பிரபஞ்சத்தை காட்டிலும் சக்தி ....

மணக்கால் அய்யம்பேட்டை | 12:20 PM | Best Blogger Tips

May be an illustration of temple

🌊 உங்கள் மனதை போட்டு குழப்பும் பிரச்சனைவிரைவில் சரியாகிவிடும் என்று மட்டும் ஆழமாக மனதில் சொல்லிவிட்டு வேலையை பாருங்கள். 
 
🔥 விரைவில் அதிசயம் நடக்கும், ஏற்படபோகும் அதிசயங்களுக்கு நன்றி, என்று மட்டும் ஆழமாக மனதில் சொல்லி கொண்டே இருந்தால் போதும்
 
🌬️ அது எப்படி சரி ஆகும், சரி ஆகும் வழிகளை பற்றியெல்லாம் நீங்கள் ஆராய வேண்டாம்.
 
🌫️ நமக்கு ஒரு சில வழிகள் தான் தெரியும், ஆனால் பிரபஞ்சத்திற்கு ஆயிரம் வழிகள் இருக்கும். அது எப்படியும் சரி செய்து விடும். 
 
☄️ உங்கள் வார்த்தைகள் மற்றும் எண்ணங்கள் பிரபஞ்சத்திற்கு கட்டளைகளாக அனுப்பப்பட்டு எல்லாவற்றையும் விரைவில் சரி செய்துவிடும்...
 
உங்களை சுற்றி எதிராக நடப்பதை பற்றி கவலை படவேண்டாம்.
 
உங்களுக்கு எதிராக எத்தனை பேர் செயல்படுகிறார்கள் என்பதையும் பற்றி பொருட்படுத்த வேண்டாம்.
 
பயம் மற்றும் குழப்பங்கள் வரும் போது பதட்டமில்லாமல் ஆழ்ந்த அமைதியாக இருக்க கற்று கொள்ளுங்கள்.
 
நான் மிகுந்த நம்பிக்கையாக இருக்கிறேன், விரைவில் அதிசயம் நடக்கும், ஏற்படபோகும் எல்லா அதிசயங்களுக்கு நன்றி, பிரபஞ்சத்திற்கு நன்றி என்று மட்டும் ஆழமாக மனதில் சொல்லி கொண்டே இருங்கள். 
 
நிறுத்தாமல் சொல்லி கொண்டே இருங்கள். [சக்திவாய்ந்த செயல்முறை]
 
உங்கள் வார்த்தைகள், சந்தோஷமான மற்றும் நம்பிக்கையான உணர்வுகள் மற்றும் எண்ணங்கள் போதும் 
எல்லாவற்றையும் சரி செய்துவிடும்...
 
உங்கள் நேர்மறையான சக்தி இந்த பிரபஞ்சத்தை காட்டிலும் சக்தி வாய்ந்தது என்பதை மட்டும் உணருங்கள்.
 
*விதைத்தவன் தூங்கி விடுவான் ...*
 
*விதை தூங்காது ...*
 
*எண்ணியவன் தூங்கி விடுவான் ...*
 
*எண்ணம் தூங்காது ...*
 
*எண்ணம்போல் வாழ்க்கை*
 
*எண்ணுவதெல்லாம் உயர்வுள்ளல்*
 May be an image of 1 person and monument

 

*வெந்நீரால் அபிஷேகம் செய்யப்படும் அதிசய சிவன் கோயில்!*🌹

மணக்கால் அய்யம்பேட்டை | 12:16 PM | Best Blogger Tips

 வெந்நீரால் அபிஷேகம் செய்யப்படும் அதிசய சிவன் கோயில்! Miraculous Shiva  temple with hot water anointing

 
சிவன்’ என்றாலே அதிசயம்தான். சிவனையும், சிவன் கோயில்களையும் சுற்றி அதிசயமும், மர்மமும் எப்போதும் நிறைந்தே இருக்கும். 
 
அத்தகைய அதிசயம் நிறைந்த சிவன் கோயில் ஒன்றைக் குறித்து இனி காண்போம்.
 வெந்நீரால் அபிஷேகம் செய்யும் வினோதமான பெருமாள் கோயில் - ஐபிசி பக்தி
திருவண்ணாமலை மாவட்டம், தேவிகாபுரம் என்னும் திருத்தலத்தில் 500 அடி மலைக்கு மேல் அமைந்துள்ளது பொன்மலைநாதர் திருக்கோயில். இது 1000 வருடங்கள் பழைமையான கோயிலாகும். இக்கோயில் சோழர்கள் காலத்தில் கட்டப்பட்டதாக சொல்லப்படுகிறது. பின் 15ம் நூற்றாண்டில் விஜயநகர காலத்தில் விரிவுப்படுத்தப்பட்டது
இருளன்’ என்னும் ஒருவர் காடுகளைத் தோண்டி வேர்களை பறிப்பதை தொழிலாகக் கொண்டிருந்தார். 
 
