?

 

இப்படியெல்லாம் இனி யாரேனும் படம் எடுப்பார்களா தெரியவில்லை.  எடுத்து விட்டார்கள். ஆகவே நீங்கள் செல்வது ஒரு திரைப்படத்திற்கு அல்ல,  ஒரு வேள்விக்கு.  நீங்கள் வாங்குவது ஒரு திரைப்பட நுழைவு சீட்டு அல்ல,  லட்சக்கணக்கான இந்து பண்டிட்டுகளின் உண்மை சரித்திரத்தை நாமும் உணர்கிறோம், அவர்களுக்கு அஞ்சலி செலுத்துகிறோம் எனும் ஒரு பெருமிதம் அது.

 

மீண்டும் சொல்கிறேன் எத்தனை பக்கங்கள் எழுதினாலும், இந்த திரைப்படத்தை விவரித்து விட இயலாது.


நன்றி இணையம்

மணக்கால் அய்யம்பேட்டை | 10:01 AM | Best Blogger Tips

 






*நரேந்திர மோடியின் ரசிகராக இருப்பதற்கும், அவரது அரசியல் அதிகாரம் மற்றும் விருப்பத்தைத் தவிர்த்து அவருக்கு ஆதரவாக இருப்பதற்கும் பல காரணங்கள் உள்ளன.

போல்:*

 

 

*1.

முதலாவதாக, இந்த தலைவரை ஒருபோதும் கிழிந்த ஆடையிலோ, கலைந்த தலைமுடியிலோ, குழப்பமான சூழ்நிலையிலோ காண முடியாது!*

 

 

*2.

நரேந்திர மோடியின் உடல் மொழி மிகவும் செல்வாக்கு செலுத்துகிறது.

அவனது நடையில் ஆண்மை நிறைந்திருக்கிறது.*

 

 

*3.

காவி உடையில் துறவி போலவும், ராணுவ உடையில் சிப்பாய் போலவும், சாதாரண அன்றாட உடையில் தெய்வீக இளவரசன் போலவும் காட்சியளிக்கிறார்.*

 

 

*4.

தேசபக்தி என்பது அவரது சுவாசம் மற்றும் ஒழுக்கம் அவரது இரத்த வகை.*

 

 

*5.

உலகின் எந்தப் பெரிய ஆளுமையோடு நின்றாலும் அவனது திறமை கைகூடும்.

மற்ற திறமைகள் குள்ளமாக தெரிகிறது.*

 

 

*6.

தேர்தலுக்கு முன் சாத்தியமற்ற பல வாக்குறுதிகளை நிறைவேற்றிய வேறு எந்த தலைவரையும் நாம் கடந்த காலங்களில் பார்த்ததில்லை.*

 

 

*7.

நாட்டின் உச்சியில் இருந்தாலும், அவர் தனது குடும்பத்திற்கு சிறப்பு உதவி செய்வதில்லை.

அவனுடைய உடன்பிறந்தவர்கள் அவனைச் சுற்றிப் பார்க்கவே இல்லை.

இல்லவே இல்லை.*

 

 

8 அவர் ஒரு போதும் விடுமுறை எடுப்பதில்லை.

 

 

*9.

அவருக்கு உடம்பு சரியில்லை.*

 

 

*10.

எவ்வளவு பேச வேண்டும், எப்போது அமைதியாக இருக்க வேண்டும் என்பது அவருக்குத் தெரியும்.

 

 

*11.

இத்தனை பிஸிகளுக்கு மத்தியிலும் அவர் பலிபீடமல்ல, நகைச்சுவை உணர்வு அற்புதம்.*

 

 

*12.

அவரது பேச்சு கூர்மையாகவும், ஒப்பற்றதாகவும் இருக்கும்.

மொழியின் சரளமும் வெளிப்பாட்டிற்கு சிறந்தது.

இவர் கவிஞரும் கூட.*

 

 

*13.

எதிரிகளின் ஏமாற்று அல்லது சவால்களுக்கு அவர் ஒருபோதும் பயப்படுவதில்லை.*

 

 

*14.

