சுதேசி விழிப்புணர்வு இயக்கத்தின் பணிகள் என்ன?

மணக்கால் அய்யம்பேட்டை | 12:49 PM | Best Blogger Tips

சுதேசி இயக்கம் மக்களிடையே சுதேசி விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. எல்லா துறைகளிலும் இந்தியர்கள் தங்கள் முத்திரையை பதிக்க வேண்டும் என்ற சிந்தனையை விதைத்து வருகிறது. இந்தியர்களால் உற்பத்தியில் உலகத்தோடு போட்டி போட முடியும் என்பதை ஆதாரத்தோடு எடுத்து காட்டி வருகிறது. இன்று இருக்கும் சூழலில் பொருளாதார முன்னேற்றம் என்றால் மேற்கத்திய நாடுகள் தான் என்ற அடிமை சிந்தனையை மாற்றி சுய தர்மம், சுய மரியாதை, சுய தொழில், சுய பாஷை, சுய ராஷ்ட்ரம், சுய ராஜ்யம் என்று சுய சார்ப்பான ஆறு கருத்துகளை மக்களிடையே எடுத்து செல்கிறது. இதற்கு அவசியம் என்ன என்று கேட்டால் சுதர்மத்தை எடுத்து செல்வதும் சுய மரியாதையை மீட்பதும் தான்.

சுதேசி என்ற கோட்பாடு ஒரு தனியான கோட்பாடு அல்ல. தனியான பொருளாதார கோட்பாடு அல்ல. சமூக பொருளாதார கோட்பாடு தான் சுதேசி. ஆகவே சமூகங்களிடையே ஒருங்கிணைப்பையும் செய்து வருகிறது. சுதேசி என்பது உற்பத்தியாளர் வியாபாரிகள் நுகர்வோர் மூவரும் இணக்கமாக பணி செய்தால் தான் வெற்றி பெறக் கூடிய கோட்பாடு. எனவே இந்த மூவரிடமும் ஒருவரை ஒருவர் புரிந்து செயலாற்ற தகுந்த களம் அமைத்து வருகிறது சுதேசி இயக்கம்.

தமிழ் நாட்டில், இந்தியாவில் உங்கள் இயக்கத்தினால் விளைந்த நல்ல பலன்கள் என்ன?

1991 ல் புதிய பொருளாதார கொள்கை வந்த பொழுது இந்திய உற்பத்தியாளர்களிடம் எல்லாம் உங்களுக்கு உற்பத்தி தெரியாது உற்பத்தியை மேற்கத்திய நாடுகளிடம் விட்டு விடுங்கள். வியாபாரத்தை மற்றும் கவனியுங்கள் என்று மத்திய அரசாங்கமும் பல்வேறு தொழில் அமைப்புகளால் அமர்த்தப்பட்ட ’வழிக்காட்டும் குழுக்களும்’ கூறின. அப்படி அல்ல என்பதை இந்திய கம்பெனிகள் மூலம் நிருபிக்க வைத்த அமைப்பு சுதேசி இயக்கம். உதாரணமாக டாடா மோட்டாரை சொல்லலாம். இந்திய கடல்களில் ஆழ்கடல் மீன் பிடிப்புக்கு வெளி நாட்டு கம்பெனிகளுக்கு மத்திய அரசு அனுமதி அளித்த பொழுது இந்தியாவில் கல்கத்தாவில் தொடங்கி கொச்சி வரையிலும் குஜராத்தில் தொடங்கி கொச்சி வரையிலும் கப்பல் யாத்திரை நடத்தி அதன் மூலம் மிகப் பெரிய விழிப்புணர்வை ஏற்படுத்தி அதன் மூலம் மத்திய அரசின் இந்த திட்டத்தை முடக்கி அதனை ரத்து செய்ய வைத்தது சுதேசி விழிப்புணர்வு இயக்கத்தின் சாதானை.

என்ரான் என்ற கம்பெனி இந்தியாவிற்கு மின்சாரம் தயாரிக்கிறேன் என்ற வந்த பொழுது அதனை ஆதாரங்களுடன் எதிர்த்து உண்மையை மக்களுக்கு புரிய வைத்தது சுதேசி இயக்கம். தொடக்கத்தில் மத்திய மாநில அரசு இதை ஏற்று கொள்ளவில்லை. என்ராட் கம்பெனியே திவால் நோட்டிஸ் கொடுத்த பின்பு தான் மத்திய மாநில அரசுகளுக்கு சுதேசி விழிப்புணர்வு இயக்கதின் போராட்டத்திற்கான காரணம் புரிந்தது. அயோடின் உப்பு, பெரிய கம்பெனிகள் தீ பெட்டி தயாரிப்பு போன்றவற்றை எல்லாம் மாற்றி அமைத்து சிறு தொழில்களுக்கு பாதுகாப்பு ஏற்படுத்தியது சுதேசி இயக்கம் .இந்த பட்டியல் நீளும். அதற்கும் மேலாக இந்திய உற்பத்தியாளர்களிடம் நம்பிக்கை விதைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பாரத நாட்டின் 80க்கும் மேற்பட்ட நகரங்களில் ” SWADASHI INDUSTRIAL FAIR ‘ என்ற பெயரில் சுதேசி தொழில் கண்காட்சிகள் நடத்தி வருகிறது.

தமிழகத்தில் 2001 பிப்ரவரி 6 முதல் 11 வரை கோவையில் நடைபெற்ற சுதேசி தொழிற் கண்காட்சி அப்பொழுது கோவை குண்டு வெடிப்பால் சோர்ந்து போயிருந்த கோவை தொழில் முனைவோர்களிடம் ஊக்கத்தையும் மறுமலர்ச்சியை ஏற்படுத்தியது என்பது இன்று வரை தொழில் முனைவோர்கள் சொல்லபடும் ஒன்று. தமிழகத்தில் சுதேசி இயக்கம் கல்வி நிறுவனங்கள் மற்றும் தொழிற் நிறுவனங்கள் இடையே இணைப்பை ஏற்படுத்தி கல்வி நிறுவனங்கள் மூலம் தொழிற் நிறுவனங்களுக்கான ஆய்வுகளை மேற் கொண்டு பிரச்சனைகளுக்கு தீர்வு வழங்கி வருகிறது. இதனால் அதிக அளவில் கல்வி நிறுவனங்களும் சிறு தொழிற் நிறுவனங்களும் சுதேசி இயக்கத்தோடு தங்களை இணைத்து கொண்டு உள்ளன. சுதேசி இயக்கம் நடத்தும் சுதேசி செய்தி என்ற மாதந்திர பத்திரிக்கை இவர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது.

குறிப்பாக இது விஷயமாக அதிக அளவில் ஊடங்களால் விவாதிக்கப்பட்டதால் இந்த நேர்காணலில் அவை பற்றி எதுவும் குறிப்பிட நான் விரும்பவில்லை. குறிப்பாக ஒபாமா போன்றவர்கள், “இந்தியாவின் கல்வி சிறந்து இருக்கிறது. நாம் சோம்பேறிகளாக இருந்தால் நமது குழந்தைகளின் எதிர் காலம் பறி கொடுக்க நேரிடும்” என்று சொல்லிவரும் வேளையில், நமது மத்திய கல்வி அமைச்சர் நமது கல்வி நிலையங்களை வெளி நாடுகளுக்கு விற்க வகை செய்யும் வகையில் சட்டம் கொண்டு வர முயற்சி செய்கிறார்.