ஒரு சமயம், அவர் காட்டில் மண்ணைத் தோண்டிக்கொண்டிருக்கும்போது அவருடைய கோடரி பூமிக்குள்ளிருந்த சிவலிங்கம் மீது பட்டதால் மயங்கிப் போனார். பிறகு அவரது கனவில் சிவபெருமான் தோன்றி, தான் அந்தக் குழியிலே இருப்பதாகத் தெரிவித்துள்ளார். 
 தினமும் வெந்நீரால் அபிஷேகம் செய்யப்படும் அதிசய சிவன் கோவில்!! #hotwater  #lordshiva #tiruvannamalai - YouTube
அதையடுத்து, இருளன் அந்தக் குழியைத் தோண்டி சிவலிங்கத்தை வெளியே எடுத்து மலையிலே வைத்து பூஜிக்கத் தொடங்கியுள்ளார். அந்த வழியாகச் சென்ற பல்லவ மன்னன் தான் போரில் வெற்றி பெற்றால், நிச்சயமாக சிவபெருமானுக்கு ஒரு கோயில் கட்டுவதாக வேண்டிக்கொண்டார்.
 
இக்கோயில் கருவறையில் இரண்டு சிவலிங்கங்கள் உள்ளன. அவற்றில் 2 அடி உயரமுள்ள சுயம்பு லிங்கம் பொன்மலைநாதர் ஆவார். இக்கோயிலில் அதிசய நிகழ்வாகக் கருதப்படுவது என்னவென்றால், மற்ற கோயில்களில் செய்யப்படுவது போல இல்லாமல் இங்கே அபிஷேகம் வெந்நீரால் செய்யப்படுகிறது.
 
இருளன் என்னும் வேடனால் ஏற்பட்ட காயத்தால் லிங்கத்திலிருந்து இரத்தம் பீறிட்டிருக்கிறது. அதற்காக வெந்நீரைக் கொண்டு அபிஷேகம் செய்ய இரத்தம் நின்றுள்ளது. இதனால் இந்த சிவலிங்கத்திற்கு வெந்நீர் அபிஷேகம் செய்யும் வழக்கம் ஏற்பட்டது. 
 
அந்த அபிஷேக நீரை பருகினால் தீராத நோய்கள் தீரும் என்று சொல்லப்படுகிறது. இக்கோயிலில் முதலில் நுழைந்ததும் நம் கண்களுக்குத் தென்படுவது வீரபத்திரர் சிலை, பிறகு பிள்ளையார், அம்பாள் ஆகியோரும் உள்ளனர்.
 


இக்கோயில் 140 அடி நீளம்,70 அடி அகலம் கொண்டது. மிகவும் பிரபலமான ‘நவநாரிக்குஞ்சரம்’ சிலையும் இக்கோயிலின் உள்ளே அமையப்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
தெற்கே விசாலாட்சி அம்மன், பிள்ளையார், முருகர், தட்சிணாமூர்த்தி ஆகியோருக்கு சன்னிதிகளும் அமைந்துள்ளன.
 
அருணகிரிநாதர் இக்கோயிலுக்கு வந்து தனது திருப்புகழில் சிவனை புகழ்ந்து பாடியுள்ளார். அதில் கனககிரி என்றும் இவ்விடத்தை குறிப்பிட்டுள்ளார்.
 
இக்கோயில் அமைந்துள்ள மலைக்குக் கீழே ஒரு சிறு கோயில் அமைந்துள்ளது. அங்கே திருகாமேஸ்வரர் மற்றும் கோகிலாம்பாள் அருள்பாலிக்கிறார்கள். 
 
இக்கோயில் 20 அடி நீளமும் 11 அடி அகலமுமாக உள்ளது. கோயிலின் சுவரில் பன்றிகளின் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. இதற்குக் காரணம் முஸ்லிம் மன்னர்கள் கோயிலை உடைப்பதிலிருந்து பாதுகாக்க இவ்வாறு செய்யப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.🌹

Ramesh Kumar

 May be an image of 1 person and the Charminar

நன்றி இணையம் 🌹🌹🌹🌹🌹🌹🌹

 
 

 

தென்கவிர்நாட்டு கவிர்குளம்…!

மணக்கால் அய்யம்பேட்டை | 12:05 PM | Best Blogger Tips

 May be an image of Stone Henge


 
புதுக்கோட்டை மாவட்டத்தின் மிகப்பெரிய நீர்நிலையாக கவிநாடு கண்மாய் அமைந்துள்ளது. கிட்டத்தட்ட 4 கிலோமீட்டர் தூரத்திற்கு நீண்ட கரையை கொண்ட இந்த கண்மாய் 3000 ஏக்கருக்கு மேல் ஆயக்கட்டு நிலங்களை கொண்டது. மூன்று மறுகால் கலிங்குகள் இந்த கண்மாய்க்கு உள்ளன.
 
தெற்கு வெள்ளாற்றின் வடக்கே அமைந்துள்ள இந்த கண்மாயின் பெரிய பாசனமடையில் இருந்து மட்டும் ஆறு பெரிய பாசன வாய்க்கால்கள் பிரிந்து செல்கின்றன. 
 
இத்தகைய சிறப்பு மிக்க இந்த கவிநாடு கண்மாய் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்தது.
 
