நாகையின் பலபெயர்களும் அதன் காரணங்களும் ..
நீர்பெயற்று -
காவிரிபும்பட்டினம் ( பூம்புகார் ) அழிவதற்கு முன்பு நாகை நீர்பெயற்று என அழைக்கப்பட்டது .
சத்திரிய சிகாமணி -
சோழர் காலத்தில் ராஜராஜனின் ஆட்சியின்போது ராஜராஜ சோழனின் இன்னொரு பெயரான சத்திரிய சிகாமணி என்ற பெயராலும் அழைக்கப்பட்டுள்ளது.
சோழகுலவல்லிப்பட்டினம் -
சோழரின் ஆரம்ப ஆட்சி காலத்தில் இது சோழகுலவல்லிப்பட்டினம் என அழைக்கப்பட்டது .
படரிதித்த -
பண்டைய புத்த இலக்கியங்கள் நாகையை படரிதித்த என அழைக்கின்றன படரிதித்த என்பது இன்றைய நாகை நகரத்தின் புதிய பேருந்து நிலையத்தின் அருகில் உள்ள " அவுரி திடலின் " அந்த கால பெயராக இருக்கலாம் என என்ன படுகிறது .
நாவல் பட்டினம் -
சங்ககாலத்தில் நாகை நாவல் பட்டினம் என அழைக்கபட்டுள்ளது .
நாவல் மரம் அதிகம் நம் ஊரில் இருந்ததால் இந்த பெயர் ஏற்பட்டது
நாவல் மரம் அதிகம் நம் ஊரில் இருந்ததால் இந்த பெயர் ஏற்பட்டது
நாகபட்டினம் - நாகர் + பட்டினம்
நாகர் - பண்டைய தமிழர்களை வடஇந்தியர்கள் நாகர் என அழைத்தனர்.
பட்டினம் - பண்டைய தமிழர் பண்பாடுபடி ஐந்திணைகளில் கடலும் கடல் சார்ந்த ஊர்களை பட்டினம் என அழைத்தனர் .
நாகர் வாழ்ந்த பட்டினம் நாகப்பட்டினம் என திரிபுற்றது .
நேகபட்டினம் -
டச்சுகாரர்கள் நாகையை ஆண்ட பொழுது நேகபட்டினம் என அழைத்தனர் .
இனி நம் ஊரின் பெயரை யார்கேட்டலும் பெயர் காரணத்தோடு சொல்லுங்கள் .
நாகை நண்பர்கள் கண்டிப்பாக பகிரவும்.
நன்றி இணையம்