மனைவி

மணக்கால் அய்யம்பேட்டை | 3:15 PM | Best Blogger Tips
மனைவி என்றால்
அன்பின்இன்னொரு சொல்
என்றும்கொள்ளலாம்
-
-
பணிக்கு செல்லும்
மனைவிகள் எல்லாம்
குடும்பம் சுமக்கும்
அன்புதேவதைகள்
-
-
ஆணுக்கு ஒரு பக்க
மத்தளம்
என்றால்
பணிக்கு செல்லும் மனைவிகளுக்கு
இரண்டு பக்க 
மத்தளம்
-
-
பெண் என்கிற 
கிரீடம் அழகுதான் 
என்றாலும்
அவளை வெளியில்
உள்ள சமூகம்
கிள்ளி கொண்டேதான்
இருக்கும்
-
கணவர்கள் கொஞ்சம் 
கைகொடுங்கள்
உங்களுக்காக வாழ்ந்துகொண்டு
இருக்கும்
அந்த அன்புபறவையை
அரவணைத்து வைத்து 
கொள்ளுங்கள்
-
அன்பால்கொஞ்சுங்கள்
சமையல் பணி
பகிர்ந்து கொள்ளுங்கள்
-
-

கைவலியோ 
உடல்வலியோ
மனசு வலியோ
புரிந்து கொள்ளுங்கள்
-
-
உங்கள் மகளை
கவனிப்பது போல்
மனைவியை 
கவனித்து கொள்ளுங்கள்
-
-
உடல் மனசு
இரண்டையும் 
மென்மை படுத்துங்கள்
-
-
சமையல் பாராட்டுங்கள்
அவள்சமையல்அறையில்
பட்டுஇருக்கும்
வெப்பம் தொட்ட
தழும்பு பாருங்கள்
அவை உங்களுக்காக
அவள் பட்ட அன்பின்
சின்னம்
முடிந்தால் 
குட்டி முத்தம்
கொடுங்கள் புண்கூட
இனிக்கும்
-
-
அவள்செய்வதுசமையல்
அல்ல
அன்பின் அழகு
தினசரி நன்றி 
சொல்லுங்கள்
குறுந்தகவல் மனைவிக்கும்
அனுப்பலாம்
-
-
அவள் குடும்பத்திற்காக
எரியும் இன்னொரு 
மெழுகுவர்த்தி
வாழ்க்கை முழுதும்
கூட வரும்
அன்பு தேவதை
-
-
கடவுள்நம்முடன் 
இருக்கமுடியாது என்பதற்காக
கடவுள்கொடுத்த
வரம்
அன்னையும்
மனைவியும்
-


-
அவள் கண்ணீர் 
வராமல் பார்த்து
கொள்ளுங்கள்
மூன்றாவது கையாக
நீங்கள் இருங்கள்
பெண் கண்ணீர் விட்டால்
அங்கே செல்வம் தங்காது
புரிந்து கொள்ளுங்கள்
வாழ்க்கை அழகாய்
வாழலாம்

நன்றி இணையம்