அருகில் உள்ள திருகோகர்ணம் குடைவரை சிவன் கோவிலில் பொறிக்கப்பட்டுள்ள முதலாம் ராச ராசன் ஆட்சி கால கல்வெட்டுகள் இந்த கண்மாயை கவிர்குளம் எனவும், இந்த கண்மாய் அமைந்துள்ள பகுதியை தென்கவிர்நாடு எனவும் குறிப்பிடுகின்றன. (*P.S.I - 28)
 
இந்த கண்மாயின் பெரியமடையில், 
 
தூண்கால்கலுடன் கூடிய பழைய குமிழிமடை ஒன்று அமைந்துள்ளது. அதில் தென்புற தூணில் 9 வரிகளில் பழைய தமிழ் கல்வெட்டு ஒன்று காணப்படுகிறது. (*பு.வ.க - 223)
ஸ்ரீ கோமாறறஞ் 
சடையர்குயாண்டு
7 வது
வல்லநாடு
கவிர்பால்
மூதாண்டி பெ
ருந்திணை
வெண்கன் சேவித்தது.
 
அதாவது முற்கால பாண்டிய அரசனான மாறன் சடையனின் 7 வது ஆட்சி ஆண்டில் ( அதாவது கி.பி 772 ) வல்லநாட்டு கவிர்பாலை சேர்ந்த மூதாண்டி பெருந்திணை வெண்கன் என்பவர் இந்த குமிழி மடையை நிறுவி உள்ளார். 
 
(கல்வெட்டு பாடம் காமாண்டில்)
கிட்டத்தட்ட 1200 ஆண்டுகளுக்கு மேல் பழமையான இந்த கல்வெட்டு சிறப்புமிக்க இந்த கண்மாயின் தொன்மையை எடுத்து காட்டும் வண்ணம் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
 
*பு.வ.க - புதுக்கோட்டை வட்டார கல்வெட்டுகள், திரு. கரு. ராசேந்திரன் - 2017.
 
*P.S.I - Inscriptions (texts) of Pudukkottai State.
 May be an image of 3 people, people smiling and temple

நரேந்திரன் காலத்தில் நான் வாழ பாக்கியம் பெற்றுள்ளேன்..........

மணக்கால் அய்யம்பேட்டை | 12:02 PM | Best Blogger Tips

 Bhagwan Adi Shankara: Reviver and reformer of Hindu Dharma

சங்கராச்சாரியார் மூலம் இந்து மதம் உயிர்த்தெழுந்த போது நான் அங்கு இல்லை.
 
வங்காளத்தைச் சேர்ந்த ஒரு நரேந்திரன், 
The Narendra who meditated in Kanyakumari 131 years ago - India Today
 
ஸ்ரீ வித்யாதிராஜா சட்டம்பி ஸ்வாமிகளிடம் சின்முத்திரையின் பொருளைக் கற்றுக்கொள்வதற்காக வெகுதூரம் சென்று 
 சின் முத்திரை உணர்த்தும் உண்மை தத்துவம் என்ன...?
கன்னியாகுமரி சமுத்திர சங்கமத்தில் உள்ள பாறையில் தியானம் செய்து சுவாமி விவேகானந்தராக மாறியபோதும் நான் அங்கு இல்லை. 
 விவேகானந்தர் சிகாகோ மாநாட்டு உரை தொகுப்பு: மதத்தால்  துன்புறத்தப்பட்டவர்களுக்கு புகலிடம் அளித்த நாடு | Swami Vikenandhar's  Chicago Speech - Vikatan
 பின்னர், 
 Fact-Check | Viral Video Shows Paramahansa Yogananda in New York, Not Swami  Vivekananda in Chicago
அவர் அமெரிக்கா வந்து இந்திய கலாச்சாரத்தின் நற்பெயரை உலகத்தின் முன் உயர்த்தியபோது,
 Chicago Speech of Swami Vivekananda - By Chicago people | A Short Film -  YouTube
நான் அங்கு இல்லை. 
 Remembering 9/11 Speech of Swami Vivekananda That Warned Us of the Dangers  Posed by Fanaticism
சுவாமி விவேகானந்தராக நரேந்திரனின் பரிணாம வளர்ச்சியும் என்னை வியப்பில் ஆழ்த்தியது. 
 
இறுதியாக அனைத்துக் கேள்விகளுக்கும் விடை கிடைத்துள்ளது... 
 Resonates Even Today': PM Modi Shares Swami Vivekananda's Chicago Speech  Delivered 130 Years Ago
கடின உழைப்பால் உலகநாயகனாக விளங்கிய புதிய நரேந்திரன் தென்னாட்டுக்கு தவம் செய்ய வருகிறார்... 
PM modi meditation kanniyakumari
 
காடு, கடல் கடந்து தன் மனைவியை மீட்ட ராமருக்கு 500 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த பெருமையை மீட்டு கோவில் கட்டி பெருமை சேர்க்கும் இந்த நரேந்திரன் காலத்தில் நான் வாழ பாக்கியம் பெற்றுள்ளேன். 
 PM Modi arrives at Vivekananda Rock Memorial, set to meditate till June 1Modi begins 45-hr dhyan at KanyakumariPM Modi Commences Meditative Retreat At Bhagavathy Amman Temple In  Kanyakumari, Tamil Nadu - Newsx
 இந்த நரேந்திரன் எப்போழுதும் ஜெயிக்க வேண்டும் என்பது என் தேவை. 
PM Modi At Kanyakumari, To Embark On 45-hr 'Dhyan' At Vivekananda Rock  Memorial - Bharat Express
 
அதுவே சனாதனதர்மத்தின் வெற்றி. 
 
