சீனாவின் காலடியில் மோடி வைத்துள்ள டைம் பாம் வியட்நாம்

மணக்கால் அய்யம்பேட்டை | 9:42 AM | Best Blogger Tips
Image result for சீனாவின் காலடியில் மோடி
நாளை ஒரு வேளை இந்தியா சீனா போர் வந்தால் அந்தபோரை இந்தியாவுக்கு சாதகமாக முடித்து வைக்க போகும் நாடு எது தெரியமா? வியட்னாம் தாங்க..
தென் சீனக்கடலில் சீனாவுக்கு வால் மாதிரி இருக்க
கூடிய நாடு வியட்னாம். கிட்ட தட்ட இந்தியாவின் வாலாக இலங்கை இருப்பதை போன்றே சீனாவின்
காலடியில் உள்ள நாடு வியட்னாம்
மோடியின் ராஜ தந்திரங்களில் மாஸ்டர் பீஸ் எது என்று கேட்டால்.சீனாவின் காலடியில் மோடி வைத்துள்ள வெடி குண்டை தான் சொல்வேன்.இந்த
டைம்பாமின் பெயர் வியட்நாம் நாடு.
காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் இந்தியாவின் காலடி யில் உள்ள இலங்கை யை காட்டி இந்தியா வை பயங்காட்டிக்கொண்டிருந்த சீனாவுக்கு இப் பொழுது மோடி அதன் காலடியில் உள்ள வியட்நாமில் வைத்து ள்ளது தான் உண்மையிலே டைம்பாம் என்று சொல்லலாம்.
ஒரு காலத்தி்ல் வடக்கு வியட்னாமை அமெரிக்கா விடம.இருந்து காப்பாற்றி தெற்கு வியட்னாமை காலி செய்து ஒன்றினைந்த வியட்னாமை உரு
வாக்கியதில் சீனா வின் பங்கு இருந்தாலும் 1974 ல்
வியட்னாமின் பாராசல் தீவை சீனா அபகரித்ததில்
இருந்து இரண்டு நாடுமே இந்தியா பாகிஸ்தான்
மாதிரி ஆகி விட்டார்கள்.
Image result for சீனாவின் காலடியில் மோடி
அதோட ஸ்பார்ட்லி தீவு என்கிற தீவு ஒன்றையும்
பிடித்துக் கொண்ட சீனா இது என்னோட ஏரியா
உள்ளே வரக்கூடாது என்று வியட்னாமை விரட்டி
விட்டது. தென் சீன கடலில் சீனா வைத்த து தான்
சட்டம்.ஏனெனில் வியட்னாம் பிலிப்பைன்ஸ் தை வான் மலேசியா பொன்ற நாடுகள் எல்லாம் சீனாவிடம் ஏதாவது ஒரு நிலப்பரப்பை இழந்து விட்டு
முனங்கி கொண்டிருக்கும் நாடுகள்.
இந்த அப்ரன்டிஸ் கூட்டத்தில் வியட்நாம் கொஞ்சம்
கெத்தான நாடு தான்.சும்மாவா.உலக வல்லரசு
நாடான அமெரிக்கா வின் கண்ணிலேயே விரல் விட்டு ஆட்டிய நாடல்லவா..அதனால் கொஞ்சம் கெத்தாக இங்கிலாந்தை கூப்பிட்டு ..தென் சீன கடலில் உள்ள எங்க எல்லையில் நிறைய கச்சா
எண்ணெய் மற்றும் இயற்கை எரி வாயு இருக்கிற து ..
அதை எடுப்பதற்கு எங்களுக்கு உதவ முடியுமா
என்று கேட்க இங்கிலாந்தும் இதோ வருகிறேன்
என்று உடனே வியட்னாமிற்கு ஓடி வந்து விட்டது.
ஆனால் வந்தவுடனே சீனாவின் மிரட்டலுக்கு
பயந்து எஸ்கேப்பாகி விட்டது.இது நடந்தது 2007
ல் வியட்னாமுக்கு சீனாவை சீண்ட ஒரு ஆள் வேண் டும். அதற்கு தான் இந்த எண்ணெய் ஆராய்ச்சி
ஏற்பாடு.
