பாஜக பிராமணர்களின் கட்சி

மணக்கால் அய்யம்பேட்டை | 10:22 AM | Best Blogger Tips

 

May be an image of 4 people, violin and text 

 

 

பாஜக பிராமணர்களின் கட்சி, பாஜக ஒரு சாமியார்களின் கட்சி, பானி பூரி காரர்களின் கட்சி ,வடநாட்டுக்காரர்களின் கட்சி, இந்திக் காரர்களின் கட்சி, சமஸ்கிருதத்தை தூக்கிப் பிடிக்கும் கட்சி, பான்பராக் வாயன்களின் கட்சி, வடநாட்டுக்காரர்களின் கட்சி, படிக்காதவர்களின் கட்சி, சிறுபான்மையினருக்கு எதிரான கட்சி, மோடி சிறுபான்மையினர்களை கண்டால் கத்தி எடுத்து சொதக் சொதக் என்று குத்தி விடுவார், ட்ரெயினில் டிக்கெட் எடுக்காதவர்களின் கட்சி என்னும் நிலையில் பாஜகவால் தமிழ்நாட்டில் வெற்றி பெற வெ முடியாது

என்னும் ரீதியில் கார்த்திக் சிதம்பரம் மற்றும் தெலுங்கானாவின் கவிதா ஆகியோர், "The Southern Rising Submit, 2023", என்னும் தலைப்பில் பி பி நெட்வொர்க் நடத்திய ஒரு கான்க்லேவில் பேசிக் கொண்டிருந்தார்கள்.

அவை அனைத்தையும் பொறுமையாக கேட்டுக் கொண்டிருந்த தமிழ்நாடு பாஜக தலைவர் திரு அண்ணாமலை அவர்கள்,

ஆம் பாஜகவை வடநாட்டு கட்சி என்கிறீர்கள் அந்த கட்சியினுடைய மாநில தலைவராக இருக்கிறேன் நான் என்ன வடநாட்டு காரனா, சாமியார்கள் மற்றும் பிராமணர்களின் கட்சி என்கிறீர்கள், நான் ஒரு நான் வெஜிடேரியன், படிப்பறிவு இல்லாதவர்களின் கட்சி என்கிறீர்கள் நான் இந்த நாட்டிலேயே சிறந்த கல்வி நிறுவனத்தில் படித்து (IIM) இருக்கிறேன், இந்த நாட்டிலேயே இருக்கும் போட்டி தேர்வுகளில் நம்பர் ஒன் இடத்தில் இருக்கும் போட்டி தேர்வில் (UPSC) வெற்றி பெற்று இருக்கிறேன், பான்பராக் எல்லாம் நான் போடுவதில்லை, என்றாவது ஒருநாள் தமிழ் நாட்டில் விளையும் ஆத்தூர் வெற்றிலை போடுவதுண்டு, டிரெயினில் ஒழுங்காக டிக்கெட் எடுப்பேன், மீண்டும் ஒருமுறை அழுத்தி சொல்கிறேன் ரயிலில் ஒழுங்காக டிக்கெட் எடுப்பேன்..

மோடி சிறுபான்மையினருக்கு எதிரானவர் என்று சொல்கிறீர்கள் அவர் தன்னுடைய உதவியாளர்களாக நிறைய சிறுபான்மை அதிகாரிகளை வைத்திருக்கிறார் அதோடு சிறுபான்மை மக்களை அடுத்த கட்டத்திற்கு முன்னேற்றத்திற்காக பத்துக்கு மேற்பட்ட சிறப்பு திட்டங்களை கொண்டு வந்திருக்கிறார்..

சமஸ்கிருதத்தையும் இந்தியையும் தூக்கிப் பிடிக்கிறது என்கிறீர்கள் எனக்கு இந்த இரண்டு மொழிகளில் இருந்தும் ஒரு வார்த்தை கூட எழுத தெரியாது ஏதோ கொஞ்சம் மேனேஜ் செய்யும் அளவிற்கு பேசுவேன்.

மேலும் பாணிபுரி வாலாக்களின் கட்சி என்கிறீர்கள் நான் இட்லி தோசையை தவிர மீதி எதுவும் காலை உணவாக சாப்பிடுவதில்லை, பானி பூரி கண்டதே இல்லை.

என்று மேலை நாட்டில் உயர் கல்வியை படித்து விட்டு இந்திய அரசியல ஒரு தொழிலாக செய்வதற்கு இறக்கி விடப்பட்ட செல்வந்தர் வீட்டு பிள்ளைகளை போட்டு பின்னி பல பெடல் எடுத்து விட்டார் என்று தான் சொல்ல வேண்டும்.


 நன்றி இணையம்