புத்தர் மற்றும் விவேகானந்தரால் கட்டப்பட்ட அடித்தளத்தின் மீது இந்தியாவை அதன் மிகப்பெரிய பெருமைக்கு கொண்டு வருவதற்கான வருகை இதுவாகும்.
 PM Modi to embark on 48-hour-long meditation in Kanyakumari today
நேற்று நடந்தது எல்லாம் நன்மைக்கே, 
 
இன்று நடப்பதும் நன்மைக்கே. 
 First pictures of PM Modi meditating at Vivekananda memorial in ...
விவேகானந்தபாறையில் சமுத்திர ராஜன் சாட்சியாகத் தொடங்கப் போவதும் நல்லது... 
Lok Sabha Elections 2024 highlights: PM Modi begins his 45-hour-long  meditation in Kanyakumari
 
நமோ நம 🙏
 
ஜெய் மா பாரதி.!🙏
 



ஜெய் ஸ்ரீ ராம்.!🙏

 No photo description available.

நன்றி இணையம்

மதுரை அருகே உள்ள சித்தர்களின் ஜீவசமாதிகள்

மணக்கால் அய்யம்பேட்டை | 11:41 AM | Best Blogger Tips

 

 May be an image of 1 person and temple

மதுரை அருகே உள்ள சித்தர்களின் ஜீவசமாதிகள்
 
பகவான் ஸ்ரீ இராமதேவசித்தர் ஜீவசமாதி மதுரை அழகர்கோவில்
 
நிஜானந்த சுவாமிகள்
 
மதுரை - ராஜபாளையம் சாலையில் 40.கீ,மீ தூரத்தில் இருக்கும் டி,கல்லுப்பட்டியில் இறங்கி பேரையூரை அடைந்தால் அங்கு இவரது ஜீவசமாதி உள்ளது.
 
சுந்திர சுவாமிகள்
டி,கல்லுப்பட்டி (௮) பேரையூரில் இருந்து கூவலப்புரம் ( மதுரை மாவட்டம் )வந்தால் இவரது ஜீவசமாதி உள்ளது.
 
சங்கரானந்த சுவாமிகள்
டி,கல்லுப்பட்டி - விருதுநகர் சாலையில் அரசுப் பேருந்து ஏறி வி,ரெட்டிப்பட்டியில் இறங்கினால் அக்கிராமத்தில் இவரது ஜீவசமாதி உள்ளது,
வெள்ளையா சுவாமிகள் & கருணானந்த சுவாமிகள்
 
மதுரை வடக்கு வெளி வீதியில் ( 315/94 கதவு இலக்கம் உள்ள ) சிம்மக்கல் பஸ் ஸ்டாப்பில் இவரது ஜீவசமாதி உள்ளது,
 
பழனி நாச்சிமுத்து சுவாமிகள்
சிவாநாராயண தேசிகர்
மதுரை ஆரப்பாளையம் பஸ் நிலைத்திற்கு அருகில் உள்ள புட்டுத்தோப்பு சிவன் கோயில் எதிர்புறத்தில் இவரது ஜீவசமாதி உள்ளது,
 
சாது விவேகானந்த முனீஸ்வரர்
இவரது ஜீவசமாதி மதுரை குரு தியேட்டர் எதிரிலுள்ள மேட்டுத் தெரு கடைசியில் உள்ளது.இவரது ஜீவசமாதி இருக்குமிடத்தில் சீமைச் சுவாமி யோகி,பாலயோகி கணேஷ்பாபு ஆகியோரின் ஜீவசமாதிகளும் உள்ளது,
குழந்தை சுவாமிகள்
 
மதுரை பெரியார் பஸ் நிலையத்திற்கு கிழக்கில் நேதாஜி ரோடில் உச்சினி மாகாளி அம்மன் கோயில் எதிரில் உள்ள ஏழூர் சாலியர் சத்திரத்தில் இவரது ஜீவசமாதி உள்ளது,
தலைவிரிச்சான் சுவாமிகள்
மதுரை தங்கம் தியேட்டர் அருகில் ( காக்கா தோப்பு )தலைவிரிச்சான் சந்தில் இவரது ஜீவசமாதி உள்ளது.
 
குட்டைய சுவாமிகள்
மதுரை தெற்கு வெளி வீதியில் இவரது ஜீவசமாதி உள்ளது,
 
விவேகானந்த சரஸ்வதி சுவாமிகள்
மதுரை ஆண்டாள்புரம் - மேம்பாலத்திற்கு அதாவது பெரியார் பஸ் நிலையத்திற்குத் தெற்கே பாலத்தின் கீழ் உள்ள மடத்தில் இவரது ஜீவசமாதி உள்ளது,
 
சிவானந்த சுவாமிகள்
விவேகானந்த சுவாமிகள் ஜீவசமாதி இருக்கும் மடத்தை ஒட்டி இவரது ஜீவசமாதி உள்ளது,
மூக்கன் சுவாமிகள்
மதுரை - திருப்பரங்குன்றம் சாலையில் தியாகராசர் கல்லூரி வளாகத்தின் கடைசியில் இவரது ஜீவசமாதி உள்ளது.
 
