விமான விபத்து நடைபெற்றால் முதலில் 'கறுப்புப் பெட்டி'யைத்தான்
தேடுவார்கள். 'கறுப்புப் பெட்டி' என்றால் என்ன? அதற்கும் விமானத்துக்கும்
என்ன சம்பந்தம்?
ஒவ்வொரு விமானத்திலும் இந்தக் 'கறுப்புப் பெட்டி'
கட்டாயம் இருக்கும். ஆனால் இந்தப் பெட்டிக்கும், விமானம் பறப்பதற்கும்
எந்தச் சம்பந்தமும் இல்லாததால் இதற்கு 'கறுப்புப் பெட்டி' (Black Box)
என்று பெயர்.
இந்தப் பெட்டியை
விமானிகள் இருக்கும் 'காக் பிட்' பகுதியில் பொருத்தியிருப்பார்கள். இதில்
இருக்கும் ரெக்கார்டரில், விமானிகள் பேசுவது எல்லாம் பதிவாகும். அது தவிர
விமானம் பறக்கும் வேகம், எந்தத் திசையில் பறந்துகொண்டிருக்கிறது என்பன
போன்ற முக்கியமான விவரங்கள் பதிவாகும்.
'கறுப்புப் பெட்டி'யில்
பதிவாகும் விஷயங்களைக் கொண்டு, விமான விபத்து எப்படி ஏற்பட்டது என்று
கண்டுபிடித்துவிடலாம் என்பதால் இது மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.
விமான விபத்து நடைபெற்றால் முதலில் 'கறுப்புப் பெட்டி'யைத்தான் தேடுவார்கள். 'கறுப்புப் பெட்டி' என்றால் என்ன? அதற்கும் விமானத்துக்கும் என்ன சம்பந்தம்?
ஒவ்வொரு விமானத்திலும் இந்தக் 'கறுப்புப் பெட்டி' கட்டாயம் இருக்கும். ஆனால் இந்தப் பெட்டிக்கும், விமானம் பறப்பதற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லாததால் இதற்கு 'கறுப்புப் பெட்டி' (Black Box) என்று பெயர்.
இந்தப் பெட்டியை விமானிகள் இருக்கும் 'காக் பிட்' பகுதியில் பொருத்தியிருப்பார்கள். இதில் இருக்கும் ரெக்கார்டரில், விமானிகள் பேசுவது எல்லாம் பதிவாகும். அது தவிர விமானம் பறக்கும் வேகம், எந்தத் திசையில் பறந்துகொண்டிருக்கிறது என்பன போன்ற முக்கியமான விவரங்கள் பதிவாகும்.
'கறுப்புப் பெட்டி'யில் பதிவாகும் விஷயங்களைக் கொண்டு, விமான விபத்து எப்படி ஏற்பட்டது என்று கண்டுபிடித்துவிடலாம் என்பதால் இது மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.