எண்ணங்கள்தான்.......

மணக்கால் அய்யம்பேட்டை | 3:18 PM | Best Blogger Tips

 

 May be an image of text that says "எண்ணங்கள்"

எண்ணங்கள்தான் அனைத்துற்கும் முதன்மையானவை..நல்லெண்ணங்களை தேர்வு செய்யவும்.._

_*வாழ்க்கையில் நமக்கு நடக்கும் எல்லா நிகழ்வுகளுக்கும் நாம் விதியையும், கர்ம வினைகளையும், கிரகங்களின் சுழற்சியையும் காரணமாக நினைக்கிறோம்.*_

_நமக்கு நடப்பவை எல்லாமே நம் எண்ணங்களின் விளைவுகள்தான் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?_

_*இந்தக் கோட்பாட்டை எத்தனையோ முன்னோர்கள் சொல்லிவிட்டுப் போனாலும், நாம் அதைப் புரிந்துகொள்ளத் தவறிவிட்டோம்.*_

_நம் எண்ணங்கள் நம் வாழ்க்கையை எப்படி நேரடியாகவே பாதிக்கின்றன என்பதை இப்போது அறிவியல் பூர்வமாக மேலை நாட்டவர் நிரூபித்து வருகின்றனர்._

மகரிஷிகளுடன் பேசுங்கள் - ஈஸ்வரபட்டர்: உயிரால் தான் இயக்கப்படுகின்றோம்…  உயிர் தான் அனைத்திற்கும் காரணம்

_*நம் சிந்தனைகளை நல்லவை என்றும் கெட்டவை என்றும் இரண்டு விதமாகப் பிரிக்கலாம். இவ்விரண்டு வித சிந்தனைகளும் எல்லா மனிதர்களுக்கும் இயல்பாக வருபவைதான்.*_

_அவற்றை அடையாளம் கண்டு இனம் பிரிப்பதில்தான் நம் திறமை உள்ளது. அன்பு, பாசம், நட்பு, மகிழ்ச்சி, பெருமை, உற்சாகம், உதவி மனப்பான்மை போன்றவை நல்ல சிந்தனைகள் என்றும்,_

_*கோபம், வெறுப்பு, பகை, அச்சம், கவலை, துக்கம், பொறாமை, தாழ்வு மனப்பான்மை, சுய பச்சாதாபம், போன்றவை கெட்ட சிந்தனைகள் என்றும் கொள்ளலாம்.*_நேர்மறையாக சிந்திப்பது எப்படி? - Quora

_ஒரு நாளைக்கு சராசரியாக 60000 எண்ணங்கள் தோன்றி மறைவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன். அதில் நல்ல சிந்தனைகளையும் கெட்ட சிந்தனைகளையும் இனம் கண்டுபிடிப்பது நடக்கக் கூடிய காரியமா என்ன?_

_*ஆனால் அதற்குக் குறுக்கு வழி ஒன்று உள்ளது. அதுதான் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் நாம் எவ்வாறு உணர்கிறோம் என்று கண்டறிவது. அதாவது, நல்ல சிந்தனைகள் நம் மனதில் ஓடிக்கொண்டிருக்கும்போது நாம் மிகவும் சுகமாக உணர்வோம். நம் மகிழ்ச்சி அதைக் காட்டிக் கொடுத்துவிடும்.*_

எதிர் மறை எண்ணம் ஆனது மனதில் தோன்றும் போது என்ன செய்ய வேண்டும்? - Quora

_அச்சம், கவலை, கோபம், பொறாமை, குற்ற உணர்வு போன்ற எதிர்மறை சிந்தனைகள் நம் மனதில் ஓடும்போது, அசௌகரியமாக உணர்வோம்._

_*எதிர்மறை உணர்வுகள் நம்மைத் தாக்கும்போது, நாம் சுதாரித்துக் கொள்ள வேண்டும். உடனடியாக நம் சிந்தனைகளை ஆராய்ந்தோமானால், தீய சிந்தனைகள் நம் மனதை ஆக்கிரமித்திருப்பதைக் காணலாம்.*_

_அப்படிப்பட்ட சமயங்களில், அந்த சிந்தனையின் ஓட்டத்திலிருந்து உடனடியாக விடுபடுவதும் ஒரு பெரிய சவால்தான். ஏனென்றால், சிந்தனைகளின் போக்கை மாற்றுவதென்பது சுலபமான காரியமல்ல._