பிரமானந்த சுவாமிகள்
மதுரை ,அவனியாபுரம் மேம்பாலத்திற்குக் கீழ் இவரது ஜீவசமாதி உள்ளது,
 
ஓம் சிவப்பிரகாசர் சுவாமிகள்
மதுரை - திருப்பரங்குன்றம் சாலையில் தியாகராசர் கல்லூரிக்குச் செல்லும் பாதையின் ஆரம்பத்தில் இவரது ஜீவசமாதி உள்ளது,
மூட்டை சுவாமிகள்
 
தியாகராசர் கல்லூரியை அடுத்து இருக்கும் காவல் நிலையத்தைக் கடந்து மாயாண்டி சுவாமிகள் சமாதிக் கோயிலுக்குச் செல்லும் வழியில் இவரது ஜீவசமாதி உள்ளது,
 
நடன கோபால நாயகி சுவாமிகள்
மதுரை - அழகர்கோயில் சாலையில் காதகிணறு என்னும் கிராமத்தில் ஜீவசமாதி ஆனார்,
கத்திரிக்காய் சித்தர்
 
மதுரையிலிருந்து19.கி,மீ தூரத்திலுள்ள திருப்புவனத்தில் அரசு மருத்துவமனை எதிர் சாலையின் மேல் இவரது ஜீவசமாதி உள்ளது,
அருளானந்த சித்தர்
 
மதுரையிலிருந்து 25.கி,மீ,தூரமுள்ள சோழவந்தானின் ஜனகை மாரியம்மன் கோயில் பின்புறமுள்ள ஜின்னி மடத்தில் இவரது ஜீவசமாதி உள்ளது,
 
ஞானதேசிகர்
சோழவந்தான் ஜின்னி மடத்திற்கு அருகில் உள்ள ஞானியார் மடத்தில் இவரது ஜீவசமாதி உள்ளது,
முனியாண்டி சுவாமிகள்
 
மதுரை - ராஜபாளையம் சாலையில் 28கி,மீ,தொலைவில் உள்ள டி,குன்னத்தூர் சென்று அங்கிருந்து அரை கி,மீ,தூரமுள்ள கே,ரங்கபாளையம் சென்றால் இவரது ஜீவசமாதி உள்ளது,
 
கமலானந்தர்
கே,ரங்கபாளையத்தில் வடக்குவாய் செல்லியம்மன் கோயில் அருகில் இவரது ஜீவசமாதி உள்ளது,
 
மௌனகுரு சுவாமிகள்
 
தேனியிலிருந்து 15.கி,மீ,தொலைவிலுள்ள பெரியகுளத்தில் வராகநதி பாலத்திலிருந்து அருள் தியேட்டர் செல்லும் வழியில் இவரது ஜீவசமாதி உள்ளது,
 
பாட்டையா சுவாமிகள்
கருணையானந்த சுவாமிகள்
மதுரை - ஸ்ரீ வில்லிபுத்தூர் சாலையில் டி,கல்லுப்பட்டியி ல் இறங்கி அங்கிருந்து 7.கி,மீ தூரத்தில் உள்ள பேரையூர் வந்து பேரையூரிலிருந்து 2.கி,மீ தொலைவிலுள்ள சாளசந்தை கிராமம் சென்றால் இவரது ஜீவசமாதி உள்ளது,
 
சடையாண்டி ரெட்டியார் சுவாமிகள்
உசிலம்பட்டியிலிருந்து 36.கி,மீ,தூரத்தில் சாப்டூர் சென்று அங்கிருந்து 4 கி,மீ,வண்டல்பட்டி ஸ்டாப்பில் இறங்கி சிறிது தூரம் சென்றால் விட்டல்பட்டி கிராமத்தில் தெப்பஊரணி அருகில் இவரது ஜீவசமாதி உள்ளது,
 
தேசிக ஆனந்த சுவாமிகள்
 
மதுரையிலிருந்து உசிலம்பட்டி வந்து அங்கிருந்து ஏழுமலை செல்லும் சாலையிலுள்ள கோட்டைப்பட்டியில் இவரது ஜீவசமாதி உள்ளது,
இவரது பிரதான சீடர் குருநாத சுவாமியின் உடல் இவரது ஜீவசமாதிக்கு நேர் உள்ளது,
 
குழந்தையானந்த சுவாமிகள்
 
இவரது ஜீவசமாதி நான்கு இடங்களில் உள்ளது.
முதன் முதலாக ஜீவசமாதி கொண்டது காசித் தலத்தில்,,இவருடைய ஜீவசமாதி இவருடைய குருநாதர் ஸ்ரீ கணபதி பாபவின் ஜீவசமாதிக்கு அருகில் உள்ளது,
 
