தமிழகத்தில் மத்திய அரசின் சூப்பர் திட்டம்.. நம்ப முடியாத விலையில் பருப்பு, கோதுமை.. இதை பாருங்க
தமிழகத்திலும் பாரத் பிராண்ட் பெயரில் தரமான பருப்பு வகைகளை மானிய விலையில் விற்பனை செய்யும் திட்டத்தை மத்திய அரசின் என்சிசிஎப் அமைப்பு தொடங்கி உள்ளது. ஏற்கனவே இந்த திட்டம் வட இந்தியாவில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், தமிழகத்திலும் வரவேற்பை பெறும் என தெரிகிறது..
ADVERTISEMENT
மத்திய அரசின் நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகத்தின் பிரிவான இந்திய தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு (என்சிசிஎப்) 'பாரத் தால்' என்ற பெயரில், மானிய விலையில் துவரம் பருப்பு விற்பனை செய்ய உள்ளதாக கடந்த ஆண்டு ஜூலை மாதம், மத்திய அரசு அறிவித்திருந்தது.
ADVERTISEMENT
Bharat brand pulses at subsidized rates in Tamil Nadu: Central Govt super decision
இதன்படி பருப்பு வகைகள் நுகர்வோருக்கு மலிவு விலையில் கிடைக்கும் வகையில் பருப்பு வகைகள் 1 கிலோ பேக் ஒன்று கிலோ ரூ. 60க்கும், 30 கிலோ மூட்டை ஒரு கிலோ ரூ. 55 என்ற அடிப்படையில் விற்கப்படும் என்றும் மத்திய நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகத் துறை இணை அமைச்சர் அஸ்வினி கடந்த ஆண்டு கூறியிருந்தார்.
இதனிடையே உள்நாட்டில் கிடைக்கும் பருப்பு வகைகளை அதிகரிக்கவும், பருப்புகளின் விலையை குறைக்கவும், துவரம் பருப்பு மற்றும் உளுந்து இறக்குமதிக்கான வரி பூஜ்ஜியம் ஆக வரும் மார்ச் 31 வரை குறைத்தது மத்திய அரசு. மசூர் மீதான இறக்குமதி வரி 2024 மார்ச் 31 வரை வரியே இல்லை என்றும் அறிவித்திருக்கிறது. மேலும் விலை உயர்வை தடுக்க பருப்புகளை கடைகளில் அதிக ஸ்டாக் வைப்பதற்கும் கட்டுப்பாடுகள் விதித்தது.
ADVERTISEMENT
இதனிடையே விலைவாசி உயர்வை குறைக்வும், உணவுப் பணவீக்கத்தை கட்டுப்படுத்தவும், உணவு தானியங்களை மானிய விலையில் விற்பனை செய்யும் பாரத் பிராண்ட் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைத்தார். இந்த திட்டம் வட இந்திய மாநிலங்களில் அதிகப்படியான வரவேற்பை பெற்றள்ளது. இந்த நிலையில், தற்போது தமிழகத்திலும் பாரத் பிராண்ட் பெயரில் பருப்பு வகைகளை மானிய விலையில் விற்பனை செய்யும் திட்டத்தை மத்திய அரசின் என்சிசிஎப் அமைப்பு தொடங்கி இருக்கிறது.
நன்றி இணையம்