வெளி நாட்டு கம்பெனிகள் தங்கள் சரக்குகளை இந்தியாவில் எளிதாக எல்லா பகுதிகளிலும் கொண்டு செல்லும் வகையில் சாலை மற்றும் போக்குவரத்து விதிகளில் சட்ட திருத்தம் கொண்டு வர முயற்சி செய்கிறார்கள்.

விவசாயத்தில் பல்வேறு சட்ட மசோதாக்கள், வரி விதிப்பில் பல்வேறு சட்ட மசோதக்கள், கல்வி துறையில் பல்வேறு சட்ட மசோதாக்கள் மட்டும் இல்லாமல் இந்திய இறையாண்மைக்கு கேடு விளைவிக்கும் வகையில் மத வன்முறை தடுப்பு சட்டம் என்ற பெயரில் மத வன்முறையை துண்ட கூடிய சட்ட மசோதக்களை மத்திய அரசாங்கம் கொண்டு வருவது இந்தியாவை யாரோ ஒரு சிலருக்கு அடமானமாக வைக்க கொண்டு வரப்படும் சட்ட மசோதாக்களாக சுதேசி இயக்கம் பார்க்கிறது.

Bio Technology Regulatory Authoritative Bill
Mines and Mineral Bill
Seed Bill 2010 (modified)
Goods and Service tax amendment Bill
Pension fund regulatory and authority Bill
Land acquisition Rehabilitation and Resettlement Bill
Foreign University Bill
ஆகிய மசோதாக்கள் பற்றியும், உணவுப் பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாடு சட்டம், ( Food safety and Standard act ) தேசிய நீர் கொள்கை ( National Water policy ) ஆகியன பற்றியும் யாத்திரையில் விழிப்புணர்வு ஏற்படுத்தப் படும்.

இந்த மசோதாக்களை எதிர்த்து இந்த பிரச்சாரம் செய்யபடுகிறது. யாத்திரையின் நோக்கம் இதோடு நின்று விடவில்லை. பிரச்சாரத்திலேயே ஒரு ஆய்வு குழுவும் செல்கிறது. பிரச்சாரம் செல்லும் பகுதிகளில் உள்ள இடங்களில் பாரம்பரிய வளங்கள் மற்றும் தொழில் நுட்பங்களை பற்றிய தகவல்களையும் சேகரிக்கிறது.

கம்யூனிஸ்ட்டுகளின் விதேசி எதிர்ப்புக்கும் சுதேசிகளின் எதிர்ப்புக்கும் என்ன வித்தியாசம்?

கம்யூனிஸ்டுகள் தனது மைய புள்ளியை வேறு தேசத்தில் வைத்து ஒரு வட்டத்தை வரைகிறது. இவ்வாறு வரையப்படும் வட்டம் இந்தியாவின் பல பகுதிகளை வெட்டுகிறது. ஆனால் சுதேசி இயக்கம் தனது வட்டத்தை இந்தியாவை மைய புள்ளியாக கொண்டு வரைகிறது. கம்யூனிஸ்டுகளின் கொள்கை அனைத்தும் பாரம்பரிய எதிர்ப்பாகவும் இயற்கையோடு இணைந்த மண்ணின் மணம் கூடிய தொழில் நுட்ப விசயங்களை புறம் தள்ளி விட்டு குடும்ப வாழ்வியல் ஊழியங்களை உடைப்பதாகவும் தான் இருக்கிறது. சமுதாயத்தனிடையே வர்க்க பேதங்களை உருவாக்கி அமைதிக்கு பதிலாக அமைதியின்மையை தோற்றுவிக்கிறது. முதலாளித்துவ பொருளாதார கட்டமைப்பாலும் சரி கம்யூனிஸ பொருளாதார கட்டமைப்பாலும் சரி இங்கே இருக்க கூடிய பாரம்பரிய இயற்கையை ஒட்டிய தொழில் நுட்பத்தை ஞானத்தை அழித்து விட்டு மக்களுக்கு எந்த நன்மையையும் கொடுக்க இயலாது.

இந்த நாட்டில் இருக்க கூடிய பாரம்பரிய தொழில் அறிவையும் அந்தந்த பகுதிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையிலும் அமைந்துள்ள தொழில் நுட்பங்களை பாதுகாத்து அதை வெளி கொண்டு வரும் பணியை சுதேசி இயக்கம் செய்து வருகிறது. கம்யூனிஸ வரலாறே அழிப்பது தான். இதன் காரணமாக சோவியத் ரஷ்யா 15 நாடுகளாக சிதறுண்டு போனது. கம்யூனிஸம் என்ற பெயரில் ஆட்சிக்கு வந்த சீனா தனது பாரம்பரிய செல்வங்களை எல்லாம் அழித்து விட்டு இன்று பரிதாபமாக முதலாளித்துவத்தை நோக்கி ஓடி கொண்டு இருக்கிறது. மியன்மார் என்று அழைக்கபடும் பர்மா வளர்ச்சி ஒன்றும் இல்லாமல் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளது. அழித்தல் கம்யூனிசம் என்றால் ஆக்கல் சுதேசி இயக்கமாக இருக்கும்.

நன்றி  விஜய பாரத

தன் ஃபிட்னெஸ்குறித்து - சைலேந்திரபாபு

மணக்கால் அய்யம்பேட்டை | 12:43 PM | Best Blogger Tips

‘‘ஐம்பது வயசுலயும் நான் ஆரோக்கியமா இருக்கேன்னா அதற்கு நடை, உடற்பயிற்சி, உணவு, உடல்நலத்தின் மீதான அக்கறைதான் காரணம்’’ என்கிறார் உற்சாகத்துடன். தன் ஃபிட்னெஸ்குறித்து விளக்கமாகப் பேசினார் சைலேந்திரபாபு.

10 நிமிஷம் மூச்சுப் பயிற்சி பண்ணுவேன். இதனால், உடலில் புத்துணர்ச்சி பாய்வதுபோல் உணரமுடிகிறது. ஒரே மாதிரியான உடற்பயிற்சியைத் தொடர்ந்து செய்வதும் கூடாது. வாரத்தில் மூன்று நாள் ஓட்டம், இரண்டு நாள் எடைப் பயிற்சி, இரண்டு நாள் கராத்தே பயிற்சி. இதுதான் என் உடற்பயிற்சிக்கான லிஸ்ட்.

உணவு

அரை வயிறு உணவு, கால் வயிறு தண்ணீர், கால் வயிறு வெற்றிடம்... இது என் பத்தாம் வகுப்பு வாத்தியார் சொன்ன உணவு மொழி. இதனால் உடல் எடை ஏறாது.  வயிற்றில் இருக்கும் வெற்றிடத்தால் மூச்சுவிடுவது ஈஸியாக இருக்கும். ஜீரணக் கோளாறு, வயிறு மந்தம் என மருத்துவரை நாடவேண்டி இருக்காது.

சிலர் அசைவ உணவுதான் உடலுக்கு வலிமையைத் தரும் என்று நினைக்கிறார்கள். தினமும் ஏதாவது ஒரு முளைக்கட்டிய பயருவகையை வெந்நீரில் போட்டுச் சாப்பிடுவேன். 

பயரு வகைகளில் 40 சதவிகிதம் புரதம் இருப்பதால், இது மாமிசத்துக்கு இணையான உணவு. சைவ உணவோட மேன்மையையும், பழங்களை மற்ற உணவோடு கலந்து உண்ணும் முறைகளையும் பற்றி தெரிஞ்சுக்கணும்னா, ஹார்வி டயமண்ட் என்ற ஓர் ஆராய்ச்சியாளர் எழுதிய ‘ஃபிட் பார் லைஃப்’ புத்தகத்தைப் படிச்சு அதுபடி நடந்தாலே போதும்.