இரண்டாவது,நேபாளத்தில் அமைந்திருக்கும் ஸ்ரீ பசுபதிநாதர் ஆலயத்தில் உள்ளது,
 
மூன்றாவது,தமிழகத்தில் தென்காசிக்கு வந்து சன்னதி மடம் தெருவில் உள்ள சங்கரன் பிள்ளை என்பவரது வீட்டிற்குள் ஜீவசமாதி அடைந்தார்,இது நெல்லையப்பர் சமாதி என்று அழைக்கப்படுகிறது,
 
நான்காவது,மதுரை அரசடிப் பகுதியில் காளவாசல் பஸ் ஸ்டாப்புக்கு அருகில் உள்ளது,
நாகநாத சுவாமிகள்
 
மதுரை மேலூரிலிருந்துஏரியூர் செல்லும் பாதையில் உள்ள வடவன்பட்டியில் கிழக்கு எல்லையில் சாலைக்கு வடபுறமுள்ள ஊராட்சி மன்றக் கட்டடத்திற்கு நேர் எதிரில் தெற்கே இவரது ஜீவசமாதி உள்ளது,
 
இடைக்காடர்
 
இடைக்காட்டூர் மணிகண்டீஸ்வரர் கோயிலில் இவரது ஜீவசமாதி உள்ளது, மதுரை ( மாட்டுத்தாவணி) அல்லது மானாமதுரையிலிருந்து இங்கு வரலாம்,
 
சத்குரு
 
உசிலம்பட்டி- தேனி சாலையில் ஆண்டிப்பட்டியை அடுத்த எம்,சுப்பலாபுரம் என்னும் இடத்தில் இவரது ஜீவசமாதி உள்ளது,
சிங்கம்புணரி வாத்தியார் சுவாமிகள்
முத்துவடுக நாத சுவாமிகள்
சிங்கம்புணரி பஸ் நிலையத்தின் அருகில் இவரது உள்ளது,
 
தங்கவேல் சுவாமிகள்
(மற்றும்)
சுப்பையா சுவாமிகள்
 
மதுரை ஆரப்பாளையம் பஸ் நீலையத்திற்கு மேற்கே சிறிது தொலைவில் உள்ள வைகை நகர் அருகில் நெ,10.ஆரப்பாளையம் மெயின் ரோடு இந்த ஜீவசமாதிகள் இருக்கும் இடமாகும்,
 
மாதவ ஆனந்த சுவாமிகள்
 
இவரது ஜீவசமாதி ,80.டி,மீனாட்சி இல்லம் ,நேர் நகர் ,அழகப்பா நகர்,மதுரை -3.அழகப்பா நகர் ரயில்வே கேட் பஸ் ஸ்டாப்பில் இறங்கி அரை கி,மீ,தூரம் நடந்தால் இவரது ஜீவசமாதி உள்ளது,
 
ரமணகிரி சுவாமிகள்
 
மதுரையை அடுத்த வாடிப்பட்டியிலிருந்து 7.கி,மீ.தொலைவிலுள்ள குட்லாம்பட்டியில் இவரது ஜீவசமாதி உள்ளது,
 
சுந்தரானந்த சுவாமிகள்
 
மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்திலேயே ஜீவசமாதி அடைந்திருக்கிறார்,
 
மாயாண்டி சுவாமிகள்
 
மதுரை - திருப்பரங்குன்றம் சாலையில் தியாகராசர் இன்ஜினியரிங் காலேஜ் ஸ்டாப்பில் இறங்கி மலையடிவாரம் சென்றால்,இவரது ஜீவசமாதி உள்ளது,
 
சோமப்ப சுவாமிகள்
 
மாயாண்டி சுவாமிகள் ஜீவசமாதி இருக்கும் இடத்திலிருந்து மலை மீது இருக்கும் முருகன் கோயிலுக்குச் செல்லும் வழியில் இவரது ஜீவசமாதி உள்ளது,
 
மச்சமுனி
 
இவரது ஜீவசமாதி திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் மலை மீது உள்ள காசி விஸ்வநாதர் ஆலயத்தில் இவரது ஜீவசமாதி உள்ளது.
அங்குள்ள சுனையில் இன்றும் மீன் வடிவில் ஐயா வாழ்வதாக நம்பிக்கை உள்ளது.
 
சட்டை நாதர்
 
மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே திருவேடகம் எனும் கிராமத்தில் அமைந்துள்ளது,
 
முத்தானந்த சுவாமி
 
இவரது ஜீவசமாதி தல்லாகுளத்தில் முத்தானந்த சுவாமி மடம் தெருவில் உள்ளது. 
 
இவரது குருநாதர் சங்கரநாராயணன் சுவாமிகள் மற்றும் குருவின் மகன் தெட்சிணாமூர்த்தி சுவாமிகள் இருவரின் ஜீவசமாதி சங்கரன்கோவில் கரிவலம் அருகில் பனையூரில் உள்ளது.
 
இவர்களின் வழி சீடர் கணபதி சுவாமிகள்
இவருடைய ஜீவசமாதி குன்றக்குடி பஸ் நிறுத்தத்திற்கு அருகிலுள்ளது.
 May be an image of 1 person, temple and text

 

பொருள் ஒன்று தான். வடிவம் .......

