தெய்வ புலவர் திருவள்ளுவர் நாயனார் அவர்கள் அவதரித்த வைகாசி அனுஷம் நட்சத்திரத்தில் (23-5-2024) வியாழக்கிழமை இன்று ஜெயந்தி விழா
தை 2ம் நாள் தான் அதாவது மாட்டுப்பொங்கல் அன்றுதான் திருவள்ளுவர் தினம் என்று நம்மை நம்ப வைத்துள்ளார்கள்
ஆனால் இன்று வைகாசி அனுஷம் நட்சத்திரம்தான்
உண்மையான வள்ளுவர் தினம்
வான் பொய்த்தாலும் தான் பொய்க்காத வள்ளுவப் பெருந்தகையின்
பிறந்த இடம் சென்னை மயிலாப்பூரில் உள்ளது.
வைகாசி அனுஷ நட்சத்திர தினத்தில் பிறந்தவர்தான் திருவள்ளுவ நாயனார் ...
திருவள்ளுவர் பிறந்த இடமாக மயிலாப்பூர் என்பதால், அங்கு திருவள்ளுவருக்கென கோயில் அமைக்கப்பெற்றுள்ளது.
திருவள்ளுவரை மூலவராகக் கொண்டு அமைக்கப்பட்டுள்ள கோயிலாகும்.
அந்த கோவிலில் திருவள்ளுவர் பிறந்த நாளை வைகாசி அனுஷ நட்சத்திர தினத்தில் ஜெயந்தி விழாவாக மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது
இக்கோவில் மயிலாப்பூர் சம்ஸ்கிருதக் கல்லூரிக்குப் பின்புறமாக உலகப் புகழ் பெற்ற வள்ளுவரின் அவதாரத்தலம் அவரது கோயிலாக அமைந்துள்ளது.
மயிலாப்பூர் ஸ்ரீ முண்டகக்கண்ணி அம்மன் கோயிலின் சார்புக் கோயிலாக இந்து சமய அறநிலையத்துறை பராமரிக்கிறது.
திருவள்ளுவர் கற்சிலை. கீழே உற்வச சிலைகள்
இக்கோவில் இராயப்பேட்டை சாலையின் நேராக அமைந்துள்ளது.
இக்கோவிலில் சிவன், பார்வதி, விநாயகர், முருகன், நவகிரக சந்ததிகள் எல்லாம் உள்ளன. அதோடு திருவள்ளுவரின் மனைவி வாசுகி, திருவள்ளூர் தம்பதியருக்கு தனித்த அழகிய சந்நிதியும் வள்ளுவர் தோன்றிய இலுப்பை மரத்தின் தண்டுப்பகுதியும் இங்கு அமைந்துள்ளது.
இவ்வளவு வலுவான ஆதாரங்கள் இருக்கிறபோதே...
தை 2ம் நாள் திருவள்ளுவர் தினம் என்று நாடெங்கும் விழா நடத்தப்படுகின்றது
உண்மையான வள்ளுவர் தினமான வைகாசி அனுஷம் நட்சத்திரத்து யாரும் வள்ளுவரை வணங்குவது இல்லை என்பது தமிழர்களின் மிகப்பெரிய அறியாமை ஆகும்
1950க்கு முன்பு இயற்றப்பட்ட புத்தகங்களில் திருவள்ளூவர் உருவப்படம் பூணூல் உத்ராட்சம் மாலை அணிந்து நெற்றி நிறைய திருநீர் அணிந்தே தெய்வீக புலவராகவே உள்ளது
இந்த நேரத்தில் பொதுமக்கள் ஒரு உண்மையை நன்கு உணர வேண்டும்
தற்போது திருவள்ளுவர் என்று இருக்கிற திருவள்ளுவர் படத்தின் உண்மை வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள்...
வேணூகோபால் சர்மா என்ற ஓவியரை விட்டு 1967ல் அப்போதைய முதல்வர் கருணாநிதி அவர்கள் திருவள்ளுவர் படத்தை புதுப்பொலிவுடன் வரைய சொல்லி உள்ளார்..
அந்த ஓவியர் வரைந்து எடுத்து வந்த ஓவியத்தில் முகத்தில் உள்ள விபூதி பட்டை, பூனூல் காவி வேட்டி ஆகியவற்றுடன் படம் வரையப்பட்டு முடிக்கப்பட்டது
அந்த நேரத்துல திராவிட கழகத்தினரால் புரட்சிக் கவிஞர் என்று அழைக்கப்படும் நாத்தீக கவிஞர் பாரதிதாசன் ஆலோசனையோடு மாற்றம் செய்து வெள்ளை வேட்டி, வெள்ளை மேலாடை துண்டு அங்கவஸ்ரமாக போட சொல்லி ஓவியத்தை மீண்டும் திருத்தி வரைய சொல்லி உள்ளார் அன்றைய முதல்வர் கருணாநிதி அவர்கள்
அதற்கு பிறகு தான் தற்போதைய வெள்ளை உடை திருவள்ளுவர் படம் அறிமுகப்படுத்தப்பட்டது என்பது வரலாறு தெரிந்தவர்களுக்கு நன்றாக தெரியும் ...