ஆறு வருடங்களுக்கு முன்பு வரைக்கும், தினமும் டபுள் ஆம்லெட் சாப்பிட்டுவந்தேன்.   காவல் துறைக்கு குதிரைகள் வாங்க உத்திரபிரதேசம் சகரான்பூர் என்ற ஊருக்குப் போயிருந்தேன்.  அங்கு இருந்த கால்நடை மருத்துவர் டாக்டர் அமீர் பாஷா, ஒவ்வொரு முட்டையின் மஞ்சள் கருவிலும் அரைக் கிலோ மாட்டு இறைச்சியில் இருக்கக்கூடிய அளவு கொலஸ்ட்ரால் இருக்குன்னு சொன்னார். கொலஸ்ட்ரால் அதிகமானால் ரத்தக் குழாயை அடைச்சிடும். ரத்தத்தில் கொலஸ்ட்ரால் அதிகம் இருப்பவர்கள் முட்டையின் மஞ்சள் கருவை சாப்பிடக்கூடாது. வெள்ளைக் கருவை மட்டுமே சாப்பிடலாம்னு சொன்னார். அன்னைக்கே ஆம்லெட் சாப்பிடுறதை நிறுத்திட்டேன்.‘‘ஐம்பது வயசுலயும் நான் ஆரோக்கியமா இருக்கேன்னா அதற்கு நடை, உடற்பயிற்சி, உணவு, உடல்நலத்தின் மீதான அக்கறைதான் காரணம்’’ என்கிறார் உற்சாகத்துடன். தன் ஃபிட்னெஸ்குறித்து விளக்கமாகப் பேசினார் சைலேந்திரபாபு.

10 நிமிஷம் மூச்சுப் பயிற்சி பண்ணுவேன். இதனால், உடலில் புத்துணர்ச்சி பாய்வதுபோல் உணரமுடிகிறது. ஒரே மாதிரியான உடற்பயிற்சியைத் தொடர்ந்து செய்வதும் கூடாது. வாரத்தில் மூன்று நாள் ஓட்டம், இரண்டு நாள் எடைப் பயிற்சி, இரண்டு நாள் கராத்தே பயிற்சி. இதுதான் என் உடற்பயிற்சிக்கான லிஸ்ட்.

உணவு

அரை வயிறு உணவு, கால் வயிறு தண்ணீர், கால் வயிறு வெற்றிடம்... இது என் பத்தாம் வகுப்பு வாத்தியார் சொன்ன உணவு மொழி. இதனால் உடல் எடை ஏறாது. வயிற்றில் இருக்கும் வெற்றிடத்தால் மூச்சுவிடுவது ஈஸியாக இருக்கும். ஜீரணக் கோளாறு, வயிறு மந்தம் என மருத்துவரை நாடவேண்டி இருக்காது.

சிலர் அசைவ உணவுதான் உடலுக்கு வலிமையைத் தரும் என்று நினைக்கிறார்கள். தினமும் ஏதாவது ஒரு முளைக்கட்டிய பயருவகையை வெந்நீரில் போட்டுச் சாப்பிடுவேன்.

பயரு வகைகளில் 40 சதவிகிதம் புரதம் இருப்பதால், இது மாமிசத்துக்கு இணையான உணவு. சைவ உணவோட மேன்மையையும், பழங்களை மற்ற உணவோடு கலந்து உண்ணும் முறைகளையும் பற்றி தெரிஞ்சுக்கணும்னா, ஹார்வி டயமண்ட் என்ற ஓர் ஆராய்ச்சியாளர் எழுதிய ‘ஃபிட் பார் லைஃப்’ புத்தகத்தைப் படிச்சு அதுபடி நடந்தாலே போதும்.

ஆறு வருடங்களுக்கு முன்பு வரைக்கும், தினமும் டபுள் ஆம்லெட் சாப்பிட்டுவந்தேன். காவல் துறைக்கு குதிரைகள் வாங்க உத்திரபிரதேசம் சகரான்பூர் என்ற ஊருக்குப் போயிருந்தேன். அங்கு இருந்த கால்நடை மருத்துவர் டாக்டர் அமீர் பாஷா, ஒவ்வொரு முட்டையின் மஞ்சள் கருவிலும் அரைக் கிலோ மாட்டு இறைச்சியில் இருக்கக்கூடிய அளவு கொலஸ்ட்ரால் இருக்குன்னு சொன்னார். கொலஸ்ட்ரால் அதிகமானால் ரத்தக் குழாயை அடைச்சிடும். ரத்தத்தில் கொலஸ்ட்ரால் அதிகம் இருப்பவர்கள் முட்டையின் மஞ்சள் கருவை சாப்பிடக்கூடாது. வெள்ளைக் கருவை மட்டுமே சாப்பிடலாம்னு சொன்னார். அன்னைக்கே ஆம்லெட் சாப்பிடுறதை நிறுத்திட்டேன்.
 
Thanks to Doctor Vikatan

அல்சர், சர்க்கரை வியாதியை நீக்கும் வெற்றிலை !

மணக்கால் அய்யம்பேட்டை | 12:41 PM | Best Blogger Tips
அல்சர், சர்க்கரை வியாதியை நீக்கும் வெற்றிலை.

மனிதன் தோன்றிய காலத்தில் இருந்தே வெற்றிலை பயன்பாட்டில் இருந்து வருகிறது. வெற்றிலையில் கால்சியம், இரும்புச்சத்து ஆகியன அதிகம் உள்ளது.இது தவிர வெற்றிலையைப் பயன்படுத்தி பல நோய்களையும் குணப்படுத்தலாம். அரைடம்ளர் தேங்காய் எண்ணெயில் 5 வெற்றிலையை போட்டு கொதிக்க விடவும்.

இலை நன்கு சிவந்ததும் வடிகட்டி பாட்டிலில் அடைத்து வைத்துக் கொண்டு சொரி, சிரங்கு, படைக்கு தடவி வந்தால் நல்ல குணம் கிடைக்கும்.

வயிற்றுவலி:

இரண்டு தேக்கரண்டியளவு சீரகத்தினை மைபோல் அரைத்து மூன்று தேக்கரண்டி வெண்ணெயில் போட்டு கலக்கி 5 வெற்றிலையை எடுத்து அதன் பின் புறத்தில் இந்தக்கலவையை கனமாக தடவி, மருந்து தடவிய பாகத்தை சட்டியில் படும்படி வைத்து வதக்க வேண்டும்.

ஒவ்வொரு வெற்றிலையையும் வதக்கிய பின்னர் ஒரு டம்ளர் தண்ணீரை விட்டு நன்றாக கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டி அந்த கசாயத்தை ஒரு வேளை மட்டும் சாப்பிட்டால் வயிற்றுவலி நீங்கி விடும்.

தலைவலி:

வெற்றிலையைக் கசக்கிக் சாறு எடுத்து அந்த சாற்றில் சிறிதளவு கற்பூரத்தைச் சேர்த்துக் குழப்பி வலியுள்ள இடத்தில் தடவினால் தலை வலி உடனே குணமாகும்.

