அன்பே சிவம் மனமே குரு சிவாயநம நமசிவாய
சர்வம் சிவார்ப்பணம்
திருமுறைகள் ஓதுவதன் பயன்
எத்தனைதான் திருந்த வேண்டும் என்று நாமாக விரும்பினாலும் நமக்குள்ள அறியாமை காரணமாக, திரும்பத் திரும்பத் தவறுகளை நாம் செய்துகொண்டுதான் இருக்கிறோம். இந்த அறியாமையிலிருந்து நம்மை நாம் காத்துக் கொள்வதற்குத் திருமுறை வாக்குகள் பொிதும் துணை செய்கின்றன.
இறைவன், வினைவயப்பட்டுத் துன்பப்படும் நாம் அனைவரும், திருந்தி உய்யும் பொருட்டு, அருளாளா்களை இப்பூவுலகிற்கு அனுப்பி, அவா்கள் வாயிலாக நமக்குத் தன் அருளிப் பாடுகளைச் செய்துள்ளான். இறைவனே திருவாய் மலா்ந்து அருளிய சொற்களே திருமுறைகளில் உள்ளன. இவ்வுண்மையை “எனது உரை தனது உரையாக” என்று அருளிச் செய்துள்ள சம்பந்தப்பெருமான் திருவாக்கிலிருந்து அறியலாம். திருமுறைகளில் உள்ள ஒவ்வொரு “சொல்லும்” மந்திர ஆற்றல் உடையது. எனவே, திருமுறைகளை நாம் பாராயணம் செய்யும் போது, அதில் உள்ள மந்திர ஆற்றல், நமது உயிாில் கலந்து, நமது அறியாமையைப் போக்கும் திறன் உடையது.
திருமுறைகளை ஓதி, ஊழ்வலியிலிருந்து நாம் விடுபட்டு, பிறவிப்பயனைப் பெறும் பொருட்டே திருமுறைகளை இறைவன் நமக்கு வழங்கியுள்ளான்.
திருமுறைகளை இறைவன் தோற்றுவித்ததன் நோக்கம் இதுவே ஆகும். இவ்வுண்மையைச் சம்பந்தப் பெருமான் திருக்கடைக் காப்பில் உள்ள திருவாக்குகளிலிருந்து நாம் தெளிவாகப் புாிந்து கொள்ளலாம்.
*நறுநீா் உகும் காழி ஞானசம்பந்தன்
வெறிநீா்த் திருப் பறியல் வீரட்டத்தானை
பொறிநீடு அரவன் , புனைபாடல் வல்லாா்க்கு
அறும்நீடு அவலம் ; அறும், பிறப்புத்தானே*
என்னும் திருக்கடைக்காப்பு இவ்வுண்மையை வலியுறுத்துகின்றது.
( நீடு அவலம் – நீண்ட நாட்களாக இருக்கும் துன்பம் நீங்கும் )
திருமுறைகளைத் தவிர, நாம் நமது துன்பங்களிலிருந்து விடுபடுவதற்கு வேறு எந்த உபாயமும் இல்லை. நாம் திருந்தி வாழ்வதற்குத் திருமுறைளே பொிதும் உதவுகின்றன.
திருமுறைகளில் உள்ள சொற்களில் உள்ள மந்திர ஆற்றல், நம்மை அறியாமலேயே நமக்கு வரவுள்ள துன்பங்களைப் போக்கி, இன்பங்களை விளைவிக்கும் என்பதில் எள்ளவும் ஐயப் பாட்டிற்கு இடம் இல்லை. இந்த மந்திர ஆற்றல் இறையாற்றல் ஆகும்.
அவற்றோடு நாம் நாள்தோறும் தொடா்பு கொள்ளும்போது அந்த இறையாற்றல் நம்மைத் திருத்துகின்றது.
நம்மை அறியாமலே நாம் திருந்திக் கொண்டிருப்போம். திருந்திய மனிதனுக்கு வினைப் பயனை ஊட்டத் தேவை இல்லாததால் நாளடைவில் , விதியை மாற்றும் வல்லமையும் திருமுறைப் படனம் நமக்குச் செய்து உதவுகிறது.
எனவே , திருமுறைகளைப் படனம் ( பாராயணம் ) செய்பவா்கள் விதியை வெல்ல முடியும்
நன்றி
Easanmagal Nalayni Easanmagal
இணையம்