அவர் எதிரிகள் அல்லது குற்றம் சாட்டப்பட்டவர்களின் முட்டாள்தனங்களுக்கு பதிலளிப்பதில் தனது நேரத்தை வீணாக்குவதில்லை, ஆனால் முழு இராஜதந்திரத்துடன் தனது கடமைக்கு விசுவாசமாக இருக்கிறார்.

 

 

*15.

குமரி, கந்தானி மற்றும் கமீர் ஆகிய மூவர் சங்கமம் உள்ளது.

 

 

16 சரியான தீர்ப்பு மட்டுமல்ல, அவருடைய விழிப்புணர்வும் அர்ப்பணிப்பும் மிகவும் அவசியம்.

 

 

*17.

அவரது ஆளுமை இந்து கலாச்சாரத்தின் புனித சின்னமாக தெரிகிறது.*

 

 

*18.

அவரது கண்களில் உள்ள குணாதிசயங்கள் அவரை ஒரு ஹிப்னாடிஸ்டாக மாற்றும் அளவுக்கு சக்தி வாய்ந்தது.*

 

 

*19.

இந்த மனிதனுக்கு எந்த சலனமும் இல்லை, பயமும் இல்லை.

சுயநலம் அவருக்கு முக்கியமில்லை*

 

 

*20.

கடைசியாக, 70 வயதில் கூட, இந்த மனிதன் ஒரு நாளைக்கு 15 முதல் 20 மணிநேரம் வேலை செய்கிறான், ஆனால் அவர் கொட்டாவி விடுவதை நாங்கள் பார்த்ததில்லை!*

 

   

 

 

💟 பச்சாதாபத்தின் ஊற்றுகள்

 

 

*இந்த கட்டுரைக்கு நீங்கள் கடமைப்பட்டிருந்தால், உங்கள் பிரதமர் தனது பொறுப்புகளை சரியாக நிறைவேற்றுகிறார் என்று நீங்கள் உணர்ந்தால், இந்த செய்தியை உங்கள் நலம் விரும்புவோருக்கும், குறிப்பாக மாண்புமிகு நலம் விரும்புவோருக்கும் அனுப்பலாம்.

நரேந்திர மோடி.*




நன்றி இணையம்

மருந்து என்பது

மணக்கால் அய்யம்பேட்டை | 9:54 AM | Best Blogger Tips

 



மருந்து என்பது ஊசி,மாத்திரை, டானிக் மட்டும் அல்ல


*கழிவுநீக்கம் செய்வது 


பெரும் மருந்து.


*உடற்பயிற்சி செய்வது 


 தின மருந்து.

 

*விரதம் இருப்பது 

குண மருந்து.

 

*இயற்கையை நேசிப்பது 

நிறை மருந்து. 


*சிரித்து மகிழ்வது 

ஊக்கமான மருந்து 



*பழங்கள் & காய்கறிகள்  

உணவேமருந்து.


*தூக்கம் 

* மிக சிறந்த மருந்து.*


*சூரியஒளி 

சக்தி மருந்து. 


*நன்றியுடன், அன்புடன் வாழ்வது  

அருமருந்து.


*நல்ல நண்பர்கள் 

நல்மருந்து.


*தியானம் 

அகமருந்து.


*தைரியம் 

ஒரு நிரந்தர மருந்து


*நல்லதே நினைப்பது 

நல்ல மருந்து.


*அனைத்து உயிரினங்கள் மீதும் பாசம் நேசம் வைப்பது 

உயரிய மருந்து


இதை ஏற்றுக் கொண்டு வாழ்பவர்களுக்கு தேவையில்லை  ஊசி மருந்து

நன்றி இணையம்

இந்தியாவுக்கு மோடி மாபெரும் நல்வழியினை

மணக்கால் அய்யம்பேட்டை | 3:58 PM | Best Blogger Tips

 




இந்தியாவுக்கு மோடி மாபெரும் நல்வழியினை காட்டியுள்ளார் அவரின் மிகசிறந்த சர்வதேச அணுகுமுறை சரியான நேரத்தில் தேசத்துக்கு நல்வழி காட்டியிருக்கின்றது