தேள் விஷம்:

இரண்டு வெற்றிலையை எடுத்து அதில் ஒன்பது மிளகை மடித்து வாயில் போட்டு நன்றாக மென்று விழுங்கி தேங்காய் துண்டுகள் சிலவற்றினையும் மென்று தின்றால் தேள் விஷம் உடனே முறியும்.

சர்க்கரை வியாதி:

சர்க்கரை வியாதி உள்ளவர்கள் இரண்டு வெற்றிலையுடன் வேப்பிலை ஒரு கைப் பிடியளவும் அருகம்புல் ஒரு கைப்பிடியளவும் ஒரு சட்டியில் போட்டு 500 மிலி தண்ணீர் விட்டு நன்றாக கொதிக்க விடவும்.

தண்ணீரின் அளவு 150 மிலி ஆக குறையும் வரைகொதிக்க விட்டு, பின்பு வடிகட்டி ஆற வைத்து வேளைக்கு 50 மிலி வீதம் மூன்று வேளை உணவுக்கு முன்பு சாப்பிடவும்.

அல்சர்:

அல்சர் உள்ளவர்கள் இரண்டு வெற்றிலையுடன் அத்தி இலை 1 கைப்பிடி வேப்பிலை 5 ஆகியவற்றை மேலே உள்ள முறைப்படி கசாயம் தயாரித்து மூன்று வேளை அருந்தி வரவும்.

முற்றின வெற்றிலையைச் சாறு பிழிந்து அதில் இரண்டு அவுன்ஸ்சாற்றுடன் 3 மிளகு அதே அளவு சுக்கு ஆகியவற்றை ஒரு தேக்கரண்டி தேனுடன் கொடுத்தால் இரைப்பு மூச்சுத் திணறல் குணமாகும்.மனிதன் தோன்றிய காலத்தில் இருந்தே வெற்றிலை பயன்பாட்டில் இருந்து வருகிறது. வெற்றிலையில் கால்சியம், இரும்புச்சத்து ஆகியன அதிகம் உள்ளது.இது தவிர வெற்றிலையைப் பயன்படுத்தி பல நோய்களையும் குணப்படுத்தலாம். அரைடம்ளர் தேங்காய் எண்ணெயில் 5 வெற்றிலையை போட்டு கொதிக்க விடவும்.

இலை நன்கு சிவந்ததும் வடிகட்டி பாட்டிலில் அடைத்து வைத்துக் கொண்டு சொரி, சிரங்கு, படைக்கு தடவி வந்தால் நல்ல குணம் கிடைக்கும்.

வயிற்றுவலி:

இரண்டு தேக்கரண்டியளவு சீரகத்தினை மைபோல் அரைத்து மூன்று தேக்கரண்டி வெண்ணெயில் போட்டு கலக்கி 5 வெற்றிலையை எடுத்து அதன் பின் புறத்தில் இந்தக்கலவையை கனமாக தடவி, மருந்து தடவிய பாகத்தை சட்டியில் படும்படி வைத்து வதக்க வேண்டும்.

ஒவ்வொரு வெற்றிலையையும் வதக்கிய பின்னர் ஒரு டம்ளர் தண்ணீரை விட்டு நன்றாக கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டி அந்த கசாயத்தை ஒரு வேளை மட்டும் சாப்பிட்டால் வயிற்றுவலி நீங்கி விடும்.

தலைவலி:

வெற்றிலையைக் கசக்கிக் சாறு எடுத்து அந்த சாற்றில் சிறிதளவு கற்பூரத்தைச் சேர்த்துக் குழப்பி வலியுள்ள இடத்தில் தடவினால் தலை வலி உடனே குணமாகும்.

தேள் விஷம்:

இரண்டு வெற்றிலையை எடுத்து அதில் ஒன்பது மிளகை மடித்து வாயில் போட்டு நன்றாக மென்று விழுங்கி தேங்காய் துண்டுகள் சிலவற்றினையும் மென்று தின்றால் தேள் விஷம் உடனே முறியும்.

சர்க்கரை வியாதி:

சர்க்கரை வியாதி உள்ளவர்கள் இரண்டு வெற்றிலையுடன் வேப்பிலை ஒரு கைப் பிடியளவும் அருகம்புல் ஒரு கைப்பிடியளவும் ஒரு சட்டியில் போட்டு 500 மிலி தண்ணீர் விட்டு நன்றாக கொதிக்க விடவும்.

தண்ணீரின் அளவு 150 மிலி ஆக குறையும் வரைகொதிக்க விட்டு, பின்பு வடிகட்டி ஆற வைத்து வேளைக்கு 50 மிலி வீதம் மூன்று வேளை உணவுக்கு முன்பு சாப்பிடவும்.

அல்சர்:

அல்சர் உள்ளவர்கள் இரண்டு வெற்றிலையுடன் அத்தி இலை 1 கைப்பிடி வேப்பிலை 5 ஆகியவற்றை மேலே உள்ள முறைப்படி கசாயம் தயாரித்து மூன்று வேளை அருந்தி வரவும்.

முற்றின வெற்றிலையைச் சாறு பிழிந்து அதில் இரண்டு அவுன்ஸ்சாற்றுடன் 3 மிளகு அதே அளவு சுக்கு ஆகியவற்றை ஒரு தேக்கரண்டி தேனுடன் கொடுத்தால் இரைப்பு மூச்சுத் திணறல் குணமாகும்.
 
நன்றி ஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவம்.
 
தீட்சைகள் !

மணக்கால் அய்யம்பேட்டை | 12:39 PM | Best Blogger Tips
தீட்சைகள்
காய சித்தி என்னும் உடல் தூய்மையடைய பத்துவிதமான தீட்சைகள் கூறப்படுகின்றன. சுத்தி முறைகளே தீட்சை என்று கூறப்படுகிறது.

1. மயிர்க்கால் வழியே துர்நீர்களைக் கழியச் செய்தல்
2. வாத, பித்த, ஐய குற்றங்களை நீக்குதல்
3. கெட்ட குருதியைக் கசியச் செய்தல்
4. உடல் சட்டையைக் கழட்டுதல்
5. மயிர் கறுத்தல். பஞ்சபூதம் வசமாதல்
6. சுழுமுனை திறந்து தூர திருட்டி வசமாதல்
7. உடல் சோதி வடிவமாகிப் பிரகாசித்தல்
8. உடல் காற்றாக மிதத்தல், கூடுவிட்டுக் கூடு பாய்தல்
9. எட்டு சித்திகள் அடைதல்
10. உடல் ஒளிவடிவமாதல்.

மேற்கண்ட பத்துவிதமான சுத்திகளையும் அடையச் செய்யும் மருந்துகள் மூன்று. அந்த மருந்தே வீர மருந்து, விண்ணோர் மருந்து, நாரிமருந்து என்னும் கற்பங்களாகும். அவை முறையே கற்பம், யோக கற்பம், ஞான கற்பம் என்பனவாகும். காய சித்தி என்னும் உடல் தூய்மையடைய பத்துவிதமான தீட்சைகள் கூறப்படுகின்றன. சுத்தி முறைகளே தீட்சை என்று கூறப்படுகிறது.

1. மயிர்க்கால் வழியே துர்நீர்களைக் கழியச் செய்தல்
2. வாத, பித்த, ஐய குற்றங்களை நீக்குதல்
3. கெட்ட குருதியைக் கசியச் செய்தல்
4. உடல் சட்டையைக் கழட்டுதல்
5. மயிர் கறுத்தல். பஞ்சபூதம் வசமாதல்
6. சுழுமுனை திறந்து தூர திருட்டி வசமாதல்
7. உடல் சோதி வடிவமாகிப் பிரகாசித்தல்
8. உடல் காற்றாக மிதத்தல், கூடுவிட்டுக் கூடு பாய்தல்
9. எட்டு சித்திகள் அடைதல்
10. உடல் ஒளிவடிவமாதல்.