_**நமது சுவாசத்தைக் கவனிக்கத் தொடங்கலாம். எண்ணத்திற்கும் சுவாசத்திற்கும் நேரடித் தொடர்பு உள்ளது.*_

_உடனே நமக்கு மிகவும் பிடித்தமான, நல்ல விஷயங்கள் எதையாவது வலுக்கட்டாயமாக நம் நினைவுக்குக் கொண்டு வரவேண்டும்._

_*உதாரணத்துக்கு, உங்கள் வீட்டுக் குழந்தைகளோடு நீங்கள் விளையாடிய நினைவுகள், மலர்கள் பூத்துக் குலுங்கும் பூந்தோட்டம், அருவியில் நீராடிய அனுபவம், நண்பர்களுடன் பொழுது போக்கிய நினைவுகள், நீங்கள் பெருமையாக உணர்ந்த தருணங்கள்,*_

_இப்படி எதை வேண்டுமானாலும் நினைத்துக் கொள்ளலாம். இல்லாவிட்டால், உடனடியாக ஒரு நல்ல பாடலைப் போட்டுக் கேட்கலாம். அல்லது உங்கள் சிந்தனையைத் தொடரமுடியாத விதத்தில் ஏதேனும் ஒரு பணியில் ஈடுபடலாம்._

_*இதன்மூலம் தவறான உணர்வுகளின் தாக்கத்திலிருந்து நீங்கள் விடுபட முடியும். ஆரம்ப காலங்களில் இப்படி சிந்தனையோட்டத்தை இனம் கண்டு தவிர்ப்பதும், மாற்றுவதும் மிகவும் கடினமாகத் தெரியும்.*_

_காட்டு வெள்ளத்தில் எதிர்நீச்சல் போடுவது போல இருக்கும். ஆனால் நீங்கள் இதைப் பிடிவாதமாகத் தொடரும்போது, பழகி விடும். மேலும், எதிர்மறை உணர்வுகளை உங்களால் சற்று நேரம் கூடத் தாங்க முடியாத நிலை ஏற்படும்._

_*இந்த நிலை வந்துவிட்டால், உங்கள் முயற்சியில் நீங்கள் வெற்றி பெற்று விட்டீர்கள் என்று பொருள். அதன் பிறகு உங்கள் வாழ்க்கையில் எல்லாம் நல்லபடியாகவே நடக்கும்.*_

அனிருத்துக்கு ஆட்டம் கொடுக்கப்போகும் விஜய் ஆண்டனி.. அடுத்து கச்சேரி எப்போது  தெரியுமா? - Update News 360 | Latest Tamil News Online | Live News |  Breaking News Online | Latest ...

_எதிர்மறை எண்ணங்கள் மனதிற்குள் நுழையவிடாமலேயே தடுக்க, நமது ஓய்வு நேரங்களில் எல்லாம், நேர்மறையான எண்ணங்களை நாமாக விரும்பி மனதில் ஓடவிட்டு சிந்தனை செய்யலாம். இதுவே பிறகு பழக்கத்தின் அடிப்படையில் மனதில் நல்ல மாற்றத்தை உருவாக்கும். (உதாரணம் - ஞானிகளின் கருத்துக்களை சிந்தனைக்கு எடுத்துக் கொள்ளலாம்)_

_*எண்ணங்களின் போக்கிற்கும், நம் வாழ்க்கையின் போக்கிற்கும் உள்ள நேரடித் தொடர்பை நீங்கள் உணரத் தொடங்குவீர்கள். வாழ்க்கை இன்பமயமாக மாறி விடும்.*_

_எண்ணம்போல் வாழ்கை, கெடுவான் கேடு நினைப்பான், வினை விதைத்தவனே வினை அறுப்பான். எண்ணிய எண்ணியபடியே ஆகும், எண்ணத்தில் உறுதியும் ஒழுங்கும் இருந்திடில்...._

_*அவரவர் வாழ்வின் சிற்பி அவரவர் எண்ணங்களே!!!*_

_*எண்ணங்களை நேர்மறையாக மாற்றினால் அனைத்தையும் மாற்றலாம்.*_

_*எண்ணம் எழுந்து தானாக அலையாமல் எண்ணி எண்ணிட இனிதே பயக்கும்.*_


 

நன்றி இணையம்