#அழியாப்_புகழ்ப்_பெற்ற_ஜீவா..!

மணக்கால் அய்யம்பேட்டை | 3:11 PM | Best Blogger Tips

 May be an image of 4 people

 

மதுரையில் கட்சிக் பேசிவிட்டு அதிகாலையில் கோயம்புத்தூர் வருகிறார் ஜீவா...

அவரை அழைத்துச் செல்வதற்கு வரவேண்டிய தோழர்கள் இன்னும் வரவில்லை...

காமராஜர் தந்த வீட்டை மறுத்த மகத்தான தலைவர் - P.Jeevanandham | The Legend |  Jeeva - YouTube

புகைவண்டி நிலையத்தின் இருக்கையில் படுத்துத் தூங்கி விடுகிறார்; தோழர்கள் வந்து எழுப்புகிறார்கள்.

"பசிக்குது தோழா, நாலு இட்லி வாங்கிட்டு வாங்க, சாப்பிட்டுட்டுப் போவோம்" என்கிறார் ஜீவா

"இங்கயே கேண்டீன் இருக்கு, சாப்பிட்டிருக்கலாமே தோழர்..."

"சரிதான், எங்கிட்ட காசில்லைல்ல"

தோழர் போய் இட்லி வாங்கிக் கொண்டு வர, அதை சாப்பிட்டுவிட்டு தான் கொண்டு வந்த மூட்டையை எடுத்துக் கொண்டு ஜீவா கிளம்புகிறார்...

"கொடுங்க தோழர், அதை நான் கொண்டாறேன்" என்று ஜீவாவின் கையிலிருந்த மூட்டையை வாங்குகிறார் தோழர்... 

Vikatan EMagazine - ஆகஸ்ட் 21: கம்யூனிஸ்ட் இயக்கத்தின் ஜீவன் ஜீவா பிறந்த  நாள் இன்று.. கம்யூனிஸ்ட் இயக்கத்தின் ஜீவன். பாட்டாளிகளின் தோழன் ...

அப்போதுதான் அது நோட்டுகளும், சில்லறைக் காசுகளும் அடங்கிய பணமூட்டையென்பது தோழருக்குத் தெரிகிறது

"இது என்னங்க"

"மதுரை பொதுக்கூட்டத்துல தோழர்களும், பொதுமக்களும் கட்சிக்காக நிதி திரட்டிக் கொடுத்திருக்காங்க"  என்கிறார் ஜீவா

ஜீவா நினைவு நாள்... தோழர்கள் மலர் மரியாதை! | nakkheeran

"மூட்டை நெறையா பணத்தை வச்சுக்கிட்டா பசியோட இருந்தீங்க.. இதுலருந்து எடுத்து சாப்பிட்டிருக்கலாமே"...

"அதெப்படி தோழர் கட்சிக்குக் கொடுத்த நன்கொடைல நான் இட்லி வாங்கித் திங்க முடியும், அது தப்பில்லையா?" என்றார் ஜீவா..

 


நன்றி இணையம்