மேற்கண்ட பத்துவிதமான சுத்திகளையும் அடையச் செய்யும் மருந்துகள் மூன்று. அந்த மருந்தே வீர மருந்து, விண்ணோர் மருந்து, நாரிமருந்து என்னும் கற்பங்களாகும். அவை முறையே கற்பம், யோக கற்பம், ஞான கற்பம் என்பனவாகும்.
 
Thanks to Gnanayohi Yohi

சித்த மருத்துவம் - தலைவலி குணமாக

மணக்கால் அய்யம்பேட்டை | 12:30 PM | Best Blogger Tips

http://www.spottamil.com/sites/default/files/styles/large/public/field/image/headache_couple_argue_break-up.jpg 
 1.தலை பாரம் குறைய:-வேப்பம் புண்ணாக்கைச் சுட்டு மூக்கில் உறிஞ்ச தலை பாரம் தீரும்.

2.தலை நீரேற்றம்,தலைக்கனம் நீங்க:-தும்பைப் பூவை நல்லெண்
ணையில் காய்ச்சித் தலை முழுகி வர தலை நீரேற்றம்,தலைக்கனம் குறையும்.

3.தலை பாரம் குறைய:- மஞ்சளின் மீது (விரலி மஞ்சள்)விளக் கெண்ணெய் தடவி விளக்கில் வாட்ட வரும் புகையை மூக்கில் உறிஞ்சி வர தலை பாரம் குறையும்.

4.தலைக் கனம் தீர:-இஞ்சிச்சாறு,பால்,நல்லெண்ணை சம அளவு கலந்து காய்ச்சி தலைக்கு வாரம் ஒரு முறை மூழ்கி வர தலைக்கனம் தீரும்.

5.தலைப்படிப்புத் தீர:-கொடுவேலி வேர்ப் பட்டையை அரைத்துப் பாலில் 21 நாட்கள் குடித்து வர தலைப் பிடிப்புத் தீரும்.

6.தலை நீர்க் கோவை தீர:-நல்ல வேளைச் சமூலத்தை இடித்துப் பழிந்த சக்கையைத் தலையில் வைத்துக் கட்ட தலை நீர்க்கோவை தீரும்.

7.நீர்க்கோவை தீர:-கருவேப்பிலைப் பொடி 2 கிராம் சர்க்கரை சேர்த்து காலை,மாலை சாப்பிட்டு வர தலை நீர்க்கோவை தீரும்.

8.மூக்கடைப்பு,தலைபாரம் நீங்க:சுண்டைவேர்,தும்பைவேர்,இலுப்பைப்
புண்ணாக்கு சம எடை பொடியாக்கிச் சேர்த்துத் துணியில் கட்டி நாசியில் நுகர மூக்கடைப்பு,தலைபாரம் குணமாகும்.

9.மூக்கல் நீர்வடிதல்,தலைபாரம் குணமாக:-சிறு தேட்கொடுக்கு இலைச் சாறு,நல்லெண்ணெய் சம அளவு கலந்து காய்ச்சி உடல் தலைக்குத் தேய்த்துக் குளித்து வர மூக்கில் நீர் வடிதல்,தலைபாரம் தீரும்.

10.தலைச்சுற்று,கிறுகிறுப்பு குணமாக:-நெல்லிக்காய்ச் சாறு நாள் 1க்கு ஒரு அவுன்ஸ் வதம் குடி;த்து வரத் தீரும்.

11.தலைவலி குணமாக:-அகத்தி இலைச் சாறு எடுத்து நெற்றியில் தடவி வர மாறும்.

12.நாட்பட்ட தலைவலி குணமாக:-குங்குமப் பூவைத் தாய்ப்பால் விட்டு அரைத்து நெற்றியில் பற்றுப் போட்டு வரக் குணமாகும்.

13.சகல விதமான தலைவலியும் தீர:-மிளகாய் வற்றல்,மிளகு இவை இரண்டையும் நல்லெண்ணையில் காய்ச்சி வாரம் ஒரு முறை தலை முழுகி வரவும்.

14.தலைசுற்றல்,இரத்தக் கொதிப்பு (டிடழழன pசநளளநச) நீங்க:-நெல்லி வற்றல் ,பச்சை பாசிப் பயிறு கசாயம் வைத்துச் சாப்பிட்டு வரத் தீரும்.

15.தலைவலி குணமாக:-சுக்கை தாய்ப்பால் அல்லது பசுவின் பாலில் அரைத்து பற்றுப் போட்டு வரத் தலை வலி தீரும். தொடரும்!
 
Thanks to Gnanayohi Yohi

ஜலதோஷம் - பாட்டி வைத்தியம் !

மணக்கால் அய்யம்பேட்டை | 12:22 PM | Best Blogger Tips
ஜலதோஷம் - பாட்டி வைத்தியம்:-

தொண்டை எரிச்சல்
எலுமிச்சம்பழச்சாறுடன் தேனும் சம அளவில் வெந்நீரில் கலந்து சாப்பிட்டு வர இருமல் நிற்கும்
துளசி சாறும், இஞ்சிச் சாறும் சம அளவு எடுத்து கலக்கி குடித்தால் சளி குறையும்.
பசும்பாலில் சிறிதளவு ஒமம் போட்டு காய்ச்சி தினமும் காலையில் குடிக்க சளி நீங்கும்.
இருமல்

1 கப் ஆப்பிள், 1 கப் எலுமிச்சைச் சாறு, 1 கப் இஞ்சி சாறு, 1 கப் வெள்ளபூடு இவற்றை எடுத்து ஒன்றாக கொதிக்க வைத்து பின்பு அது மாவு போல் ஆனவுடன் தனியாக எடுத்து அதனுடன் தேவையான அளவு தேன் கலந்து அதை காலை மற்றும் இரவு ஒரு தேக்கரண்டி சாப்பிட்டு வந்தால் சளி, இருமல், பசி, ஜீரணம் மற்றும் கொழுப்பையும் கட்டுப்படுத்தும்
சளித் தொல்லை

ஆடாதொடா இலை, வெற்றிலை, துளசி, தூதுவளை இவற்றில் சிறிதளவு எடுத்து லேசாக அரைத்து பின்பு அதை நன்றாக இட்லி அவிப்பது போல் அவித்து அதிலிருந்து சாறு எடுக்க வேண்டும் . 2 தேக்கரண்டி சாறு அதில் சம அளவு தேன் கலந்து தினமும் 1 பொழுது வீதம் மூன்று நாள் சாப்பிட்டு வந்தால் சளித்தொல்லை முற்றிலும் குணமாகும்.
ஜலதோஷம்

திப்பிலி, கடுகு, சீரகம், சுக்கு மற்றும் மிளகு இவற்றில் சிறிதளவு எடுத்து அதனுடன் வேப்பங் கொழுந்தையும் சேர்த்து அரைத்து நிழலில் காயவைத்து பி்ன்பு அதை மாத்திரையாக்கி தினமும் காலை மற்றும் மாலை சாப்பிட்டு வந்தால் ஜலதோஷம் குணமாகும்.
ஜலதோஷம்

சீரகத்தை நன்றாக வருத்து பொடியாக்கி அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து 2 வேளை சாப்பிட்டு வந்தால் ஜலதோஷம் மற்றும் இருமல் குணமாகும்.

