பொருள் ஒன்று தான். வடிவம் .......

மணக்கால் அய்யம்பேட்டை | 11:38 AM | Best Blogger Tips

 தேடல் உள்ள தேனீக்களாய்...: TUT தளத்தின் 100 ஆவது சிறப்புப் பதிவு - தெளிவு  குருவுரு சிந்தித்தல் தானே!

குரு ஒருவரின் உபதேசக் கூட்டத்தில்
புகுந்த ஒருவன், 
 
அவரை மட்டம் தட்டும் எண்ணத்துடன்,
நீங்களோ சிவனை வணங்குவதாகச் சொல்கிறீர்.
 
கூட்டத்தில் ஒருவர் பெருமாளின்
திருமண் அணிந்துள்ளார்.
 
மற்றொருவர் நான்
முருக பக்தன் என்கிறார்.
 
உங்களுக்குள் ஏன் இவ்வளவு குழப்பம்? 
 
அனைவரும் ஒரே தெய்வத்தை வணங்கக் கூடாதா?
 
 சிஷ்யருக்கு உணர்த்திய குரு...இறைவன் நைவேத்தியம் சாப்பிடுகிறாரா...
இறைவனுக்கு உருவமில்லை
என்றும் சொல்கிறீர்கள்?
 
பின் ஏன் இவ்வளவு உருவத்தைப் படைத்துள்ளீர்கள்? 
 
என ஏளனமாகக் கேட்டான்.
புன்னகைத்த குரு, 
 
ஒரு துணியை எடுத்து
இது என்ன? எனக் கேட்டார்.
 
துணி என்றான் அவன்.
 
இடுப்பில் கட்டினால்? துண்டு என்றான். 
 
அதைத் தன் தோள் மேல் போட்டுக் காட்டி, 
 
இப்போது என்ன? 
 
என்றார் குரு. 
 
அங்க வஸ்திரம். 
 
அதையே தரையில் விரித்து,
இப்போது? என்றார் குரு. 
 
படுக்கை விரிப்பு என்றான் அவன்.
 
துணி என்பது ஒன்று தான்.
 
அது இருக்கும் இடத்தைப்
பொறுத்து பெயர்
மாறுபடுகிறதல்லவா?
 
அதைப் போல இறைவனுக்கும் அவரவருக்கு விருப்பமான வடிவம் தந்து, 
 
உயர்வான கதைகள், ஸ்லோகங்கள் சொல்லி வழிபடுகிறார்கள்.
 
பொருள் ஒன்று தான்.
 
வடிவம் தான் வேறு. 
 
என்றார் குரு.
 
ஒருவரான கடவுளே
எல்லா வடிவங்களிலும்
உள்ளிருந்து அருள்புரிகிறார்.
 
🙏🙏🙏

 May be an image of 1 person and temple

🙏🙏🙏