 

பாரதம் உலகத்தில் ஒரு நாடு என்பதால் உலகளாவிய நெருக்கடிக்கு அதுவும் தப்பமுடியாது,  உலக பாதிப்புகளெல்லாம் தேசத்தை தாக்கியே தீரும் அதனை திறமையாக சமாளிப்பதுதான் தேசிய அரசின் கடமை அது திறமையும் கூட‌

 

அவ்வகையில் உக்ரைன் போரினால் எண்ணெய் விலை உலக சந்தையில் கணிசமாக எகிறியிருக்கின்றது, அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் வரலாறு காணா விலை உயர்வு ஏற்பட்டிருக்கும் நிலையில் இந்தியாவிலும் அது உயரவேண்டும்

 

ஆனால் ஏற்கனவே எண்ணெய்விலை உச்சத்தில் இருக்கும் நாட்டில் இன்னும் உயர்த்த மோடி அரசு விரும்பவில்லை காரணம் அது மக்கள் நலமுள்ள அரசு, அரசியலை தாண்டி அவர்களுக்கு மக்கள் அபிமானம் எப்பொழுதும் அதிகம்

 


உபி தேர்தலுக்காக விலை ஏறவில்லை அதன் பின் விலை ஏறும்  என ராகுல் சொல்வதெல்லாம் அபத்தம் அதனால்தான் காங்கிரஸ் கட்சியினை மக்கள் வைக்க வேண்டிய இடத்தில் வைத்திருக்கின்றனர், எந்த பிரதமர் என்றாலும் இந்த உலகளாவிய விலை உயர்வை தடுக்க முடியாது

 

மோடி அரசுக்கு இதில் ஒரு வாய்ப்பு அழகாக உருவாகின்றது அல்லது முன் கூட்டியே அவர் செய்த தீர்க்கதரிசனமான முடிவு

 

மோடி அரசு உலக அரங்கில் ரஷ்யாவின் பிடியில் இருந்து தன்னைவிடுவித்து அதனை தனக்கு ஏற்ற வகையில் பாவித்து கொண்டது

 

அதாவது முந்தைய காங்கிரஸ் அரசுகள் ரஷ்யாவின் முழுபிடியில் சிக்கியிருந்தன ரஷ்யா இன்று உக்ரைனில் தூர வீசி எறியும் பழைய ஆயுதங்களை இந்தியா தலையில் கட்டிவைத்து பெரும் பணம் பார்த்துகொண்டிருந்தது, இந்தியாவின் அணிசேரா கொள்கை முதல் பாகிஸ்தானின் அமெரிக்க நெருக்கம் வரை ரஷ்யாவுக்கு சாதகமாய் இருந்தது

 

மோடி அரசு அணிசேரா கொள்கையினை கடாசிவிட்டு இந்தியாவுக்கு எது நல்லதோ அதை அமெரிக்கா மற்று ரஷ்யாவிடம் இருந்து பெற்றுகொள்ள துணிச்சலாக முடிவெடுத்தது, சுமார் 60 ஆண்டுகால ரஷ்ய பிடியில் இருந்து வெளிவந்தது, இந்தியாவுக்கு நாங்கள் விரும்பியதெல்லாம் தருவோம் இந்தியா வாங்கி தீரவேண்டும் எனும் மிரட்டலில் இருந்து விலகி இந்தியாவுக்கு தேவையானதை மட்டும் வாங்குவோம் என ரஷ்யாவுக்கு அதிர்ச்சி கொடுத்தது மோடி அரசு

 

ரஷ்யாவிடம் இருந்து கவனமாக தேவைபடும் ஆயுதங்களை மட்டும் வாங்கிய இந்தியா இதர நாடுகளிலும் வாங்கியது தன்சொந்த உற்பத்தியில் இறங்கியது

 


அப்படியே அரபு நாடுகளை மட்டும் சாராமல் ரஷ்யாவில் இருந்தும் எண்ணெய் வாங்க ஒப்பந்தமிட்டது

 