இங்கிலாந்து எஸ்கேப்பான பிறகு வியட்னாம் இந்தி யாவுக்கு ஐயா எங்க ஏரியாவில் நிறைய எண்ணெய் இருக்கு வாங்க எடுத்து இருவரும் ஷேர் செய்து கொ ள் வோம் என்று நூல் விட்டு பார்த்தது.. இந்தி யாவும் 2011ல் வியட்னாமுடன்ஒரு ஒப்பந்தம் போட்டு விட்டு தென் சீன கடல் பகுதியில் கால் வைத்தது.
பக்கத்து நாடுகளையே தென் சீனக்கடல் எல்லை யில் நுழைய விடாத சீனா இந்தியா வை நுழைய
விட்டு விடுமா..இந்தியாவும சீனாவுக்கு பயந்து எங்கே எண்ணெய் கிடைக்கும எப்படி கிடைக்கும் என்று மேப்பை வைத்து ஆராய்ச்சி செய்தே வண்டி
ஓட்டிக் கொண்டு இருந்தது.
இந்த நிலையில் தான் மன்மோகன் சிங் போய் மோடி பிரதமராக வந்தார்.மோடி வந்தவுடனே இந்தியப்
பெருங்கடல் நாடுகளில் இருந்த சீனாவின் ஆதிக்க த்தை உடைத்து விட்டு பசிபிக் பெருங்கடல் பக்கம்
பார்வையை திருப்பினார்.இந்த பசிபிக் பெருங்கட லை தான் சீனாவுக்கு தெற்கே உள்ளதை தென் சீனக்கடல் என்றும் கிழக்கே உள்ளதை கிழக்கு
சீனக் கடல். என்றும் சொல்கிறோம்.
பசிபிக் பெருங்கடல் பக்கம் மோடி தன்னுடைய பார் வையை திருப்பியதுமே அவர் கண்ணில் பட்ட முதல்
நாடு சீனாவின் காலடி யில் உள்ள வியட்னாம் தான்.
உடனே வியட்னாம் பிரதமர் இந்தியா வுக்கு அழைக்க ப்பட்டார்.
2014 ம்ஆண்டு அக்டோபர் மாதம் இந்தியா வந்த வியட்னாம் பிரதமர் நிக்யூன் டான்டங் மோடி யை
சந்தித்து விட்டு தென் சீன கடலில் கச்சா எண்ணெய் எடுக்கும் உரிமையை இந்தியாவுக்கு எழுதிக்கொடு த்து விட்டு டெல்லி யில் இருந்து சீனாவுக்கு கேட்கும் படி சத்தம் போட்டு ஒன்றை சொன்னார்..அது என்ன
தெரியுமா?.
தென் சீனக்கடலில் எங்களின் பாரட்னர் இந்தியா அதனால் இந்திய கப்பல்கள் எப்பொழுது வேண்டு
மானாலும் அங்கே வரலாம் எங்கள் எல்லையில்
எத்தனை ஆண்டுகள் ஆனாலும் இருக்கலாம் இதை
யாரும் கேள்வி கேட்கவே முடியாது டெல்லியில் இருந்து சீனத்தலைநகர் பீஜிங்கிற்கு கேட்கும்படி
கொஞ்சம். சத்தம் போட்டு பேசினார்.
அப்புறம் ்இந்தியாவில் நிறைய ஒப்பந்தங்களில் கையெழுத்து
போட்டு விட்டு வியட்னாம் பிரதமர் நிக்யூன் ஊர்
போய் சேரும் பொழுது அவரை வரவேற்றது யார்
தெரியுமா? அத்தனை யும் இந்திய கப்பல்கள் தான்
அவ்வளவு ஸ்பீடு.. வியட்னாமில் இப்பொழுது இரு க்கும் இந்திய கப்பல்களின் எண்ணிக்கை எத்தனை என்று தெரிந்தது நான்கே பேர் தான்.மோடி,அஜித் தோவல் ராணுவ தலைமை தளபதி ராவத் கடற்படை
தளபதி சுனில் லன்பா ஆகிய நான்கு பேருக்கு தான்
வியட்னாமில. உள்ள இந்திய கப்பல்களின் உண்மை யான எண்ணிக்கை பற்றி தெரியும்.
