இஞ்சி

மணக்கால் அய்யம்பேட்டை | PM 6:08 | Best Blogger Tips

நமது உணர்வுகளை உற்சாகப்படுத்தி மன அழுத்தத்தை குறைக்கவல்லது இஞ்சி என்பது உங்களுக்குத் தெரியுமா?

பசியின்மை, செரியாமை, வயிற்றுப் பொருமல், தொண்டைக் கம்மல் ஆகிய பிரச்னைகளுக்கு நம் சமையலறையில் இருக்கும் இஞ்சியே சிறந்த மருந்து. இஞ்சி பித்தம், பித்த வாய்வு, பித்த தளம் சம்பந்தப்பட்ட நோய் அனைத்தும் வராமல் தடுப்பதுடன் உணவால் ஏற்படும் பிரச்னைகளைத் தடுத்து உணவுகளை எளிதில் ஜீரணிக்க செய்து விடுகிறது.

இஞ்சியில் உள்ள ஜிஞ்ஜெரால் என்ற வைட்டமின் நம் ரத்தத்தில் கல ந்திருக்கும் நச்சு ரசாயங்களை சுத்தம் செய்கிறது. நமக்கு துயரம், கவலை ஏற்படும்போது நச்சு ரசா யனங்கள் நம் உடலில் சுரக்கிறது. இதை இஞ்சி பெருமளவு சுத்தம் செய்துவிடுகிறது. அதனால்தான் கவ லை ஏற்படும் போது இஞ்சி டீ குடியுங்கள் என்கின்றனர் நிபுணர்கள்.

மனஅழுத்தத்தினால் வயிற்றில் சுரக் கும் அமிலங்கள் பாதிக்கப்படுகிறது இதனால் ஜீரண சக்தி பாதிப்படைகி றது. இம்மாதிரி நிலைகளில் வெந் நீரில் சிறிது எலுமிச்சைத் துண்டு ஒன்றை பிழிந்து பிறகு பொடியாக நறுக்கிய இஞ்சியைப் போட்டு அருந்தினால் பெரிய அளவுக்கு ரிலாக்ஸேஷன் கிடைப்பதாக நிபு ணர்கள்
தெரிவித்துள்ளனர்.

மேலும் நாக்கின் ருசி சம்பந்தமான தசைகளை எழுச்சியுறச் செய்து ஜீரண சக்தியை ஊக்கு
விக்கிறது. மலச்சிக்கல், அழற்சி, சாதாரண மூச்சுக்குழல் பிரச்சனைகள் இவற்றை சரி செய்ய இஞ்சி உதவுவதோடு, ரத்தச் சுழற்சியையும் கட்டுக் கோப்பாக வைக்கிறது.

ஒரு துண்டு இஞ்சியை தோல் நீக்கி நசுக்கி, ஒரு கோப்பை பாலில் இட்டுக் காய்ச்சி வடிகட்டி, அதனுடன் கற்கண்டு சேர்த்து குடித்துவர, இருமல், சளி தொல்லைகள் நீங்கும்.

இதோ ஒரு எளிய ரெசிபி - இஞ்சிப் பச்சடி

தேவையானவை: இஞ்சி – 100 கிராம், புளி – சிறிதளவு, எலுமிச்சை – 4, பெரிய வெங்காயம் – 2, உப்பு – தேவையான அளவு.

செய்முறை: தோல் நீக்கிய இஞ்சியுடன் புளி சேர்த்து நன்றாக அரைக்கவும். இதனுடன் நறுக்கிய வெங்காயம், எலுமிச்சை சாறு, உப்பு சேர்த்து நன்றாகக் கலக்கினால், இஞ்சிப் பச்சடி தயார்.

மருத்துவப்பயன்: பித்தம், மூட்டு வலி, சளி, இருமல் போக்கும். பசியைத் தூண்டும்.