மணக்கால் அய்யம்பேட்டை | 11:38 AM | Best Blogger Tips

 தேடல் உள்ள தேனீக்களாய்...: TUT தளத்தின் 100 ஆவது சிறப்புப் பதிவு - தெளிவு  குருவுரு சிந்தித்தல் தானே!

குரு ஒருவரின் உபதேசக் கூட்டத்தில்
புகுந்த ஒருவன், 
 
அவரை மட்டம் தட்டும் எண்ணத்துடன்,
நீங்களோ சிவனை வணங்குவதாகச் சொல்கிறீர்.
 
கூட்டத்தில் ஒருவர் பெருமாளின்
திருமண் அணிந்துள்ளார்.
 
மற்றொருவர் நான்
முருக பக்தன் என்கிறார்.
 
உங்களுக்குள் ஏன் இவ்வளவு குழப்பம்? 
 
அனைவரும் ஒரே தெய்வத்தை வணங்கக் கூடாதா?
 
 சிஷ்யருக்கு உணர்த்திய குரு...இறைவன் நைவேத்தியம் சாப்பிடுகிறாரா...
இறைவனுக்கு உருவமில்லை
என்றும் சொல்கிறீர்கள்?
 
பின் ஏன் இவ்வளவு உருவத்தைப் படைத்துள்ளீர்கள்? 
 
என ஏளனமாகக் கேட்டான்.
புன்னகைத்த குரு, 
 
ஒரு துணியை எடுத்து
இது என்ன? எனக் கேட்டார்.
 
துணி என்றான் அவன்.
 
இடுப்பில் கட்டினால்? துண்டு என்றான். 
 
அதைத் தன் தோள் மேல் போட்டுக் காட்டி, 
 
இப்போது என்ன? 
 
என்றார் குரு. 
 
அங்க வஸ்திரம். 
 
அதையே தரையில் விரித்து,
இப்போது? என்றார் குரு. 
 
படுக்கை விரிப்பு என்றான் அவன்.
 
துணி என்பது ஒன்று தான்.
 
அது இருக்கும் இடத்தைப்
பொறுத்து பெயர்
மாறுபடுகிறதல்லவா?
 
அதைப் போல இறைவனுக்கும் அவரவருக்கு விருப்பமான வடிவம் தந்து, 
 
உயர்வான கதைகள், ஸ்லோகங்கள் சொல்லி வழிபடுகிறார்கள்.
 
பொருள் ஒன்று தான்.
 
வடிவம் தான் வேறு. 
 
என்றார் குரு.
 
ஒருவரான கடவுளே
எல்லா வடிவங்களிலும்
உள்ளிருந்து அருள்புரிகிறார்.
 
🙏🙏🙏

 May be an image of 1 person and temple

🙏🙏🙏

நளன் – தமயந்தி கதை

மணக்கால் அய்யம்பேட்டை | 11:29 AM | Best Blogger Tips

No photo description available.

நளன் – தமயந்தி கதை

*************************

இதைப்படிப்பதினால் சனி தோஷம் விலகும்

************************************************

படித்துவிட்டு பகிருங்கள் அனைவருக்கும் அவர்களும் படித்து பயன் பெறட்டும்.

 

ஆகுகன், ஆகுகி என்ற வேட தம்பதியர் காட்டி லுள்ள குகை ஒன்றில் வசித்தனர். அவ்வழியே வந்த துறவி ஒருவரை அவர்கள் உபசரித்தனர். இரவாகி விட்டதால், குகைக்குள் துறவியும், ஆகுகியும் தங்கினர். அதில் இருவர் தான் தங்க முடியும் என்பதால் வேடன் வெளியில் தூங்கினான்.

 நளன் - தமயந்தி கதையை படிப்பதால் சனி தோஷம் விலகுமா....?

தன் மனைவி ஒருஆணுடன் தங்கியிருக்கிறாள் என்ற எண்ணம் அவனுக்கு இல்லை. தன் மீது நம்பிக்கை வைத்த வேடனை முனிவர் பாராட்டினார். அயர்ந்து உறங்கிய வேடனை ஒரு மிருகம் கொன்று விட்டது. விஷயமறிந்த ஆகுகியும் உயிர் துறந்தாள்.

 

சுயநலமில்லாத இத்தம்பதியர் மறுபிறவியில் நள தமயந்தியாகப் பிறந்தனர். துறவி அன்ன பறவையாக பிறந்தார். நளன் நிடதநாட்டின் மன்னராக இருந்தான். ஒருநாள் அன்னப்பற வையைக் கண்டான்.

 

நளனின் அழகைக் கண்ட பறவை, “உனது அழகுக்கேற்றவள் விதர்ப்ப நாட்டு மன்னன் வீமனின் மகள் தமயந்தி தான். அவளை திருமணம் செய்து கொள். உனக்காக தூது சென்று வருகிறேன்” என்றது. அன்னத்தின் பேச்சைக் கேட்ட தமயந்தி காதல் கொண்டாள்.

