கடவுள் முயற்சி செய்பவருக்கே உதவி

மணக்கால் அய்யம்பேட்டை | 2:50 PM | Best Blogger Tips
Image result for கடவுள் முயற்சி செய்பவருக்கே உதவி
கடவுள் முயற்சி செய்பவருக்கே உதவி செய்வார்...கடவுளே..கடவுளே..என்று சொல்லிக் கொண்டிருப்பவருக்கு அல்ல....
ஒரு மனிதனிடம் பாவம் செய்யும் அளவிற்கு சக்தி இருக்கின்றது என்றால்.. கண்டிப்பாக புண்ணியம் செய்வதற்கு அதை விட அதிக சக்தி அவனிடம் இருக்கும்..
உருளைகிழங்கு இருந்தாலும் ஆயிரம் பொன்...இறந்தாலும் ஆயிரம் பொன்...
எப்பொழுது எதிர்மறையான சூழ்நிலையின் ஆதிக்கம் ஏற்படுகின்றதோ..அப்பொழுது, தன்னுடைய மனதையும்..அதன் நிலையையும் சிறிதும் தடுமாறாமல் நம்பிக்கை நிறைந்த எண்ணங்களால் அந்த சூழ்நிலையை கடந்து விடுவதே.. பாசிடிவ் அதாவது நேர்மறையான எண்ணங்கள் என்று சொல்கின்றோம்..அப்படிப் பட்ட ஒரு சூழ்நிலை வரும்பொழுதுதான் உள் மனதின் ஆற்றல் மிகபலமானதாக இருக்கவேண்டும் இந்த பலமான எண்ணங்களுக்கு ஆதாரம் என்ன? எப்பொழுதும்..,எந்த சூழ் நிலையிலும் நல்லதை மட்டுமே சிந்தித்தல்.. அது எப்படி சாத்தியமாகும்..ஒரு உண்மையாக நடந்த நிகழ்ச்சியை கூறுகின்றேன்.. இங்கிலாந்தை சேர்ந்த விவசாயி ஒருவர் தன்னுடைய தரிசு நிலத்தை விவசாய நிலமாக மாற்றி உருளை கிழங்கை சாகுபடி செய்தார்.. பலமுறை முயற்சித்தும் தொடர் தோல்வி..தரிசு நிலத்தை செப்பனிட மற்றும் விவசாயத்தால் உண்டான செலவு என்று எல்லாவிதத்திலும் அவருக்குஅடிமேல்அடி என்னசெய்வதென்று தெரியவில்லை..அவருக்கு அருகில் இருந்தவர்கள் இதெல்லாம் வீணான முயற்சி,இது உங்களை அதலபாதாளத்திற்கு கொண்டு சென்று விடும் இதை கை விட்டு விடுங்கள் என்று அவரை மேலும் பலவீனப் படுத்தினார்கள் இருந்தாலும் அவர் அந்த சூழ்நிலையிலும் தன்னுடைய நம்பிக்கையை,தைரியத்தை, நேர்மறையான எண்ணங்களை ஒரு துளிகூட கைவிட வில்லை பிறர் கூறிய வார்த்தைகளை பொருட்படுத்தாத அவர் இந்த சூழ்நிலையில் இருந்து எப்படி விலகுவது என்று ஆழ்ந்து சிந்திக்கலானார்..சட்டென்று அவருக்கு ஒரு எண்ணம்தோன்றவே "உருளை கிழங்கை தரிசு நிலங்களில் எப்படி பயிரிடக்கூடாது" என்ற புத்தகத்தை நண்பர்கள் துணையுடன் வெளியிட்டார்..அந்த புத்தகம் சக்கை போடு போட்டு அதன் விற்பனை மூலம் அவர் மிகப் பெரிய கோடீஸ்வரன் ஆனார்..பார்த்தீர்களா நண்பர்களே இக்கட்டான சூழ்நிலையை கண்டு சிலர் அஞ்சி தன்னுடைய வாழ்க்கையை அழித்துக்கொள்கின்றனர். ஆனால்..இந்த விவசாயியோ மனம் தளராமல் நன்மையை பற்றி சிந்தித்தார் வெற்றிகண்டார் நம்மில் கூட சூழ்நிலை வந்தால் மனம் தளர்ந்து விடுகின்றோம், நம்பிக்கை இழந்து விடுகின்றோம், ஆனால்...எப்பொழுதும் நேர்மறையாக சிந்தித்தால் வெற்றி நமக்கு மாலையாகி கழுத்தில் விழும்,இப்படி சிந்திப்பவர்களுக்கு இறைவனும் துணை நிற்ப்பார்..
உன்னதமான வாழ்வுக்கும் உயர்வான சிந்தனை உள்ள வாழ்வுக்கும் வாழ்கைக்கும் நூறு சதவீதம் உத்திரவாதம் தரும் ஒரே ஜோதிட நிலையம்
ஸ்ரீ கால பைரவி ஜோதிட நிலையம்
விஞ்ஞான மருத்துவ ஜோதிடம் மற்றும் வானியல் மருத்துவம்
அரசு மருத்துவமனை எதிரில்
ஆத்தூர்
சேலம் (மாவட்டம்)
M.
கிருஷ்ண மோகன் 8526223399
வாழ்க்கையில் மேடு..பள்ளங்கள் வரும்..
மேடாக இருக்கும் பொழுது குடியிருப்பை அமைத்துவிடுங்கள்..அது உங்களை வாழ வழி செய்யும்..பள்ளமாக இருக்கும் பொழுது நீரை நிரப்பிவிடுங்கள்..அது தக்க நேரத்தில் உங்கள் தாகத்தை தீர்த்துவிடும்..
நீங்கள் நல்லவராக இருக்கும் வரை
உங்களுக்கு நன்மையே நடக்கும்...
நீங்கள் தீயவராக இருக்கும் வரை
உங்களுக்கு தீமையே நடக்கும்...
இதன் பலன் வாழ்வின் இறுதியில் வெளிப்படும் இடையில் அல்ல..
எல்லாம் நன்மைக்கே...
கடவுள் முயற்சி செய்பவருக்கே உதவி செய்வார்...கடவுளே..கடவுளே..என்று சொல்லிக் கொண்டிருப்பவருக்கு அல்ல....
கடவுளின் பாதுகாப்பில் இருப்பவருக்கு பயம் எதற்கு...பிறவி பயணத்தை அவர் கடக்க வைத்துவிடுவார்...
துன்பம் என்ற மேகம் சிறிது நேரத்திற்கு உங்களை சூழும், அதன் பிறகு உங்கள் வாழ்க்கையில் மிக பெரிய வெளிச்சம் பிறக்கும்..
உங்கள் வாழ்க்கை மகிழ்ச்சி, அன்பு , ஆனந்தம், திருப்தி, தைரியம், அமைதி, சுகம், செல்வம், ஆரோக்கியம் என்ற பல வண்ணங்கள் நிறைந்ததாக இருக்கட்டும்....
நீங்கள் இறைவனுக்கு கொடுத்த உறுதிமொழியில் உறுதியானவராக இருந்தால் உங்கள் விருப்பங்கள் அனைத்தையும் நீங்கள் கேட்காமலேயே இறைவன் நிறைவேற்றிவிடுவார்..
உங்கள் இறப்பு இவரைப்போல வாழவேண்டும் என்று பலரின் கண்களை திறக்கவேண்டும்...அப்படி வாழ்ந்து விடுங்கள்..


நன்றி இணையம்
Top of Form