ஏம்பா ..இந்தியாவின் பாதுகாப்பு மந்திரி அருண் ஜெட்லி பேரை விட்டு விட்டாயே என்று நீங்கள் கேட்கலாம். அவருக்கு இது தெரியுமா தெரியாதா
என்று எனக்கு தெரியாத நிலையில் நான்எப்படி
சொல்ல முடியும்?
இந்திய கப்பல்கள் எண்ணெய் எடுக்கிறோம் என்று
வியட்.னாமில் சுற்றிக் கொண்டிருப்பது பெரிய விசயம் அல்ல. அதை விட பெரிய விசயம் வியட்
னாமில் இருந்து தென் சீன கடல் முழுவதையும் இந் தியா கண்காணிக்கிறது பாருங்கள். இது தாங்க
மோடியின் மாஸ்டர்மைன்ட் என்று சொல்லலாம்
வியட்னாமின் தலை நகரம் ஹனோயில் இந்தியா சேட்டலைட் கண்காணிப்பு மையம் ஒன்றை நிறுவி யுள்ளது..இதன் வேலை என்ன தெரியுமா? தென் சீனக்கடலில் வந்து போய் கொண்டு இருக்கும்
கப்பல்களை படமெடுத்து விண்வெளி யில் சுற்றிக்
கொண்டு இருக்கும் இந்திய சேட்டலைட் கள் மூலமா இந்தியராணுவத்தின் தலைமையகத்திற்கு அனுப்புவது தான்
பார்த்தீர்களா..சீனாவின் காலடியான வியட்னாமில்
இருந்து கொண்டு சீன கப்பல்களின் நடமாட்டத்தை
கண்காணித்து அதை சேட்டலைட் மூலம் வாங்கி இந்தியா ராணுவம் பார்த்துக்கொண்டு இருக்கிறதே
இதை மீறியா சீனக்கப்பல்கள் இந்தியா வுக்கு வந்து
தாக்க முடியும்?
நாளையே சீனா இந்தியாவோடு போருக்கு வருகிற து என்று வைத்துக்கொள்வோம். அப்பொழுது சீனக்கடற்படை இந்தியாவை தாக்க வரும் பொழுது
வியட்னாமை தாண்டி தான் வர வேண்டும். வியட்னா மில் உள்ள சேட்டலைட் கண்காணிப்பு மையம் சீன
கப்பல்கள் பற்றிய படங்களுடன் சேட்டலைட் மூலமாக
இந்திய ராணுவத் திற்கு செய்திகள் அனுப்பும்.
உடனே போருக்கு தயாராகும் இந்திய ராணுவம் இந்திய கடற்படையை தென் சீனக் கடல். நோக்கி
அனுப்பும். இதற்கிடையில் சீனாவின் காலடி யில்
வியட்னாமில் தங்கி எண்ணெய் எடுக்கிறோம் என்று
கடலையே வேடிக்கை பார்த்து கொண்டிருக்கும் இந் திய கப்பல்கள் வியட்னாம் கப்பல்களோடு சேர்ந்து கொண்டு சீனக்கப்பல்களை தென் சீன கடலில் தடுத்து தாக்க ஆரம்பிக்கும்.
இதனால் தான் வியட்னாமை சீனாவின் காலடியில்
இந்தியா வைத்துள்ள வெடிகுண்டு என்கிறேன்.
இத்தனை முன்னேற்பாடுடன் இந்தியா இருப்பதால் தான் இந்தியா சீனாவை வந்து பார்என்று சொல்லிக்
கொண்டு இருக்கிறது.
சூப்பர்ல..50வருசம் ஆட்சியில் இருந்த காங்கிரஸ்
கட்சி உள்நாட்டிலேயே எதிரிகளை கண்காணிக்க
முடியாமல் நாட்டின்பகுதிகளை பறி கொடுத்த காலங்கள் போய் இன்று எதிரி நாட.டின் காலடி யில்
நின்று கொண்டு வேவு பார்த்து கொண்டி இருக்கும்
இந்தியா வின் துணிச்சலுக்கு யார் காரணம் மோடி
தானே..

 நன்றி இணையம்