இப்படி இடையில் வரையப்பட்ட திருவள்ளுவர் படத்தில் இருந்த பூணூல் தெரியக்கூடாது என்பதற்காக அதே வாக்கில் ஒரு மேல் துண்டு போட்டுச் சுற்றிக் பூணூல் மறைக்கப்பட்டது, நெற்றியில் இருந்த திருநீர் அழிக்கப்பட்டது
பூணூல் என்பது பிராமணர்கள் மட்டும் போட்டு கொள்வது அல்ல இந்து மதத்தில் அந்த காலத்துல கடவுள் பணியை செய்பவர்கள் ஆச்சாரங்களை கடைப்பிடித்து வாழும் மாற்று சாதியினரும் பூணூல் போட்டு இருப்பார்கள்,
அந்த வகையில் இந்து மதத்தில் உள்ள வள்ளுவர் என்ற இனத்தவர் தெய்வீக பாடல்களை இயற்றுவது, ஜாதகம் கணிப்பது போன்ற தெய்வீக பணியில் இருப்பதால் வள்ளுவர் இனத்தவர் பூணூல் அணிந்து இருப்பார்கள்
திருவள்ளுவர் பூணூல் அணிந்து இருக்கும் ஆதாரம் பழங்கால சிலைகளில் இருக்கும் போதே திருவள்ளுவரை இந்து அல்ல சமண சமயத்தை சேர்ந்தவர் என்றும், கிருஸ்துவ மதத்தை சேர்ந்தவர் என்றும் மதம் மாற்றி திசை திருப்பும் கட்டுரை புத்தகம் எல்லாம் வெளியிட்டு திரவள்ளுவரை இந்து மதத்தவர் இல்லை என்று மாற்ற வேண்டும் என்று ஒரு வித இந்து விரோதிகள் முயற்சி நடக்கிறது
திருவள்ளுவர் பிறந்தநாளை மாற்றியது போல அவரது உருவத்தையும் மாற்றினர்
வெள்ளை ஆடை ஓவியத்தை இடையில் வரைந்து வைத்து கொண்டு திருவள்ளுவர் மதம் சாராதவர் என்கிறார்கள்
திருவள்ளுவ நாயனார் என்று ஆன்மீக பெயரெடுத்து கோவில் உள்ளது
திருவள்ளுவர் இந்து தான் என்பதற்கு இதைவிட வேறு என்ன சான்று வேண்டும்?
இவ்வளவு வலுவான ஆதாரம் கொண்டுள்ள போதே திருவள்ளுவர்
இந்து மதத்தை சேராதவரா? என்று வாதம் செய்கின்றனரே இவர்கள் நோக்கம் என்ன?
கிருஸ்துவர் மதத்தை சேர்ந்தவர் திருவள்ளுவர் என்று அநியாயமான ஒரு பொய்யை சொல்லி கிருஸ்துவ மதமாற்று போதகர்கள் பல புத்தகங்களை வெளியிட்டு உள்ளார்கள், பல கிருஸ்துவ மத பிரச்சார மேடைகளில் பகிரங்கமாக திருவள்ளுவர் கிருஸ்துவர் என்று பேசிய போதெல்லாம் யாரும் அவர்களை கண்டித்தார்களா? இல்லையே
ஆனால் திருவள்ளுவரின் உடை காவி நிறத்தில் உண்மையானதை வெளியிட்டதற்காக மிகப்பெரிய எதிர்ப்பை தெரிவித்தனர்
இதற்கு பிறகும் திருவள்ளுவர் பிறந்த தினம் தை 2ம் நாள் மாட்டு பொங்கள் அன்று கொண்டாடப்படுவதை ஏற்க்க கூடாது
இந்துக்களின் அனைத்து பண்டிகைகளும் பூகோள நட்சத்திரம், திதி, சாஸ்திரத்திற்கு உட்பட்டுத்தான் கொண்டாடப்படுகிறது ...
ஆகவே உண்மையான ஹிந்துக்களுக்கு வைகாசி அனுஷம் வரும் நாள் தான் திருவள்ளுவர் தினம் ....
திருவள்ளுவரை வருடம் முழுவதும் வணங்கலாம், அவரை போற்றி தினமும் கொண்டாடலாம், ஆனால் மாட்டு பொங்கல் தினத்தில் தை இரண்டாம் தேதியில் திருவள்ளுவர் பிறந்தார் என்று தவறாக கொண்டாட வேண்டாம் என்பதே எனது பணிவான வேண்டுகோள்
திருவள்ளுவர் கோயில் முகவரி
Thiruvalluvar Koil St, PNK Garden, Mylapore, Chennai, Tamil Nadu 600004
044 2498 1893
உருவம் மாற்றி
பிறந்த தினத்தை மாற்றி
மதம் மாற்றி வருகிறார்கள் இதை நீங்க புரிந்துகொள்ளவில்லையா
இதை புரிந்துள்ளாதவர்களுக்கு தான் விளக்கமாக எழுதி உள்ளேன்
இதை கண்டு கோப பட இங்கு உணர்வுள்ள இந்துக்கள் இல்லை என்பதை விட இதுல பெரிய சோகம் என்னனா இதை நியாப்படுத்திட இந்துக்கள் இருக்காங்க என்பதே வேதனை
https://www.facebook.com/share/p/agmCqNDFoepit3gG/?mibextid=oFDknk
Copy from FB Siva Paramasivam