ஆம் ரஷ்யா தன் பழைய காயலான் கடை குடோனாக , பழைய இரும்பு கடையாக மட்டும் பார்த்த ரஷ்யாவுக்கு அதிர்ச்சி கொடுத்து அதன் ஆயுதங்களை குறைத்துவாங்கி எண்ணெயினை அதிகம் பெறும் வர்த்தகத்துக்கு மோடி அரசு மாறிற்று

 

இதனால் இரு அனுகூலங்கள் நிகழ்ந்தன‌

 

முதலாவது ரஷ்ய ஆயுத இறக்குமதி குறைந்தது இன்னொரு எண்ணெய் சந்தையினை தேசம் கண்டடைந்தது

 

அதுவரை இந்தியாவுக்கு தங்களைவிட்டால் யாருமில்லை என இறுமாந்திருந்த அரபுநாடுகள் இந்தியா எனும் பெரும் சந்தையினை இழக்க விரும்பாமல் இறங்கிவந்தன இன்று அரபுலகில் இந்திய செல்வாக்கு அதிகம் இருக்கின்றது

 

இந்த திட்டத்தில்தான் முன்பு மோடியும் புட்டீனும் ரஷ்யாவின் கிழக்கு நகரமான விலாடிவோஸ்டாக் நகரில் எண்ணெய் ஒப்பந்தம் செய்தனர், இதில் இன்னொரு அழகான திருப்பத்தை நாட்டுக்கு கொடுத்தார் மோடி

 

ஆம் அரபுலகில் இருந்து அரபுகடல் வழியாக‌ எண்ணெய் கப்பல் அதிகம் வருவதால் மும்பை குஜராத் உள்ளிட்ட மேற்கு கடற்கரைகள் வேகமாக வளர்ந்தன, கிழக்கே சென்னை, விசாகப்ட்டினம், பாரதீப் போன்றவை பெரும் வளர்ச்சி காணவில்லை காரணம் எண்ணெய் கப்பல் வரவில்லை

 

மோடி கிழக்கே ரஷ்யாவில் இருந்து சீனா வழியாக கப்பல் வரும்படி செய்து வங்க கடல் பாதையில் அதிக எண்ணெய் கப்பல் சுற்ற வழிவகுத்தார், இதனால் இனி நாட்டின் கிழக்கு கடற்கரை வளரும்

 

இந்த திட்டத்தின்படி ரஷ்யாவில் இருந்து எண்ணெய் தென் சீனகடல் வங்க கடல் வழியாக இந்தியா வரும்

 

இதனால் சீன கடல்பாதையில் இந்தியா ஆதிக்கம் செலுத்தும், இந்த வர்த்தகம் ரூபாய் ரூபிளில் நடப்பதால் டாலர் பரிவர்த்தனை செலவு இல்லை இன்னும் பணம் மிச்சமாகும்

 

இது கடந்த டிசம்பரில் புட்டீன் இந்தியா வந்தபொழுது பூரணமானது., எண்ணெய் வரதொடங்கிய நேரத்தில்தான் பெரும் யுத்தம் உக்ரைனில் வெடித்தது ரஷ்யாமேல் தடைகள் வலுத்தன‌

 

ஐரோப்பிய நாடுகள் சந்தையினை இழந்த ரஷ்யா சீன இந்திய சந்தையினை பிடித்தால் போதும் சுமார் 250 கோடி மக்கள் கொண்ட இந்த இருநாட்டிலும் குறைந்த விலைக்கு எண்ணெய் விற்றாலும் ஐரோப்பிய லாப கணக்கை சரியாக எட்டலாம் என முனைந்தது

 

இங்கேதான் அமெரிக்க மிரட்டல் வரும் எனும் அச்சம் இருந்தது, ஆனால் நேற்று காட்சிகள் மாறின‌

 

ரஷ்ய எண்ணெயினை இந்தியா வாங்க தடை இல்லை என அமெரிக்கா அறிவித்திருக்கின்றது, உலக எண்ணெய் சந்தை டாலரில்தான் நடகக்வேண்டும் அதுவும் தன் கண்காணிப்பில்தான் நடக்கவேண்டும் என்ற கொள்கையுடைய அமெரிக்கா இந்த வர்த்தகத்தை தடுக்கும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது

 

ஆனால் ஆசியாவில் இந்தியாவினை இனி பகைக்கமுடியாது என உணர்ந்த அமெரிக்கா "ரஷ்ய தலமையினை ஆதரிப்பது வேறு, ரஷ்ய மக்களின் அடிப்படை தேவைக்கு உதவுவது வேறு" என விளக்கம் சொல்லி இந்தியாவுக்கு அனுமதிகொடுத்தாயிற்று

 

இனி ரஷ்ய எண்ணெய் குறைந்த விலையில் வரும் இதனால் நாடு அடையும் பயன்கள் ஏராளம்

 

எண்ணெய் விலை இனி நிலையாகும் , உயர்த்த வேண்டிய அவசியம் இல்லை. கிழக்கு கடற்கரை இனி வேகமாக வளரும் சென்னை போன்ற இடங்களில் எண்ணெய் சுத்திகரிப்பு பெரும் ஆலைகள் வரும்

 

அரேபியாவில் இருந்து எண்ணெய் குறையும் அந்நாடுகளுக்கு இந்தியாமேல் ஒரு மெல்லிய அச்சம் வரும், அவர்களும் இறங்கிவருவார்கள்

 

ரஷ்யாவுடனும் அமெரிக்காவுடனும் சமமாக பேணபடும் இந்த உறவு நல்ல விஷயங்களை நாட்டுக்கு கொடுக்கும்

 

முன்பு இந்திரா அமெரிக்காவுக்கு அஞ்சி இந்திய பணத்தை சடுதியாக குறைத்தது போல் அல்லாமல், சோவியத்துக்கு அஞ்சி அதன் பழைய இரும்பை எல்லாம் வாங்கியது போல் அல்லாமல் அரபு நாட்டு மிரட்டலுக்கு அஞ்சி அவர்கள் எண்ணெயினை மட்டும் வாங்கி அடங்கியது போல் அல்லாமல் நாட்டுக்கு எது தேவையோ அதை செய்கின்றது மோடி அரசு

 

இந்த மண் அரசியல் பெரும்ஞானி கண்ணபிரான் வாழ்ந்த மண், மோடியின் நடவடிக்கைகளெல்லாம் அந்த மாயகண்ணனின் சாயலில் நடப்பவை

 

ஆனால் சில இடங்களில் பலராமன் பாதையினையும் அவர் எடுப்பார், ஆம் அந்த பலராமன் மகாபாரத பெரும் போரில் கலந்துகொள்ளவில்லை, கண்ணன் தன் படை ஒரு பக்கம் தான் ஒரு பக்கம் என நின்றபொழுதும் பலராமனோ தவறு இருபக்கமும் உண்டு என யுத்தபக்கம் செல்லாமல் ஒருபக்கம் சாராமல் நடுநிலையாய் ஒதுங்கிநின்றார், அவர் ராஜ்ஜியம் வாழ்ந்தது

 

மோடி இப்பொழுது பலராமனின் பாதையில் நாட்டை நடத்துகின்றார், உலகம் முறுகலில் நிற்கும் பதற்றமான நேரம் முன்கூட்டியே பல காரியங்களை செய்து நாட்டை மிக சரியாக நடத்தி செல்லும் அந்த பெருமகனை ஒவ்வொரு இந்தியனும் நன்றியோடு வணங்கிகொண்டிருக்கின்றார்கள்

 

(காமராஜரின் காலத்துக்கு பின் பெரும் மத்திய அரசின் திட்டம் சென்னைக்கு வரவில்லை, மோடி அரசுதான் இப்பொழுது சென்னையினை மறுபடியும் உலக அரங்கின் முன்னணி நகரமாக்கும் காரியத்தை செய்கின்றது

 

பாஜக மத்திய அரசுதான் இப்பொழுது தமிழக சென்னைக்கு பெரும் திட்டம் கொண்டு வருகின்றது)

 

வந்தே மாதரம், ஜெய்ஹிந்த்


நன்றி இணையம்