 Tales from Mahabharata: Damayanti's swayamvara - Katha Kids

இதனிடையே சனீஸ்வரர் உள்ளிட்ட தேவர்கள் தமயந்தியை விரும்பினர். அவளின் சுயம்வர த்தில் அனைவரும் பங்கேற்றனர். எல்லாருமே நளனைப் போல் உருமாறி வந்தனர். நிஜ நள னும் வந்திருந்தான். புத்திசாலியான தமயந்தி உண்மையான நளனுக்கே மாலையிட்டாள். அவர்களுக்கு இந்திரசேனன், இந்திரசேனை என்ற குழந்தைகள் பிறந்தனர்.

 

தமயந்தியை பெற முடியாத தேவர்கள், சனீஸ் வரரிடம், நளனைப் பிடிக்கும்படி கூறினர். கடமை உணர்வு மிக்கவர்களை சனீஸ்வரர் ஏதும் செய்ய மாட்டார். அதே நேரம், கடமையில் சிறு குற்றம் இருந்தாலும் பொறுக்க மாட்டார். நளனோ நல்லாட்சி செய்தான். இப்படிப்பட்ட ஒருவனை அவரால் பிடிக்க முடியவில்லை.

 நளன் – தமயந்தி கதை!

ஒரு முறை பூஜைக்கு தயாரான போது, சரியாகக் கால் கழுவவில்லை. “இதைக் கூட சரியாக செய்யாத மன்னன் நாட்டை எப்படி ஆளமுடியும்?” என கருதிய சனி, அவனைப் பிடித்து விட்டார்.

 

இதன் பின், புட்கரன் என்பவனிடம் சூதாடி பொன், பொருளை இழந்தான். குடும்பத்துடன் நாட்டை விட்டு வெளியேறினான். காட்டில் மனைவி, குழந்தைகள் படும் துன்பத்தைக் கண்ட நளன், ஒரு அந்தணர் மூலம் குழந்தை களை தன் மாமனார் வீட்டுக்கு அனுப்பினான்.

 நளபுராணம் பாராயணம் செய்தால் சனி தோஷம் விலகும் | nala puranam control sani  dosham

பின், மனைவியையும் பிரிந்தான். நடுக்காட்டி ல் தவித்த அவளை, ஒரு மலைப்பாம்பு சுற்றி யது. ஒரு வேடன் அவளைக் காப்பாற்றினான். ஆனால், அவள் மீது ஆசை கொண்டு விரட்டி னான். தப்பித்த அவள், சேதிநாட்டை அடைந்து பணிப்பெண்ணாக இருந்தாள். ஒரு வழியாக அவளை, தமயந்தியின் தந்தை கண்டுபிடித்து வீட்டிற்கு அழைத்துச் சென்றார்.

 

தமயந்தியை பிரிந்த நளன், காட்டில் கார்கோ டன் என்னும் பாம்பு கடித்து கருப்பாக மாறினா ன். அப்பாம்பு ஒரு அற்புத ஆடையை வழங்கிச் சென்றது. அழகு இழந்த அவன், அயோத்தி மன்னன் மன்னன் ரிது பன்னனின் தேரோட்டி யாக வேலை செய்தான். அவன் அங்கிருப்ப தை அறிந்த தமயந்தி, நளனை வரவழைக்க தனக்கு மறுசுயம்வரம் நடப்பதாக அறிவித்தா ள். ரிதுபன்னன் அதற்கு புறப்படவே, நளனும் வருத்தத்துடன் தேரோட்டியாக உடன் வந்தான்.

 

அப்போது, நளனைப் பிடித்த சனி நீங்கியது. தேரோட்டியாக இருந்த நளனையும், தமயந்தி அடையாளம் கண்டாள். நளன், கார்கோடன் அளித்த ஆடையை அணிந்து தன் அழகான சுயஉருவை மீண்டும் பெற்றான்.

 nala damayanthi history in tamil|நளதமயந்தி வரலாறு| nala charithram - YouTube

திருநள்ளாறு தலத்தை அடைந்த போது, ஏழரைச்சனி நீங்கியது. சனீஸ்வரர் நளன் முன் தோன்றி, தன்னால் ஏற்பட்ட கஷ்டத்திற்குப் பரிகாரமாக வரம் தருவதாகக் கூறினார். “சனீஸ்வரரே! நான் பட்ட கஷ்டம் யாருக்கும் நேரக்கூடாது. என் மனைவிபட்ட துன்பம் எந்தப் பெண்ணுக்கும் ஏற்படக் கூடாது. என் கதையை படிப்பவர்களை துன்புறுத்தக் கூடாது” என வரம் கேட்டான். சனிபகவானும் அருள் புரிந்தார்.

 நளதமயந்தி கதை | Nala Damayanthi Story | Mahabaratham | Annadhorai | Tamil -  YouTube

நளன் கதை படித்த நீங்கள் உங்கள் கடமையை ச் சரி வரச் செய்தால், சனி தோஷத்தில் இருந்து விடுபட்டு நல்வாழ்வு பெறுவீர்கள்.

 

சீரும் சிறப்பும் பெற்று வாழ்க வளமுடன்.........

 

நன்றி இணையம்