மார்புச் சளி

ஏலக்காயை நன்கு பொடித்து பொடி செய்து வைத்துக் கொள்ளவும். தினமும் காலை மாலை சாப்பிடுவதற்கு முன் வெறும் வயிற்றில் ஒரு தேக்கரண்டி பொடியை நெய்யில் கலந்து சாப்பிடவும்.
தலை குளிர்ச்சி

காய்ந்த மஞ்சள் சாமந்தி பூவை எடுக்கவும்.
3 தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் எடுக்கவும்.
மஞ்சள் சாமந்தி பூவை தேங்காய் எண்ணெயுடன் சேர்க்கவும்.
பின்பு அதை வடிகட்டவும், வடிக்கட்டின சாரை.
3 நாட்களுக்கு பிறகு தலையில் தடவி வந்தால் மூளை மற்றும் தலை குளிர்ச்சி பெறும்.

மூக்கடைப்பு தீர‌

சிறிதளவு கடுக்காய் பொடி மற்றும் நெல்லிக்காய் பொடியை தினமும் காலை ஒரு வேளை தேனுடன் கலந்து சாப்பிடவும்.

Thanks to FB Karthikeyan Mathan

** மகத்தான கவிஞர் மகாகவி பாரதியாரின் மகத்தான எண்ணங்கள் **

மணக்கால் அய்யம்பேட்டை | 12:20 PM | Best Blogger Tips
** மகத்தான கவிஞர் மகாகவி பாரதியாரின்  மகத்தான எண்ணங்கள் ** 
இன்றைய ஊழல் அரசியல்வாதிகளின் மனசாட்சியின் பார்வைக்கு...

***************************
பாரத தேசமென்று பெயர்சொல்லு வார் - மிடிப்
பயங்கொல்லு வார்துயர்ப் பகைவெல்லு வார்.

வெள்ளிப் பனிமலையின் மீதுலவு வோம் - அடி
மேலைக் கடல்முழுதும் கப்பல் விடுவோம்
பள்ளித் தலமனைத்தும் கோயில் செய்கு வோம், எங்கள்
பாரத தேசமென்று தோள்கொட்டுவோம். (பாரத)

சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்,
சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம்
வங்கத்தில் ஓடிவரும் நீரின் மிகையால்
மையத்து நாடுகளில் பயிர்செய்குவோம். (பாரத)

வெட்டுக் கனிகள் செய்து தங்கம் முதலாம்
வேறு பலபொருளும் குடைந் தெடுப்போம்,
எட்டுத் திசைகளிலுஞ் சென்றிவை விற்றே
எண்ணும் பொருளனைத்தும் கொண்டு வருவோம். (பாரத)

முத்துக் குளிப்பதொரு தென் கடலிலே,
மொய்த்து வணிகர்பல நாட்டினர்வந்தே,
நத்தி நமக்கினிய பொருள் கொணர்ந்தே
நம்மருள் வேண்டுவது மேற்க ரையிலே. (பாரத)

சிந்து நதியின்மிசை நிலவினி லே
சேர நன்னாட்டிளம் பெண்களுட னே
சுந்தரத் தெலுங்கினிற் பாட்டிசைத்துத்
தோணிக ளோட்டிவிளை யாடிவரு வோம். (பாரத)

கங்கை நதிப்புறத்துக் கோதுமைப் பண்டம்
காவிரி வெற்றிலைக்கு மாறுகொள்ளு வோம்
சிங்க மராட்டியர்தம் கவிதை கொண்டு
சேரத்துத் தந்தங்கள் பரிசளிப்போம். (பாரத)

காசி நகர்ப்புலவர் பேசும் உரை தான்
காஞ்சியில் கேட்பதற்கோர் கருவிசெய் வோம்
ராசபுத் தானத்து வீரர் தமக்கு
நல்லியற் கன்னடத்துத் தங்கம் அளிப்போம். (பாரத)

பட்டினில் ஆடையும் பஞ்சினில் உடையும்
பண்ணி மலைகளென வீதி குவிப்போம்
கட்டித் திரவியங்கள் கொண்டுவரு வார்
காசினி வணிகருக்கு அவை கொடுப்போம் (பாரத)

ஆயுதம் செய் வோம் நல்ல காகிதம் செய்வோம்
ஆலைகள் வைப்போம் கல்விச் சாலைகள் வைப்போம்
ஒயுதல்செய் யோம்தலை சாயுதல் செய்யோம்
உண்மைகள்சொல் வோம்பல வண்மைகள் செய்வோம். (பாரத)

குடைகள்செய் வோம்உழு படைகள் செய் வோம்
கோணிகள்செய் வோம் இரும் பாணிகள் செய்வோம்
நடையும் பறப்புமுணர் வண்டிகள் செய்வோம்
ஞாலம் நடுங்கவரும் கப்பல்கள் செய்வோம் (பாரத)

மந்திரம்கற் போம்வினைத் தந்திரம்கற் போம்
வானையளப் போம்கடல் மீனையளப்போம்
சந்திரமண் டலத்தியல் கண்டுதெளி வோம்
சந்திதெருப் பெருக்கும் சாத்திரம் கற்போம். (பாரத)

காவியம் செய்வோம் நல்ல காடு வளர்ப்போம்
கலைவளர்ப் போம் கொல்ல ருலைவளர்ப் போம்
ஓவியம்செய் வோம் நல்லஊசிகள் செய் வோம்
உலகத் தொழிலனைத்து முவந்து செய்வோம். (பாரத)

சாதி இரண்டொழிய வேறில்லை யென்றே
தமிழ்மகள் சொல்லியசொல் அமிழ்த மென்போம்
நீதிநெறி யினின்று பிறர்க்கு தவும்
நேர்மையர் மேலவர், கீழவர் மற்றோர். (பாரத) இன்றைய ஊழல் அரசியல்வாதிகளின் மனசாட்சியின் பார்வைக்கு...

நேர்மையர் மேலவர், கீழவர் மற்றோர். (பாரத)
 
நன்றி FB Aravind Ramaswamy
 
குருபெயர்ச்சி பரிகாரம் செய்யவேண்டிய ராசிகள் !

மணக்கால் அய்யம்பேட்டை | 12:14 PM | Best Blogger Tips
குருபெயர்ச்சி பரிகாரம் செய்யவேண்டிய ராசிகள்;
-------------------------------------------------------------------
விஜய வருடம், வைகாசி மாதம் 14-ஆம் தேதி, செவ்வாய்க்கிழமை(இன்று) (28.5.13) கிருஷ்ண பட்சத்து சதுர்த்தி திதி, மேல்நோக்கு உள்ள உத்திராட நட்சத்திரம், சுப்பிரம் நாமயோகம், கௌலவம் நாமகரணம், நேத்திரம் ஜீவனம் நிறைந்த சித்த யோகத்தில், ஏழாம் ஜாமத்தில், பஞ்ச பட்சியில்- கோழி துயில் கொள்ளும் நேரத்தில், உத்தராயன புண்ணிய கால வசந்த ருதுவில், இரவு 9.15 மணிக்கு பிரகஸ்பதி எனும் குரு பகவான் ரிஷப ராசியிலிருந்து
மிதுன ராசிக்குள் சென்று அமர்கிறார். 12.6.14 வரை இங்கு அமர்ந்து தனது கதிர் வீச்சை செலுத்துவார்.

