.❤️.❤️.❤️.❤️.❤️.❤️.❤️.❤️.❤️அம்மா_அப்பா...❤️.❤️.❤️.❤️.❤️.❤️.❤️.❤️.❤️.❤️.❤️.❤️.❤️

மணக்கால் அய்யம்பேட்டை | 3:37 PM | Best Blogger Tips

 


அப்பா..அம்மா

ஊர்ல இருந்து வராங்க..

இந்த மாசம் கொஞ்சம்

பட்ஜெட் எல்லாம் சேர்த்துப்போட்டு

கூட வாங்கிக்கணும்..

வேணாம்..அவங்க வரட்டும்..

அப்புறம் வாங்கிக்கலாம்..

வந்தார்கள்..

ஒரு ரெண்டு மாசம்போல இருந்துவிட்டுப்போனார்கள்..

இவர்கள் வழக்கம்போல மாச செலவு பட்ஜட் போட உட்கார்ந்தார்கள்..

வழக்கத்தை விடவும் எந்த செலவுமே கூடியிருக்கவில்லை..

EB..பில் குறைந்திருந்தது..

மளிகை..பால்..காய்கறி எல்லாமே இவர்கள் இருவருக்காவதைவிட

நால்வருக்கும் சேர்த்து குறைவாகவே ஆகியிருந்தது..

சாயங்காலம் வழக்கமாகப்போகும் ஓட்டலுக்குப் போனார்கள்..

வாங்க சார் எங்க ரெண்டுமாசமா ஆளையே காணல..

இருவருக்குமே பொட்டிலடித்தது..

உண்மைதான்..

தப்பேயில்லை...- Dinamani

அம்மா..அப்பா இருந்த ரெண்டுமாசமும் அம்மா பாத்துப்பாத்து எல்லாருக்கும் பிடிச்சமாதிரி..சமைத்துக்கொடுத்தாள்

எதையும் அளவோடு செய்ததால்

எல்லாம் சாப்பிட்டபிறகும் எதுவும் மீந்துபோய் தொட்டியில் கொட்டவில்லை..

அம்மா | Latest Tamil News Updates, Videos, Photos | Vikatan

அப்பா பார்த்துப்பார்த்து ஆளில்லாத இடத்தில் லைட்டையும் பேனையும் டிவியையும் அணைத்துக்கொண்டே இருந்தார்..

பழங்கதை எங்களோடு பேச

குழந்தை உடன் கொஞ்சி விளையாட

என்று அவர்கள் இருந்ததில்

பொழுதை கழிக்க

சினிமா பூங்கா மால் போன்ற விசயங்கள் தேவைப்படாமல்

போனதில் பெரிய தொகை சேமிப்பு ஆனது

தக்காளி 140ஐத்தொட்டபோது

எலுமிச்சை ரசம் சாப்பிட்டார்கள்..

காய்கறிகளை அளவோடு தேவைக்கு அப்பா வாங்கியதில் அழுகல் வேஸ்ட் தவிர்க்க பட்டது

குழந்தைகளை பள்ளியில் இருந்து அழைத்து வர அலுவலகத்தில் இருந்து பைக்கில் வந்து போகும் வேலை இல்லாமல் #பெட்ரோல்_நேரம் இரண்டும் மிச்சமானது

கூட்டிக்கழித்து

பார்க்க கணக்கு

சரியாக தான் வந்தது..

.❤️.❤️.❤️


.❤️.❤️.❤️.❤️.❤️.❤️#அம்மா_அப்பா...❤️.❤️.❤️.❤️.❤️.❤️.❤️.❤️.❤️.❤️.❤️.❤️.❤️

 

நன்றி இணையம்