முதல் தரம்;
                   ரிசபம்,சிம்மம்,துலாம்,தனுசு,கும்பம்.
இந்த ராசிகளுக்கு குருபெயர்ச்சி அருமையாக இருக்கும் இவர்கள் பரிகாரம் செய்ய வேண்டியதில்லை.

இரண்டாம் தரம்;
                        மேசம்,மிதுனம்,கடகம்,கன்னி,மீனம்.மத்திபமான பலன்.
மூன்றாம் தரம்;
                         விருச்சிகம்,மகரம்.
இரண்டாம் தர,மூன்றாம் தர ராசிகார்ர்கள் பரிகாரம் செய்யவேண்டும்.

பரிகாரம்;
                வியாழக்கிழமைகளில் விரதமிருந்து, குரு தட்சிணாமூர்த்திக்கு கொண்டை கடலையை மாலையாக கோர்த்து அணிவித்து,மஞ்சள் நிற மலர்களால் அலங்கரித்து, நெய் தீபமேற்றி வழிபடவும். வெண் முல்லை மலர்களால் குருவுக்கு அர்ச்சனை செய்வது நல்லது.

”ஓம் ஜீரம் ஜரிம் ஜீரௌம் சகுரவே நமஹ”
 என்ற குரு மந்திரத்தை தொடர்ந்து 4 வியாழக்கிழமை ஒவ்வொரு முறையும் 108 முறை சொன்னால் நன்மையுண்டாகும்.விஜய வருடம், வைகாசி மாதம் 14-ஆம் தேதி, செவ்வாய்க்கிழமை(இன்று) (28.5.13) கிருஷ்ண பட்சத்து சதுர்த்தி திதி, மேல்நோக்கு உள்ள உத்திராட நட்சத்திரம், சுப்பிரம் நாமயோகம், கௌலவம் நாமகரணம், நேத்திரம் ஜீவனம் நிறைந்த சித்த யோகத்தில், ஏழாம் ஜாமத்தில், பஞ்ச பட்சியில்- கோழி துயில் கொள்ளும் நேரத்தில், உத்தராயன புண்ணிய கால வசந்த ருதுவில், இரவு 9.15 மணிக்கு பிரகஸ்பதி எனும் குரு பகவான் ரிஷப ராசியிலிருந்து
மிதுன ராசிக்குள் சென்று அமர்கிறார். 12.6.14 வரை இங்கு அமர்ந்து தனது கதிர் வீச்சை செலுத்துவார்.

முதல் தரம்

ரிசபம்,சிம்மம்,துலாம்,தனுசு,கும்பம்.
இந்த ராசிகளுக்கு குருபெயர்ச்சி அருமையாக இருக்கும் இவர்கள் பரிகாரம் செய்ய வேண்டியதில்லை.

இரண்டாம் தரம்

மேஷம்,மிதுனம்,கடகம்,கன்னி,மீனம்.மத்திபமான பலன்.
 
மூன்றாம் தரம்

விருச்சிகம்,மகரம்.

இரண்டாம் தர,மூன்றாம் தர ராசிகார்ர்கள் பரிகாரம் செய்யவேண்டும்.

பரிகாரம்

வியாழக்கிழமைகளில் விரதமிருந்து, குரு தட்சிணாமூர்த்திக்கு கொண்டை கடலையை மாலையாக கோர்த்து அணிவித்து,மஞ்சள் நிற மலர்களால் அலங்கரித்து, நெய் தீபமேற்றி வழிபடவும். வெண் முல்லை மலர்களால் குருவுக்கு அர்ச்சனை செய்வது நல்லது.

”ஓம் ஜீரம் ஜரிம் ஜீரௌம் சகுரவே நமஹ”
என்ற குரு மந்திரத்தை தொடர்ந்து 4 வியாழக்கிழமை ஒவ்வொரு முறையும் 108 முறை சொன்னால் நன்மையுண்டாகும்.
 
என்றும் அன்புடன் பட்டுக்கோட்டை ஜோதிடர் சுப்ரமணியன்
 
காயமடைந்த அல்லது அடிபட்ட மூட்டுக்கள் ஏன் வீக்கமடைகின்றன????

மணக்கால் அய்யம்பேட்டை | 11:34 AM | Best Blogger Tips
காயமடைந்த அல்லது அடிபட்ட மூட்டுக்கள் ஏன் வீக்கமடைகின்றன????

முழங்கால் அல்லது கணுக்கால் மூட்டில் அடி அல்லது காயம் ஏற்பட்டால் அங்கு வீக்கம் ஏற்படுகிறது. ஏனெனில் அந்த அடிபட்ட இடத்தில் இயல்பாக உள்ள உயிர் நீர்மங்கள் (Cells) பெருக்கப்பட்டுத் திண்டாகக் குந்திக் கொள்கின்றன. அத்துடன் அடிபட்டதால் உள்காயம் ஏற்பட்டு உள்ளே குருதி ஓரளவு கசிவு ஏற்பட்டுப் பரவும்.

வீக்கங்கள் இரண்டு பெருங் குழுக்களாகப் பிரிக்கப்படுகின்றன. அவை பொய் வீக்கக் கட்டிகள், உண்மை வீக்கக் கட்டிகள் (False, True tumours) எனப்படும். அழற்சி சார்ந்த வீக்கங்கள் (Inflammatory swellings) மூட்டுகளில் தோன்றுபவை; முதல் வகையான பொய் வீக்கக் கட்டிகளைச் சாரும். அது உட்புண் (Bruises), கருங்கண் (Black eyes), சுளுக்குகள், (Sprains) முறிவுகள், (Fractures) கொப்புளங்கள் (Boils) சீழ்க்கட்டிகள் (Abscesses) போன்ற தொற்று நோய்கள் ஆகியவற்றை உட்படுத்தி உள்ளது. வீங்கிய இணைப்புகள் (Swollen joints) குளிர்ந்த ஈரத்துணியை நெருக்கி அழுத்தமாகக் கட்டுவதாலும் அல்லது பஞ்சு உள்வைத்துத் தைத்த பையை ஈரமாக்கி அழுத்திக் கட்டு வதாலும் அல்லது பனிக்கட்டித் தொகுதியை மேல்வைப்பதாலும் தம் தன்மையிலிருந்து சிறிது சிறிதாக மாறி நலத்தை நோக்கிச் செல்லும். இறுக்கமான கட்டுகளும் அதற்குத் துணையாகப் பயன்படுத்தப்படும்.

உண்மையான கட்டிகள் அல்லது வீக்கங்கள் (True tumours or Swellings) என்பவை, ஏற்கனவே உள்ள உடம்பு உயிர்மங்களிலிருந்து வளர்ச்சி பெற்ற இழைமத் தொகுதிகளால் ஆனவை. அவை தொடர்ந்து வளரும் போக்குக் கொண்டவை. அவற்றுள் சில கட்டிகள் இயல்பான உயிர்மங்களையுடையதாய் ஏதும் விளைவிக்காததாய் (Benign) அல்லது துன்பம் தராததாய் இருக்கின்றன. மற்ற கட்டிகளில் உள்ள உயிர்மங்கள் இயல்புக்கு மாறாகத் தம் தாய் உயிர்மங்களிலிருந்து கொஞ்சம் வேறுபட்டு, பொதுவாக நச்சுத் தன்மை கொண்ட கொடிய வேகமாகப் பரவும் கட்டிகளாக மாறிவிடுகின்றன.முழங்கால் அல்லது கணுக்கால் மூட்டில் அடி அல்லது காயம் ஏற்பட்டால் அங்கு வீக்கம் ஏற்படுகிறது. ஏனெனில் அந்த அடிபட்ட இடத்தில் இயல்பாக உள்ள உயிர் நீர்மங்கள் (Cells) பெருக்கப்பட்டுத் திண்டாகக் குந்திக் கொள்கின்றன. அத்துடன் அடிபட்டதால் உள்காயம் ஏற்பட்டு உள்ளே குருதி ஓரளவு கசிவு ஏற்பட்டுப் பரவும்.

வீக்கங்கள் இரண்டு பெருங் குழுக்களாகப் பிரிக்கப்படுகின்றன. அவை பொய் வீக்கக் கட்டிகள், உண்மை வீக்கக் கட்டிகள் (False, True tumours) எனப்படும். அழற்சி சார்ந்த வீக்கங்கள் (Inflammatory swellings) மூட்டுகளில் தோன்றுபவை; முதல் வகையான பொய் வீக்கக் கட்டிகளைச் சாரும். அது உட்புண் (Bruises), கருங்கண் (Black eyes), சுளுக்குகள், (Sprains) முறிவுகள், (Fractures) கொப்புளங்கள் (Boils) சீழ்க்கட்டிகள் (Abscesses) போன்ற தொற்று நோய்கள் ஆகியவற்றை உட்படுத்தி உள்ளது. வீங்கிய இணைப்புகள் (Swollen joints) குளிர்ந்த ஈரத்துணியை நெருக்கி அழுத்தமாகக் கட்டுவதாலும் அல்லது பஞ்சு உள்வைத்துத் தைத்த பையை ஈரமாக்கி அழுத்திக் கட்டு வதாலும் அல்லது பனிக்கட்டித் தொகுதியை மேல்வைப்பதாலும் தம் தன்மையிலிருந்து சிறிது சிறிதாக மாறி நலத்தை நோக்கிச் செல்லும். இறுக்கமான கட்டுகளும் அதற்குத் துணையாகப் பயன்படுத்தப்படும்.

உண்மையான கட்டிகள் அல்லது வீக்கங்கள் (True tumours or Swellings) என்பவை, ஏற்கனவே உள்ள உடம்பு உயிர்மங்களிலிருந்து வளர்ச்சி பெற்ற இழைமத் தொகுதிகளால் ஆனவை. அவை தொடர்ந்து வளரும் போக்குக் கொண்டவை. அவற்றுள் சில கட்டிகள் இயல்பான உயிர்மங்களையுடையதாய் ஏதும் விளைவிக்காததாய் (Benign) அல்லது துன்பம் தராததாய் இருக்கின்றன. மற்ற கட்டிகளில் உள்ள உயிர்மங்கள் இயல்புக்கு மாறாகத் தம் தாய் உயிர்மங்களிலிருந்து கொஞ்சம் வேறுபட்டு, பொதுவாக நச்சுத் தன்மை கொண்ட கொடிய வேகமாகப் பரவும் கட்டிகளாக மாறிவிடுகின்றன.
 
Thanks to FB Karthikeyan Mathan
 
தீப்பெட்டி பற்றிய தகவல்கள் !

மணக்கால் அய்யம்பேட்டை | 11:33 AM | Best Blogger Tips
தீப்பெட்டி பற்றிய தகவல்கள்:-

ஆதிகால மனிதர்கள் கிடைத்த உணவுகளை சமைக்காமல் உண்டார்கள். பின் காலபோக்கில் இரண்டு கற்களை உரசி தீயை உருவாக்கினார்கள். அதன்பின் குச்சிகளை உரசி தீயை உண்டாக்கினார்கள்.
                1669 - ல் பாஸ்பரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. அதிலிருந்து இந்த வேதிப் பொருளையே தீயை உண்டாக்கும் பொருளாக பயன்படுத்தினர். 1680 - ல் ராபர்ட் பாயில் என்ற ஆங்கிலேயர் பாஸ்பரசும், கந்தகமும் ஒன்றோடொன்று உரசும் போது தீ உருவாவதைக் கண்டறிந்தார். 1830 - ல் சார்லஸ் சாருய்யா என்ற பிரெஞ்சு வேதியலார் வெண்பாஸ்பரசை வைத்து தீபெட்டி (Match box)உருவாக்கினார். 1832 - ல் ஜெர்மனி முதலாவதாக தீபெட்டிகளை கடைகளில் விற்பனைக்குக் கொண்டுவந்தது. வெண்பாஸ்பரசால் செய்த தீப்பெட்டிகள் எளிதில் தீப்பற்றிக் கொண்டதால் விபத்துகள் அதிகம் ஏற்பட்டது.
                1845 - ல் சிவப்பு பாஸ்பரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. அதை பயன்படுத்தி எளிதில் தீ பிடிக்காத பாதுகாப்பான தீக்குச்சிகளை 1855 - ஆம் ஆண்டு உருவாக்கினார்கள். சிவப்பு பாஸ்பரசால் செய்யப்பட்ட பாதுகாப்பான தீப்பெட்டிகளை ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த ஜோகன் எட்வர்ட் லுன்ஸ்ரான் உருவாக்கினார். லுன்ஸ்ரான் நாம் தற்பொழுது தீப்பெட்டிகளில் பயன்படுத்தும் அதே வேதிப் பொருட்களை 1855 - ல் பயன்படுத்தினார்ஆதிகால மனிதர்கள் கிடைத்த உணவுகளை சமைக்காமல் உண்டார்கள். பின் காலபோக்கில் இரண்டு கற்களை உரசி தீயை உருவாக்கினார்கள். அதன்பின் குச்சிகளை உரசி தீயை உண்டாக்கினார்கள்.
1669 - ல் பாஸ்பரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. அதிலிருந்து இந்த வேதிப் பொருளையே தீயை உண்டாக்கும் பொருளாக பயன்படுத்தினர். 1680 - ல் ராபர்ட் பாயில் என்ற ஆங்கிலேயர் பாஸ்பரசும், கந்தகமும் ஒன்றோடொன்று உரசும் போது தீ உருவாவதைக் கண்டறிந்தார். 1830 - ல் சார்லஸ் சாருய்யா என்ற பிரெஞ்சு வேதியலார் வெண்பாஸ்பரசை வைத்து தீபெட்டி (Match box)உருவாக்கினார். 1832 - ல் ஜெர்மனி முதலாவதாக தீபெட்டிகளை கடைகளில் விற்பனைக்குக் கொண்டுவந்தது. வெண்பாஸ்பரசால் செய்த தீப்பெட்டிகள் எளிதில் தீப்பற்றிக் கொண்டதால் விபத்துகள் அதிகம் ஏற்பட்டது.
1845 - ல் சிவப்பு பாஸ்பரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. அதை பயன்படுத்தி எளிதில் தீ பிடிக்காத பாதுகாப்பான தீக்குச்சிகளை 1855 - ஆம் ஆண்டு உருவாக்கினார்கள். சிவப்பு பாஸ்பரசால் செய்யப்பட்ட பாதுகாப்பான தீப்பெட்டிகளை ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த ஜோகன் எட்வர்ட் லுன்ஸ்ரான் உருவாக்கினார். லுன்ஸ்ரான் நாம் தற்பொழுது தீப்பெட்டிகளில் பயன்படுத்தும் அதே வேதிப் பொருட்களை 1855 - ல் பயன்படுத்தினார்
 
Thanks to FB Karthikeyan Mathan